உலகுக்கு போதிய உணவு உறுதியளிக்கப்படுகிறது
எதன் மூலமாக?
“பெரும்பாலும் இந்த நூற்றாண்டில் நமக்குக் கிடைத்துவந்திருக்கும் போதிய உணவை தக்கவைத்துக்கொள்வதற்கு நம்முடைய மிகச் சிறந்த முயற்சிகளும்கூட போதுமானதாக இராது,” என்பதாக வாஷிங்டன், டி.சி.-யிலுள்ள உவர்ல்டுவாட்ச் நிறுவனத்தின் தலைவர் லெஸ்டர் ப்ரெளன் தெரிவிக்கிறார். நியூ சையன்டிஸ்ட் பத்திரிகையின்படி, 1995-ன் ஆரம்பத்தில் உலகின் தானிய சேமிப்பு முன்னொருபோதும் இராத அளவுக்கு 25.5 கோடி டன்னாக குறைந்தது, அதாவது 48 நாட்களுக்கு மட்டுமே உலகத்துக்கு உணவளிக்க போதுமான அளவுக்கு குறைந்தது. முந்தைய வருடங்களில் தானிய சேமிப்பு 60 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்போது, விநியோகம் இயல்பு நிலையை மீண்டும் எட்டிவிடும். ஆனால் இப்பொழுது இழந்துபோனதை மீண்டும் பெறுவதற்கான பூமியின் திறமையைக் குறித்து உவர்ல்டுவாட்ச் நிச்சயமில்லாமல் இருக்கிறது.
மூன்று வருடங்களாக செய்யப்பட்டுவரும் குறைந்த அறுவடைக்குப் பின்னும், வளர்முக நாடுகள் கால்நடைகளுக்கு தானியங்களை பயன்படுத்த ஆரம்பித்தப் பின்னும், தானியத்தை அடிப்படை உணவாக கொள்ளும் ஏழை மக்களுக்கு குறைவான அளவே கிடைக்கிறது. இந்த நெருக்கடி நிலை உடனடியான கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாவிட்டால், தங்கள் வருமானத்தில் குறைந்தபட்சம் 70 சதவீதத்தை உணவுக்காக செலவழிக்கும் நூறுகோடி ஆட்கள் பட்டினி கிடக்க வேண்டியதுதான் என்று நியூ சையன்டிஸ்ட் எச்சரிக்கிறது.
நம்முடைய காலத்தில் பூமியின் குடிகள் ‘பஞ்சங்களை’ அனுபவிக்கும் என்பதை பைபிள் முன்னறிவித்தது. (லூக்கா 21:11) கடவுள் இந்தப் பிரச்சினையைக் குறித்து அக்கறையற்றவராக இல்லை. ஆம், அவருடைய ராஜ்யம் பூமியின் விவகாரங்களைக் கட்டுப்படுத்தும்போது, இறுதியாக மனிதனின் நிலைமையைக் குறித்த அவருடைய அக்கறை காண்பிக்கப்படும். அந்தச் சமயத்தில் “பூமி தன் பலனைத் தரும்.” ‘பூமியிலே ஏராளமான தானியமிருக்கும்; மலைகளின் உச்சியிலே அபரிமிதமாக இருக்கும்.’ (சங்கீதம் 67:6; 72:16, NW) அப்பொழுது படைப்பாளரைப்பற்றிய இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள் நிறைவேற்றமடையும்: “ஏராளமானதை அதற்குக் கொடுக்கும்பொருட்டு . . . பூமிக்கு உம்முடைய கவனத்தைத் திருப்பினீர் . . . பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கின்றன.”—சங்கீதம் 65:9, 13, NW.
மகத்தான அந்த வாக்குறுதி உங்கள் மனதைக் கவருகிறதா? நீங்கள் எவ்வாறு அதன் பாகமாக இருக்கமுடியும் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? யெகோவாவின் சாட்சிகள் அடுத்த முறை உங்களைச் சந்திக்க உங்கள் வீட்டுக்கு வரும்போது, வாக்களிக்கப்பட்டிருக்கும் இந்தப் பரதீஸைப் பற்றி அதிகத்தை சொல்லும்படியாக கேளுங்கள். இலவச பைபிள் படிப்பு நடத்துவதற்கு யாராவது உங்களுடைய வீட்டிற்கு வரும்படி நீங்கள் விரும்பினால், தயவுசெய்து Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India, அல்லது பக்கம் 2-ல் உள்ள பொருத்தமான விலாசத்துக்கு எழுதுங்கள்.
[பக்கம் 32-ன் படத்திற்கான நன்றி]
உட்படம்: Pictorial Archive (Near Eastern History) Est.