உத்தமத்துக்கு என்ன நேர்ந்துவிட்டது?
நூறு ஆண்டுகளுக்கும் சற்று முன்பாக, லாபம் நிச்சயமில்லாத வைர வியாபாரத்தில் துணிகரமாக ஈடுபட்டிருந்த பார்னி பார்நெட்டோ என்பவர் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்குத் திரும்பிவந்தார். அவர் இங்கே வந்துசேர்ந்தபோது, அவரைப் பற்றி செய்தித்தாளில் எழுதப்பட்டிருந்த ஒரு செய்தியை அவரால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஆகவே அவர் “ஒரு சில திருத்தங்கள்” என்பதாக சில குறிப்புகளை கையால் எழுதி இரண்டாவது கட்டுரைக்காக பதிப்பாசிரியருக்கு அனுப்பி அதோடு பெரிய ஒரு தொகைக்கு காசோலை ஒன்றையும் அனுப்பி வைத்திருந்தார்.
பதிப்பாசிரியர் ஜே. கே. ஜெரோம், எழுதப்பட்டிருந்த குறிப்புகளை குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு காசோலையைத் திருப்பி தந்துவிட்டார். ஆச்சரியமடைந்த பார்நெட்டோ உடனடியாக இரண்டு மடங்கு பணம் தர முன்வந்தார். அதுவும் இதேவிதமாகவே மறுக்கப்பட்டது. “உங்களுக்கு எவ்வளவுதான் வேண்டும்?” என்பதாக அவரிடம் கேட்கப்பட்டது. இச்சம்பவத்தை நினைவுபடுத்தி ஜெரோம் சொல்வதாவது: “லஞ்சம் பெற்றுக்கொண்டு செய்தியை மாற்றி எழுதும் பழக்கம் இங்கில்லை—லண்டனில் அது செய்யப்படுவது இல்லை என்பதை நான் அவரிடம் விளக்கமாக சொன்னேன்.” இதழாசிரியராக அவருடைய உத்தமத்தன்மை நிச்சயமாகவே விற்கப்படுவதற்கில்லை.
“உத்தமம்” என்பது “தார்மீக நீதி; நேர்மை” என்பதாக பொருள் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. உத்தமமான ஒரு ஆள் நம்பிக்கைக்குத் தகுதியான ஒருவராக இருக்கிறார். ஆனால் இன்று, அயோக்கியத்தனம்—உத்தமமின்மை—எல்லா வாழ்க்கைத் தொழிலிலும் இருக்கும் ஆட்களையும் மிக மோசமாக பாதித்துவருகிறது.
பிரிட்டனில் தார்மீக உத்தமம் இழக்கப்பட்டு போனதை விவரிக்க செய்தித்துறை “மலிவு” என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளது. தி இன்டிப்பென்டண்ட் செய்தித்தாள் குறிப்பிடும்விதமாக, தார்மீக உத்தமம் குறைவுபடுவது “காதல் விவகாரங்களிலும், உள்ளூர் அரசாங்கம் தனக்கு சாதகமாக செயல்படுவதற்காக மோசடி செய்வதிலிருந்து பெரிய ஏற்றுமதி ஆர்டர்களில் பெற்றுக்கொள்ளும் கமிஷன் வரையாக அனைத்திலும் உள்ளது.” வாழ்க்கையின் எந்தப் பகுதியும் விதிவிலக்காயில்லை.
உத்தமத்தின் மாறுபடும் தராதரங்கள்
உத்தமம் என்பது நிச்சயமாகவே பரிபூரணத்தைக் குறிப்பதில்லை, ஆனால் ஒரு நபரிலுள்ள அடிப்படையான ஒரு பண்பை நிச்சயமாகவே அது பிரதிபலிக்கிறது. விரைவில் செல்வந்தனாகிவிடு என்ற கொள்கையுடைய நம்முடைய உலகில், உத்தமம் ஒரு நற்பண்பாக இல்லாமல் ஒரு இடையூறாகவே தோன்றலாம். உதாரணமாக, தேர்வுகளில் ஏமாற்றுவதற்கு மாணவர்கள் மிகவும் முன்னேறிய உபாயக் கருவிகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது, இந்தப் புதிய கருவிகளை ஒளித்து வைத்திருப்பதைக் கண்டுபிடிப்பது ஏறக்குறைய கூடாத காரியமாகவே இருக்கிறது. பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒரு பல்கலைக்கழக பேராசிரியர், பிரிட்டன் நாட்டு மாணவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் ஏமாற்றியிருக்கின்றனர் என்பதாக உறுதியாகச் சொல்கிறார்; இப்படியாக ஏமாற்றுவது பிரிட்டனில் மட்டுமே செய்யப்படும் ஒன்று அல்ல.
நம்பத்தகுதியற்ற ஆட்கள் பொய்பேசும்போதும் ஏமாற்றும்போதும் அப்பாவி மக்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை கவனியாமல் விடமுடியாது. இந்தியாவிலுள்ள போப்பால் நகரை எடுத்துக்கொள்ளுங்கள், அங்கே 1984-ல் விஷ வாயுவினால் 2,500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகள் கொல்லப்பட்டனர், இன்னும் லட்சக்கணக்கானோர் காயமடைந்தனர். தி சண்டே டைம்ஸ் இவ்வாறு அறிவித்தது: “பலியானவர்களுக்கு உதவிசெய்வதற்கான நிவாரண பணித்திட்டங்கள் ஊழலில் அமிழ்ந்துவிட்டிருக்கின்றன. . . . போலியாக தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆவணங்கள், கள்ளப்பத்திரங்கள், மற்றும் போலி அத்தாட்சிகளின் காரணமாக உண்மையில் பாதிக்கப்பட்டவர்களைப் பிரித்தெடுக்கும் வேலை சிக்கலாகிவிட்டிருக்கிறது.” இதன் விளைவாக, பத்து ஆண்டுகளுக்குப்பின்னும், மொத்த நஷ்ட ஈட்டு தொகையான 47,00,00,000 டாலரில் 35,00,000 டாலர் மட்டுமே தேவையிலிருப்பவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
மதத்தைப்பற்றி என்ன? உத்தமம் என்ற இந்த விஷயத்தில் அது எவ்வாறு உள்ளது? வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால், இதன் தராதரங்கள் இந்த உலகத்தினுடையதைப் போலவே உள்ளது. ஒரு உதாரணத்துக்கு இப்பொழுது பருவ வயதிலிருக்கும் முறை தவறி பிறந்த ஒரு மகன் தனக்கிருப்பதை ஒப்புக்கொண்ட ரோமன் கத்தோலிக்க பிஷப் ஏமன் கேசியை எடுத்துக்கொள்ளுங்கள். பிரிட்டனில் வெளியாகும் கார்டியன் செய்தித்தாள் குறிப்பிடும் விதமாக கேசியின் நிலை, “அசாதாரணமானது இல்லை.” அதேவிதமாகவே, தி டைம்ஸ் இவ்விதமாக அறிக்கை செய்தது: “பிஷப் கேசியின் மானங்கெட்ட செயலின் உண்மை என்னவென்றால், அவருடைய தவறான செயல் விதிவிலக்கானது என்பது இல்லை, ஆனால் அவர் செய்துகொண்ட பிரம்மச்சாரிய விரதத்தை மீறியது புதியதோ அல்லது அபூர்வமானதோ இல்லை.” ஊர்ஜீதமாகிவிட்ட இந்தச் செய்தியை ஆதரிப்பதாய், ஸ்காட்லாந்து, தி கிளாஸ்கோ ஹெரால்ட், ஐக்கிய மாகாணங்களிலுள்ள ரோமன் கத்தோலிக்க பாதிரிகளில் 2 சதவீதத்தினர் மாத்திரமே பலதார சேர்க்கை, ஓரினச் சேர்க்கை ஆகிய இரண்டையும் தவிர்த்திருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறது. மதிப்பீடு திருத்தமாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, ஒழுக்க சம்பந்தமான காரியத்தில் கத்தோலிக்க பாதிரிகள் சம்பாதித்திருக்கும் பெயரை அது குறித்துக் காட்டுகிறது.
இப்படிப்பட்ட கெட்டமாதிரிகளை எதிர்ப்படுகையில், தார்மீக உத்தமத்தைக் காத்துக்கொள்வது ஒருவருக்கு சாத்தியமா? அது தகுதியுள்ளதா? அது எதைக் கேட்பதாக இருக்கும், அவ்விதமாகச் செய்வதால் கிடைக்கும் பலன்கள் யாவை?