எமது வாசகரிடமிருந்து
கைகளை கழுவுதல் எனக்கு 11 வயது. “துடைக்க வேண்டும் கைகளை! விரட்டவேண்டும் நோய்களை!” (நவம்பர் 22, 1998) கட்டுரைக்கு நன்றி. சாப்பிடுவதற்கு முன்னும் கழிவறையை பயன்படுத்திய பின்பும் கைகளை கழுவ அந்தக் கட்டுரை என்னை தூண்டியது. என்னுடைய ஊரில் தொற்று நோய்கள் சர்வ சாதாரணம், ஆகவே அந்தக் கட்டுரை மிகவும் பயனுள்ளதாய் இருந்தது.
எம். எஃப்., இத்தாலி
சின்னச் சின்ன ஆசைகள் “உலகை கவனித்தல்” என்ற பகுதியில் “பிஞ்சுகளின் சின்னச் சின்ன ஆசைகள்” (நவம்பர் 22, 1998) என்ற துணுக்குச் செய்திக்கு நன்றி. என்னுடைய பிள்ளைகளை விட்டு தனியாக வாழ்கிறேன், மூன்று மாதத்திற்கு ஒருமுறைதான் அவர்களைப் பார்ப்பதற்கு எனக்கு அனுமதி. ஒன்றாக கூடி நேரத்தை செலவழித்தபோது என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. அவர்களுக்கு போரடித்து விடும் என்ற பயத்தால் ஏகப்பட்ட திட்டங்கள் போடுவேன். நாங்கள் கூடி மகிழும் அந்த நாளுக்கு முந்தைய நாள், இந்தச் செய்தியை நான் வாசித்தேன். அது தக்க தருணத்தில் வந்தது!
எம். ஒய்., ஜப்பான்
பாம்புகள் “பாம்புகள் பற்றிய சில கட்டுக்கதைகள்” (அக்டோபர் 22, 1998) என்ற கட்டுரைக்கு மிக்க நன்றி. நீங்கள் குறிப்பிட்ட ஏழு குறிப்புகள் கவர்ச்சிகரமான, ஆனால் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட இந்த விலங்கினங்களைப் பற்றி பொது மக்களுக்கு இருந்த அறியாமையை போக்கியது.
ஆர். கே., ஐக்கிய மாகாணங்கள்
தீ காயங்களை தடுத்தல் “உலகை கவனித்தல்” (டிசம்பர் 8, 1998) என்ற பகுதியில் “இல்லத்தரசிகளே ஜாக்கிரதை” என்ற செய்தியை வாசித்து கவலையடைந்தேன். ஸ்டவ்வின் முன்பகுதியிலுள்ள பர்னர்களையே பயன்படுத்தி சமைக்கும்படி நியூஸ்லெட்டர் ஆலோசனை தெரிவித்ததை அது குறிப்பிட்டிருந்தது. ஆனால், பெற்றோருக்கு கொடுக்கப்பட்ட அறிவுரைக்கு, அதாவது அவர்கள் எப்பொழுதும் பின்பகுதியில் உள்ள பர்னர்களையே பயன்படுத்த வேண்டும், அவைதாம் பிள்ளைகளுக்கு எட்டாது என நான் கேள்விப்பட்ட அறிவுரைக்கு இது முரணாக இருக்கிறது.
எம். பி., இங்கிலாந்து
பாதுகாப்புக்காக கொடுத்த இந்த நினைப்பூட்டுதலுக்கு நன்றி. நாங்கள் குறிப்பிட்ட அறிவுரை முக்கியமாக முதியோர்களுக்கு கொடுக்கப்பட்டது. அவர்களில் சிலர், பின்பகுதியிலுள்ள பர்னர்களில் இருக்கும் பாத்திரங்களை எடுக்கையில் அவர்களுடைய சட்டைக்கையில் நெருப்பு பற்றிவிடுகிறது. ஆனால் சிறுபிள்ளைகளையுடைய தாய்மார் பொதுவாக தங்களுடைய பிள்ளைகளுடைய கைகள் எட்டாத தூரத்தில்தான் சமையல் பாத்திரங்களை வைக்கிறார்கள்.—ED.
இயேசு பார்ப்பதற்கு எப்படி இருந்தார் “இயேசு—பார்ப்பதற்கு எப்படி இருந்தார்? இப்போது என்ன செய்கிறார்?” (டிசம்பர் 8, 1998) என்ற தொடர் கட்டுரைகளுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! சர்ச்களிலும் படங்களிலும் திரைப்படங்களிலும் இயேசு தவறாக சித்தரித்துக் காட்டப்படுகிறார். முக்கியமாக, இப்பொழுது இயேசு வகிக்கும் ஸ்தானத்தையும் எதிர்காலத்தில் அவர் எடுக்கப்போகும் நடவடிக்கையையும் பற்றிய விஷயத்தை நான் படித்து மகிழ்ந்தேன். மாட்டுக் கொட்டகையில் படுத்திருக்கும் ஒரு சிறு குழந்தை அல்ல அவர்.
எம். டபிள்யு., ஆஸ்திரியா
நான் ஒரு கட்டுரையைப் படித்து இதுவரை இந்தளவுக்கு சந்தோஷப்பட்டதே இல்லை! ஜனங்கள் யெகோவாவின் சாட்சிகளையும் நம்முடைய பத்திரிகைகளையும் நம்புவதற்கு இந்தத் தொடர் கட்டுரைகள் உதவும் என உறுதியாக நம்புகிறேன்.
பி. டி., யுகோஸ்லாவியா
இயேசு பலவீனமான ஒரு நபரல்ல என்பதையும், பிரபல சித்திரங்களில் தீட்டப்பட்டிருப்பதைப் போல எப்பொழுதும் மனச்சோர்வடைந்தவராகவே அவருடைய முகம் இல்லை என்பதையும் வாசித்தது அதிசயமாக இருந்தது. மாறாக, ‘நித்தியானந்த தேவனாகிய’ தம்முடைய பிதாவை பின்பற்றிய ஓர் ஆண்மகனாக, உரமிக்கவராகவே இருந்தார்.—1 தீமோத்தேயு 1:11.
ஆர். ஓ. ஆர்., பிரேஸில்
பக்கம் 8-ல், “அவருடைய உயிரை பரலோகத்திலிருந்து கன்னி மரியாளின் கருப்பைக்கு கடவுள் மாற்றினார்” என நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். இயேசு பரிபூரணராக இருந்ததால், ஆதாமின் ஜீன்கள் அவரிடத்தில் இருந்திருக்கவே முடியாது என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா?
ஜே. ஜி., ஐக்கிய மாகாணங்கள்
இயேசுவை மரியாள் கருத்தரிப்பதற்கு முன்பு, காபிரியேல் தூதன் அவளிடம் இவ்வாறு சொன்னார்: “பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.” (லூக்கா 1:35) கடவுளுடைய பரிசுத்த ஆவி மரியாளின் கருப்பையிலிருந்த ஒரு முட்டையை கருத்தரிக்கும்படி செய்து, கடவுளுடைய முதற்பேறான குமாரனின் உயிரை ஆவிக்குரிய பிரதேசத்திலிருந்து பூமிக்கு மாற்றியிருக்க வேண்டும். மரபுவழி பண்புகள் சில தொடர்ந்து இருந்தபோதிலும், மரியாளின் கருவிலிருந்த ஆதாமிய அபூரணம் இந்தக் குமாரனுடைய பரிபூரண உயிர் சக்தியை பாதிக்காதவாறு பரிசுத்த ஆவி பார்த்துக்கொண்டது. இயேசு மரியாளின் ஜாடையாக இருந்திருக்கலாம்.—ED.