‘தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்தார்’
“தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்.”—1 யோவான் 4:11.
1. மார்ச் 23 அன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பின்பு உலகம் முழுவதிலும் ராஜ்ய மன்றங்களிலும் மற்ற கூடுமிடங்களிலும் ஏன் லட்சக்கணக்கான மக்கள் கூடிவருவர்?
சூரிய அஸ்தமனத்திற்குப் பின்பு, 1997, மார்ச் 23, ஞாயிறு, ராஜ்ய மன்றங்களிலும் யெகோவாவின் சாட்சிகள் பயன்படுத்திவரும் மற்ற கூடுமிடங்களிலும் ஒன்று கூடிவருவோர் 1,30,00,000-க்கும் மேலாக இருப்பர் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஏன்? ஏனென்றால் மனித குலத்தினிடமாக கடவுளுடைய மிகப் பெரிய அன்பின் வெளிக்காட்டு அவர்களுடைய இருதயங்களைத் தொட்டிருக்கிறது. “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என்று சொல்லி இயேசு கிறிஸ்து கடவுளுடைய அன்பின் அந்த மகத்தான அத்தாட்சியின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தினார்.—யோவான் 3:16.
2. கடவுளுடைய அன்புக்கு நம்முடைய பிரதிபலிப்பைக் குறித்து என்ன கேள்விகளை நாம் அனைவருமே பிரயோஜனமுண்டாக நம்மைநாமே கேட்டுக்கொள்ளலாம்?
2 கடவுள் காண்பித்திருக்கும் அன்பைப்பற்றி நாம் சிந்திக்கையில், ‘கடவுள் செய்திருக்கும் காரியத்தை நான் உண்மையிலேயே போற்றுகிறேனா? என்னுடைய வாழ்க்கையை நான் பயன்படுத்திக்கொண்டிருக்கும் விதம் அந்தப் போற்றுதலுக்குச் சான்றளிக்கிறதா?’ என்பதாக நம்மைநாமே கேட்டுக்கொள்வது நல்லது.
“தேவன் அன்பாகவே இருக்கிறார்”
3. (அ) அன்பை வெளிக்காட்டுவது கடவுளுக்கு ஏன் அசாதாரணமாக இல்லை? (ஆ) அவருடைய படைப்பு வேலையில் வல்லமையும் ஞானமும் எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளது?
3 ‘தேவன் அன்பாகவே இருப்பதால்’ அன்பை வெளிக்காட்டுவதுதானே கடவுளுடைய பங்கில் அசாதாரணமானதல்ல. (1 யோவான் 4:8) அன்பு அவருடைய மேலோங்கியப் பண்பாகும். மனித குடியிருப்புக்காக அவர் பூமியைத் தயார் செய்து கொண்டிருந்தபோது, மலைகளை அவர் உயர்த்தியதும் தண்ணீரை ஏரிகளுக்குள்ளும் சமுத்திரங்களுக்குள்ளும் சேகரித்ததும் வல்லமையின் திகைப்பூட்டும் ஒரு வெளிக்காட்டாக இருந்தது. (ஆதியாகமம் 1:9, 10) கடவுள் தண்ணீர் சுழற்சியையும் ஆக்ஸிஜன் சுழற்சியையும் இயங்கும்படி செய்தபோது, மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு உட்கிரகித்துக்கொள்வதற்காக பூமியின் இரசாயன மூலக்கூறுகளை உணவாக மாற்றுவதற்கு தேவையான எண்ணிலடங்கா நுண்ணுயிரிகளையும் பல்வகையான தாவரங்களையும் வடிவமைத்தபோது, பூமி கோளத்தின்மீது நாட்கள் மற்றும் மாதங்களின் காலப்பகுதிக்கு ஒத்திருக்கும்படி நமது உயிரியல் கடிகாரங்களை அமைத்தபோது, இது மிகுதியான ஞானத்தை வெளிப்படுத்தியது. (சங்கீதம் 104:24; எரேமியா 10:12) இருப்பினும், சடப்பொருள் படைப்பில் இன்னும் அதிகம் குறிப்பிடத்தக்கதாக இருப்பது கடவுளுடைய அன்பின் அத்தாட்சியாகும்.
4. சடப்பொருள் படைப்பில், கடவுளுடைய அன்பின் எந்த அத்தாட்சியை நாம் அனைவரும் காணவும் போற்றவும் வேண்டும்?
4 நமக்கு போஷாக்கு அளிப்பதற்காக மட்டுமல்லாமல் ஆனால் தெளிவாகவே நமக்கு இன்பத்தையும் கொண்டுவருவதற்காக உண்டுபண்ணப்பட்ட சாறுள்ள பழுத்தப் பழத்தைக் கடிக்கும்போது, நம்முடைய சுவைகள் கடவுளுடைய அன்பைப் பற்றி நமக்குச் சொல்கின்றன. கிளர்ச்சியூட்டும் சூரிய அஸ்தமனங்களிலும், தெளிவான ஓர் இரவில் நட்சத்திரங்கள் நிறைந்த வானிலும், பல்வகையிலும் கண்ணைப்பறிக்கும் வண்ணங்களிலும் இருக்கும் பூக்களிலும், விலங்கின குட்டிகளின் கோமாளித்தனத்திலும், நண்பர்களின் கனிவான புன்சிரிப்பிலும் இதற்கு சந்தேகமில்லாத அத்தாட்சியை நம்முடைய கண்கள் காண்கின்றன. வசந்தகால மலர்களின் இனிமையான நறுமணத்தை நாம் உள்ளிழுத்துக்கொள்ளும்போது நம்முடைய நாசிகள் அவற்றை நாம் உணர்ந்துகொள்ளும்படிச் செய்கின்றன. நீர்வீழ்ச்சியின் சப்தத்தையும் பறவைகளின் பாடல்களையும் அன்பானவர்களின் குரல்களையும் கேட்கையில் நம்முடைய காதுகள் அதை உணருகின்றன. அன்பான ஒருவர் நம்மைப் பாசத்தோடு அணைத்துக்கொள்ளும்போது நாம் அதை அனுபவிக்கிறோம். மனிதர்களால் காணவும் கேட்கவும் அல்லது நுகரவும் முடியாதவற்றை காணவும் கேட்கவும் நுகரவும் முடிகிற திறமைகளை ஒருசில மிருகங்கள் பெற்றிருக்கின்றன. ஆனால் கடவுளுடைய சாயலில் உண்டாக்கப்பட்டுள்ள மனிதவர்க்கத்துக்கு எந்த மிருகமும் உணர முடியாத விதத்தில் கடவுளுடைய அன்பை உணர்ந்துகொள்ளும் திறமை இருக்கிறது.—ஆதியாகமம் 1:27.
5. யெகோவா, ஆதாம் ஏவாளிடமாக எவ்விதமாக அபரிமிதமான அன்பைக் காட்டினார்?
5 யெகோவா தேவன் முதல் மனிதர்களாகிய ஆதாமையும் ஏவாளையும் படைத்தபோது, அவருடைய அன்புக்கு அத்தாட்சிகளை அவர்களைச் சுற்றிலும் வைத்தார். அவர் ஒரு தோட்டத்தை, ஒரு பரதீஸை நாட்டி, எல்லா வகையான விருட்சங்களும் அதில் வளரும்படி செய்திருந்தார். அதற்கு நீர்ப்பாய்ச்ச ஒரு நதியை ஏற்பாடு செய்து கவர்ச்சியூட்டும் பறவைகளாலும் மிருகங்களாலும் அதை நிரப்பினார். இவை அனைத்தையும் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அவர்களுடைய வீடாக அளித்தார். (ஆதியாகமம் 2:8-10, 19) யெகோவா அவர்களை தம்முடைய பிள்ளைகளாக, அவருடைய சர்வலோக குடும்பத்தின் பாகமாக நடத்தினார். (லூக்கா 3:38) ஏதேனை மாதிரியாக அளித்து, இந்த முதல் மனித ஜோடியின் பரலோக தகப்பன் இந்தக் கோளம் முழுவதுமே பரதீஸை விஸ்தரிக்கும்படியான திருப்தியளிக்கும் வேலையை அவர்கள் முன் வைத்தார். முழு பூமியும் அவர்களுடைய பிள்ளைகளால் குடியேற்றப்பட வேண்டும்.—ஆதியாகமம் 1:28.
6. (அ) ஆதாமும் ஏவாளும் மேற்கொண்ட கலகத்தனமான போக்கைப் பற்றி நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்? (ஆ) ஏதேனில் சம்பவித்த காரியத்திலிருந்து நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதையும் அதை அறிந்திருப்பதிலிருந்து நாம் நன்மையடைந்திருக்கிறோம் என்பதையும் எது காட்டக்கூடும்?
6 இருப்பினும், அதன்பின் விரைவிலேயே, ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படிதலுக்குரிய ஒரு பரீட்சையை, உண்மைப்பற்றுறுதியின் ஒரு பரீட்சையை எதிர்ப்பட்டனர். முதலில் ஒருவரும், அடுத்து மற்றவரும் தங்கள்மீது காட்டப்பட்டிருந்த அன்புக்குப் போற்றுதலைக் காட்டத் தவறினர். அவர்கள் செய்த காரியம் அதிர்ச்சியூட்டுவதாய் இருந்தது. அது மன்னிக்க முடியாதது! இதன் விளைவாக, அவர்கள் கடவுளோடு கொண்டிருந்த உறவை இழந்தனர், அவருடைய குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர், ஏதேனிலிருந்து துரத்தப்பட்டனர். நாம் இன்று இன்னமும் அவர்களுடைய பாவத்தின் விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். (ஆதியாகமம் 2:16, 17; 3:1-6, 16-19, 24; ரோமர் 5:12) ஆனால் சம்பவித்த அந்தக் காரியத்திலிருந்து நாம் கற்றுக்கொண்டிருக்கிறோமா? நாம் எவ்வாறு கடவுளுடைய அன்புக்குப் பிரதிபலிக்கிறோம்? ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் தீர்மானங்கள் அவருடைய அன்பை நாம் போற்றுவதைக் காண்பிக்கின்றனவா?—1 யோவான் 5:3.
7. ஆதாம் ஏவாள் செய்த காரியத்தின் மத்தியிலும், யெகோவா எவ்விதமாக அவர்களுடைய சந்ததியாருக்கு அன்பைக் காண்பித்தார்?
7 கடவுள் தங்களுக்காக செய்திருந்த எல்லாவற்றுக்காகவும் நம்முடைய முதல் மனித பெற்றோர் கொஞ்சமும் போற்றுதலைக் காண்பிக்காமல் போனபோதிலும்கூட, அது கடவுளுடைய சொந்த அன்பைக் கட்டுப்படுத்தவில்லை. அப்போது இன்னும் பிறவாதிருந்த—இன்று உயிரோடிருக்கும் நாம் உட்பட—மனிதர்களிடமாகக் கொண்ட கருணையின் காரணமாக ஆதாமும் ஏவாளும் இறந்துபோவதற்கு முன்பாக ஒரு குடும்பத்தை உருவாக்கும்படி கடவுள் அவர்களை அனுமதித்தார். (ஆதியாகமம் 5:1-5; மத்தேயு 5:44, 45) அவர் அதைச் செய்யாமல் இருந்திருந்தால், நம்மில் எவருமே பிறந்திருக்க மாட்டோம். தம்முடைய விருப்பத்தைப் படிப்படியாக வெளிப்படுத்துவதன் மூலம் ஆதாமின் சந்ததியில், விசுவாசத்தைக் காண்பிக்கக்கூடிய அனைவருக்கும் நம்பிக்கைக் கொள்வதற்கான ஆதாரத்தையும்கூட யெகோவா அளித்தார். (ஆதியாகமம் 3:15; 22:18; ஏசாயா 9:6, 7) எல்லா தேசங்களையும் சேர்ந்த மக்கள் ஆதாம் இழந்ததை, அதாவது கடவுளுடைய சர்வலோக குடும்பத்தின் அங்கீகரிக்கப்பட்ட அங்கத்தினர்களாக பரிபூரண ஜீவனை, மறுபடியும் பெறக்கூடிய வழிமூலங்கள் அவருடைய ஏற்பாட்டில் அடங்கியிருந்தன. ஒரு மீட்கும் பொருளை அளிப்பதன் மூலம் அதை அவர் செய்தார்.
ஏன் ஒரு மீட்கும் பொருள்?
8. ஆதாமும் ஏவாளும் கட்டாயமாக இறக்க வேண்டியிருந்தாலும் கீழ்ப்படிதலுள்ள அவர்களுடைய சந்ததியாரில் எவருமே இறக்க வேண்டியதில்லை என்பதாக வெறுமனே கடவுள் ஏன் தீர்ப்பு சொல்லிவிட முடியாது?
8 மனித உயிரின் வடிவில் ஒரு மீட்கும் பொருள் செலுத்தப்படுவது உண்மையில் அவசியமாயிருந்ததா? ஆதாமும் ஏவாளும் அவர்களுடைய கலகத்துக்காக கட்டாயமாக இறக்க வேண்டியிருந்தாலும் கடவுளுக்குக் கீழ்ப்படியக்கூடிய அவர்களுடைய எல்லா சந்ததியாருமே என்றுமாக வாழலாம் என்பதாக வெறுமனே கடவுள் தீர்ப்புசொல்லியிருக்க முடியாதா? குறுகியப் பார்வையுடைய மனித நோக்குநிலையிலிருந்து காண்கையில், அது ஒருவேளை நியாயமானதாக தொனிக்கலாம். இருப்பினும், யெகோவா “நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படு”கிறவர். (சங்கீதம் 33:5) ஆதாமும் ஏவாளும் பாவிகளான பின்புதானே அவர்கள் பிள்ளைகளைப் பிறப்பித்தனர்; ஆகவே அந்தப் பிள்ளைகளில் எவருமே பரிபூரணராக பிறக்கவில்லை. (சங்கீதம் 51:5) அவர்கள் எல்லாரும் பாவத்தைச் சுதந்தரித்துக் கொண்டிருந்தனர், பாவத்துக்கு தண்டனை மரணமாகும். யெகோவா இதை அசட்டை செய்துவிட்டிருந்தால், அவருடைய சர்வலோக குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு அது என்னவிதமான ஒரு முன்மாதிரியை வைத்திருக்கும்? அவர் தம்முடைய சொந்த நீதியான தராதரங்களை அசட்டை செய்ய முடியாது. நியாயம் தேவைப்படுத்தியவற்றை அவர் மதிக்கிறவராக இருந்தார். உட்பட்டிருந்த விவாதங்களைக் கடவுள் கையாண்ட விதத்தைக் குறித்து எவருமே ஒருபோதும் நியாயமாக குறைகூற முடியாது.—ரோமர் 3:21-23.
9. தெய்வீக நீதியின் தராதரத்தின்படி, என்ன வகையான ஒரு மீட்பின் பொருள் தேவைப்பட்டது?
9 அப்படியென்றால், யெகோவாவுக்கு அன்புள்ள கீழ்ப்படிதலைக் காண்பிக்கக்கூடிய ஆதாமின் சந்ததியாரை விடுவிப்பதற்காக தகுதியான ஒரு அடிப்படை எவ்விதமாக ஏற்பாடு செய்யப்பட முடியும்? பரிபூரணமான ஒரு மனிதன் பலியாக இறக்கவேண்டி இருந்திருந்தால், நியாயத்தின்படி அந்தப் பரிபூரண ஜீவன், மீட்பு பொருளை விசுவாசித்து ஏற்றுக்கொள்பவர்களின் பாவங்களை மூடுவதற்கு ஏற்பாடு செய்ய முடியும். ஒரே மனுஷனாகிய ஆதாமின் பாவம், முழு மனிதகுடும்பமும் பாவிகளாவதற்குப் பொறுப்பாய் இருந்த காரணத்தால், மற்றொரு பரிபூரண மனிதனின் சிந்தப்படும் இரத்தம் இணையான மதிப்புள்ளதாய் இருப்பதால், நீதியின் தராசை சமநிலைப்படுத்த முடியும். (1 தீமோத்தேயு 2:5, 6) ஆனால் அப்படிப்பட்ட ஒரு நபரை எங்கே காணமுடியும்?
இழப்பு எத்தனை பெரியதாக இருந்தது?
10. ஆதாமின் சந்ததியாரால் ஏன் தேவையான மீட்பு பொருளை அளிக்கமுடியவில்லை?
10 பாவியான ஆதாமின் சந்ததியாரின் மத்தியில், ஆதாம் இழந்துவிட்ட ஜீவனுக்குரிய எதிர்பார்ப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ள தேவையானதை அளிப்பவர் ஒருவரும் இல்லை. “ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும் பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே. அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது; அது ஒருபோதும் முடியாது.” (சங்கீதம் 49:7-9) மனிதவர்க்கத்தை எந்த வழியுமில்லாமல் விட்டுவிடுவதற்குப் பதிலாக, யெகோவாதாமே இரக்கத்தோடு ஏற்பாடு செய்தார்.
11. பொருத்தமான ஒரு மீட்புக்கு தேவையான பரிபூரண மனித ஜீவனை யெகோவா எதன் மூலமாக ஏற்பாடுசெய்தார்?
11 ஒரு ஆவியாக வாழ்ந்துகொண்டே ஒரு மனித உருவெடுத்த சரீரத்தைப் பலி செலுத்துவதன் மூலம் மரிப்பது போல பாவனைச் செய்வதற்கு யெகோவா ஒரு தேவதூதனை பூமிக்கு அனுப்பவில்லை. மாறாக, கடவுளாகிய படைப்பாளர் மாத்திரமே திட்டமிட்டிருக்கக்கூடிய ஒரு அற்புதத்தை நடப்பிப்பதன் மூலம், அவர் ஒரு பரலோக குமாரனின் உயிர் சக்தியையும் ஆளுமை மாதிரியையும், யூதாவின் கோத்திரத்தைச் சேர்ந்த ஏலியின் மகளான மரியாள் என்ற பெண்ணின் கருப்பைக்கு மாற்றினார். கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தியாகிய அவருடைய பரிசுத்த ஆவி, தாயின் கருப்பையில் குழந்தை வளரும்போது அதன் வளர்ச்சியைப் பாதுகாத்தது, அது ஒரு பரிபூரண மனிதனாக பிறந்தது. (லூக்கா 1:35; 1 பேதுரு 2:22) அப்போது இவர், தெய்வீக நீதியின் தேவைகளை முழுமையாக பூர்த்திசெய்யக்கூடிய ஒரு மீட்பை அளிப்பதற்கு தேவையானதை தம்வசம் வைத்திருந்தார்.—எபிரெயர் 10:5.
12. (அ) என்ன கருத்தில் இயேசு கடவுளுடைய ‘ஒரேபேறான குமாரனாக’ இருக்கிறார்? (ஆ) மீட்பின் பொருளை அளிப்பதற்கு கடவுள் இவரை அனுப்பியது எவ்விதமாக நம்பேரில் அவருடைய அன்பை முக்கியப்படுத்திக் காட்டுகிறது?
12 தம்முடைய கோடான கோடி பரலோக குமாரர்களில் யாருக்கு யெகோவா இந்த வேலை நியமிப்பைக் கொடுத்தார்? வேதவாக்கியங்களில் ‘ஒரேபேறான குமாரன்’ என்பதாக விவரிக்கப்பட்டிருப்பவருக்கே கொடுத்தார். (1 யோவான் 4:9) இந்தச் சொற்றொடர் ஒரு மனிதனாக பிறந்தபோது அவர் என்னவாக ஆனார் என்பதை அல்ல, ஆனால் அதற்கு முன்பாக பரலோகங்களில் என்னவாக இருந்தார் என்பதை விவரிப்பதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர் ஒருவர் மட்டுமே வேறு எவருடைய ஒத்துழைப்புமின்றி நேரடியாக யெகோவாவால் படைக்கப்பட்டவர். அவர் எல்லா படைப்புகளிலும் முதல் பேறானவர். மற்ற எல்லா படைப்புகளையும் படைப்பதற்கு கடவுளால் பயன்படுத்தப்பட்டவர் இவரே. ஆதாம் கடவுளின் ஒரு குமாரனாக இருந்ததுபோலவே தேவதூதர்கள் கடவுளுடைய குமாரர்களாக இருக்கின்றனர். ஆனால் இயேசு, “பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமை” பெற்றவராக இருப்பதாக விவரிக்கப்பட்டிருக்கிறார். இவர் “பிதாவின் மடியிலிருக்கிற”வராக சொல்லப்படுகிறார். (யோவான் 1:14, 18) அவருடைய தந்தையோடு இவருடைய உறவு நெருக்கமான, நம்பகரமான, மென்மையான ஒன்றாக இருக்கிறது. மனிதவர்க்கத்தினிடமாக தம்முடைய தந்தை கொண்டிருக்கும் அன்பை இவரும் கொண்டிருக்கிறார். நீதிமொழிகள் 8:30, 31 இவருடைய தந்தை இந்தக் குமாரனைப்பற்றி எவ்வாறு உணருகிறார் என்பதையும் இந்தக் குமாரன் மனிதவர்க்கத்தைக் குறித்து எவ்வாறு உணருகிறார் என்பதையும் தெரிவிக்கிறது: “நான் [ஞானமாக உருவகப்படுத்தப்பட்டிருக்கும், யெகோவாவின் கைதேர்ந்த வேலையாளாகிய இயேசு] அவர் [யெகோவா] அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன். . . . மனுமக்களுடனே மகிழ்ந்துகொண்டிருந்தேன்.” இந்த மிக அருமையான குமாரனைத்தானே மீட்பின் பொருளை அளிப்பதற்காக கடவுள் பூமிக்கு அனுப்பினார். ஆகவே இயேசுவின் பின்வரும் கூற்று எத்தனை அர்த்தம் நிறைந்ததாய் உள்ளது: “அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்”!—யோவான் 3:16, தமிழ் கத்தோலிக்க பைபிள்.
13, 14. ஆபிரகாம் ஈசாக்கை பலிசெலுத்த முற்பட்டதைப் பற்றிய பைபிள் பதிவு, யெகோவா செய்த காரியத்தைப் போற்றுவதற்கு நமக்கு என்ன உதவிசெய்ய வேண்டும்? (1 யோவான் 4:10)
13 அது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை நாம் ஓரளவு கிரகித்துக் கொள்வதற்கு நமக்கு உதவிசெய்வதற்காக, இயேசு பூமிக்கு வருவதற்கு வெகு காலத்துக்கு முன்பே கடவுள், சுமார் 3,890 ஆண்டுகளுக்கு முன்பாக ஆபிரகாமுக்கு பின்வரும் இந்தக் கட்டளையைக் கொடுத்தார்: “உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு.” (ஆதியாகமம் 22:1, 2) ஆபிரகாம் விசுவாசத்தோடு கீழ்ப்படிந்தார். ஆபிரகாமின் இடத்தில் உங்களை வைத்துப்பாருங்கள். அது உங்கள் மகனாக, நீங்கள் அருமையாக நேசிக்கும் உங்களுடைய ஒரே மகனாக இருந்தால் எப்படியிருக்கும்? தகனபலிக்காக விறகைப் பிளந்து, மோரியா தேசத்துக்குப் பல நாட்கள் பிரயாணத்தைச் செய்து உங்கள் மகனை பலிபீடத்தின்மீது வைக்கையில் உங்களுடைய உணர்ச்சிகள் எப்படி இருக்கும்?
14 இரக்கமுள்ள ஒரு பெற்றோர் ஏன் அப்படிப்பட்ட உணர்வுகளைக் கொண்டிருக்கிறார்? ஆதியாகமம் 1:27, கடவுள் மனிதனை தம்முடைய சாயலில் படைத்தார் என்று சொல்லுகிறது. நம்முடைய அன்பு மற்றும் இரக்க உணர்ச்சிகள் யெகோவாவின் சொந்த அன்பையும் இரக்கத்தையும் மிகவும் குறைவான விதத்தில் பிரதிபலிக்கின்றன. ஆபிரகாமின் விஷயத்தில், ஈசாக்கு உண்மையில் பலியாகச் செலுத்தப்படாதபடி கடவுள் குறுக்கிட்டு நிறுத்தினார். (ஆதியாகமம் 22:12, 13; எபிரெயர் 11:17-19) என்றபோதிலும் தம்முடைய சொந்த விஷயத்தில், கடைசி கணத்தில் யெகோவா மீட்பை அளிப்பதிலிருந்து விலகிக்கொள்ளவில்லை, அவ்வாறு மீட்பை அளிப்பது தமக்கும் தம்முடைய குமாரனுக்கும் இது அதிகமான இழப்பை உட்படுத்திய போதிலும் அதை அவர் அளித்தார். செய்யப்பட்ட காரியமானது, கடவுளுடைய பங்கில் ஏதோ ஒரு கடமையின் காரணமாக இல்லாமல், ஆனால் மாறாக, அசாதாரணமான தகுதியற்ற தயவின் வெளிக்காட்டாக செய்யப்பட்டது. நாம் அதை முழுமையாக போற்றுகிறோமா?—எபிரெயர் 2:9.
அது எதைச் சாத்தியமாக்குகிறது
15. இந்தத் தற்போதைய காரிய ஒழுங்குமுறையிலும்கூட மீட்பு எவ்விதமாக வாழ்க்கையைப் பாதித்திருக்கிறது?
15 கடவுள் செய்த அந்த அன்பான ஏற்பாடு, அதை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்பவர்களின் வாழ்க்கையில் ஆழமான ஒரு பாதிப்பையுடையதாக இருக்கிறது. முந்திய நாட்களில் பாவத்தின் காரணமாக அவர்கள் கடவுளிடமிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டிருந்தார்கள். அவருடைய வார்த்தை சொல்லுகிறபடி அவர்கள் ‘துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாய்’ இருந்தார்கள். (கொலோசெயர் 1:21-23) ஆனால் அவர்கள் ‘அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டிருக்கிறார்கள்.’ (ரோமர் 5:8-10) அவர்கள் தங்கள் வாழ்க்கைப் போக்கை மாற்றிக்கொண்டு, கிறிஸ்துவின் பலியில் விசுவாசத்தை காண்பிக்கிறவர்களுக்கு கடவுள் சாத்தியமாக்கியிருக்கும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டிருப்பதன் காரணமாக, அவர்கள் ஒரு சுத்தமான மனச்சாட்சி அருளப்படுகின்றனர்.—எபிரெயர் 9:14; 1 பேதுரு 3:21.
16. மீட்பில் அவர்களுடைய விசுவாசத்தின் காரணமாக சிறுமந்தைக்கு என்ன ஆசீர்வாதங்கள் அருளப்படுகின்றன?
16 பூமிக்கான கடவுளுடைய ஆதி நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு, பரலோக ராஜ்யத்தில் தம்முடைய குமாரனோடு கூட்டுறவுக்கொள்ளும் தகுதியற்ற தயவை இவர்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையினருக்கு, ஒரு சிறுமந்தைக்கு யெகோவா அளித்திருக்கிறார். (லூக்கா 12:32) இவர்கள் “சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து” வந்தவர்கள். ‘நமது தேவனுக்கு முன்பாக ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் இருந்து பூமியிலே அரசாளப்’ போகிறவர்கள். (வெளிப்படுத்துதல் 5:9, 10) இவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சி கொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே.” (ரோமர் 8:15-17) கடவுளால் புத்திரசுவிகாரம் செய்துகொள்ளப்படுகையில், இவர்கள் ஆதாம் இழந்துபோன அந்த அருமையான உறவு அருளப்படுகிறார்கள்; ஆனால் இந்தக் குமாரர்கள் பரலோக சேவைக்குரிய கூடுதலான சிலாக்கியங்கள்—ஆதாம் ஒருபோதும் பெறாதவை—அளிக்கப்படுவர். அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு சொன்னது ஆச்சரியமாயில்லை: “நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்”! (1 யோவான் 3:1) இப்படிப்பட்டவர்களிடமாக கடவுள் நியமத்திற்குட்பட்ட அன்பை (அகாப்பே) மட்டுமல்ல, ஆனால் உண்மையான நண்பர்களுக்கிடையே நிலவும் பந்தத்தின் தனிச்சிறப்பியல்பாக இருக்கும் மென்மையான பாசத்தையும்கூட (ஃபிலியா) வெளிப்படுத்துகிறார்.—யோவான் 16:27.
17. (அ) மீட்பில் விசுவாசத்தைக் காண்பிக்கும் அனைவருக்கும் என்ன வாய்ப்பளிக்கப்படுகிறது? (ஆ) ‘தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனம்’ அவர்களுக்கு எதை அர்த்தப்படுத்தும்?
17 மற்றவர்களுக்கும்கூட—இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஜீவனுக்கான கடவுளுடைய பெருந்தன்மையான ஏற்பாட்டில் விசுவாசத்தைக் காண்பிக்கிற அனைவருக்கும்—ஆதாம் இழந்துபோன மதிப்புமிக்க உறவைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை யெகோவா திறந்து வைக்கிறார். அப்போஸ்தலன் பவுல் விளக்கினார்: “தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் [அதாவது, பரலோக ராஜ்யத்தில் கிறிஸ்துவோடு உடன் சுதந்தரராக இருக்கும் தேவனுடைய புத்திரர் மனிதவர்க்கத்தின் சார்பாக உடன்பாடான நடவடிக்கை எடுப்பது தெளிவாக வெளிப்படையாகும் காலம் வரும் வரையாக அவர்கள் காத்திருக்கின்றனர்] சிருஷ்டியானது [ஆதாமிலிருந்து வந்த மனித படைப்புகள்] மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று [அவர்கள் பாவத்தில் பிறந்து மரணத்தை எதிர்பார்த்தவர்களாக இருக்க, அவர்கள் தங்களைத்தாங்களே விடுவித்துக்கொள்ள வழியில்லாதவர்களாய் இருக்கின்றனர்] விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற [கடவுள் கொடுத்த] நம்பிக்கையோடே, அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படித்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.” (ரோமர் 8:19-21) அந்த விடுதலை எதை அர்த்தப்படுத்தும்? அவர்கள் பாவம் மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் பரிபூரணமான மனதையும் உடலையும் கொண்டிருப்பர், பரதீஸ் அவர்கள் வீடாக இருக்கும், தங்கள் பரிபூரணத்தை அனுபவித்துக் களிக்கவும் ஒரே மெய்க் கடவுளாகிய யெகோவாவுக்குத் தங்கள் போற்றுதலையும் காண்பிக்கவும் நித்திய ஜீவனையும் கொண்டிருப்பர். இவை யாவும் எவ்வாறு சாத்தியமாயிற்று? கடவுளுடைய ஒரே பேறான குமாரனின் மீட்புக்குரிய பலியின் மூலமாகவே.
18. மார்ச் 23 அன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பின்பு, நாம் என்ன செய்துகொண்டிருப்போம், ஏன்?
18 பொ.ச. 33, நிசான் 14-ம் தேதி, எருசலேமில் ஒரு மேலறையில் இயேசு தம்முடைய மரணத்தின் நினைவு ஆசரிப்பைத் துவக்கி வைத்தார். அவருடைய மரணத்தின் வருடாந்தர ஆசரிப்பு, எல்லா உண்மைக் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான சம்பவமாக ஆகிவிட்டிருக்கிறது. இயேசுதாமே இவ்வாறு சொன்னார்: “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.” (லூக்கா 22:19) 1997-ல் நினைவு ஆசரிப்பு மார்ச் 23 (நிசான் 14 துவங்கும்போது) சூரிய அஸ்தமனத்திற்குப் பின்பு நடைபெறும். அந்த நாளில் இந்த நினைவு ஆசரிப்பு நிகழ்ச்சிக்கு ஆஜராயிருப்பதைவிட வேறு எதுவும் அதிக முக்கியமானதாக இருக்கமுடியாது.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ மனிதவர்க்கத்துக்காக கடவுள் எவ்விதங்களில் அபரிமிதமான அன்பைக் காண்பித்திருக்கிறார்?
◻ ஆதாமின் சந்ததியை மீட்பதற்கு ஏன் பரிபூரணமான மனித உயிர் தேவைப்பட்டது?
◻ யெகோவா அந்த ஏற்பாட்டை எத்தனை பெரிய இழப்பில் கொடுத்தார்?
◻ மீட்பு எதைச் சாத்தியமாக்குகிறது?
[பக்கம் 10-ன் படம்]
தம்முடைய ஒரேபேறான குமாரனைக் கடவுள் கொடுத்தார்