பெண்கள்
சொற்பொருள் விளக்கம்: வயதுவந்த மனிதப் பெண்பாலினர். எபிரெயுவில், பெண் என்பதற்குரிய சொல் இஷ்ஷா ஆகும், இது “ஒரு பெண்பால் மனிதன்” என நேர்ப்பொருளுடையது.
பைபிள் பெண்களை மதிப்புக்குறைவுபடுத்துகிறதா அல்லது அவர்களைக் கீழ்த்தரமான ஆட்கள் என்பதுபோல் நடத்துகிறதா?
ஆதி. 2:18: “தேவனாகிய கர்த்தர் [யெகோவா]: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற [குறைநிரப்பும், NW] துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.” (இங்கே மனிதன் பெண்ணைப் பார்க்கிலும் மேம்பட்ட ஆள் என கடவுள் விவரிக்கவில்லை. மாறாக, கடவுளுடைய ஏற்பாட்டுக்குள் மனிதனுக்குரிய பண்புகளோடு ஒன்றிணைந்து முழுமையாக்கும் பண்புகளைப் பெண் கொண்டிருப்பாளெனவே கடவுள் குறிப்பிட்டார். குறைநிரப்பும் துணையானது, ஒன்றுக்கொன்று இணையாய்ப் பொருந்தி முழுமையாகும் பாகங்களில் ஒன்றாகும். இவ்வாறு பெண்கள் ஒரு வகுப்பாக குறிப்பிட்ட சில பண்புகளிலும் திறமைகளிலும் முதன்மையானவர்களாயிருக்கின்றனர்; ஆண்கள், மற்றவற்றில் அவ்வாறு இருக்கிறார்கள். 1 கொரிந்தியர் 11:11, 12-ஐ ஒப்பிடுங்கள்.)
ஆதி. 3:16: “அவர் [கடவுள்] ஸ்திரீயை நோக்கி; . . . உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.” (ஆதாமும் ஏவாளும் பாவஞ்செய்தப் பின்பு கூறப்பட்ட இந்த அறிவிப்பு ஆண்கள் செய்ய வேண்டியதைப் பற்றிய கூற்றல்ல ஆனால் இப்பொழுது தன்னலம் மனித வாழ்க்கையின் பாகமாகிவிட்டதால் அவர்கள் என்ன செய்வார்கள் என்று யெகோவா முன்னறிந்ததைப் பற்றியதேயாகும். அதன் பின்னுள்ள பைபிள் விவரப்பதிவுகள் பலவற்றில், ஆண்கள் இத்தகைய தன்னல ஆதிக்கம் செலுத்தினதால் தோன்றி வளர்ந்த மிக வருத்தந்தரும் நிலைமைகளைப்பற்றிச் சொல்லியிருக்கின்றன. ஆனால் அத்தகைய நடத்தையைக் கடவுள் அங்கீகரித்தார் என்றோ அல்லது அது மற்றவர்கள் பின்பற்றுவதற்கு ஒரு முன்மாதிரி என்றோ பைபிள் சொல்லுகிறதில்லை.)
ஆண்களுக்குத் தலைமை வகிப்பை அளித்தது பெண்களை மதிப்புக்குறைவுள்ளவர்களாக்குகிறதா?
தலைமைவகிப்பின்கீழ் இருப்பதுதானே மதிப்புக் குறைவானதல்ல. தலைமைவகிப்பானது காரியங்களை ஒழுங்கான முறையில் கையாளுவதற்கு உதவிசெய்கிறது, மேலும் யெகோவா “கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்.” (1 கொரி. 14:33) இயேசு கிறிஸ்து யெகோவா தேவனின் தலைமைவகிப்பின்கீழ் இருக்கிறார், மேலும் இந்த உறவில் அவர் மிகுந்த திருப்தியைக் கண்டடைகிறார்.—யோவான் 5:19, 20; 8:29; 1 கொரி. 15:27, 28.
ஒரு சம்பந்தப்பட்ட தலைமைவகிப்பு ஆணுக்கும் அளிக்கப்பட்டுள்ளது, முக்கியமாய்க் குடும்பத்திலும் கிறிஸ்தவ சபையிலும் அவ்வாறு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆணுக்குப் பெண்ணின்மீது முழுமையான அதிகாரத்தைக் கடவுள் கொடுக்கவில்லை; ஆண் அத்தகைய தலைமைவகிப்பைத் தான் செலுத்தும் முறைக்குத் தன் தலையாகிய இயேசு கிறிஸ்துவுக்கும், கடவுளுக்கும் பதில் சொல்லவேண்டும். (1 கொரி. 11:3) மேலும், கணவர்கள் “தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்,” என்றும் தங்கள் மனைவிகளுக்கு ‘கனத்தைச் செலுத்தும்படியும்’ கட்டளையிடப்பட்டிருக்கிறார்கள். (எபே. 5:28; 1 பேதுரு 3:7) மணமான தம்பதிகளுக்குரிய கடவுளுடைய ஏற்பாட்டில், கணவனின் பாலுறவு தேவைகள் அவன் மனைவியின் தேவைகளுக்கு மேலாக வைக்கப்படக்கூடாது. (1 கொரி. 7:3, 4) பைபிளில் சுருக்கமாய் விவரிக்கப்பட்டுள்ளபடி, திறமைவாய்ந்த ஒரு மனைவியின் பாகம், அந்தக் குடும்பத்திலும் அந்தச் சமுதாயத்திலும் அவளுடைய உயர்ந்த மதிப்பை அறிவுறுத்துகிறது. அவள் தன் கணவனின் தலைமைவகிப்புக்கு மதித்துணர்வைக் காட்டிவருகையில் திட்டமிட்டு செயல்தொடங்கி செய்யும் தன் திறமைகளைப் பயன்படுத்துவதற்குரிய பரந்த எல்லையை அது அனுமதிக்கிறது. (நீதி. 31:10-31) பிள்ளைகள் தங்கள் தகப்பனைமட்டுமல்ல தங்கள் தாயையும் கனம்பண்ணும்படி பைபிளில் கட்டளையிடப்பட்டிருக்கிறார்கள். (எபே. 6:1-3) மேலும் விதவைகளின் தேவைகளைக் கவனிப்பதற்கும் அது தனிப்பட்ட கவனம் செலுத்துகிறது. (யாக். 1:27) இவ்வாறு உண்மையான கிறிஸ்தவர்களுக்குள், பெண்கள் மிகுந்த பாதுகாப்பையும், தனிநபர்களாகத் தங்களுக்கு உண்மையான மதிப்பையும், தங்கள் செயலில் தனிப்பட்ட திருப்தியையும் கண்டடையலாம்.
யெகோவா, உண்மைபற்றுறுதியுடைய ஆவி-சிருஷ்டிகளாலாகிய தம்முடைய சொந்த அமைப்பை ஒரு பெண்ணென, தம்முடைய மனைவியென, தம்முடைய குமாரர்களின் தாய் எனக் குறிப்பிடும் இந்த உண்மையால் கடவுளுடைய ஏற்பாட்டில் பெண்ணின் ஸ்தனத்துக்குரிய உண்மையான மதிப்பு மேலுமாகக் காட்டப்படுகிறது. (வெளி. 12:1; கலா. 4:26) மேலும், இயேசு கிறிஸ்துவின் ஆவியால்-அபிஷேகஞ்செய்யப்பட்ட சபை அவருடைய மணவாட்டியென பேசப்பட்டிருக்கிறது. (வெளி. 19:7; 21:2, 9) மேலும் ஆவிக்குரிய நிலைநிற்கையிலிருந்து கவனிக்க, கிறிஸ்துவுடன் பரலோக ராஜ்யத்தில் பங்குகொள்ளும்படி அழைக்கப்படுகிறவர்களுக்குள் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே வேறுபாடில்லை.—கலா. 3:26-28.
பெண்கள் போதகர்களாக இருக்கவேண்டுமா?
சபையைக் கண்காணிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருப்பவர்கள் ஆண்களென பைபிளில் விவரித்திருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் 12 அப்போஸ்தலர்கள் எல்லாரும் ஆண்களே, பின்னால் கிறிஸ்தவ சபைகளில் கண்காணிகளாகவும் உதவி ஊழியர்களாகவும் நியமிக்கப்பட்டவர்களும் ஆண்களே. (மத். 10:1-4; 1 தீமோ. 3:2, 12) சபை கூட்டங்களில் பெண்கள் “எல்லா விஷயத்திலும் அடங்கி அமைதலாயிருந்து கற்றுக்கொள்ள”வேண்டுமென அறிவுரை கூறப்பட்டிருக்கிறார்கள், இவ்வாறு சபையில் ஆண்களை எதிர்த்துரைக்கும் கேள்விகளை அவர்கள் எழுப்புவதில்லை. தாங்கள் சொல்ல எண்ணுவது கீழ்ப்பட்டிராமையைக் காட்டுவதாயிருக்குமெனில் அத்தகைய கூட்டங்களில் பெண்கள் ‘பேசாமலிருக்கவேண்டும்.’ (1 தீமோ. 2:11, 12; 1 கொரி. 14:33, 34) இவ்வாறு, சபையின் நடவடிக்கைகளுக்குப் பெண்கள் மதிப்புவாய்ந்த உதவிகள் செய்வோராயிருப்பினும், தகுதிபெற்ற ஆண்கள் இருக்கையில், சபையில் தலைமைதாங்குவதற்கோ, அல்லது சபைக்குப் போதிப்பதில் தலைமை ஏற்பதற்கோ எந்த ஏற்பாடும் இல்லை.
ஆனால் பெண்கள், சபை கூட்டங்களுக்குப் புறம்பே, நற்செய்தியைப் பிரசங்கிப்பவர்களாக, விளம்பரப்படுத்துவோராக, போதிப்பவர்களாக இருக்கலாமா? பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே அன்று ஆண்கள் மற்றும் பெண்கள் ஆன இருபாலரின்மீதும் பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டது. இதை விளக்கி, அப்போஸ்தலன் பேதுரு, யோவல் 2:28, 29-ஐ மேற்கோளாக எடுத்துக் குறிப்பிட்டு, பின்வருமாறு கூறினான்: “கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள். . . . என்று தேவன் உரைத்திருக்கிறார்.” (அப். 2:17, 18, 21) இவ்வாறே இன்று, பெண்கள் கிறிஸ்தவ ஊழியத்தில், வீடுவீடாகப் பிரசங்கிப்பதிலும் வீட்டு பைபிள் படிப்புகள் நடத்துவதிலும் சரியாகவே பங்குகொள்கிறார்கள்.—மேலும் சங்கீதம் 68:11; பிலிப்பியர் 4:2, 3-ஐயும் பாருங்கள்.
குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் கிறிஸ்தவ பெண்கள் ஏன் தலையில் முக்காடிட்டுக்கொள்கிறார்கள்?
1 கொரி. 11:3-10, தி.மொ: “ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்துவே தலை, ஸ்திரீக்கும் புருஷனே தலை, கிறிஸ்துவுக்குக் கடவுளே தலை . . . ஜெபம் பண்ணும்போதாவது தீர்க்கதரிசனஞ் சொல்லும்போதாவது தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கும் எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; . . . புருஷன் கடவுளின் சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால் தன் தலையை மூடிக்கொள்ள வேண்டுவதில்லை; ஸ்திரீயானவளோ புருஷனின் மகிமையாயிருக்கிறாள். புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள். புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவளல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள். ஆகையால், தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ள [‘அதிகார சின்னத்தைக் கொண்டிருக்க,’ (அடிக்குறிப்பு)] வேண்டும்.” (பொருத்தமான சந்தர்ப்பங்களில், கிறிஸ்தவப் பெண் முக்காடிட்டுக்கொள்கையில், அது கடவுள் ஏற்படுத்தின இந்தத் தலைமைவகிப்பு ஏற்பாட்டுக்கு அவள் மதிப்புக் காட்டுவதன் ஓர் அத்தாட்சியாயிருக்கிறது. கிறிஸ்து தேவாட்சிக்குரிய தலைமைவகிப்புக்கு மரியாதை கொடுக்கிறார்; ஆணும் பெண்ணும் அவ்வாறு செய்யும்படி கடமைப்பட்டிருக்கிறார்கள். முதல் மனிதனாகிய ஆதாம், ஒரு பெண்ணிலிருந்து பிறப்பதால் உண்டாக்கப்படவில்லை கடவுள் அவனை சிருஷ்டித்தார். ஏவாளை சிருஷ்டிக்கையில், கடவுள் ஆதாமிலிருந்து எடுத்த ஒரு விலா எலும்பை அடிப்படையாகப் பயன்படுத்தினார், மேலும் அவள் ஆதாமுக்குத் துணையாக இருக்கவேண்டுமென கடவுள் கூறினார். இவ்வாறு முதலாவது உண்டுபண்ணப்பட்ட ஆணுக்கு, தலையாயிருக்கும் ஸ்தனம் கொடுக்கப்பட்டது. ‘ஜெபிக்கையில் அல்லது தீர்க்கதரிசனஞ்சொல்லுகையில்’ ஆண் தலையை மூடுவதில்லை. ஏனெனில், தலைமை வகிப்பைக் குறித்ததில், ஆண், தன் குடும்பம் சம்பந்தப்பட்ட காரியங்களில் தனக்கு பூமிக்குரிய தலை இல்லாமல், “தேவனுடைய சாயலில்” இருக்கிறான். எனினும், ஒரு பெண் முக்காடில்லாமல் ‘ஜெபிப்பது அல்லது தீர்க்கதரிசனஞ்சொல்வது’ ஆணுக்குக் கடவுள்-நியமித்த ஸ்தனத்துக்கு அவமதிப்புக் காட்டுவதும் அவனை வெட்கப்படுத்துவதுமாகும். யெகோவாவின் மனைவியைப்போன்ற பரலோக அமைப்பின் உறுப்பினரான தூதர்களுங்கூட, உண்மையுள்ள கிறிஸ்தவ பெண்கள் அணியும் இந்த “அதிகார சின்னத்தைக்” கவனித்து யெகோவாவுக்குத் தாங்கள்தாமே கீழ்ப்பட்டிருப்பதைப் பற்றி நினைப்பூட்டப்படுகிறார்கள்.)
ஒரு பெண் எப்பொழுது முக்காடிட்டுக்கொள்வது அவசியம்?
1 கொரிந்தியர் 11:5-ல் சொல்லப்பட்டிருக்கிறபடி அவள் “ஜெபம் பண்ணும்போதாவது தீர்க்கதரிசனஞ் சொல்லும்போதாவது” முக்காடிட்டுக்கொள்ள வேண்டும். இது அவள் தனிமையில் ஜெபஞ்செய்கையில் அல்லது பைபிள் தீர்க்கதரிசனத்தைப்பற்றி மற்றவர்களிடம் பேசுகையில் ஒரு முக்காடு தேவையென பொருள்கொள்வதில்லை. எனினும், சாதாரணமாய்த் தன் கணவனால் அல்லது மற்றொரு ஆணால் கவனிக்கப்படும் வணக்கம் சம்பந்தப்பட்ட காரியங்களைத் தான் கவனிக்கையில் ஆணின் தலைமைவகிப்புக்கு மரியாதை காட்டுவதன் வெளிப்படையான ஓர் அடையாளமாக அவள் அத்தகைய முக்காடிட்டுக்கொள்வாள். தன் சார்பாகவும் மற்றவர்கள் சார்பாகவும் அவள் சத்தமாய் ஜெபிக்கையில் அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட முறைப்படியான பைபிள் படிப்பை நடத்துகையில், இவ்வாறு அந்தப் போதிப்பைத் தன் கணவனின் முன்னிலையில் செய்கையில், அவளுடைய விசுவாசத்தில் அவன் பங்குகொள்ளாவிடினும், அவள் முக்காடிட்டுக்கொள்ள வேண்டும், ஆனால் தன் பிள்ளைகளுக்குப் போதிக்க அவள் தெய்வீக அதிகாரமளிக்கப்பட்டுள்ளதால், அவளுடைய கணவன் அங்கில்லாதபோது ஒப்புக்கொடுத்திராதத் தன் பிள்ளைகளோடு சிலசமயங்களில் ஜெபிக்கையில் அல்லது படிக்கையில் முக்காடு தேவையில்லை. ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், சபையின் ஆண் உறுப்பினரான ஒப்புக்கொடுத்த ஒருவர் அங்கிருந்தால் அல்லது சந்திக்கும் பயணக் கண்காணி அவளோடு சென்று, முன்னேற்பாடு செய்யப்பட்ட பைபிள் படிப்பை அவர் முன்னிலையில் நடத்துகையில், அவள் முக்காடிட்டுக்கொள்ள வேண்டும், ஆனால் அவரே ஜெபிக்கவேண்டும்.
பெண்கள் சிங்காரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதோ ஆபரணங்கள் அணிவதோ சரியா?
1 பேதுரு 3:3, 4: “மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.” (இது பெண்கள் ஆபரணங்களை அணியக்கூடாதென பொருள்படுகிறதா? நிச்சயமாகவே இல்லை; அவர்கள் மேலாடைகளை அணியக்கூடாதென இது குறிக்காததைப்போலவே அதுவும் இருக்கிறது. ஆனால் உடைநடை அலங்கரிப்பைக் குறித்ததில் தங்கள் மனப்பான்மையில் சமநிலையுள்ளவர்களாக இருக்கும்படியும், ஆவிக்குரிய அலங்கரிப்பிலேயே முதன்மையான அக்கறை செலுத்தும்படியும் இங்கே அவர்களுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது.)
1 தீமோ. 2:9, 10: “ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.” (கடவுளுடைய பார்வையில் எது உண்மையில் முக்கியமானது—ஒருவனின் வெளிப்புற தோற்றமா அல்லது ஒருவனின் இருதய நிலைமையா? ஒரு பெண், சிங்காரிப்புப் பொருட்களோ ஆபரணமோ அணியாமல் ஆனால் ஒழுக்கக்கேடான வாழ்க்கை நடத்தினால் கடவுளுக்குப் பிரியமாயிருக்குமா? அல்லது சிங்காரிப்புப் பொருட்களையும் ஆபரணங்களையும் தாங்கள் பயன்படுத்துவதில் அடக்கமும் ஆரோக்கிய மனநிலையும் உடையோராயிருந்து முதன்மையாய்த் தெய்வீகக் குணங்களாலும் கிறிஸ்தவ நடத்தையாலும் தங்களை அலங்கரிக்கிற பெண்களை அவர் அங்கீகரிப்பாரா? யெகோவா பின்வருமாறு சொல்கிறார்: “மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ [யெகோவாவோ] இருதயத்தைப் பார்க்கிறார்.”—1 சாமு. 16:7.)
நீதி. 31:30, தி.மொ.: “செளந்தரியம் வஞ்சனை, அழகு வீண், யெகோவாவுக்குப் பயப்படும் பெண்ணே புகழ்ச்சிக்குரியவள்.”