உலகத்தின் ஆவி
சொற்பொருள் விளக்கம்: யெகோவா தேவனின் ஊழியரல்லாதவர்களால் ஆகிய மனித சமுதாயத்தின்பேரில் செல்வாக்குச் செலுத்தும் உந்துவிக்கும் சக்தி, இது அத்தகைய ஆட்களை, குறிப்பிட்ட ஒரு மாதிரியின்படி காரியங்களைப் பேசவும் செய்யவும் செய்விக்கிறது. ஆட்கள் அவரவருக்குரிய தனி விருப்பப்படி நடக்கிறபோதிலும், இந்த உலகத்தின் ஆவியைக் காட்டுகிறவர்கள், சாத்தான் அதன் அதிபதியும் கடவுளுமாயிருக்கிற இந்தத் தற்போதைய காரிய ஒழுங்குமுறைக்குப் பொதுவாயுள்ள குறிப்பிட்ட அடிப்படையான இயல்புக்குணங்களை, காரியங்களைச் செய்யும் முறைகளை, மற்றும் வாழ்க்கையின் குறிக்கோள்களை வெளிப்படுத்துகின்றனர்.
இந்த உலகத்தின் ஆவியால் கறைப்படுத்தப்பட்டிருப்பது ஏன் கவலைக்குரிய வினைமையான காரியம்?
1 யோவான் 5:19: “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.” (யெகோவாவின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களாயிராத மனிதவர்க்கத்தினரின் சிந்தனையையும் நடவடிக்கைகளையும் அடக்கியாளும் ஓர் ஆவியைச் சாத்தான் வளரச் செய்திருக்கிறான். இது அவ்வளவு அதிகமாய் ஊடுருவிப்பரவும் பாங்குள்ள தன்னல மேலும் தற்பெருமைக்குரிய ஆவியாயிருப்பதால் இது மனிதர் சுவாசிக்கும் காற்றைப்போல் இருக்கிறது. இந்த ஆவி நம்முடைய வாழ்க்கையை உருப்படுத்தியமைக்க விடுவதனால் சாத்தானின் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டுவிடாதபடி நாம் மிக அதிகக் கவனம் செலுத்தவேண்டும்.)
வெளி. 12:9: “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.” (1914-ல் ராஜ்யத்தின் பிறப்பைப் பின்தொடர்ந்து, இது நடந்தேறினமுதற்கொண்டு, சாத்தானின் மற்றும் அவனுடைய பேய்களின் செல்வாக்கு மனிதவர்க்கத்துக்குள் வெகு அதிகக் கடுமையாகிவிட்டிருக்கிறது. அதிகரிக்கப்பட்ட தன்னல மற்றும் வன்முறையான செயல்களை நடப்பிக்கும்படி அவனுடைய ஆவி ஜனங்களைத் தொல்லைப்படுத்தித் தூண்டிவிட்டிருக்கிறது. முக்கியமாய் யெகோவாவைச் சேவிக்க விரும்புகிறவர்கள் உலகத்தின் பாகமாயிருக்கும்படியும், மற்றவர்கள் செய்வதைச் செய்யும்படியும் உண்மையான வணக்கத்தை விட்டுவிடவும் வெகுவாய் வற்புறுத்தும் எதிர்ப்பழுத்தத்தின்கீழ் வருகிறார்கள்.)
நாம் அவற்றிற்கு எதிராக நம்மைப் பாதுகாக்கவேண்டிய இந்த உலகத்தின் ஆவியின் இயல்புகள் சில யாவை?
1 கொரி. 2:12: “நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்குத் தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.” (இந்த உலகத்தின் ஆவி ஓர் ஆளின் சிந்தனையிலும் விருப்பங்களிலும் வேரூன்றினால், அதன் கனி அந்த ஆவியை வெளிப்படுத்தும் செயல்களில் சீக்கிரத்தில் காணப்படுகிறது. ஆகையால், உலகத்தின் ஆவியிலிருந்து முற்றிலும் விடுபட கிறிஸ்தவமல்லாத நடவடிக்கைகளையும் வரம்புகடந்த செயல்களையும் தவிர்ப்பதுமட்டுமல்லாமல் கடவுளுடைய ஆவியைப் பிரதிபலிக்கும் மனப்பான்மைகளையும் அவருடைய வழிகளுக்கு உண்மையான அன்பையும் வளர்ப்பதனால் அந்தக் காரியத்தின் மூலக்காரணத்தைக் கண்டறிவது தேவைப்படுகிறது. இந்த உலகத்தின் ஆவியின் பின்வரும் வெளிக்காட்டுகளை நீங்கள் ஆலோசிக்கையில் இதை நீங்கள் மனதில் வைக்கவேண்டும்.)
கடவுளுடைய சித்தத்துக்கு மதிப்புக் காட்டாமல், ஒருவன் தான் விரும்பியதைச் செய்வது
எது நன்மை எது தீமை என்பதைத் தானே தனக்குத் தீர்மானித்துக்கொள்ளும்படி சாத்தான் ஏவாளைத் தூண்டினான். (ஆதி. 3:3-5: இதற்கு நேர்மாறாக நீதிமொழிகள் 3:5, 6-ஐ பாருங்கள்.) ஏவாளின் போக்கைப் பின்தொடரும் பலர் மனிதவர்க்கத்துக்கான கடவுளுடைய சித்தம் என்னவென அறியாதிருக்கின்றனர், அதைக் கண்டறிவதிலும் அவர்களுக்கு அக்கறையில்லை. தாங்கள் சொல்லுகிறபிரகாரம், அவர்கள் வெறுமென “தங்களுக்குப் பிரியமானதையே செய்”கின்றனர். கடவுளுடைய கட்டளைகளை அறிந்து அவற்றிற்குக் கீழ்ப்படிய முயற்சி செய்கிறவர்கள் “சிறிய காரியங்கள்,” என்று தாங்கள் ஒருவேளைக் கருதுபவற்றில் கடவுளுடைய அறிவுரையை வேண்டுமென்றே புறக்கணிக்கும்படி உலகத்தின் ஆவி அவர்களைச் செய்விக்காதபடி கவனமாயிருக்கவேண்டும்.—லூக்கா 16:10; “சுதந்திரம்” என்பதையும் பாருங்கள்.
பெருமையின் அடிப்படையில் சூழ்நிலைமைகளுக்கு எதிர்ச்செயலாற்றல்
தன்னை மட்டுக்குமீறி மதிப்பிடுவது தன் இருதயத்தைக் கெடுக்க முதன்முதல் அனுமதித்தவன் சாத்தானே. (எசேக்கியேல் 28:17; நீதிமொழிகள் 16:5 ஆகியவற்றை ஒப்பிடுங்கள்.) அவன் அதிபதியாயிருக்கும் இந்த உலகத்தில் பெருமையே பிரிவினைக்குரிய சக்தியாயிருக்கிறது, மற்ற ஜாதிகளை, தேசத்தாரை, மொழிகளைப்பேசும் தொகுதிகளை, மற்றும் பொருளாதார நிலைகளிலிருப்போரைப் பார்க்கிலும் தாங்கள் மேம்பட்டவர்களென ஜனங்கள் தங்களைக் கருதிக்கொள்ளும்படி அது செய்கிறது. கடவுளைச் சேவிப்போருங்கூட ஏதேனும் மீந்திருக்கும் அத்தகைய உணர்ச்சிகளை அடியோடு ஒழித்துக் கட்டவேண்டியதாயிருக்கலாம். மேலும் பெருமை, அற்பக் காரியங்களைப் பெரிய பிரச்னைகளாக்குவதற்கு, அல்லது தங்கள் சொந்தக் குற்றங்களை ஒப்புக்கொண்டு அறிவுரையை ஏற்பதற்கும் அவ்வாறு யெகோவா தம்முடைய அமைப்பின்மூலம் அளிக்கும் மிகுந்த அன்புள்ள உதவியிலிருந்து பயனடைவதற்கும் தடங்கலாவதற்கு விடாதபடி அவர்கள் கவனமாயும் இருக்கவேண்டும்.—ரோமர் 12:3; 1 பேதுரு 5:5.
அதிகாரத்தினிடம் கலக மனப்பான்மையைக் காட்டுதல்
கலகம் சாத்தானுடன் தொடங்கினது, அவனுடைய பெயரின் பொருள் “எதிர்ப்பவன்,” என்பதாகும். “கலகம் செய்வோமாக,” என்று தன் பெயர் பொருள்கொண்ட நிம்ரோது, யெகோவாவை எதிர்ப்பதன்மூலம் தான் சாத்தானின் பிள்ளையென மெய்ப்பித்துக் காட்டினான். இந்த ஆவியைத் தவிர்ப்பது, உலகப்பிரகாரமான அதிபதிகளுக்கு எதிர்த்துநிற்பதிலிருந்து கடவுள்பயமுள்ளோரைத் தடுத்துவைக்கும் (ரோமர் 13:1); வயதுவராத இளைஞர்கள் தங்கள் பெற்றோரின், கடவுளால்-கொடுக்கப்பட்ட அதிகாரத்துக்குக் கீழ்ப்படிந்திருக்க இது உதவிசெய்யும் (கொலோ. 3:20); யெகோவா தம்முடைய காணக்கூடிய அமைப்பில் பொறுப்பு ஒப்படைத்துள்ளவர்களை அவமதிக்கும் விசுவாசத்துரோகிகளுடன் ஒத்துணர்வு காட்டுவதற்கு எதிராக இது பாதுகாப்பாயிருக்கும்.—யூதா 11; எபி. 13:17.
வீழ்ந்துபோன மாம்சத்தின் ஆசைகளைக் கட்டுப்படுத்தாமல் செல்லவிடுவது
இதன் செல்வாக்கை எல்லா இடங்களிலும் காணலாம் கேள்விப்படலாம். இதற்கு எதிராக இடைவிடாமல் எச்சரிக்கையுடன் விழிப்பாயிருக்கவேண்டும். (1 யோவான் 2:16; எபே. 4:17, 19; கலா. 5:19-21) அதன் அதிக வினைமையான அறிகுறிகளுக்கு வழிநடத்தக்கூடிய இந்தச் சிந்தனையும் ஆசைகளும் ஒருவனின் உரையாடலில், அவனுடைய வேடிக்கைப் பேச்சுகளில், அவன் செவிகொடுத்துக் கேட்கும் இசை உணர்ச்சிப் பாடல்களில், அவன் ஆடும் நடன வகையில், அல்லது ஒழுக்கக்கேடான பாலுறவை முதன்மைப்படுத்திக்காட்டும் படக்காட்சிகளை அவன் பார்ப்பதில் வெளிப்படலாம். உலகத்தின் ஆவியின் இந்த அம்சம் போதப்பொருள் துர்ப்பிரயோகம், குடிவெறி, விபசாரம், வேசித்தனம், மற்றும் ஒத்தப் பாலினத்தவர் புணர்ச்சி ஆகியவற்றில் தன்னை வெளிப்படுத்திக் காட்டுகிறது. மேலும் ஒருவன் வேதப்பூர்வமற்ற முறையில், ஆனால் ஒருவேளை சட்டப் பூர்வமாய், தன் மணத்துணையை மணவிலக்கு செய்து மற்றொருத்தியை ஏற்கையிலும் வெளிப்படுகிறது.—மல். 2:16.
ஒருவன் தான் காண்பதை அடையவேண்டுமென்ற ஆசையால் தன் வாழ்க்கை ஆதிக்கம் செலுத்தப்பட அனுமதிப்பது
இத்தகைய ஓர் ஆசையையே சாத்தான் ஏவாளில் வளர்த்தான், இவ்வாறு கடவுளுடன் அவளுடைய உறவைக் கெடுத்த ஒன்றைச் செய்யும்படி அவளுக்கு ஆவலூட்டி ஏமாற்றினான். (ஆதி. 3:6; 1 யோவான் 2:16) இயேசு அத்தகைய சோதனையை உறுதியாய் மறுத்துத் தள்ளினார். (மத். 4:8-10) வியாபார உலகம் அத்தகைய ஆவியைத் தங்களில் வளர்க்க இடமளித்துவிடதபடி யெகோவாவைப் பிரியப்படுத்த விரும்புவோர் கவனமாய்த் தங்களைக் காத்துக்கொள்ளவேண்டும். அதன் கண்ணியில் சிக்கிக்கொள்வோருக்கு மிகுந்தத் துக்கமும் ஆவிக்குரிய கேடும் விளைவாயுண்டாகும்.—மத். 13:22; 1 தீமோ. 6:7-10.
தன் உடைமைகளையும் தனக்கு இருப்பதாக எண்ணிக்கொள்ளும் திறமைத்தேர்ச்சிகளையும் பகட்டாகக் காட்டிக்கொள்வது
இந்தப் பழக்கமும் “உலகத்தினாலுண்டானது” கடவுளுடைய ஊழியர்களாகிறவர்கள் இதை விட்டுவிடவேண்டும். (1 யோவான் 2:16) இது பெருமையில் வேரூன்றியிருக்கிறது, மேலும் மற்றவர்களை ஆவிக்குரியபிரகாரம் கட்டியெழுப்புவதற்கு மாறாக, இது பொருளாசைகளையும் உலகப்பிரகாரமான சாதனை காட்சிகளையும் அவர்கள்முன் வைத்து ஆசை காட்டுகிறது.—ரோமர் 15:2.
திட்டுவதிலும் வன்முறையான செயல்களிலும் ஒருவன் தன் உணர்ச்சிவேகங்களை வெளிப்படுத்துவது
இவை பலர் கடினமாய் எதிர்த்துப் போராடவேண்டியிருக்கிற “மாம்சத்தின் கிரியைகள்.” இந்த உலகத்தின் ஆவி தங்கள்மீது ஆதிக்கம் செலுத்த விடுவதற்கு மாறாக இவர்கள், உண்மையான விசுவாசத்துடனும் கடவுளுடைய ஆவியின் உதவியுடனும் இந்த உலகத்தை ஜெயிக்கமுடியும்.—கலா. 5:19, 20, 22, 23; எபே. 4:31; 1 கொரி. 13:4-8; 1 யோவான் 5:4.
மனிதர் செய்யக்கூடியவற்றிலேயே தன் நம்பிக்கைகளையும் பயங்களையும் ஆதாரங்கொள்ள வைத்தல்
மாம்சப்பிரகாரமான மனிதன் தான் காணவும் தொடவும் கூடியவற்றையே உண்மையில் முக்கியமுடையவையென கருதுகிறான். அவனுடைய நம்பிக்கைகளும் பயங்களும் மற்ற மனிதரின் வாக்குகளையும் பயமுறுத்தல்களையும் சுற்றிச் சுழலுகின்றன. உதவிக்காக அவன் மனித அதிபதிகளை நோக்குகிறான், அவர்கள் தவறுகையில் ஏமாற்றமடைகிறான். (சங். 146:3, 4; ஏசா. 8:12, 13) அவனுக்கு இந்த வாழ்க்கையே எல்லாமாக இருக்கிறது. மரணத்தின் பயமுறுத்தல்கள் அவனை எளிதில் அடிமைப்படுத்துகிறது. (இதற்கு நேர்மாறாக, மத்தேயு 10:28; எபிரெயர் 2:14, 15-ஐப் பாருங்கள்.) ஆனால் யெகோவாவை அறிகிறவர்களும், தங்கள் மனதையும் இருதயத்தையும் அவருடைய வாக்குகளல் நிரப்புகிறவர்களும், மற்றும் தேவைப்படும் ஒவ்வொரு சமயத்திலும் உதவிக்காக அவரிடம் திரும்பக் கற்றுக்கொள்ளுகிறவர்களுமான ஆட்களின் மனதில் ஒரு புதிய சக்தி கிரியைசெய்து உந்துவிக்கிறது.—எபே. 4:23, 24; சங். 46:1; 68:19.
கடவுளுக்கு உரியதாயுள்ள வணக்கத்துக்குரிய கனத்தை மனிதர்களுக்கும் பொருட்களுக்கும் கொடுப்பது
“இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடவுளான” (NW) பிசாசாகிய சாத்தான், கடவுள் மனிதனுக்குக் கொடுத்த வணங்கவிரும்பும் மனச்சாய்வைத் தவறாக வழிநடத்தும் எல்லா வகையான பழக்கவழக்கங்களையும் ஊக்குவிக்கிறான். (2 கொரி. 4:4) சில அரசர்கள் கடவுட்களாகக் கருதி நடத்தப்பட்டிருக்கின்றனர். (அப்போஸ்தலர் 12:21-23) கோடிக்கணக்கானோர் விக்கிரகங்களுக்குமுன் வணங்குகின்றனர். இன்னும் கோடிக்கணக்கானோர் நடிகர்களையும் முதன்மையான விளையாட்டுப்போட்டியாளர்களையும் பெரிதும்போற்றி வணங்குகின்றனர். கொண்டாட்டங்கள் அடிக்கடி தனிப்பட்ட மனிதருக்கு மட்டுக்குமீறிய கனத்தைக் கொடுக்கின்றன. இந்த ஆவி அவ்வளவு பொதுப்படையாயிருப்பதால் யெகோவாவை உண்மையில் நேசித்து அவருக்குத் தனிப்பட்ட பக்தியைக் கொடுக்க விரும்புவோர் அதன் பாதிப்பைக் குறித்து ஒவ்வொரு நாளும் விழிப்புடன் எச்சரிக்கையாயிருக்கவேண்டும்.