அன்பின் அதிக மேன்மையான வழியைப் பின்பற்றுங்கள்
யெகோவா தேவன் அன்பாகவே இருக்கிறார். (1 யோவான் 4:8) நாம் கடவுளையும் நம்முடைய அயலாரையும் நேசிக்கவேண்டுமென அவருடைய குமாரன், இயேசு கிறிஸ்து, சொன்னார். (மத்தேயு 22:37-40) இந்தப் பண்பின் ஆதாரத்தின்பேரிலேயே கடவுள் இந்தச் சர்வலோகம் முழுவதையுமே இயக்குகிறார்! ஆகையால் எங்காயினும் நித்திய ஜீவனைப் பெறுவதற்கு, நாம் அன்பின் வழியைப் பின்பற்றவேண்டும்.
கடவுள் இஸ்ரவேல் ஜனத்துக்கு அன்பு காட்டினார் எனினும் பின்னால் உண்மையற்றுப்போனதற்காக அந்த அமைப்பைத் தள்ளிவிட்டார். பின்பு அவர் இயேசுவின் சீஷர்களாலாகிய அமைப்பைத் தம்முடைய புதிய அமைப்பாக அடையாளங்காட்டினார். எவ்வாறு? பரிசுத்த ஆவியின் விசேஷித்த வெளிப்படுத்தல்களால் பல மொழிகளில் பேசி தீர்க்கதரிசனம் உரைக்கும்படி அவர்களுக்கு வல்லமையளித்ததன் மூலமே. இவ்வாறு பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே அன்று, யூதர்களும் யூத மதத்தை ஏற்றவர்களுமான 3,000 பேர் விசுவாசிகளாகி, பழைய அமைப்பை விட்டுவிலகி கடவுளுடைய புதிய அமைப்புக்குள் வந்தார்கள். (அப்போஸ்தலர் 2:1-41) அதன்பின் ஆவியின் வரங்கள் இயேசுவின் அப்போஸ்தலர்களின் மூலம் அளிக்கப்பட்டதால், அத்தகைய வெளிப்படுத்தல்கள் அவர்களுடைய மரணத்தோடு நின்றுவிட்டன. (அப்போஸ்தலர் 8:5-18; 19:1-6) ஆனால் அதற்குள் அந்த வரங்கள், கடவுளுடைய தயவு ஆவிக்குரிய இஸ்ரவேலின்மீதே இருந்ததென நிரூபித்துவிட்டன.—கலாத்தியர் 6:16.
ஆவியின் வரங்களிலிருந்து உண்டான அற்புதங்கள் நன்மைபயக்குபவையாக இருந்தன. எனினும், மற்றவர்களுக்கு அன்பு அல்லது தன்னலமற்ற அக்கறையைக் காட்டுவது ஆவியின் வரங்களை உடையோராக இருப்பதைப்பார்க்கிலும் அதிக முக்கியமானது. அப்போஸ்தலன் பவுல் கொரிந்தியருக்கு எழுதின தன் முதல் நிருபத்தில் (c. பொ.ச. 55) இதைக் குறிப்பிட்டுக் காட்டினார். அதில் அன்பை “அதிக மேன்மையான வழி” எனக் குறிப்பிட்டுப் பேசினார். (1 கொரிந்தியர் 12:31) இந்த வழி 1 கொரிந்தியர் 13-ம் அதிகாரத்தில் விவரித்துப் பேசப்படுகிறது.
அன்பில்லாமல், நாம் ஒன்றுமில்லை
பவுல் பின்வருமாறு நியாயங்காட்டிப் பேசினார்: “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்.” (1 கொரிந்தியர் 13:1) அன்பில்லாமல், ஆவியால் அருளப்பட்ட மனித மொழியில் அல்லது பரலோக தூதருடைய மொழியில் பேசினாலும் அது பயனற்றதாயிருக்கும். ஆட்கள் புரிந்துகொள்ளாத மொழியில் பத்தாயிரம் வார்த்தைகளைப் பேசுவதைப் பார்க்கிலும் அறிவுறுத்தும் ஐந்து வார்த்தைகளைப் பேசுவதையே பவுல் மேலாகத் தெரிந்துகொண்டார். (1 கொரிந்தியர் 14:19) அன்பற்ற ஒருவன் “சத்தமிடுகிற வெண்கலத்” துண்டைப்போல்—பேரொலிசெய்து, தொல்லைப்படுத்தும் கண்டாமணியைப்போல்—அல்லது இன்னிசையற்ற ஓசையிடும் “கைத்தாளம்”போல் இருப்பான். பல மொழிகளில் அன்பற்றுப் பேசிக்கொண்டிருப்பது, கடவுளை மகிமைப்படுத்துவதற்கும் அவருடைய ஜனங்களுக்கு உதவிசெய்வதற்கும் ஆவிக்குரியப் பிரகாரம் கட்டியெழுப்பும் ஆறுதலான முறை அல்ல. இன்று, கிறிஸ்தவ ஊழியத்தில் புரிந்துகொள்ளக்கூடிய பேச்சைப் பயன்படுத்துவதால் நாம் அன்பு காட்டுகிறோம்.
அப்போஸ்தலன் அடுத்தப்படியாகச் சொல்வதாவது: “நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல [பரிசுத்த, NW] இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை.” (1 கொரிந்தியர் 13:2) அற்புத தீர்க்கதரிசனமுரைத்தல், பரிசுத்த இரகசியங்களைப் புரிந்துகொள்ளும் தனிப்பட்ட திறமை, மற்றும் ஆவியால் அருளப்பட்ட அறிவு மற்றவர்களுக்கு நன்மை பயக்கலாம்; ஆனால் வரமளிக்கப்பட்டவர்கள் அன்பற்றோராக இருந்தால் அத்தகைய வரங்களை உடையோருக்கு நன்மை பயக்குவதில்லை. பவுல் பரிசுத்த இரகசியங்களைத் தனிப்பட்ட முறையில் புரிந்துகொண்டதை மற்றவர்களுக்கு உதவிசெய்ய பயன்படுத்தினார், மேலும் அறிவின் வரம் கப்பற் சேதத்தில் அகப்பட்டவர்கள் தப்பிப்பிழைப்பதைப்பற்றி அவர் முன்னறிவிக்க இயலும்படி செய்தது. (அப்போஸ்தலர் 27:20-44; 1 கொரிந்தியர் 4:1, 2) எனினும், அவருக்குச் ‘சகல அறிவும் சகல விசுவாசமும்’ இருந்து ஆனால் அன்பற்றவராயிருந்திருந்தால், அவர் யெகோவாவின் பார்வையில் ஒன்றுமில்லாதவராக இருந்திருப்பார்.
இன்று, தம்முடைய சாட்சிகள் பைபிள் தீர்க்கதரிசனங்களையும் பரிசுத்த இரகசியங்களையும் புரிந்துகொள்ளும்படி யெகோவாவின் ஆவி உதவிசெய்து அத்தகைய அறிவை மற்றவர்களுக்கு அளிப்பதற்கு அவர்களை வழிநடத்துகிறது. (யோவேல் 2:28, 29) மலைகளைப்போன்ற இடையூறுகளை எதிர்த்துச் சமாளிப்பதற்குத் தேவைப்படும் விசுவாசத்தையும் இந்த ஆவி அளிக்கிறது. (மத்தேயு 17:20) பரிசுத்த ஆவி இந்தக் காரியங்களைச் செய்வதால், இவற்றிலிருந்து நமக்குச் சொந்த மகிமையைத் தேடுவது தவறாகும். காரியங்களைக் கடவுளுடைய மகிமைக்காகவும் அவர்மீதும் உடன்தோழரான மனிதர்மீதுமுள்ள அன்பினாலும் நாம் செய்தால்தவிர ஒன்றுக்கும் பயன்படாதவர்களாய் இருப்போம்.—கலாத்தியர் 5:6.
அன்பற்ற பலியால் பயனடைவதில்லை
பவுல் பின்வருமாறு கூறினார்: “[நான் பெருமைபாராட்டிக்கொள்ளும்படி, NW] எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.” (1 கொரிந்தியர் 13:3) அன்பில்லாமல், பவுல் மற்றவர்களுக்கு உணவளிக்கத் தன் உடைமை எல்லாவற்றையும் கொடுத்தாலும் பயனடையமாட்டார். நம்முடைய ஈவுகளுக்குப் பின்னுள்ள அன்பிற்கே கடவுள் பலனளிக்கிறார், அவற்றின் பொருள் விலைமதிப்புக்காக அல்லது பொய்ச்சொன்ன அனனியாவையும் சப்பீராளையும்போல் கொடுப்போராக நமக்கு மகிமையைத் தேடுவதற்காக அல்ல. (அப்போஸ்தலர் 5:1-11) யூதேயாவிலிருந்து விசுவாசிகளுக்காகச் செய்த ஒரு பஞ்சநிவாரண ஊழியம் சம்பந்தமாகப் பவுல் தன்னை அன்புடன் அர்ப்பணஞ்செய்ததால் அவர் ஒரு சிறந்த முன்மாதிரியை வைத்தார்.—1 கொரிந்தியர் 16:1-4; 2 கொரிந்தியர் 8:1-24; 9:7.
சத்தியத்துக்குச் சாட்சியாக மரிக்கும் அன்பற்ற இரத்தச்சாட்சி மரணமும் கடவுள் பார்வையில் மதிப்புடையதாயில்லை. (நீதிமொழிகள் 25:27) இயேசு தம்முடைய பலியைக் குறித்துப் பேசினார், ஆனால் அதைப்பற்றி பெருமைபாராட்டவில்லை. பெருமைபாராட்டுவதற்குப் பதிலாக அவர் அன்பினால் தூண்டப்பட்டு தம்மை மனமுவந்து அளித்தார். (மாற்கு 10:45; எபேசியர் 5:2; எபிரெயர் 10:5-10) அவருடைய ஆவிக்குரிய சகோதரர்கள், சுய-மகிமைப்படுத்தும் இரத்தச்சாட்சி மரணத்தில் அல்ல, ஆனால் யெகோவாவை மகிமைப்படுத்துகிற மற்றும் அவர்பேரிலுள்ள தங்கள் அன்பை மெய்ப்பித்துக் காட்டுகிற காட்சிப் பகட்டல்லாத வழிகளில் ‘தங்கள் சரீரங்களைக்’ கடவுளுடைய சேவையில் ‘ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கிறார்கள்.’—ரோமர் 12:1, 2.
அன்பு நம்மைச் செயல்படச் செய்யும் சில வழிகள்
பவுல் பின்வருமாறு எழுதினார்: “அன்பு நீடியபொறுமையும் தயவுமுள்ளது.” (1 கொரிந்தியர் 13:4எ, NW) ஆதாம் பாவம் செய்ததுமுதற்கொண்டு கடவுள் காட்டியிருக்கும் நீடியபொறுமை, பலருக்கு, இரட்சிப்புக்கு வழிநடத்தும் மனந்திரும்புதலைக் குறித்திருக்கிறது. (2 பேதுரு 3:9, 15) நாம் அன்புடையோராக இருந்தால், மற்றவர்களுக்குப் பொறுமையுடன் சத்தியத்தைக் கற்பிப்போம். உணர்ச்சிவேக கோபாவேசங்களைத் தவிர்த்து பரிவுகாட்டி மன்னிக்கும் மனப்பான்மையுடன் இருப்போம். (மத்தேயு 18:21, 22) மேலும் அன்பு தயவுள்ளது, கடவுளுடைய தயவு நம்மை அவரிடம் கவர்ந்திழுக்கிறது. நம்மால் இயன்றதற்கு மீறியவற்றை கடவுள் நம்மிடம் எதிர்பார்க்காததைப்போலவே, நாமும் மற்றவர்களிடம் அவ்வாறு எதிர்பார்க்காதபடி கடவுளுடைய ஆவியின் கனியாகிய தயவு நம்மைக் காத்து வைக்கிறது. (எபேசியர் 4:32) நன்றிகெட்ட ஆட்களுக்குங்கூட தயவு காட்டும்படி அன்பு நம்மைச் செய்விக்கிறது.—லூக்கா 6:35.
பவுல் மேலும் சொன்னதாவது: “அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது.” (1 கொரிந்தியர் 13:4பி) பொறாமை கடவுளுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்காதபடி ஒருவரைத் தடுத்து வைக்கிற மாம்சத்தின் ஒரு கிரியையாகும். (கலாத்தியர் 5:19-21) மற்ற ஆளின் உடைமைகளை அல்லது சாதகமான சூழ்நிலைமைகளைக் குறித்து பொறாமை கொள்வதிலிருந்து அன்பு நம்மைக் காத்து வைக்கிறது. நாம் விரும்பின ஊழிய சிலாக்கியங்களை அவர் பெற்றால், அன்பு அவரோடு களிகூரும்படியும், நம்முடைய ஆதரவை அவருக்குக் கொடுக்கும்படியும், சபைக்கு நன்மையுண்டாக அவர் பயன்படுத்தக்கூடியவரானதால் கடவுளுக்கு நன்றி செலுத்தவும் நம்மைச் செய்விக்கும்.
அன்பு “தன்னைப் புகழாது,” ஆகையால் கடவுள் தம்முடைய சேவையில் நாம் செய்யும்படி அனுமதிப்பதைப்பற்றிப் பெருமைபாராட்ட அது நம்மைத் தூண்டுவிக்கிறதில்லை. கொரிந்தியர்களில் சிலர் ஆவியின் வரங்களைத் தாங்களே உண்டுபண்ணினதுபோல் தற்பெருமைபாராட்டினார்கள், ஆனால் அவை கடவுளிடமிருந்து வந்தன, அவருடைய தற்கால அமைப்பிலுள்ள சிலாக்கியங்களும் அவ்வாறிருக்கின்றன. அவ்வாறெனில், கடவுளுடைய அமைப்பில் நமக்கிருக்கும் ஸ்தானத்தைப்பற்றி தற்பெருமைபாராட்டுவதற்குப் பதிலாக, நாம் விழுந்துவிடாதபடி எச்சரிக்கையாயிருப்போமாக. (1 கொரிந்தியர் 1:31; 4:7; 10:12) அன்பு “இறுமாப்பாயிராது,” ஆனால் அன்பற்ற ஒருவரின் மனம் தற்செருக்கால் வீக்கங்கொண்டிருக்கலாம். அன்புள்ள ஆட்கள் மற்றவர்களைப் பார்க்கிலும் மேம்பட்டவர்களாக உணருகிறதில்லை.—1 கொரிந்தியர் 4:18, 19; கலாத்தியர் 6:3.
அயோக்கியமாயும், தன்னலமாயும், கோபமுள்ளதாயும் இராது
அன்பு “அயோக்கியமானதைச் செய்யாது, தனக்கானதை நாடாது, கோபங்கொள்ளாது.” (1 கொரிந்தியர் 13:5எ, தி.மொ.) இது நல்லொழுக்கங்கள், தேவபக்தியுள்ள நடத்தை, அதிகாரத்தை மதிப்பது, கிறிஸ்தவ கூட்டங்களில் நற்பாங்கான நடத்தை ஆகியவற்றை முன்னேற்றுவிக்கிறது. (எபேசியர் 5:3-5; 1 கொரிந்தியர் 11:17-34; 14:40; யூதா 4, 8-10-ஐ ஒத்துப்பாருங்கள்.) அன்பு, மனித உடலின் எல்லா பாகங்களையும்போல், எல்லாரையும் தேவைப்படுவோராக உணரச் செய்வதால், அன்புள்ள ஒரு சபை சமாதானத்துக்கும் அடைக்கலத்துக்குமுரிய ஓர் இடமாயுள்ளது. (1 கொரிந்தியர் 12:22-25) தன்னலத்துடன் ‘தனக்கானதை நாடுவதற்குப்’ பதிலாகச் சில சமயங்களில் நம்முடைய உரிமைகளைத் தியாகம் செய்து மற்றவர்களிலும் அவர்களுடைய சுகநலத்திலும் அக்கறை காட்டும்படி அன்பு நம்மைச் செய்விக்கிறது. (பிலிப்பியர் 2:1-4) நம்முடைய ஊழியத்தால் ‘எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு எல்லா வகையான ஆட்களுக்கும் எல்லாமுமாகும்படி’ அன்பு நம்மைச் செய்விக்கிறது.—1 கொரிந்தியர் 9:22, 23.
அன்பு “கோபங்கொள்ளாது.” (தி.மொ.) கோபாவேசங்கள் பாவமுள்ள மாம்சத்தின் கிரியைகள், ஆனால் அன்பு “கோபிக்கிறதற்குத் தாமதமாய்” இருக்கும்படி நம்மைச் செய்விக்கிறது. (யாக்கோபு 1:19; கலாத்தியர் 5:19, 20) நாம் நியாயப்படி கோபங்கொண்டாலும், கோபமூண்ட நிலையில் தொடர்ந்திருந்து, இவ்வாறு பிசாசுக்கு இடங்கொடுக்கும்படி அன்பு நம்மை அனுமதிக்கிறதில்லை. (எபேசியர் 4:26, 27) முக்கியமாய் மூப்பர்கள், உடன்தோழரான விசுவாசிகள் ஏதோ ஆலோசனையை நிறைவேற்றத் தவறுகையில், கோபத்தைத் தவிர்க்கவேண்டும்.
அன்பைப்பற்றி பவுல் மேலும் சொன்னதாவது: “தீங்கை மனதில் பேணிவைக்காது.” (1 கொரிந்தியர் 13:5பி, NW) நிலையான ஒரு கணக்குப்பதிவேட்டில் பதிவு செய்திருப்பதுபோல், செய்யப்பட்ட தவறுகளை வரிசையாக மனதில் பேணிவைப்பதில்லை. உடன்தோழரான விசுவாசிகளில் அது நல்லதைக் காண்கிறது, உண்மையான அல்லது கற்பனைசெய்துகொண்ட தவறுகளுக்காகப் பதிலுக்குப்பதில் செய்கிறதில்லை. (நீதிமொழிகள் 20:22; 24:29; 25:21, 22) “சமாதானத்துக்கு அனுகூலமானவைகளைப் பின்தொடர” அன்பு நமக்கு உதவிசெய்கிறது. (ரோமர் 14:19) பவுலுக்கும் பர்னபாவுக்கும் ஒரு சச்சரவு உண்டாகி, கடவுளுடைய சேவையில் அவர்கள் பிரிந்து வெவ்வேறு வழிகளில் சென்றனர், எனினும் அன்பு அந்த மனமுறிவை ஆற்றிச் சரிப்படுத்தி கோபத்தை மனதில் பேணிவைக்காதபடி தடுத்து வைத்தது.—லேவியராகமம் 19:17, 18; அப்போஸ்தலர் 15:36-41.
நீதியினிடமாகவும் சத்தியத்தினிடமாகவும் பற்றுதலுடையது
அன்பைக் குறித்து, பவுல் மேலும் தொடர்ந்து பின்வருமாறு கூறினார்: “அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.” (1 கொரிந்தியர் 13:6) சிலர் அநீதியில் அவ்வளவு அதிக இன்பங்கொள்வதால், “பொல்லாப்புச் செய்தாலொழிய அவர்களுக்கு நித்திரை வராது.” (நீதிமொழிகள் 4:16) ஆனால் கடவுளுடைய அமைப்பில் நாம் ஒருவரோடொருவர் போட்டியிடுவதில்லை அல்லது ஒருவர் பாவத்தில் சிக்கிக்கொண்டால் களிகூருவதில்லை. (நீதிமொழிகள் 17:5; 24:17, 18) கொரிந்து சபையில் கடவுளிடமாகவும் நீதியினிடமாகவும் போதிய அன்பு இருந்திருந்தால், ஒழுக்கக்கேடு அங்கே கண்டிக்காது விடப்பட்டிருக்காது. (1 கொரிந்தியர் 5:1-13) மற்றக் காரியங்களோடுகூட, நீதியை நேசிப்பது, டெலிவிஷன், இயங்கு திரைப்படம், அல்லது அநீதியை வருணித்துக் காட்டும் நாடகமேடை காட்சிகளை அனுபவித்து மகிழ்வதிலிருந்து நம்மைத் தடுத்து வைக்கும்.
அன்பு “சத்தியத்தில் சந்தோஷப்படும்.” இங்கே சத்தியம் அநீதியோடு வேறுபடுத்திக் காட்டப்படுகிறது. சத்தியம் ஆட்களின்பேரில் நீதிக்குரிய செல்வாக்குச் செலுத்துவது நம்மைச் சந்தோஷப்பட செய்கிறதென இது பொருள்படுவதாகத் தெரிகிறது. ஆட்களைக் கட்டியெழுப்பி சத்தியத்தின் மற்றும் நீதியின் நோக்கத்தை முன்னேற்றுவிக்கும் காரியங்களில் நாம் சந்தோஷத்தைக் காண்கிறோம். பொய்கள் சொல்லாதபடி அன்பு நம்மைத் தடுத்து வைக்கிறது, நேர்மையுள்ளவர்கள் குற்றமற்றவர்களாக நிரூபிக்கப்படுகையில் அது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது, கடவுளுடைய சத்தியம் வெற்றிப்பெறுவதில் நம்மைக் களிகூரச் செய்கிறது.—சங்கீதம் 45:4.
அன்பு எவ்வாறு எல்லா காரியங்களையும் கையாளுகிறது
அன்பின் பண்பைப்பற்றி தன் விளக்கத்தைத் தொடர்ந்து, பவுல் பின்வருமாறு எழுதுதினார்: “சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.” (1 கொரிந்தியர் 13:7) மழை உள்வராதபடி ஒரு நல்ல கூரை தடுப்பதைப்போல், அன்பு ‘சகலத்தையும் தாங்கி,’ கோப உணர்ச்சியைத் தடுத்து வைக்கிறது. எவராவது நம் உணர்ச்சியைப் புண்படுத்திவிட்டு பின்பு மன்னிப்பு கேட்டால், அன்பு அந்தப் புண்படுத்தலை நாம் தாங்கிக்கொண்டு, காரியங்களைப்பற்றி மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, புண்படுத்தினவரை மன்னித்துவிடும்படி செய்கிறது. அன்பினால் நாம் நம்முடைய ‘சகோதரனை ஆதாயப்படுத்திக்கொள்ள’ முயற்சி செய்கிறோம்.—மத்தேயு 18:15-17; கொலோசெயர் 3:13.
அன்பு கடவுளுடைய வார்த்தையிலுள்ள ‘சகலத்தையும் விசுவாசிக்கிறது,’ மற்றும் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யின் மூலம் அருளப்படுகிற ஆவிக்குரிய உணவுக்காக நம்மை நன்றியுள்ளோராக இருக்கச்செய்கிறது. (மத்தேயு 24:45-47) நாம் எளிதில் ஏமாற்றப்படும் இயல்புள்ளோராக இல்லையெனினும், அன்பு அவிசுவாசமுள்ள இருதயத்தைக் கொண்டிருப்பதிலிருந்து நம்மைத் தடுத்து வைக்கிறது, மேலும் உடன்தோழரான விசுவாசிகள் கெட்ட உள்நோக்கத்துடன் செய்வதாகக் கருதுவதிலிருந்தும் நம்மைத் தடுத்துவைக்கிறது. (பிரசங்கி 7:21, 22) மேலும் அன்பு, கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிய சத்தியங்களைப்போன்ற, வேத எழுத்துக்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள “சகலத்தையும் நம்பு”கிறது. கடும் இக்கட்டான சூழ்நிலைமைகளில், அன்பினால் ஏவப்பட்டு, மிகச் சிறந்த முடிவுக்காக நாம் நம்பி ஜெபிக்கிறோம். அன்பு, நம்முடைய நம்பிக்கைக்குரிய காரணத்தை மற்றவர்களுக்குச் சொல்லும்படியும் நம்மைத் தூண்டுவிக்கிறது. (1 பேதுரு 3:15) மேலுமாக, அன்பு, நமக்கு விரோதமாகச் செய்யப்படுகிற பாவங்கள் உட்பட “சகலத்தையும் சகிக்கும்.” (நீதிமொழிகள் 10:12) கடவுள்மீதுள்ள அன்பு துன்புறுத்தலையும் மற்ற இக்கட்டுகளையும் சகிக்கும்படியும் நமக்கு உதவிசெய்கிறது.
பவுல் மேலும் சொன்னதாவது: “அன்பு ஒருக்காலும் அழியாது.” (1 கொரிந்தியர் 13:8எ, தி.மொ.) யெகோவா அழியாமை உடையவராக இருப்பதுபோல் அன்பும் முடிவடையாது அல்லது அழிந்துபோக முடியாது. நம்முடைய நித்திய கடவுள் அன்பின் உருவாக இருப்பதால், இந்தப் பண்பு ஒருபோதும் ஒழிந்துபோகாது. (1 தீமோத்தேயு 1:17; 1 யோவான் 4:16) இந்தச் சர்வலோகம் எப்பொழுதும் அன்பினால் ஆளப்படும். ஆகையால் தன்னல குணங்களை அடக்கி வென்று கடவுளுடைய ஆவியின் அழியாத இந்தக் கனியைக் காட்ட கடவுள் நமக்கு உதவிசெய்யும்படி ஜெபிப்போமாக.—லூக்கா 11:13.
ஒழிந்துபோகவிருக்கும் காரியங்கள்
எதிர்காலத்தைக் குறிப்பிட்டு, பவுல் எழுதினதாவது: “தீர்க்கதரிசனங்களானாலும் [தீர்க்கதரிசன வரங்களானாலும், NW] ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்.” (1 கொரிந்தியர் 13:8பி) ‘தீர்க்கதரிசன வரங்கள்’ புதிய தீர்க்கதரிசனங்களை உரைக்கும்படி அவற்றின் வரங்களையுடையோரைச் செய்வித்தது. கிறிஸ்தவ சபை கடவுளுடைய அமைப்பாக நிலைநாட்டப்பட்ட பின்பு அத்தகைய வரங்கள் ஒழிந்துபோயிற்றெனினும், கடவுளுடைய தீர்க்கதரிசன வல்லமை ஒருபோதும் ஒழியாது, அவருடைய வார்த்தையில் நமக்கு இப்போது தேவைப்படும் எல்லா தீர்க்கதரிசனமும் அடங்கியுள்ளது. முன்னறிவித்தபடியே, பல மொழிகளில் பேசும்படி ஆவி அருளின திறமையும் முடிவுற்றது, விசேஷித்த அறிவும் ‘ஒழிந்துபோயிற்று.’ ஆனால் யெகோவாவின் முழுமையான வார்த்தை இரட்சிப்புக்காக நாம் அறியவேண்டியவற்றை அளிக்கிறது. (ரோமர் 10:8-10) மேலும், கடவுளுடைய ஜனங்கள் அவருடைய ஆவியால் நிரப்பப்பட்டு அதன் கனியைப் பிறப்பிக்கின்றனர்.
பவுல் மேலும் தொடர்ந்து கூறினார்: “நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.” (1 கொரிந்தியர் 13:9, 10) அறிவின் மற்றும் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலின் வரங்கள் அரைகுறையானவையாக இருந்தன. அத்தகைய தீர்க்கதரிசனம் நுட்பவிவரங்களுக்குள் செல்லவில்லை, ஒவ்வொரு தீர்க்கதரிசியும், தான் முன்னறிவித்ததைப்பற்றி பரிபூரண அறிவு இல்லாமல், எதிர்காலத்தைக் குறித்து தெரிவிப்பதில் குறைவுள்ளவராயிருந்தனர். எனினும், இப்பொழுது, தீர்க்கதரிசனத்தைப் புரிந்துகொள்வது படிப்படியாய் நிறைவாகிக்கொண்டிருக்கிறது. உதாரணமாக, பைபிள் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றும் உண்மையான நிகழ்ச்சிகள், 1914-ல் இயேசு மனிதவர்க்கத்தின்மீது அரசாதிகாரத்தைப் பெற்றாரென உறுதிப்படுத்துகின்றன. அதுமுதற்கொண்டு, நாம் “முடிவுகாலத்”தில் இருந்து வருகிறோம், மேலும் ஆவிக்குரிய அறிவிலும் பைபிள் தீர்க்கதரிசனத்தைப் புரிந்துகொள்வதிலும் தொடர்ந்து வளர்ச்சியை அனுபவித்து மகிழுகிறோம். (தானியேல் 12:4) ஆகவே, நாம் பரிபூரண அறிவுக்கு வந்துகொண்டிருக்கிறோம், “நிறைவானது” அருகில் இருக்கவேண்டும்.
எல்லாவற்றிலும் மிக மேலான பண்பு நிலைத்திருக்கிறது
சபையின் முன்னேற்றத்தைக் குறிப்பாகத் தெரிவித்து, பவுல் பின்வருமாறு எழுதினார்: “நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.” (1 கொரிந்தியர் 13:11) குழந்தை மட்டுப்பட்ட அறிவு மற்றும் உடல்வளர்ச்சியின் அடிப்படையின்பேரில் செயல்படுவதால், அதைத் தொட்டிலில் தாலாட்டுவதுபோல், அங்கும் இங்குமாகக் கவர்ந்து அசைவிக்க முடியும். ஆனால் ஓர் ஆள் அதைப் பார்க்கிலும் மிக அதிக உடல்வளர்ச்சியடைந்து, மிக அதிக அறிவுபெற்றிருக்கிறான், பொதுவாய் அவனை எளிதில் அசைவிக்க முடியாது. அவன் குழந்தைப்பருவ எண்ணங்களையும், மனப்பான்மைகளையும், முறைகளையும் ஒழித்துவிட்டான். இவ்வாறே, கடவுளுடைய பூமிக்குரிய அமைப்பு அதன் குழந்தைப்பருவத்தைவிட்டு வளர்ந்து முதிர்ந்த பின்பு, தீர்க்கதரிசனம், பலபாஷைகள், அறிவு ஆகியவற்றிற்குரிய ஆவியின் வரங்கள் அதற்குத் தேவையில்லையென அவர் தீர்த்தார். இப்பொழுது அதன் முதிர்வயதில் இருக்கும் சபையின் இந்நாளைய உறுப்பினரும், அத்தகைய வரங்களுக்கான தேவையை உணராதபோதிலும், அவர்கள், கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலின்கீழ் அவரைச் சேவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றனர்.
பவுல் மேலும் சொன்னதாவது: “இப்பொழுது [உலோகக், NW] கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுதோ முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது என் அறிவு குறைவு, அப்போழுதோ நான் முற்றிலும் அறியப்பட்டிருக்கிறபடியே முற்றிலும் அறிந்துகொள்ளுவேன்.” (1 கொரிந்தியர் 13:12, தி.மொ.) சபையின் குழந்தைப்பருவத்தின்போது, குறிப்பிட்ட சில காரியங்களை வெளிப்படுத்துவதற்கு அது கடவுளுடைய காலமாக இருக்கவில்லை. ஆகவே, கிறிஸ்தவர்கள், பளப்பளப்பற்ற மங்கலான உலோகக் கண்ணாடிக்குள் பார்ப்பதுபோல், அவற்றைத் தெளிவற்ற நிழலாட்டமாய்க் கண்டனர். (அப்போஸ்தலர் 1:6, 7) ஆனால் நாம் நிழலாட்டமான காட்சிக்கு அப்பால் காண்கிறோம். தீர்க்கதரிசனத்தின் மற்றும் மாதிரி முன்குறித்தவற்றின் நிறைவேற்றங்கள் தெளிவாய்க் காணப்படுகின்றன, ஏனெனில் இது வெளிப்படுத்துவதற்குக் கடவுள் குறித்தக் காலம். (சங்கீதம் 97:11; தானியேல் 2:28) பவுல்தானே கடவுளை அறிந்திருந்தபோதிலும், யெகோவாவைப்பற்றிய உச்சநிலையான அறிவும் அவரோடு மிக அதிகம் நெருங்கிய உறவும் அந்த அப்போஸ்தலன் பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படும்போதே வரும், இவ்வாறு அவர் தன்னுடைய கிறிஸ்தவ வாழ்க்கைப்போக்கின் முழு பலனை அடைவார்.
அன்பைப்பற்றிய தன் சுருக்கக் குறிப்புரைக்கு முடிவாக, பவுல் பின்வருமாறு எழுதினார்: “இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.” (1 கொரிந்தியர் 13:13) ஆவியின் அற்புதமான வரங்கள் இல்லாதபோதிலும், சபை இப்பொழுது அதிக முழுமையான அறிவை உடையதாயுள்ளது, மேலுமதிக நிறைவான விசுவாசத்துக்கும், நம்பிக்கைக்கும், அன்புக்கும் காரணத்தை உடையதாயிருக்கிறது. கடவுள் வாக்குக் கொடுத்திருக்கும் எல்லாவற்றையும் நிறைவேற்றமடைந்துவிட்டதுபோன்று கருதும் அத்தகைய திட விசுவாசம் அதற்கு இருக்கிறது. (எபிரெயர் 11:1) கடவுளுடைய வார்த்தையில் முன்னறிவித்துள்ள காரியங்கள் மெய்ம்மையாக நிறைவேறிவிடுகையில் விசுவாசத்தின் அம்சங்கள் முடிவடையும். நம்பிக்கையின் எதிர்நோக்குகள் நம்பி காத்திருந்த காரியங்களை நாம் காண்கையில் முடிவுறும். ஆனால் அன்பு என்றென்றுமாக நிலைத்திருக்கும். ஆகையால், யெகோவாவின் சாட்சிகள் யாவரும் அதிக மேன்மையான அன்பின் வழியைத் தொடர்ந்து பின்பற்றுவார்களாக.