கிறிஸ்தவ மிஷனரி வேலைக்கு ஓர் ஏவப்பட்ட முன்மாதிரி
“நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்கள்.”—1 கொரிந்தியர் 11:1.
1. சீஷர்கள் பார்த்து பின்பற்றுவதற்கு எந்த வழிகளில் இயேசு முதன்மையான முன்மாதிரியை வைத்தார்? (பிலிப்பியர் 2:5-9)
எப்படிப்பட்ட தலைசிறந்த முன்மாதிரியை இயேசு தம் சீஷர்களுக்காக வைத்தார்! கீழே பூமிக்கு வருவதற்கும், பாவமுள்ள மானிடர்கள் மத்தியில் வாழ்வதற்கும் அவர் தம் பரலோக மகிமையை சந்தோஷமாக விட்டு வந்தார். மனிதவர்க்கத்தின் இரட்சிப்புக்காகவும், அதிமுக்கியமாக தம் பரலோக தகப்பனின் பெயரை பரிசுத்தப்படுத்தவும் அவர் பெரும் துன்பத்தை அனுபவிக்க மனமுள்ளவராய் இருந்தார். (யோவான் 3:16; 17:4) தம் ஜீவனுக்காக விசாரணை செய்யப்பட்டபோது, இயேசு தைரியமாக அறிவித்தார்: “சத்தியத்தைக் குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்.”—யோவான் 18:37.
2. உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு தாம் ஆரம்பித்து வைத்த வேலையை தொடர்ந்து செய்யும்படி தம் சீஷர்களுக்கு ஏன் கட்டளையிட்டார்?
2 ராஜ்ய சத்தியத்துக்கு சாட்சி பகரும் வேலையை சீஷர்கள் தொடர்ந்து செய்வதற்காக தம் மரணத்துக்கு முன்பு இயேசு அவர்களுக்கு மிகச்சிறந்த பயிற்சி கொடுத்தார். (மத்தேயு 10:5-23; லூக்கா 10:1-16) எனவே, தம் உயிர்த்தெழுதலுக்குப் பின், இயேசு இக்கட்டளையை கொடுக்க முடிந்தது: “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.”—மத்தேயு 28:19, 20.
3 அடுத்த மூன்றரை ஆண்டுகளின்போது, இயேசுவின் சீஷர்கள் இந்தக் கட்டளைக்கு கீழ்ப்படிந்து, தங்கள் சீஷராக்கும் வேலையை யூதர்கள், யூத மதத்துக்கு மாறியவர்கள், விருத்தசேதனம் செய்யப்பட்ட சமாரியர்கள் ஆகியோருக்கு மட்டுமே வரையறுத்து செய்து வந்தனர். பின்னர் பொ.ச. 36-ல், விருத்தசேதனம் செய்யப்படாத மனிதனாகிய கொர்நேலியுவுக்கும், அவருடைய வீட்டாருக்கும் நற்செய்தியை பிரசங்கிக்கும்படி கடவுள் கட்டளையிட்டார். அதைத் தொடர்ந்த பத்தாண்டுகளின்போது, மற்ற புறஜாதியார் சபைக்குள் கொண்டுவரப்பட்டனர். என்றபோதிலும், பெரும்பகுதியான வேலை கிழக்கத்திய மத்தியதரைக்கடல் சார்ந்த பகுதிகளில் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாக தோன்றுகிறது.—அப்போஸ்தலர் 10:24, 44-48; 11:19-21.
4. ஏறக்குறைய பொ.ச. 47-48-ல் என்ன குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது?
4 நெடுந்தொலைவான பகுதிகளில் இருந்த யூதர்களையும், புறஜாதியாரையும் சீஷராக்குவதற்கு கிறிஸ்தவர்களை உந்துவிக்க ஏதோவொரு காரியம் தேவைப்பட்டது. ஆகையால், ஏறக்குறைய பொ.ச. 47-48-ல் சிரியா அந்தியோகியா சபையின் மூப்பர்கள் இந்தத் தெய்வீக செய்தியை பெற்றுக்கொண்டார்கள்: “பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள்.” (அப்போஸ்தலர் 13:2) அப்போது பவுல் தான் ஆரம்பத்தில் கொண்டிருந்த சவுல் என்ற பெயரால் அறியப்பட்டிருந்தார் என்பதை கவனியுங்கள். அந்தச் சமயத்தில் பவுலைவிட பர்னபா மூத்தவராக நோக்கப்பட்டதன் காரணமாக கடவுள் பவுலுக்குமுன் பர்னபாவின் பெயரைக் குறிப்பிட்டார் என்பதையும் கவனியுங்கள்.
5. பவுல், பர்னபாவின் மிஷனரி பயணத்தைப் பற்றிய பதிவு கிறிஸ்தவர்களுக்கு இன்று ஏன் அதிக மதிப்புள்ளதாக இருக்கிறது?
5 பவுல், பர்னபாவின் மிஷனரி பயணத்தைப் பற்றிய விவரமான பதிவு யெகோவாவின் சாட்சிகளுக்கு அதிக உற்சாகமூட்டுவதாய் இருக்கிறது. அயல்நாட்டு சமுதாயத்தில் கடவுளை சேவிப்பதற்காக தங்கள் பிறந்த நகரங்களை விட்டு வெகுதூரம் சென்றிருக்கும் மிஷனரிகளுக்கும் பயனியர்களுக்கும் விசேஷமாக உற்சாகமூட்டுவதாய் இருக்கிறது. பவுலையும் பர்னபாவையும் பார்த்துப் பின்பற்றுவதற்கும், சீஷர்களை உண்டுபண்ணும் அதிமுக்கியமான வேலையில் தங்கள் பங்கை மிகுதியாக்குவதற்கும், அப்போஸ்தலர் அதிகாரங்கள் 13, 14-ஐ விமர்சிப்பது இன்னும் அநேகரை நிச்சயமாக உந்துவிக்கும்.
சீப்புரு தீவு
6. சீப்புருதீவில் மிஷனரிகள் என்ன முன்மாதிரியை வைத்தனர்?
6 தாமதிக்காமல் உடனடியாக மிஷனரிகள் சிரியா துறைமுகமாகிய செலூக்கியாவிலிருந்து சீப்புரு தீவுக்கு கடற்பயணம் செய்தார்கள். சாலமி பட்டணத்தில் வந்திறங்கிய பின், அவர்கள் திசைதிருப்பப்படாமல் “யூதருடைய ஜெப ஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள்.” அவர்கள் அந்தப் பட்டணத்திலேயே குடியேறி, அத்தீவில் இருப்பவர்கள் அவர்களிடம் வருவதற்கு காத்திருக்கவில்லை. மாறாக, அவர்கள் ‘தீவு முழுவதும் கடந்தார்கள்.’ இது அதிக தூரம் நடந்து செல்வதையும், தங்கும் இடங்களை அநேக முறைகள் மாற்றுவதையும் உட்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் சீப்புரு ஒரு பெரிய தீவாகவும், அவர்களுடைய பயணம் அந்தத் தீவின் பெரும்பகுதியின் ஒரு கோடியிலிருந்து மறுகோடிக்கு உள்ள தொலைவு வரை அவர்களை கூட்டிச் சென்றது.—அப்போஸ்தலர் 13:5, 6.
7. (எ) பாப்போவில் என்ன முக்கியமான சம்பவம் நடைபெற்றது? (பி) என்ன மனநிலையைக் கொண்டிருக்கும்படி இப்பதிவு நம்மை உற்சாகப்படுத்துகிறது?
7 அவர்கள் தங்கியிருந்த காலம் முடிவுக்கு வந்தபோது, பாப்போ பட்டணத்தில் இருவரும் ஓர் அதிசயமான அனுபவத்தைப் பிரதிபலனாகப் பெற்றார்கள். அத்தீவின் அதிபதியாகிய செர்கியுபவுல் அவர்களுடைய செய்தியை செவிகொடுத்துக் கேட்டு “விசுவாசியாக ஆனான்.” (அப்போஸ்தலர் 13:7, 12) பவுல் பின்னர் இவ்வாறு எழுதினார்: “சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை.” (1 கொரிந்தியர் 1:26) எனினும், பிரதிபலித்த வல்லவர்களுள் செர்கியுபவுலும் ஒருவர். இந்த அனுபவம் அனைவரையும் உற்சாகப்படுத்த வேண்டும். 1 தீமோத்தேயு 2:1-4-ல் நாம் உற்சாகப்படுத்தப்பட்டிருக்கிறபடி, விசேஷமாக மிஷனரிகள் அரசாங்க அதிகாரிகளுக்கு சாட்சி கொடுப்பதைக் குறித்து ஓர் உடன்பாடான மனநிலையைக் கொண்டிருக்கும்படி ஊக்கப்படுத்த வேண்டும். அதிகாரத்தில் இருக்கும் மனிதர்கள் சில சமயங்களில் கடவுளுடைய ஊழியர்களுக்கு பெரும் உதவி அளித்திருக்கின்றனர்.—நெகேமியா 2:4-8.
8. (எ) இச்சமயம் முதற்கொண்டு பர்னபாவுக்கும் பவுலுக்கும் இடையே இருந்த உறவில் என்ன மாற்றம் தோன்றுகிறது? (பி) பர்னபா எந்த விதத்தில் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருந்தார்?
8 யெகோவாவின் ஆவியின் செல்வாக்கின்கீழ் செர்கியுபவுல் மதம் மாறியதில் பவுல் பெரும் பங்கை வகித்தார். (அப்போஸ்தலர் 13:8-12) மேலும், இந்தச் சமயத்திலிருந்து பவுல் முதன்மை தாங்கி வழிநடத்தினார் என்பதாக தோன்றுகிறது. (அப்போஸ்தலர் 13:7-ஐ அப்போஸ்தலர் 13:15, 16, 43-ம் வசனங்களோடு ஒப்பிடுக.) பவுல் மதம் மாறியபோது பெற்றுக்கொண்ட தெய்வீக கட்டளைக்கு இது பொருத்தமாய் இருந்தது. (அப்போஸ்தலர் 9:15) அப்படிப்பட்ட மாற்றம் பர்னபாவின் மனத்தாழ்மையை சோதித்தது. என்றபோதிலும், இந்த மாற்றத்தை ஒரு தனிப்பட்ட அவமதிப்பாக நோக்காமல், பர்னபா “ஆறுதலின் குமாரன்” என்ற தன் பெயரின் அர்த்தத்துக்கு இசைவாக வாழ்ந்தார். பின்னர் சில யூத கிறிஸ்தவர்கள் அவர்களுடைய ஊழியத்தை விருத்தசேதனம் செய்யப்படாத புறஜாதியாரின் சார்பாக எதிர்த்துரைத்தபோதும், பவுலின் மிஷனரி பயணம் முழுவதும், பர்னபா உண்மையோடு பவுலை ஆதரித்தார். (அப்போஸ்தலர் 15:1, 2) இது மிஷனரி, பெத்தேல் வீடுகளில் தங்கி வாழ்பவர்கள் உட்பட நம் அனைவருக்கும் எப்படிப்பட்ட சிறந்த முன்மாதிரியாயிருக்கிறது! தேவராஜ்ய சரிப்படுத்துதல்களை ஏற்றுக்கொள்ள நாம் எப்போதுமே மனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். நம் மத்தியில் முன்நின்று வழிநடத்துவதற்காக நியமிக்கப்பட்டவர்களுக்கு நம்முடைய முழு ஆதரவையும் கொடுக்க வேண்டும்.—எபிரெயர் 13:17.
சின்ன ஆசியாவின் மேட்டுச் சமவெளி
9. பிசீதியா அந்தியோகியா வரை பிரயாணம் செய்வதற்கு பவுலும் பர்னபாவும் விருப்பமாயிருந்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
9 சீப்புருவிலிருந்து பவுலும் பர்னபாவும் வடக்கு பக்கமாக ஆசியா கண்டத்துக்கு கடற்பயணம் செய்தார்கள். மிஷனரிகள் கடற்கரை பகுதிகளில் தங்கவில்லை. இதற்கான காரணம் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டில்லை. ஆனால் சின்ன ஆசியாவில் மத்திப மேட்டுச் சமவெளியில் அமைந்திருக்கும் பிசீதியா அந்தியோகியாவுக்கு ஏறக்குறைய 180 கிலோமீட்டர் நீண்ட ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். மலைகளினூடே செல்லும் குறுகிய பாதை வழியாக ஏறி கடல் மட்டத்துக்கு மேல் 1,100 மீட்டர் சமவெளியில் இறங்குவதை இது உட்படுத்தியது. பைபிள் வல்லுநர் J. S. ஹோசன் இவ்வாறு சொல்கிறார்: “மேட்டுச் சமவெளியை தெற்கு கடற்கரையிலிருந்து பிரித்த மலைகளில் வாழ்ந்த சட்டத்துக்கு கீழ்ப்படியாத கொள்ளையடிக்கும் பழக்கம்கொண்ட ஜனங்கள் பண்டைய சரித்திரத்தின் எல்லா பகுதிகளிலும் பேர்போனவர்களாயிருந்தனர்.” கூடுதலாக, மிஷனரிகள் இயற்கை சேதங்களினாலும் அபாயத்தை எதிர்ப்பட்டனர். “பிசீதியாவின் மலைவெளியைப் போன்று சின்ன ஆசியாவில் இருக்கும் எந்தப் பட்டணமும் அதன் ‘தண்ணீர் வெள்ளங்களுக்கு’ தனிச்சிறப்புப் பெற்றதாய் இல்லை. அங்கே நதிகள் பெரும் செங்குத்தான பாறைகளின் அடிவாரத்தில் பாய்ச்சலாக பாய்ந்தோடும். அல்லது குறுகிய மலையிடுக்கு வழியே காட்டாறுகள் வேகமாய் பாய்ந்தோடும்,” என்று ஹோசன் மேலுமாக குறிப்பிடுகிறார். நற்செய்தியை பரப்புவதற்காக மிஷனரிகள் மேற்கொண்ட பயணங்களைக் குறித்து நாம் கற்பனை செய்து பார்க்க இப்படிப்பட்ட நுட்ப விவரங்கள் நமக்கு உதவி செய்கின்றன. (2 கொரிந்தியர் 11:26) அதே போன்று இன்று யெகோவாவின் ஊழியர்களில் அநேகர் ஜனங்களை சென்றெட்டுவதற்கும், அவர்களோடு நற்செய்தியை பகிர்ந்துகொள்வதற்கும் எல்லாவிதமான இடையூறுகளையும் தைரியமாக எதிர்ப்படுகின்றனர்.
10, 11. (எ) பவுல் எவ்வாறு தன் சபையாரோடு பரஸ்பரமான அக்கறையை அடிப்படையாக வைத்துப் பேசினார்? (பி) மேசியாவின் பாடுகளைக் குறித்து கேட்டபோது அநேக யூதர்கள் ஏன் அதிர்ச்சியடைந்தனர்? (சி) எந்த விதமான இரட்சிப்பை பவுல் தன்னைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு முன்பாக வைத்தார்?
10 பிசீதியா அந்தியோகியாவில் ஒரு யூத ஜெப ஆலயம் இருந்தபடியால் மிஷனரிகள் முதலில் அங்கு சென்றனர். கடவுளுடைய வார்த்தையை நன்கு அறிந்திருந்தவர்கள் நற்செய்தியை ஏற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு கொடுப்பதற்கு அங்கு சென்றனர். பேசுவதற்கு அழைக்கப்பட்டபோது, பவுல் எழுந்து நின்று மிகத் தேர்ந்த ஒரு சொற்பொழிவு ஆற்றினார். பேச்சு முழுவதும் அவர் சபையாரில் இருந்த யூதர்களோடும், யூத மதத்துக்கு மாறியவர்களோடும் பரஸ்பரமான அக்கறையை அடிப்படையாக வைத்து பேசினார். (அப்போஸ்தலர் 13:13-16, 26) பவுல் தன் முன்னுரைக்குப் பிறகு, யூதர்களின் புகழ்பெற்ற சரித்திரத்தை விமர்சித்தார். யெகோவா அவர்களுடைய முற்பிதாக்களை தேர்ந்தெடுத்து, பின்னர் எகிப்திலிருந்து அவர்களை விடுதலை செய்தார் என்பதையும், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் குடியிருந்தவர்களை வெற்றிகொள்வதற்கு அவர் எவ்வாறு உதவினார் என்பதையும் அவர்களுக்கு நினைப்பூட்டினார். பிறகு தாவீதோடு யெகோவா கொண்டிருந்த தொடர்புகளை பவுல் சிறப்பித்துக் காட்டினார். இப்படிப்பட்ட தகவல் முதல் நூற்றாண்டில் இருந்த யூதர்களுக்கு அக்கறையூட்டுவதாய் இருந்தது. ஏனென்றால், தாவீதின் பரம்பரையிலிருந்து ஒருவரை இரட்சகராகவும், நித்திய அரசராகவும் கடவுள் எழுப்புவார் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இத்தறுவாயில், பவுல் தைரியமாக அறிவித்தார்: “அவனுடைய [தாவீது] சந்ததியிலே தேவன் தமது வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலுக்கு இரட்சகராக இயேசுவை எழும்பப்பண்ணினார்.”—அப்போஸ்தலர் 13:17-23.
11 ரோம ஆதிக்கத்திலிருந்து தங்களை விடுதலை செய்து, யூத தேசத்தை மற்ற எல்லா தேசங்களுக்கும் மேலாக உயர்த்தப் போகும் ஓர் இராணுவ வீரனைப் போன்று இரட்சகர் வருவார் என்று அநேக யூதர்கள் காத்துக்கொண்டிருந்தனர். எனவே, தங்கள் சொந்த மதத் தலைவர்களால் கொலை செய்யப்படுவதற்கு மேசியா ஒப்புக்கொடுக்கப்பட்டார் என்று பவுல் கூறியதைக் கேட்டபோது அவர்கள் அதிர்ச்சியடைந்ததில் சந்தேகமேயில்லை. “தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்,” என்று பவுல் தைரியமாக அறிவித்தார். ஓர் அற்புதவிதமான இரட்சிப்பை அவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று தன் பேச்சின் முடிவில் சபையாருக்கு அவர் காண்பித்தார். “இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும், மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது,” என்று அவர் சொன்னார். இந்த அற்புதமான இரட்சிப்பின் ஏற்பாட்டை புறக்கணிப்பார்கள் என்று கடவுள் முன்னறிவித்திருந்த வகுப்பாரோடு சேர்ந்துகொள்ளவேண்டாம் என்று சபையாரை ஊக்குவித்து பவுல் தன் பேச்சை முடித்துக்கொண்டார்.—அப்போஸ்தலர் 13:30-41.
12. பவுலின் பேச்சிலிருந்து என்ன விளைவடைந்தது, இது நம்மை எவ்வாறு உற்சாகப்படுத்தவேண்டும்?
12 வேதாகமத்தை அடிப்படையாகக்கொண்டு நன்கு அளிக்கப்பட்ட எவ்வளவு நல்ல ஒரு பேச்சு! கேட்டுக்கொண்டிருந்தோர் எவ்வாறு பிரதிபலித்தனர்? “யூதரிலும் யூதமார்க்கத்தமைந்த பக்தியுள்ளவர்களிலும் அநேகர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள்.” (அப்போஸ்தலர் 13:43) இது நமக்கு இன்று எவ்வளவு உற்சாகமூட்டுவதாய் இருக்கிறது! அதே போன்று நம்முடைய வெளி ஊழியத்திலோ அல்லது நம்முடைய சபைக்கூட்டங்களில் குறிப்புகளும் பேச்சுகளும் கொடுக்கும்போதோ சத்தியத்தை திறம்பட்ட விதத்தில் அளிக்க நம்மால் ஆன மிகச் சிறந்ததை நாம் செய்வோமாக.—1 தீமோத்தேயு 4:13-16.
13. மிஷனரிகள் பிசீதியா அந்தியோகியாவை ஏன் விட்டுச் செல்ல வேண்டியிருந்தது, புதிய சீஷர்களைக் குறித்து என்ன கேள்விகள் எழும்புகின்றன?
13 பிசீதியா அந்தியோகியாவில் புதிதாக அக்கறை காண்பித்தவர்களால் இந்நற்செய்தியை மற்றவர்களுக்கு தெரிவிக்காமல் இருக்க முடியவில்லை. இதன் விளைவாக “அடுத்த ஓய்வுநாளிலே கொஞ்சங்குறையப் பட்டணத்தாரனைவரும் தேவவசனத்தைக் கேட்கும்படி கூடிவந்தார்கள்.” விரைவில் இச்செய்தி பட்டணத்துக்கு அப்பால் சென்றது. உண்மையில், “கர்த்தருடைய வசனம் அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று.” (அப்போஸ்தலர் 13:44, 49) இந்த உண்மையை வரவேற்பதற்கு பதிலாக, பொறாமையான யூதர்கள் மிஷனரிகளை பட்டணத்துக்கு வெளியே துரத்திவிட்டார்கள். (அப்போஸ்தலர் 13:45, 50) இது எவ்வாறு புதிய சீஷர்களைப் பாதித்தது? அவர்கள் உற்சாகமிழந்து விட்டுக்கொடுத்துவிட்டனரா?
14. மிஷனரிகள் ஆரம்பித்த வேலையை எதிராளிகள் ஏன் முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை, இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
14 இல்லை. ஏனென்றால் இது கடவுளுடைய வேலை. மிஷனரிகள் உயிர்த்தெழுப்பப்பட்ட ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் என்ற ஒரு பலமான அஸ்திபாரத்தையும் போட்டிருந்தனர். எனவே, புதிய சீஷர்கள் மிஷனரிகளை அல்ல, கிறிஸ்துவையே தங்கள் தலைவராக எண்ணினர் என்பது தெளிவாக இருக்கிறது. ஆகையால் அவர்கள் “சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டார்கள்,” என்று நாம் வாசிக்கிறோம். (அப்போஸ்தலர் 13:52) இது மிஷனரிகளுக்கும், சீஷர்களை உண்டுபண்ணும் மற்றவர்களுக்கும் எவ்வளவு உற்சாகமூட்டுவதாய் இருக்கிறது! மனத்தாழ்மையோடும் வைராக்கியத்தோடும் நாம் நம்முடைய பங்கை செய்தோமென்றால், யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் நம்முடைய ஊழியத்தை ஆசீர்வதிப்பார்கள்.—1 கொரிந்தியர் 3:9.
இக்கோனியா, லீஸ்திரா, தெர்பை
15. இக்கோனியாவில் எந்த வழிமுறையை மிஷனரிகள் பின்பற்றினார்கள்? என்ன விளைவுகளோடு?
15 பவுலும் பர்னபாவும் இப்போது தென்கிழக்கே சுமார் 140 கிலோமீட்டர் பிரயாணம் செய்து இக்கோனியா என்ற அடுத்த பட்டணத்துக்கு சென்றனர். துன்புறுத்தப்படுவோம் என்ற பயம் அவர்கள் அந்தியோகியாவில் கடைப்பிடித்த அதே வழிமுறைகளை பின்பற்றுவதிலிருந்து தடைசெய்யவில்லை. அதன் விளைவாக “யூதரிலும் கிரேக்கரிலும் திரளான ஜனங்கள் விசுவாசிகளானார்கள்,” என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 14:1) நற்செய்தியை ஏற்றுக்கொள்ளாத யூதர்கள் மறுபடியும் எதிர்ப்பை தூண்டிவிட்டார்கள். ஆனால் அந்த மிஷனரிகள் சகித்திருந்து புதிய சீஷர்களுக்கு உதவி செய்வதில் கணிசமான நேரத்தை இக்கோனியாவில் செலவழித்தனர். பின்னர், அவர்களுடைய யூத எதிரிகள் அவர்களை கல்லெறியப்போகும் சமயத்தில், பவுலும் பர்னபாவும் ஞானமாக அடுத்த பிராந்தியமாகிய “லீஸ்திராவுக்கும் தெர்பைக்கும் அவைகளின் சுற்றுப்புறங்களுக்கும் ஓடிப்போனார்கள்.”—அப்போஸ்தலர் 14:2-6.
16, 17. (எ) லீஸ்திராவில் பவுலுக்கு என்ன ஏற்பட்டது? (பி) அப்போஸ்தலனோடு கடவுள் கொண்டிருந்த தொடர்புகள் லீஸ்திராவிலிருந்து வந்த ஓர் இளம் மனிதனை எவ்வாறு பாதித்தது?
16 தைரியமாக அவர்கள் இந்தப் புதிய, முதன்முறையாக வேலை செய்யப்படும் பிராந்தியத்தில் “சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணினார்கள்.” (அப்போஸ்தலர் 14:7) பிசீதியா அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலும் இருந்த யூதர்கள் இதைக் குறித்து கேட்டபோது, அவர்கள் லீஸ்திரா வரைக்கும் வந்து பவுல்மீது கல்லெறியும்படி ஜனக்கூட்டத்தை தூண்டினர். தப்பியோடுவதற்கு நேரம் இல்லாததால் பவுல் கல்லடிப்பட்டார். அவர் மரித்துவிட்டார் என்று அவருடைய எதிரிகள் நம்பினர். அவரைப் பட்டணத்துக்கு வெளியே இழுத்துக்கொண்டு சென்றார்கள்.—அப்போஸ்தலர் 14:19.
17 புதிய சீஷர்களுக்கு இதனால் ஏற்பட்ட வருத்தத்தை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியுமா? ஆனால் அவர்கள் பவுலை சூழ்ந்துகொண்டபோது, எதிர்பார்த்ததற்கு மாறாக ஆச்சரியப்படும் விதத்தில் அவர் எழுந்து நின்றார்! தீமோத்தேயு என்ற பெயரைக்கொண்ட இளம் மனிதன் இந்தப் புதிய சீஷர்களில் ஒருவராக இருந்தாரா என்பதை பைபிள் சொல்கிறதில்லை. பவுலோடு கடவுள் கொண்டிருந்த தொடர்புகளை ஏதோவொரு சமயத்தில் அவர் அறிய வந்தார். அது அவருடைய இளம் மனதில் ஓர் ஆழ்ந்த பதிவை ஏற்படுத்தியது. பவுல் தீமோத்தேயுவுக்கு தன் இரண்டாம் கடிதத்தில் இவ்வாறு எழுதினார்: “நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் . . . அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறாய்; எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன்; இவையெல்லாவற்றினின்றும் கர்த்தர் என்னை நீங்கலாக்கிவிட்டார்.” (2 தீமோத்தேயு 3:10, 11) பவுல் கல்லெறியப்பட்டு ஏறக்குறைய ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குப் பிறகு, அவர் திரும்பவும் லீஸ்திராவுக்கு வந்தார். அங்கு இளம் தீமோத்தேயு ஒரு முன்மாதிரியான கிறிஸ்தவனாக இருந்ததை அவர் கண்டார். “அவன் லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரராலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தான்.” (அப்போஸ்தலர் 16:1, 2) ஆகையால் பவுல் அவரை தன்னோடு பயணம் செய்வதற்கு உடன் தோழனாக தேர்ந்தெடுத்தார். இது தீமோத்தேயு ஆவிக்குரிய விதத்தில் வளர்ச்சியடைவதற்கு உதவியது. காலப்போக்கில் பவுல் வேறு சபைகளை சந்திப்பதற்காக அனுப்புவதற்கு தகுதியுள்ளவராக தீமோத்தேயு ஆனார். (பிலிப்பியர் 2:19, 20; 1 தீமோத்தேயு 1:3) அதே போன்று, இன்று இளைஞர்கள்மீது கடவுளின் வைராக்கியமுள்ள ஊழியர்கள் ஆச்சரியமான பாதிப்பை கொண்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட இளைஞர்களில் அநேகர் தீமோத்தேயுவைப் போன்று மதிப்புவாய்ந்த கடவுளுடைய ஊழியர்களாக வளருகின்றனர்.
18. (எ) தெர்பையில் மிஷனரிகளுக்கு என்ன ஏற்பட்டது? (பி) இப்போது அவர்களுக்கு எந்த வாய்ப்பு திறந்து வைக்கப்பட்டது, ஆனால் அவர்கள் எந்தப் போக்கை தேர்ந்தெடுத்தார்கள்?
18 லீஸ்திராவில் மரணத்திலிருந்து தப்பியோடினதைத் தொடர்ந்து வந்த காலையில் பவுல் பர்னபாவோடு தெர்பைக்கு புறப்பட்டுச் சென்றார். இம்முறை எதிராளிகள் அவரைப் பின்தொடரவில்லை. பவுலும் அவரோடிருந்தவர்களும் ‘அநேகரைச் சீஷராக்கினார்கள்,’ என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 14:20, 21) தெர்பையில் சபையை ஸ்தாபித்தப் பிறகு, பவுலும் பர்னபாவும் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தது. ரோமர்களால் கட்டப்பட்ட ஒரு சாலை தெர்பையிலிருந்து தர்ஷீசுக்கு தொடர்ந்து சென்றது. அங்கிருந்து சீரியா அந்தியோகியாவுக்கு திரும்பிச் செல்வது குறுகிய பயணமாக இருந்தது. திரும்பிச் செல்வதற்கு அதுதான் அதிக வசதியான வழியாக இருந்திருக்கக்கூடும். இப்போது அந்த மிஷனரிகள் ஓய்வு எடுத்துக்கொள்வது தகுதியானது என்று எண்ணியிருக்கக்கூடும். ஆனால் தங்கள் எஜமானை பின்பற்றுகிறவர்களாக பவுலும் பர்னபாவும் ஒரு மிகப் பெரிய தேவையை உணர்ந்தனர்.—மாற்கு 6:31-34.
கடவுளுடைய வேலையை முழுவதுமாக செய்தல்
19, 20. (எ) லீஸ்திரா, இக்கோனியா, அந்தியோகியா ஆகிய இடங்களுக்கு திரும்பி வந்ததற்காக யெகோவா எவ்வாறு மிஷனரிகளை ஆசீர்வதித்தார்? (பி) இன்றுள்ள யெகோவாவின் ஜனங்களுக்கு இது என்ன பாடத்தைக் கற்பிக்கிறது?
19 வீட்டுக்குச் செல்வதற்கு குறுகிய மார்க்கத்தை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக, மிஷனரிகள் தைரியமாக திரும்பி அவர்களுடைய உயிர்கள் ஆபத்தில் இருந்த அதே பட்டணங்களுக்கு மறுபடியும் சென்றனர். புதிய ஆடுகளின் பேரில் அவர்கள் காட்டின இந்த சுயநலமற்ற அக்கறைக்காக யெகோவா அவர்களை ஆசீர்வதித்தாரா? ஆம், “சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்வதில்,” அவர்கள் வெற்றியடைந்தார்கள் என்று பதிவு சொல்கிறது. பொருத்தமாகவே, அவர்கள் அந்தப் புதிய சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்கள்: “நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்.” (அப்போஸ்தலர் 14:21, 22) வரப்போகும் கடவுளுடைய ராஜ்யத்தில் உடன் சுதந்தரவாளிகளாக இருக்கப்போகும் தங்கள் அழைப்பைக் குறித்தும் பவுலும் பர்னபாவும் அவர்களுக்கு நினைப்பூட்டினார்கள். இன்று, நாம் அதே போன்ற உற்சாகத்தை புதிய சீஷர்களுக்கு கொடுக்கவேண்டும். பவுலும் பர்னபாவும் பிரசங்கித்த அதே கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின்கீழ் பூமியில் நித்திய ஜீவனோடு வாழும் எதிர்பார்ப்பை அவர்கள் முன் வைப்பதன் மூலம், அவர்கள் சோதனைகளை சகித்திருப்பதற்கு நாம் அவர்களை உற்சாகப்படுத்தலாம்.
20 ஒவ்வொரு பட்டணத்தையும் விட்டுப் புறப்படுவதற்கு முன், பவுலும் பர்னபாவும் உள்ளூர் சபை நன்றாக ஒழுங்கமைக்கப்படுவதற்கு உதவினர். அவர்கள் தகுதிவாய்ந்த ஆட்களை பயிற்றுவித்து, தலைமைதாங்கி வழிநடத்துவதற்கு அவர்களை நியமித்தனர். (அப்போஸ்தலர் 14:23) இது கூடுதலான அதிகரிப்புக்கு உதவியளித்தது என்பதில் சந்தேகமில்லை. அதே போன்று இன்று மிஷனரிகளும் மற்றவர்களும், அனுபவமில்லாதவர்கள் முன்னேற்றம் அடைந்து உத்தரவாதத்தை தாங்கும் நிலையை அடையும் வரை உதவி செய்த பிறகு, சில சமயங்களில் அவ்விடத்தைவிட்டு தேவை அதிகமாயிருக்கும் இடங்களுக்குச் சென்று தங்கள் நல்ல வேலையை தொடர்ந்து செய்கின்றனர்.
21, 22. (எ) பவுலும் பர்னபாவும் தங்கள் மிஷனரி பயணத்தை முடித்தப் பிறகு என்ன நடந்தது? (பி) இது எந்த கேள்விகளை எழுப்புகிறது?
21 இறுதியில் மிஷனரிகள் சீரியா அந்தியோகியாவுக்கு திரும்பிவந்தபோது, ஆழ்ந்த திருப்தியடைந்தவர்களாக உணர்ந்தனர். கடவுள் அவர்களிடம் ஒப்படைத்திருந்த வேலையை அவர்கள் “முழுவதுமாக நிறைவேற்றினார்கள்.” (அப்போஸ்தலர் 14:26) அவர்கள் தங்கள் அனுபவத்தைக் கூறியபோது “சகோதரர் எல்லாருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள்” என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. (அப்போஸ்தலர் 15:3) ஆனால் எதிர்காலத்தைப் பற்றியென்ன? இப்போது அவர்கள் கூடுதலான முயற்சி எதுவும் எடுக்காமல் தங்கள் வெற்றியைக் குறித்து திருப்தியடைந்தவர்களாய் இருந்துவிடுவார்களா? இல்லவே இல்லை. விருத்தசேதனம் பற்றிய பிரச்னையில் ஒரு தீர்மானம் எடுப்பதற்கு எருசலேமில் இருந்த ஆளும் குழுவை சந்தித்தப் பிறகு, பவுலும் பர்னபாவும் மறுபடியும் மிஷனரி பயணங்களை துவங்கினார்கள். இச்சமயம் அவர்கள் வித்தியாசமான திசைகளில் சென்றனர். பர்னபா யோவான் மாற்குவைக் கூட்டிக்கொண்டு சீப்புருதீவுக்குப் போனார். பவுல் ஒரு புதிய தோழனாகிய சீலாவைத் தெரிந்துகொண்டு சீரியாவிலும் சிலிசியாவிலும் பயணம் செய்தார். (அப்போஸ்தலர் 15:39-41) இந்தப் பயணத்தின்போது தான் அவர் இளம் தீமோத்தேயுவை தேர்ந்தெடுத்து அவரை தன்னோடு கூட்டிக்கொண்டு சென்றார்.
22 பர்னபாவின் இரண்டாவது பயணத்தின் விளைவுகளை பைபிள் தெரிவிப்பதில்லை. பவுலைப் பொறுத்தவரை, அவர் ஐரோப்பாவில் இருந்த புதிய பிராந்தியத்துக்கு தொடர்ந்து சென்று ஐந்து பட்டணங்களில் சபைகளை ஸ்தாபித்தார்—பிலிப்பி, பெரோயா, தெசலோனிக்கேயா, கொரிந்து, எபேசு. பவுலின் முதன்மையான வெற்றிக்கு திறவுகோல் என்னவாயிருந்தது? இன்று சீஷர்களை உண்டுபண்ணும் கிறிஸ்தவர்களுக்கு இதே நியமங்கள் பயனளிப்பவையாக இருக்கின்றனவா?
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ பார்த்து பின்பற்றுவதற்கு இயேசு ஏன் முதன்மைவாய்ந்த உதாரணமாக இருக்கிறார்?
◻ பர்னபா எந்த விதத்தில் ஒரு முன்மாதிரியாக இருந்தார்?
◻ பிசீதியா அந்தியோகியாவில் பவுல் கொடுத்த பேச்சிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
◻ பவுலும் பர்னபாவும் எவ்வாறு தங்கள் நியமிப்பை முழுவதுமாக செய்து முடித்தனர்?
3. சீஷர்களை உண்டுபண்ணும் வேலை எவ்வாறு விரிவடைந்தது, ஆனால் எந்தப் பகுதிகளில் முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது?
[பக்கம் 15-ன் படம்]
அப்போஸ்தலனாகிய பவுல் துன்புறுத்தலை சகித்திருந்தது, இளம் மனிதனாகிய தீமோத்தேயுவின்மேல் ஒரு நிரந்தரமான பதிவை ஏற்படுத்தியது