இளைஞரே நீங்கள் ஆவிக்குரிய பிரகாரமாய் முன்னேறுகிறீர்களா?
“நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு.”—1 தீமோத்தேயு 4:15.
ஆவிக்குரிய பிரகாரமாய் முன்னேறுதல் என்பதன் அர்த்தம் என்ன? ஆவிக்குரிய அக்கறைகளைத் தங்களுடைய வாழ்க்கையில் முதலாவதாக வைத்த இளம் இயேசுவைப் போலவும் தீமோத்தேயுவைப் போலவும் இருப்பதை அர்த்தப்படுத்துகிறது. நீங்கள் ஆவிக்குரிய பிரகாரமாய் முன்னேறுகிறவர்களாக இருப்பீர்களானால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை அறிந்திருப்பீர்கள். ‘நான் வயதாகும் காலத்தில் யெகோவாவைச் சேவிப்பதுக் குறித்து பலமாக யோசிக்க ஆரம்பிப்பேன்,’ என்று நீங்கள் சொல்ல மாட்டீர்கள். இல்லை, அவரை இப்பொழுதே சேவிப்பவர்களாய் இருப்பீர்கள்!
2 மறுபட்சத்தில், ஆவிக்குரிய பிரகாரமாய் முன்னேறுவது துறவியைப்போல இருப்பதை, மத வேடம் பூண்டவர்களாயிருப்பதை, அல்லது ஒரு புத்தகப்புழுவாக இருப்பதையும் குறிக்காது; அல்லது கவலையான, பக்திமயமான தோற்றமாகவும், சமூகத் தொடர்பற்றவராகவும் இருப்பதைக் குறிக்காது. (யோவான் 2:1–10) யெகோவா சந்தோஷமுள்ள ஒரு கடவுள், தம்முடைய பூமிக்குரிய பிள்ளைகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். எனவே, விளையாட்டுகளிலும் மற்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளிலும் அளவோடு பங்குகொள்வது கடவுளுடைய அங்கீகாரத்தைக் கொண்டிருக்கிறது.—1 தீமாத்தேயு 1:11; 4:8.
முழுக்காட்டுதல் ஓர் அத்தாட்சி
3 முழுக்காட்டுதல் பெறுவதற்காக ஆயத்தம் செய்வதும் முழுக்காட்டுதல் பெறுவதும் ஓர் இளைஞன் ஆவிக்குரிய பிரகாரமாய் முன்னேறுகிறான் என்பதற்கு அத்தாட்சிகள். சொல்லப்படுவதுபோல், தீமோத்தேயு அப்போஸ்தலனாகிய பவுலின் மிஷினரி தோழனானபோது அவன் பதிமூன்றுக்கும் பத்தொன்பதுக்கும் இடைப்பட்ட வயதிலிருந்திருப்பானென்றால், அவன் அநேகமாய் அவ்விளமைப் பருவத்தின் மத்திபத்தில் அல்லது ஆரம்பத்தில் முழுக்காட்டப்பட்டிருக்க வேண்டும். அவன் பாலகனாயிருந்ததுமுதல் வேதத்தில் போதிக்கப்பட்டிருந்தான்; போதுமான அறிவும் போற்றுதலும் உடையவனானபோது, முழுக்காட்டுதல் பெறுவதற்கு அவன் தயங்கவில்லை.—2 தீமோத்தேயு 3:15.
4 வேதவசனங்களில் போதிக்கப்பட்டிருக்கும் இளைஞர்களாகிய உங்களைப் பற்றியதென்ன? “நான் முழுக்காட்டுதல் பெறுவதற்குத் தடையென்ன?” என்ற இந்தக் கேள்வியை நீங்கள் சிந்தித்ததுண்டா? முதல் நூற்றாண்டில் வேதவசனங்களை நன்கு அறிந்திருந்தவனும், ஆனால் கிறிஸ்து யார் என்பதை அப்பொழுதுதானே கற்றுக்கொண்டவனுமாயிருந்த ஒருவனால் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. உண்மைதான், கடவுளுடைய நோக்கங்களைப் பற்றி அறியவேண்டிய அனைத்தையும் அந்த மனிதன் அறிந்தவனாயில்லை, என்றபோதிலும் அவன் அறிந்திருந்தவற்றிற்கு ஆழ்ந்த போற்றுதலுடையவனாயிருக்க உந்துவிக்கப்பட்டான்! இப்படியிருக்க, சீஷனாகிய பிலிப்பு அவனை முழுக்காட்டாமலிருப்பதற்குத் தகுதியான எந்தக் காரணத்தையும் கொண்டில்லை.—அப்போஸ்தலர் 8:26–39.
5 முழுக்காட்டுதல் பெறுவதிலிருந்து உங்களைத் தடைசெய்வது என்ன? அதற்குத் தகுதிபெற என்ன உட்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்தவர்களாயிருக்க வேண்டும். யெகோவாவை நீங்கள் நேசிப்பதன் காரணத்தால் அவரை உண்மையிலேயே சேவிக்க விரும்ப வேண்டும். ஜெபத்தில் அவருக்கு உங்களைத் தனிப்பட்டவிதத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டும். அதோடுகூட, நீங்கள் கடவுளுடைய ஒழுக்க தகுதிகளைப் பின்பற்ற வேண்டும், மற்றும் உங்களுடைய விசுவாசத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் காரியத்தில் போதுமான அனுபவமுடையவர்களாயிருக்க வேண்டும். இப்படியாகத் தகுதிபெறும்போது, நீங்கள் முன்வந்து முழுக்காட்டுதல் பெறுவது அவசியம்.—மத்தேயு 28:19, 20; அப்போஸ்தலர் 2:38.
6 முழுக்காட்டுதல் பெறுவது நீங்கள் ஆவிக்குரிய பிரகாரமாய் முன்னேறுகிறீர்கள் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கிறபோதிலும், முழுக்காட்டுதல் முதல் படியாக மட்டுமே இருக்கிறது என்பதை நினைவிற்கொள்ளுங்கள். யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பதன் மூலம் சாத்தானால் ஆளப்படும் இந்தப் பழைய உலகில் நீங்கள் பரதேசிகளாகிறீர்கள். எனவே ஒப்புக்கொடுத்தலைக் கடவுளுடைய புதிய ஒழுங்கில் நித்திய ஜீவனுக்காக விண்ணப்பிப்பதற்கு ஒப்பிடலாம், மற்றும் முழுக்காட்டுதலாகிய மதச்செயல்முறை இந்த உண்மையை உறுதிப்படுத்தும் வகையில் சாட்சிகளுக்கு முன்னால் ஓர் வெளிக்காட்டாக இருக்கிறது. (யோவான் 12:31; எபிரெயர் 11:13) அதற்குப் பின்பு கடவுள் அளிக்கும் பரிசாகிய நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்காக, நீங்கள் உங்களுடைய ஒப்புக்கொடுத்தலுக்கு உண்மையுள்ளவர்களாக வாழ வேண்டும்.—ரோமர் 6:23.
நடத்தை அத்தாட்சியளிக்கிறது
7 நீங்கள் ஆவிக்குரிய பிரகாரமாய் முன்னேறுகிறவர்களாக இருக்கிறீர்களா இல்லையா என்பதற்கு உலக காரியங்களினிடமாக உங்கள் மனப்பான்மையும் அத்தாட்சியாக இருக்கும். அந்தக் காரியங்கள் என்ன? அவை மனம்போன போக்கில் வாழும் ஒரு வாழ்க்கைப் பாணி, போதை மருந்துகள், கட்டுப்படுத்தப்படாத பாலுறவு, ஒழுக்கங்கெட்ட சினிமாக்கள், பாலுறவு ஆசைகளைத் தூண்டிடும் இசையும் நடனமும், அசுத்தமான பேச்சுகள், இனம் மற்றும் தேசிய பெருமை போன்ற காரியங்களை உட்படுத்துகின்றன. (1 யோவான் 2:16; எபேசியர் 5:3–5) குறிப்பாக இளைஞர்கள் கவனமாக இருக்கவேண்டும். இப்படிப்பட்ட காரியங்கள் சம்பந்தமாக நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பது உங்கள் ஆவிக்குரிய ஆரோக்கியத்தின் நிலையை வெளிப்படுத்திடும்.—நீதிமொழிகள் 20:11.
8 இந்த உலகத்தின் ஒழுக்கங்கெட்ட வழிகள் அதிகக் கவர்ச்சியாக இருக்கும்படி சாத்தான் பார்த்துக்கொள்கிறான். உண்மையில் 15-வயது இளைஞன் ஒருவன் சென்னான்: “தொலைக்காட்சியில் பாலுறவுக் காட்சிகளும் போதை மருந்துகளும் எவ்வளவுக்கு அதிகமாகப் பார்க்கிறோமோ அந்தளவுக்கு அவை சமுதாயத்தில் சாதாரணமாகிவிட்டிருப்பதாகத் தெரிகிறது.” இந்த உலகத்தின் வழிகளில் பங்குகொள்ளாத இளைஞர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்களாகவும் இன்பமாயிருக்கும் நிலையை இழந்துவிடுகிறவர்களாகவும் இருப்பதாக உணரும்படிச் செய்யப்படுகின்றனர். நீங்கள் எப்பொழுதாவது அவ்விதம் உணர்ந்தீர்களா? சபையுடன் கூட்டுறவு கொள்ளும் சிலர் அப்படி உணருகிறார்கள், அவர்கள் உறுதியற்றவர்களாக இருக்கிறார்கள். முழுக்காட்டுதல் பெறுவது குறித்து கேட்கப்பட்டபோது, ஓர் இளைஞன் பின்வருமாறு சொன்னான்: ‘நான் முழுக்காட்டுதல் பெற இப்பொழுது விரும்பவில்லை, ஏனென்றால் நான் சபைநீக்கத்துக்கடுத்த ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபட்டுவிடக்கூடும்.’ என்றாலும் நீங்கள் மதில் மேல் பூனையாக அல்லது இரண்டு வித்தியாசமான கருத்தில் குந்திக் குந்தி நடப்பவர்களாக இருக்க முடியாது. கடவுளுடைய தீர்க்கதரிசி ஒருசமயம் இப்படியாகக் கூறினான்: “யெகோவா தெய்வமானால் அவரைப் பற்றிக்கொள்ளுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பற்றிக்கொள்ளுங்கள்.”—1 இராஜாக்கள் 18:21, தி.மொ.
9 உண்மையிலேயே, இந்த உலகின் ஒழுக்கங்கெட்ட வழிகளைத் தவிர்ப்பதன் மூலம் நீங்கள் இழப்பதெல்லாம் ஏராளமான தொல்லைகள். “நான் வாழ்ந்துவந்த வாழ்க்கையின்பேரில் ஓர் வெறுப்புணர்ச்சி என்னை ஆட்கொண்டது,” என்றாள் ஒரு பெண். “நான் என்னுடைய மதிப்பையும் கருவுற்ற என் குழந்தையுடைய மதிப்பையும் குறைத்துக்கொண்டதுமட்டுமின்றி எங்களையே ஏமாற்றிக்கொண்டோம்.” ஆம், பிசாசின் இந்த உலகத்தின் பகட்டும் ஆரவாரமும் வெறும் ஒரு பொய்த்தோற்றமும் வஞ்சனையுமாகும். இது மதிக்கத்தகுந்த எதையுங் கொண்டில்லை. இவ்வுலகின் வழிகளைப் பின்பற்றுவது விவாகத்துக்குப் புறம்பான கருத்தரிப்பிலும், பிளவுபட்ட குடும்பங்களிலும், பாலுறுப்புகள் மூலம் கடத்தப்படும் நோய்களிலும், சொல்லப்படமுடியாதளவுக்கு வாழ்க்கையில் வெறுப்பும் வேதனையும் கொண்டிருப்பதிலும் விளைவடைகிறது. எனவே ஆலோசனைக்குச் செவிகொடுத்து ஆவிக்குரிய பிரகாரமாய் முன்னேறுகிறவர்களாயிருங்கள். “பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மை செய்யுங்கள்.”—1 பேதுரு 3:11.
10 ஆவிக்குரிய பிரகாரமாய் முன்னேறுகிற ஓர் இளைஞன் பவுல் அப்போஸ்தலனின் பின்வரும் புத்திமதிக்குச் செவிகொடுப்பான். “துர்க்குணத்திலே குழந்தைகளாயும் புத்தியிலே தேறினவர்களாயுமிருங்கள்.” (1 கொரிந்தியர் 14:20) இளம் தீமோத்தேயு நிச்சயமாகவே இந்த ஆலோசனையைப் பொருத்தினான். தன்னுடைய நாளில் வாழ்ந்த கட்டுப்பாடற்ற ஒழுக்கங்கெட்ட இளைஞர்களின் தோழமையை இவன் விரும்புவதை நீங்கள் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா? நிச்சயமாக முடியாது! அவனுடைய தோழர்கள் கடவுளுடைய உடன் ஊழியர்கள். (நீதிமொழிகள் 13:20) அவனுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள். எந்த ஒரு சந்தேகத்துக்குரிய நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்பாக உங்களை நீங்கள் பின்வருமாறு கேட்டுக்கொள்ளுங்கள்: தீமோத்தேயுவோ அல்லது இயேசுவோ இதைச் செய்வாரா?
பைபிள் படிப்பு அத்தாட்சியளிக்கிறது
11 உவர்ல்டு ப்ரஸ் ரிவ்யு என்ற பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை பின்வருமாறு சொன்னது: “இளைஞரின் ஏமாற்றமும் நம்பிக்கையிழந்த நிலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேயிருக்க, அவர்களுக்கு எவருமே உற்சாகமூட்டும் ஓர் எதிர்காலத்தை அளிக்க முடியாது.” சாத்தானின் உலகத்திலுள்ளவர்களின் குருடாக்கப்பட்ட கண்கள் கடவுள் வாக்களித்திருக்கும் புதிய உலகத்தைப் பற்றியதும், அதில் ஜீவன் அடைவதற்கு தகுதிபெற்றவர்களுக்காகக் காத்திருக்கும் மகத்தான எதிர்காலத்தைப்பற்றியதுமான ஒரு காட்சியைக் கொண்டில்லை. (2 கொரிந்தியர் 4:4; நீதிமொழிகள் 29:18; 2 பேதுரு 3:13) ஆனால் ஆவிக்குரிய பிரகாரமாய் முன்னேறும் இளைஞர்கள் அப்படிப்பட்ட ஒரு காட்சியை உடையவர்களாயிருக்கிறார்கள். இது ஒழுங்கான பைபிள் படிப்பு மூலம் பிரகாசமாகவும் தெளிவாகவும் வைக்கப்படுகிறது.
12 கடவுளுடைய புதிய உலகம் உங்களுக்கு உண்மையான ஒன்றாக இருக்கிறதா? அது அப்படி இருக்கலாம், ஆனால் அதைப் பெறுவது உங்களுடைய பாகத்தில் உண்மையான முயற்சியைத் தேவைப்படுத்துகிறது. பைபிளைப் புரிந்துகொள்வதற்கு நீங்கள் ஓர் ஆழ்ந்த பசியை வளர்க்க வேண்டும், இப்படியாக “அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடு”கிறவர்களாயிருப்பீர்கள். (நீதிமொழிகள் 2:1–6) புதையலைத் தேடுகிற பணியில் ஈடுபடுகிற ஒருவன் சில சமயங்களில் வருடங்களாகத் தேடிக்கொண்டும் தோண்டிக்கொண்டும் இருப்பதில் நிலைத்திருக்கச்செய்வது எது? அந்தப் புதையல் அவனுக்குக் கொண்டுவரும் ஐசுவரியத்தில் அவனுக்கு இருக்கும் உள்ளான ஆசை. என்றபோதிலும் பொருள் சம்பந்தமான புதையலைவிட அறிவு அதிக விலையேறப்பெற்றது. “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்,” என்பதாக இயேசு சொன்னார். (யோவான் 17:3) அதில் இயேசு சொன்னவற்றை நீங்கள் உண்மையிலேயே நம்புவீர்களானால், பைபிள் படிப்பு, நீங்கள் ஆர்வத்தோடு நாடிடும் ஒன்றாக உங்களுக்கு அமையும், இதன் பலன் விலைமதியா இரத்தினங்களைவிட அதிக விலையேறப்பெற்ற ஒன்றாயிருக்கும்.—நீதிமொழிகள் 3:13–18.
13 நீங்கள் எந்தளவுக்கு அதிகமாகப் படிக்கிறீர்களோ அந்தளவுக்கு ஆவிக்குரிய உணவுக்கான உங்கள் பசியார்வமும் அதிகமாக இருக்கும். நல்ல படிப்பு முறைகளைக் கற்றுக்கொள்ளுங்கள். வெறுமென விடைகளைக் கோடிடுகிறவர்களாக இருக்க வேண்டாம், ஆனால் குறிப்பிடப்பட்டிருக்கும் வசனங்களை பைபிளில் திறந்து பார்த்து, பைபிளில் காணப்படும் குறுக்கு மேற்கோள் வசனக் குறிப்புகளின் மூலம் சம்பந்தமுடைய வசனங்களை விடாது பாருங்கள். காவற்கோபுர பிரசுரங்கள் இன்டெக்ஸ் 1930–1985 (Watch Tower Publications Index 1930-1985) போன்ற அகரவரிசை பொருள் பட்டியல்களைப் பயன்படுத்தி கூடுதலான ஆராய்ச்சியையும் மேற்கொள்ளலாம். அந்தப் பொருள் எப்படி பொருந்துகிறது, அதை எப்படி பயன்படுத்தலாம் என்பதைப் பரிசீலனை செய்யுங்கள். நீங்கள் படிப்பது குறித்து மற்றவர்களுடன் பேசுங்கள். இது குறிப்புகளை உங்கள் மனதில் பதியச்செய்வது மட்டுமின்றி ஆராய்ச்சி செய்யும்படி மற்றவர்களையும் தூண்டிடும். உங்களை இதற்கு உட்படுத்துவதன் மூலம், இளம் தீமோத்தேயுவுக்குக் கொடுக்கப்பட்ட ஆலோசனைக்கு செவிகொடுப்பவர்களாயிருப்பீர்கள்: “நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு.”—1 தீமோத்தேயு 4:15; 2 தீமோத்தேயு 2:15.
கூட்டங்களிலும் ஊழியத்திலும் காண்பிக்கப்படுகிறது
14 நீங்கள் பைபிள் படிப்பை நன்கு அனுபவிப்பவர்களாயிருந்து நன்கு தயாரித்திருந்தால், கிறிஸ்தவ கூட்டங்கள் அதிக மகிழ்ச்சியைத் தரும் ஒன்றாக ஆகிறது. (சங்கீதம் 122:1; எபிரெயர் 2:12) அப்பொழுது நீங்கள் கூட்டங்களில் சபையார் பங்குகொள்ளும் பகுதிகளில் அதிகமாகப் பங்கு கொள்ளவும் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பேச்சுகள் கொடுக்கவும் ஆவலாக எதிர்பார்ப்பீர்கள். ஆனால் கூட்டங்களுக்கு வரும்போது, ‘ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தி’ “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவ” வேண்டும் என்ற புத்திமதியை நிறைவேற்ற மற்ற வழிகளும் உண்டு. (எபிரெயர் 10:24, 25) உதாரணமாக, நீங்கள் மற்றவர்களுடன் பேசுவதற்கு முன்வருகிறீர்களா? நட்பு முறையில், “ஹல்லோ, உங்களைப் பார்ப்பதில் எனக்கு எவ்வளவு சந்தோஷம்!” அல்லது “உங்களுக்கு எப்படி இருக்கிறது?” என்ற மனமார்ந்த விசாரிப்பு, விசேஷமாக ஓர் இளைஞனிடமிருந்து வரும்போது அதிக உற்சாகமூட்டுவதாயிருக்கக்கூடும்.
15 ஒரு சபையை நடத்தும் காரியத்தில் ஏராளமான வேலை உட்படுகிறது. நீங்கள் ஒரு பங்கையுடையவர்களாயிருக்க முடியுமா? இளம் தீமோத்தேயு பவுலுக்கு உதவியாக அநேக சேவைகளை செய்திருக்கக்கூடும்—எடுபிடி வேலைகள் செய்வது, தேவையான பொருட்களை வாங்கி வருவது, செய்திகளைக் கொண்டு செல்வது போன்ற சேவைகளை செய்திருக்கக்கூடும். நீங்கள் அப்படிச் செய்ததில்லை என்றால், உதவி செய்ய மனமுள்ளவர்களாயிருக்கிறீர்கள் என்ற எண்ணத்தை ஏன் உங்கள் மூப்பர்களிடம் தெரிவிக்கக் கூடாது. ஒருவேளை கூட்டங்களில் தங்களுக்கு என்ன பாகம் நியமிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரியப்படுத்தும் குறிப்புச் சீட்டுகளைக் கொடுக்கும்படியும், மன்றத்தைச் சுத்தமாக வைக்கும்படியும், அல்லது தேவையான மற்ற சேவைகளை செய்யவும் நீங்கள் ஒருவேளை கேட்கப்படலாம். கிறிஸ்து தம்முடைய சீஷர்களின் பாதங்களைக் கழுவினார் என்பதை நினைவிற்கொள்ளுங்கள், எனவே ஆவிக்குரிய பிரகாரமாய் முன்னேறுகிற ஒருவருக்கு எந்த ஒரு வேலையும் மதிப்புக்குறைவானதல்ல.—யோவான் 13:4, 5.
16 நாம் மற்ற மதங்களைப் பார்க்கும்போது, முழு முக்கியத்துவம் வாய்ந்த பிரசங்க வேலைக்கு நாம் பெற்றிடும் பயிற்சிக்காக நிச்சயமாகவே நன்றியுள்ளவர்களாயிருக்கலாம். கடந்த செப்டம்பரில் யு.எஸ். கத்தோலிக் என்ற பத்திரிகையில் எழுதும்போது கெனத் குண்டர் குறிப்பிட்டதாவது: “மக்களை மதமாற்றும் முயற்சியில் கிறிஸ்தவர்கள் வீடுவீடாக செல்லவேண்டும் போன்ற அரிய எண்ணங்கள் ஏற்பட்டுவிடும் என்ற காரணத்தால் கத்தோலிக்கர் பைபிளைப் படிக்கக் கூடாதிருந்த நாட்களில் நான் வளர்ந்தேன். பின்பு வத்திக்கன் II தோன்றிட, நான் பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன். ஆம், மக்களை மதமாற்ற கிறிஸ்தவர்கள் வீடுவீடாகச் செல்ல வேண்டும் என்று பலமாக எண்ணுகிறேன்.” மேலும் அவர் கூறுகிறார்: “இந்தக் கருத்தில் நான் வசதியாக உணருகிறேன் என்பது அல்ல, ஆனால் நீங்கள் புதிய ஏற்பாட்டை வாசிப்பீர்களானால், இந்த முடிவு தவிர்க்கப்பட முடியாதது.”—மத்தேயு 10:11–13; லூக்கா 10:1–6; அப்போஸ்தலர் 20:20, 21.
17 ஆம், பூர்வீக கிறிஸ்தவர்கள் வீட்டுக்கு வீடு பிரசங்க ஊழியத்தில் அதிக சுறுசுறுப்பாக இருந்தனர், மற்றும் தீமோத்தேயு போன்ற இளைஞர்கள் ஊழியத்தில் பெரியவர்களோடு ஈடுபட்டனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. என்றபோதிலும் இன்று சிலருக்கு இது அதிக மகிழ்ச்சி மிகுந்த வேலையாக இருப்பதில்லை என்பது ஒப்புக்கொள்ளக்கூடியதே. ஏன்? முழு தேர்ச்சிபெற்றவராக இருப்பது ஓர் அம்சமாக இருக்கிறது. உதாரணமாக, ஒரு விளையாட்டில் அல்லது போட்டி விளையாட்டில் நீங்கள் நன்றாக செய்யும்போது, அதை நீங்கள் நன்கு அனுபவிக்கிறீர்களா? ஊழியத்திலும் அது உண்மையாக இருக்கிறது. பைபிளை உபயோகிப்பதிலும் பைபிள் பொருள்களைக் கலந்தாலோசிப்பதிலும் நீங்கள் அதிக தேர்ச்சிபெற்றவர்களாகும்போது, ஊழியம் உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியின் ஊற்றுமூலமாயிருக்கும், விசேஷமாக ஜீவனைத் தரும் அறிவை பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒருவரை நீங்கள் கண்டுபிடித்தால் அப்படியாக இருக்கும். எனவே ஆவிக்குரிய பிரகாரமாய் முன்னேறுகிறவர்களாயிருங்கள்! நீங்கள் அளிக்கும் வீட்டுக்கு வீடு பிரசங்கத்தை முன்னதாகப் பழகிக்கொள்ளுங்கள். மற்றவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுங்கள். யெகோவாவின் உதவிக்காக விண்ணப்பம் செய்யுங்கள்.—லூக்கா 11:13.
பெரியவர்களுடன் நல்லுறவுகள் மூலம்
18 பன்னிரண்டு வயது இளைஞனாயிருக்கும் போதே, இயேசு ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து பெரியவர்களுடன் பேசுவதில் நேரம் செலவழிப்பதிலே மகிழ்ச்சி கண்டார். ஒருசமயம் அவருடைய பெற்றோர் அவரை “தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், இவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள்.” (லூக்கா 2:46) தீமோத்தேயுவின் காரியத்திலும் அப்படியே இருந்தது. அப்போஸ்தலனாகிய பவுலும் அவனுடைய தோழர்களும் லீஸ்திராவுக்கு வந்தபோது, தீமோத்தேயு அவர்களோடிருப்பதை அனுபவித்தது மட்டுமின்றி அவர்களுடைய போதனைகளுக்கும் உள்ளான கவனம் செலுத்தினான். உள்ளூர் சபையின் சகோதரர்களுடன் நல்ல தொடர்பு இருந்தது, அவர்கள் இவனுக்கு சிறந்த சிபாரிசும் அளித்தனர்.—அப்போஸ்தலர் 16:1–3.
19 தீமோத்தேயு மற்றவர்களுக்கு மனப்பூர்வமாய்ச் சரீர சம்பந்தமான சேவைகளைச் செய்த போதிலும், குறிப்பாக மக்களுடைய ஆவிக்குரிய தேவைகள் சம்பந்தமாக அவனுக்கு இருந்த திறமைக்காக அவனை ஒரு பயண தோழனாக பவுல் தெரிந்துகொண்டான். இதைக் கருத்தில் கொண்டு, ஒரு கலகக் கூட்டத்தின் அச்சுறுத்தல் காரணத்தால் பவுல் தெசலோனிக்கேயாவை விட்டுச்செல்ல நேரிட்ட போது, புதிய சீஷர்களுக்கு ஆறுதலளிக்கவும் பலப்படுத்தவும் அவன் இளம் தீமோத்தேயுவை அனுப்பினான். ஆக, பெரியவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் அவர்களுடன் கூட்டுறவு கொள்வதில் மகிழ்ச்சி காணவும் மனமுள்ளவனாயிருந்தது மட்டுமின்றி, அவர்களுக்கு உண்மையிலேயே ஆவிக்குரிய விதத்தில் உதவியாகவும் இருந்தான்.—அப்போஸ்தலர் 17:1–10; 1 தெசலோனிக்கேயர் 3:1–3.
20 இயேசுவையும் தீமோத்தேயுவையும் பின்பற்றுவதிலும் பெரியவர்களின் அனுபவம் மற்றும் அறிவிலிருந்து நன்மையடைய ஆர்வமுள்ளவர்களாயிருப்பதிலும் ஞானமுள்ளவர்களாயிருப்பீர்கள். அவர்களோடிருப்பதை நாடுங்கள். கேள்விகள் கேளுங்கள். அவர்களுக்கு உதவியாயிருப்பதன் மூலம் உங்கள் ஆவிக்குரிய முன்னேற்றத்தைக் காண்பியுங்கள். கடைக்குச் சென்றுவருவது போன்ற மற்ற அவசியமான சேவைகளைத் தங்களுக்குச் செய்வதைப் போற்றிடும் நிலையிலுள்ள வயதான அல்லது உடல் ஊனமுற்றவர்கள் இருக்கிறார்களா? ஒருவேளை அவர்களை சந்திக்கலாம், அவர்களுக்காக வாசிக்கலாம், ஊழியத்தில் உங்களுக்கிருந்த மகிழ்ச்சியான அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
பெற்றோரும் மற்றவர்களும் வகிக்கும் பாகம்
21 இளைஞரின் ஆவிக்குரிய ஆரோக்கியம் பெரும்பாலும் அவர்களுடைய பெற்றோரின் போதனையையும் முன்மாதிரியையும் சார்ந்ததாயிருக்கிறது. (நீதிமொழிகள் 22:6) கடவுள் பயமுள்ள தம்முடைய பூமிக்குரிய பெற்றோரின் வழிநடத்துதலிலிருந்து இயேசு நிச்சயமாகவே நன்மையடைந்தார். (லூக்கா 2:51, 52) தன்னுடைய தாயின் மற்றும் பாட்டியின் பயிற்சி இல்லாதிருந்தால் நிச்சயமாகவே தீமோத்தேயு ஆவிக்குரிய பிரகாரமாய் முன்னேறுகிறவனாய் இருந்திருக்கமாட்டான். (2 தீமோத்தேயு 1:5; 3:15) ஒழுங்கான பைபிள் போதனை பெறுவதன் முக்கியத்துவம் அதிகமாக அழுத்திக்காட்டப்படவேண்டிய அவசியமில்லை! பெற்றோராக நீங்கள் அதைக் கொடுக்கிறீர்களா? அல்லது அது அசட்டைசெய்யப்படுகிறதா?
22 யெகோவாவின் சாட்சிகளின் தலைமைக் காரியாலயத்திலுள்ள ஓர் இளம் மனிதன், தான் வளரும் பருவத்தில் தங்களுடைய குடும்ப வாழ்க்கையின் ஒரு முக்கியமான அம்சம் பிள்ளைகளோடிருந்த வாராந்தர பைபிள் படிப்பு என்று சொன்னான். “சிலசமயங்களில் எங்களுடைய அப்பா விழித்திருக்க முடியாதளவுக்கு வேலையிலிருந்து அதிக களைப்பாக வருவார், ஆனால் எந்த நிலைமையிலும் படிப்பு நடத்தப்பட்டது, இதுதானே அதன் முக்கியத்துவத்தை நாங்கள் மதித்துணரும்படிச் செய்தது.” பெற்றோர்களே, ஆவிக்குரிய காரியங்களை நீங்கள் மதித்துணர்ந்தாலொழிய உங்கள் பிள்ளைகள் அவற்றை உயர்வாக மதித்துணர மாட்டார்கள். எனவே, பயனியர் ஊழியம், மிஷினரி ஊழியம் மற்றும் பெத்தேல் சேவையை அவர்கள் முன் இலக்காக வையுங்கள். ஊழியம் ஓர் எதிர்காலத்தையுடைய வாழ்க்கைப் பணி என்பதையும், உலகப்பிரகாரமான ஒரு வாழ்க்கைப் பணியில் உண்மையான எதிர்காலம் இல்லை என்பதையும் அவர்கள் மதித்துணர உதவுங்கள்.—1 சாமுவேல் 1:26–28-ஐ ஒப்பிடவும்.
23 இளைஞர்கள் ஆவிக்குரிய பிரகாரமாய் முன்னேற மற்றவர்களும் உதவலாம். கூட்டங்களில் அவர்களோடு பேசுவதை ஒரு முக்கிய காரியமாக்கிக்கொள்ளலாம். மேலும், உங்களுடைய சில வேலைகளில் அவர்களை சேர்த்துக்கொள்ளப்பாருங்கள். பெற்றோரின் அனுமதியுடன், மூப்பர் ஒருவர் இளைஞனுக்கு ஒரு பேச்சை நியமிக்கலாம், அல்லது தான் உல்லாசமாகச் செல்லும்போது அவனையும் உட்படுத்திக்கொள்ளலாம். (யோபு 31:16–18) சிறிய காரியமாகத் தோன்றுவது அதிகத்தைக் குறிக்கக்கூடும். ஒரு பயணக் கண்காணி, தன்னுடைய பேச்சைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் பைபிள் இல்லாததைக் கண்டு அவனுக்கு ஒரு பைபிளை வெகுமதியாகக் கொடுத்தார். இளைஞனை அந்த வெகுமதி மாத்திரம் கவரவில்லை, ஆனால் தன்பேரில் காட்டப்பட்ட அக்கறையும் கவர்ந்தது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தச் சிறுவன், இப்பொழுது அவன் தானே ஒரு மூப்பனாக, அந்தச் சகோதரனின் அன்பான செயலை இன்னும் ஆசையால் நினைவில் கொண்டிருக்கிறான்.
24 புத்துயிரளிக்கும் ராஜ்ய செய்தியைப் பிரஸ்தாபப்படுத்தும் “பனித்துளிபோன்ற இளம் மனிதர்” நூறாயிரக்கணக்கில் இருக்கின்றனர் என்றும், அதே எண்ணிக்கையில் ‘நற்செய்தியைச் சொல்லும் ஒரு பெருஞ் சேனை’யாக அமையும் இளம் பெண்களும் இருக்கின்றனர் என்றும் எண்ணிப்பார்ப்பது கிளர்ச்சியூட்டுவதாக இல்லையா? அவர்கள் அனைவருமே ஆவிக்குரிய பிரகாரமாய் முன்னேறுகிறவர்களாயிருக்க செயல்படக்கடவர்கள், அதற்காக நாம் அனைவரும் அவர்களுக்கு உதவுவோமாக.—சங்கீதம் 110:3; 68:11, NW. (w87 8⁄15)
விமர்சனக் கேள்விகள்
◻ எப்பொழுது முழுக்காட்டுதல் பெற வேண்டும் என்பதைத் தீர்மானிக்க ஓர் இளைஞனுக்கு எது உதவக்கூடும்?
◻ ஓர் இளைஞனின் நடத்தை எப்படி அவனுடைய ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு ஓர் அளவுகோலாக இருக்கிறது?
◻ இளைஞர்கள் கூட்டங்களையும் வெளி ஊழியத்தையும் அனுபவித்துக்களிக்க அவர்களுக்கு எது உதவக்கூடும்?
◻ இளைஞர் பெரியவர்களுடன் என்ன உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும்?
◻ பெற்றோரும் பெரியவர்களும் இளைஞருக்கு எவ்வாறு உதவலாம்?
1, 2. ஆவிக்குரிய பிரகாரமாய் முன்னேறுதல் என்பதன் அர்த்தம் என்ன, எதை அர்த்தப்படுத்துவதில்லை?
3. தீமோத்தேயு அநேகமாய் எப்பொழுது முழுக்காட்டப்பட்டிருக்கவேண்டும்?
4. பிலிப்பிடம் என்ன கேள்வி கேட்கப்பட்டது? கேள்வி கேட்டவர் அப்பொழுதுதானே கிறிஸ்துவைப் பற்றி அறிந்தவராயிருந்தபோதிலும், பிலிப்பு ஏன் அவனுடைய வேண்டுகோளுக்கு இணங்கினான்?
5. நீங்கள் முழுக்காட்டுதல் பெறுவதற்கு என்ன தேவைப்படுகிறது?
6. முழுக்காட்டுதலை எதற்கு ஒப்பிடலாம்? அதை எது பின்தொடர வேண்டும்?
7. உலகப்பிரகாரமான காரியங்களின்பேரில் உங்கள் மனப்பான்மை உங்கள் ஆவிக்குரிய முன்னேற்றத்துடன் எப்படி சம்பந்தமுடையதாயிருக்கிறது?
8. இளைஞரில் சிலர் முழுக்காட்டுதல் பெறுவதற்கு ஏன் தயங்குகின்றனர்?
9. ஆவிக்குரிய பிரகாரமாய் முன்னேறுகிறவர்களாயிருப்பதில் என்ன பாதுகாப்பு இருக்கிறது?
10. ஆவிக்குரிய பிரகாரமாய் முன்னேறுகிற ஓர் இளைஞன் எந்த புத்திமதிக்குச் செவிகொடுப்பான்? யாருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவான்?
11. உலகத்தின் இளைஞர்களுக்கு என்ன காட்சி குறைவுபடுகிறது? அதை எவ்விதம் பெறலாம், காத்துக்கொள்ளலாம்?
12. (எ) கடவுளைப் பற்றிய அறிவை நாம் எப்படி பெற்றுக்கொள்ளவேண்டும்? (பி) இந்த அறிவைப் பெற்றுக்கொள்ள எடுக்கும் முயற்சி ஏன் பயனுள்ளது?
13. ஆவிக்குரிய பிரகாரமாய் முன்னேறுகிற இளைஞர் படிப்புக்கான என்ன ஆலோசனைகளைப் பின்பற்றுவார்கள்?