-
யெகோவாவின் சாட்சிகள்தான் உண்மையான கிறிஸ்தவர்களா?இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
3. நாங்கள் எப்படி இயேசுவைப் போல் அன்பு காட்டுகிறோம்?
இயேசு தன் சீஷர்களை ரொம்ப நேசித்தார். அவர்களை சொந்த குடும்பம்போல் நினைத்தார். (மாற்கு 3:35-ஐ வாசியுங்கள்.) அதேபோல், இன்று உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகள் ஒரே குடும்பம்போல் ஒற்றுமையாக இருக்கிறார்கள், அதனால்தான், ஒருவரை ஒருவர் சகோதரர் அல்லது சகோதரி என்று கூப்பிடுகிறார்கள். (பிலேமோன் 1, 2) அதோடு, பைபிள் சொல்கிறபடி ‘சகோதரர்கள் எல்லாரிடமும் அன்பு காட்டுகிறார்கள்.’ (1 பேதுரு 2:17) அதுவும் நிறைய வழிகளில் அன்பு காட்டுகிறார்கள். உதாரணத்துக்கு, கஷ்டகாலங்களில் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்கிறார்கள்.
-
-
ஞானஸ்நானம்—சிறந்த லட்சியம்!இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
6. யெகோவாவின் குடும்பத்தில் ஒருவராகிறோம்
நாம் ஞானஸ்நானம் எடுக்கும்போது, உலகம் முழுவதும் ஒற்றுமையாக இருக்கும் ஒரு குடும்பத்தில் நாமும் ஒருவராகிறோம். நாடு, இனம், மொழி, கலாச்சாரம் போன்ற எந்த வித்தியாசமும் இல்லாமல், எல்லா யெகோவாவின் சாட்சிகளும் ஒரே குடும்பம்போல் வாழ்கிறார்கள். அவர்களுக்கு ஒரே விதமான நம்பிக்கைகள்தான் இருக்கின்றன. எல்லாருமே பைபிள் சொல்கிறபடி நடக்கிறார்கள். சங்கீதம் 25:14-ஐயும் 1 பேதுரு 2:17-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
ஞானஸ்நானத்துக்குப் பிறகு யெகோவாவோடும் அவரை வணங்குகிறவர்களோடும் எப்படிப்பட்ட பந்தம் கிடைக்கும்?
-
-
சபையின் ஒற்றுமையைக் கட்டிக்காக்க உழையுங்கள்இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
“சகோதரர்கள் ஒன்றாகக் கூடி வாழ்வது எவ்வளவு அருமையாக இருக்கிறது! எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!” என்று தாவீது சொன்னார். (சங்கீதம் 133:1) அது உண்மைதான், இல்லையா? இந்த ஒற்றுமை தானாக வந்துவிடாது. நாம் ஒவ்வொருவரும் அதைக் கட்டிக்காக்க உழைக்க வேண்டும்.
1. கடவுளுடைய மக்களிடம் இருக்கும் விசேஷம் என்ன?
நீங்கள் வேறொரு நாட்டுக்குப் போய் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டால், அங்கு பேசப்படும் மொழி உங்களுக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால், மற்ற எதுவும் வித்தியாசமாகத் தெரியாது. ஏனென்றால், உலகம் முழுவதும் ஒரே புத்தகங்களை வைத்துத்தான் பைபிளைப் படிக்கிறோம். அதோடு, ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட முயற்சி செய்கிறோம். நாம் எங்கே வாழ்ந்தாலும் சரி, ‘யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொண்டு, . . . ஒற்றுமையாக அவரை வணங்குகிறோம்.’—செப்பனியா 3:9, அடிக்குறிப்பு.
2. சபையின் ஒற்றுமையைக் கட்டிக்காக்க நீங்கள் என்ன செய்யலாம்?
“இதயப்பூர்வமான அன்பை ஒருவருக்கொருவர் ஊக்கமாகக் காட்டுங்கள்.” (1 பேதுரு 1:22) எப்படி? மற்றவர்களுடைய நல்ல குணங்களையே பாருங்கள், குறைகளை அல்ல! உங்களுக்குப் பிடித்த ஒருசிலரோடு மட்டும் பழகாமல், வித்தியாசமானவர்களோடும் பழகுங்கள். அவர்களைப் பற்றிய தவறான அபிப்பிராயங்களை விட்டுவிட கடுமையாக முயற்சி செய்யுங்கள்.—1 பேதுரு 2:17-ஐ வாசியுங்கள்.a
3. சபையில் யாருடனாவது மனஸ்தாபம் இருந்தால் என்ன செய்யலாம்?
நாம் ஒற்றுமையாக இருந்தாலும் நம் எல்லாரிடமும் குறைகள் இருக்கின்றன. சிலசமயம் மற்றவர்கள் நொந்துபோகும்படி அல்லது புண்படும்படி நாம் நடந்துகொள்ளலாம். அதனால்தான், “தொடர்ந்து ஒருவரை ஒருவர் . . . மன்னித்துக்கொண்டே இருங்கள். யெகோவா உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல் நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. (கொலோசெயர் 3:13-ஐ வாசியுங்கள்.) நாம் எத்தனையோ தடவை யெகோவாவின் மனதைக் காயப்படுத்தினாலும் அவர் நம்மை மன்னிக்கிறார். அதனால் நாமும் மற்றவர்களை மன்னிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார். யாரையாவது நீங்கள் காயப்படுத்தியிருப்பதாக நினைத்தால், சமாதானமாக நீங்களே முயற்சி எடுங்கள்.—மத்தேயு 5:23, 24-ஐ வாசியுங்கள்.b
ஆராய்ந்து பார்க்கலாம்!
சபையின் ஒற்றுமையையும் சமாதானத்தையும் கட்டிக்காக்க நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
4. தவறான அபிப்பிராயங்களை விட்டுவிடுங்கள்
எல்லா சகோதர சகோதரிகள்மீதும் அன்பு காட்ட வேண்டுமென்றுதான் நாம் ஆசைப்படுகிறோம். ஆனால், வேறொரு பின்னணியிலிருந்து வருகிறவர்களை ஏற்றுக்கொள்வது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். அப்போது என்ன செய்யலாம்? அப்போஸ்தலர் 10:34, 35-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
எல்லா விதமான ஆட்களையும் யெகோவா தன்னுடைய சாட்சிகளாக ஏற்றுக்கொள்கிறார். அப்படியென்றால், மற்ற பின்னணிகளைச் சேர்ந்தவர்களை நீங்கள் எப்படிப் பார்க்க வேண்டும்?
வேறு பின்னணியைச் சேர்ந்தவர்களைப் பற்றிய என்ன தவறான அபிப்பிராயங்கள் உங்கள் பகுதியில் இருக்கின்றன?
2 கொரிந்தியர் 6:11-13-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
வேறு பின்னணியைச் சேர்ந்த சகோதர சகோதரிகளோடு நெருக்கமாவதற்கு நீங்கள் என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?
5. தாராளமாக மன்னியுங்கள், சமாதானமாகுங்கள்
யெகோவாவுக்கு நம்முடைய மன்னிப்புத் தேவையில்லை, ஆனாலும் நம்மை அவர் தாராளமாக மன்னிக்கிறார். சங்கீதம் 86:5-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
யெகோவா மன்னிக்கும் விதத்தைப் பற்றி இந்த வசனம் என்ன சொல்கிறது?
யெகோவா தரும் மன்னிப்புக்காக நீங்கள் ஏன் நன்றியோடு இருக்கிறீர்கள்?
என்னென்ன சூழ்நிலைகளில் மற்றவர்களோடு ஒத்துப்போவது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம்?
சகோதர சகோதரிகளோடு ஒற்றுமையாக இருப்பதற்காக நாம் எப்படி யெகோவாவைப் போலவே நடந்துகொள்ளலாம்? நீதிமொழிகள் 19:11-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
யாராவது உங்களை எரிச்சல்படுத்தும்போது அல்லது புண்படுத்தும்போது அந்தச் சூழ்நிலையை சமாளிக்க நீங்கள் என்ன செய்யலாம்?
நாமும் சிலசமயம் மற்றவர்களுடைய மனதைக் காயப்படுத்திவிடுகிறோம். அப்போது என்ன செய்யலாம்? வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
வீடியோவில் வந்த சகோதரி எப்படி இன்னொரு சகோதரியோடு சமாதானமானார்?
6. சகோதர சகோதரிகளிடம் நல்லதையே பாருங்கள்
சகோதர சகோதரிகளோடு பழகப் பழக அவர்களுடைய நல்ல குணங்கள் மட்டுமல்ல, அவர்களுடைய குறைகளும் நமக்குத் தெரியவரும். ஆனால், நாம் எப்படி நல்லதை மட்டும் பார்க்கலாம்? வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
சகோதர சகோதரிகளிடம் இருக்கும் நல்ல குணங்களைப் பார்க்க எது உங்களுக்கு உதவி செய்யும்?
யெகோவா நம்மிடம் இருக்கும் நல்ல குணங்களைத்தான் பார்க்கிறார். 2 நாளாகமம் 16:9-ன் முதல் பகுதியைப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
உங்களிடம் இருக்கும் நல்ல குணங்களைத்தான் யெகோவா பார்க்கிறார் என்று தெரிந்துகொள்ளும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது?
சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “நான் மன்னிச்சிட்டா அவங்களோட தப்பை அவங்க உணரவே மாட்டாங்க.”
நாம் ஏன் மற்றவர்களைத் தாராளமாக மன்னிக்க வேண்டும்?
சுருக்கம்
சபையில் ஒற்றுமையைக் கட்டிக்காக்க நாம் ஒருவரை ஒருவர் மன்னிக்க வேண்டும், எல்லாரிடமும் அன்பு காட்ட வேண்டும்.
ஞாபகம் வருகிறதா?
மற்றவர்கள்மேல் இருக்கும் தவறான அபிப்பிராயங்களை நீங்கள் எப்படி விட்டுவிடலாம்?
சபையில் யாருடனாவது உங்களுக்கு மனஸ்தாபம் இருந்தால் என்ன செய்வீர்கள்?
யெகோவாவைப் போலவே மற்றவர்களை மன்னிக்க வேண்டுமென்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?
அலசிப் பாருங்கள்
இயேசு சொன்ன ஒரு உதாரணம், மற்றவர்களை நியாயந்தீர்க்காமல் இருக்க எப்படி நமக்கு உதவும் என்று பாருங்கள்.
நம் பங்கில் தவறு இல்லாததுபோல் தெரிந்தாலும் நாம் மன்னிப்புக் கேட்க வேண்டுமா?
“மன்னிப்பு கேட்பது சமரசமாவதற்கு திறவுகோல்” (காவற்கோபுரம், நவம்பர் 1, 2002)
பாரபட்சம் இல்லாமல் மற்றவர்களை நடத்த சிலர் எப்படிக் கற்றுக்கொண்டார்கள் என்று பாருங்கள்
சபையில் யாருடனாவது நமக்குப் பிரச்சினை இருந்தால் அது சபையின் சமாதானத்தைப் பாதிக்குமளவுக்கு விடக் கூடாது. அதை எப்படிச் சரிசெய்யலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
“பிரச்சினைகளை அன்பினால் சரிசெய்யுங்கள்” (காவற்கோபுரம், மே 2016)
a தொற்றுநோயைக் கடத்தாமல் நாம் எப்படி அன்பாக நடந்துகொள்ளலாம்? பின்குறிப்பு 6 சொல்கிறது.
b தொழில் மற்றும் சட்ட சிக்கல்களை எப்படித் தீர்க்கலாம்? பின்குறிப்பு 7 சொல்கிறது.
-