-
‘எல்லாவற்றிற்கும் மேலாக ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்’விழிப்புடன் இருங்கள்!
-
-
‘எல்லாவற்றிற்கும் மேலாக ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்’
“எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; . . . எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்.”—1 பேதுரு 4:7, 8.
அப்போஸ்தலர்களுடன் தாம் செலவிட்ட அந்தக் கடைசி சில மணிநேரங்கள் அருமையானவை என்பதை இயேசு அறிந்திருந்தார். எதிர்காலத்தில் அவர்கள் சந்திக்கப் போகும் காரியங்களை அவர் அறிந்திருந்தார். அவர்கள் ஒரு பிரமாண்டமான வேலையை செய்து முடிக்க வேண்டியிருந்தது; ஆனால் தம்மைப் போலவே அவர்களும் பகைக்கப்படுவார்கள், துன்புறுத்தப்படுவார்கள் என்பதையும் அறிந்திருந்தார். (யோவான் 15:18-20) அந்தக் கடைசி இரவில், “ஒருவரிலொருவர் அன்பாயிரு”ப்பதன் அவசியத்தைப் பற்றி பல முறை அவர்களுக்கு நினைப்பூட்டினார்.—யோவான் 13:34, 35; 15:12, 13, 17.
2 அன்றிரவு அவர்களுடன் இருந்த அப்போஸ்தலன் பேதுரு அவர் சொன்ன குறிப்பை புரிந்துகொண்டார். பல வருடங்களுக்குப் பின், எருசலேம் அழிவுக்கு சற்று முன்பு, அன்பின் முக்கியத்துவத்தைப் பற்றி பேதுரு வலியுறுத்தி எழுதினார். “எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; . . . எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்” என கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறினார். (1 பேதுரு 4:7, 8) இந்தத் தற்போதைய ஒழுங்குமுறையின் “கடைசி நாட்களில்” வாழ்ந்து வருகிறவர்களுக்கு பேதுருவின் வார்த்தைகள் அதிக அர்த்தமுள்ளவையாக இருக்கின்றன. (2 தீமோத்தேயு 3:1) “ஊக்கமான அன்பு” என்றால் என்ன? ஒருவரிலொருவர் இத்தகைய அன்பு காட்டுவது ஏன் முக்கியம்? இத்தகைய அன்பு நமக்கு இருக்கிறது என்பதை எவ்வாறு செயலில் காட்டலாம்?
“ஊக்கமான அன்பு”—அது என்ன?
3 அன்பு என்பது ஓர் உணர்ச்சி, அது இயல்பாக ஊற்றெடுக்க வேண்டும் என பலர் நினைக்கின்றனர். ஆனால் ஏதோவொரு விதமான அன்பைப் பற்றி பேதுரு பேசவில்லை; உன்னதமான ஓர் அன்பைப் பற்றியே அவர் பேசினார். 1 பேதுரு 4:8-ல் குறிப்பிடப்பட்டுள்ள “அன்பு” என்ற வார்த்தை ஆகாப்பீ என்ற கிரேக்க வார்த்தையின் மொழிபெயர்ப்பாகும். இது, நியமத்தின் அடிப்படையில் வழிநடத்தப்படும் சுயநலமற்ற அன்பை குறிக்கிறது. ஒரு புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “ஆகாப்பீ என்ற அன்பு கட்டளையின் பேரில் காண்பிக்க முடிகிற அன்பாகும்; ஏனென்றால் இது உணர்ச்சியின் இயல்பான வெளிக்காட்டு அல்ல, ஆனால் செயல்படுவதற்கு வழிநடத்தும் ஓர் உறுதியான தீர்மானம்.” சுயநலம் நம் இரத்தத்தில் ஊறிப்போய் இருப்பதால், ஒருவருக்கொருவர் அன்புகாட்ட நமக்கு நினைப்பூட்டுதல்கள் தேவை; இந்த அன்பை கடவுளுடைய நியமங்கள் கட்டளையிடும் வழிகளில் நாம் காட்ட வேண்டும்.—ஆதியாகமம் 8:21; ரோமர் 5:12.
4 வெறும் கடமையுணர்வின் காரணமாக ஒருவருக்கொருவர் அன்புகாட்ட வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. ஆகாப்பீ என்பது கனிவும் உணர்ச்சியுமற்ற ஒன்றல்ல. ‘ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாய் இருங்கள்’ [சொல்லர்த்தமாக, அன்பை “விரிவாக்குங்கள்”] என பேதுரு சொன்னார்.a (கிங்டம் இன்டர்லீனியர்) என்றாலும், இத்தகைய அன்புக்கு முயற்சி தேவை. “ஊக்கமான” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையைப் பற்றி ஓர் அறிஞர் இவ்வாறு கூறுகிறார்: “பந்தயத்தின் கடைமுனையை எட்டும்போது தனது தசைகள் விரிவடையும் வண்ணம் தன்னிடமுள்ள கடைசி துளி பலத்தையும் பயன்படுத்துகிற விளையாட்டு வீரனை இது சித்தரித்துக் காட்டுகிறது.”
5 அப்படியானால், நமது அன்பு எளிதான விதங்களில் மட்டுமே காட்டும் அளவுக்கு அல்லது குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே காட்டும் அளவுக்கு மட்டுப்பட்டதாக இருக்கக் கூடாது. கிறிஸ்தவ அன்பு என்பது நம் இருதயத்தை ‘விரிவாக்குவதை’ உட்படுத்துகிறது, அதாவது சவாலாக இருக்கும்போதுகூட அன்புகூருவதை உட்படுத்துகிறது. (2 கொரிந்தியர் 6:11-13) விளையாட்டு வீரர் தன் திறமைகளை அதிகரிக்க பயிற்சியும் முயற்சியும் செய்ய வேண்டியதைப் போலவே, நாம் இத்தகைய அன்பை வளர்த்துக்கொள்ள உழைக்க வேண்டும். ஒருவருக்கொருவர் இத்தகைய அன்பு காட்டுவது இன்றியமையாதது. ஏன்? குறைந்தபட்சம் மூன்று காரணங்களுக்காக அது இன்றியமையாதது.
-
-
‘எல்லாவற்றிற்கும் மேலாக ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்’விழிப்புடன் இருங்கள்!
-
-
7 இரண்டாவது காரணம் என்னவென்றால், தேவையிலிருக்கும் நமது சகோதரர்களுக்கு உதவ இப்பொழுது நாம் ஒருவரிலொருவர் அதிகமாக அன்புகூருவது மிக முக்கியம், ஏனென்றால் “எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று.” (1 பேதுரு 4:7) ‘கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ நாம் வாழ்ந்து வருகிறோம். (2 தீமோத்தேயு 3:1, NW) உலக நிலவரங்களும் இயற்கை பேரழிவுகளும் எதிர்ப்புகளும் நமக்கு அதிக கஷ்டங்களைக் கொண்டு வருகின்றன. துன்பம் மிகுந்த சூழ்நிலைகளில், முன்பைவிட இன்னும் அதிகமாக நாம் ஒருவருக்கொருவர் நெருங்கிவர வேண்டும். ஊக்கமான அன்பு நம்மை ஒன்றுசேர்க்கும், ‘ஒருவரைக் குறித்து ஒருவர் கவலைப்படுவதற்கும்’ நம்மை உந்துவிக்கும்.—1 கொரிந்தியர் 12:25, 26.
8 மூன்றாவது காரணம் என்னவென்றால், சாத்தான் நம்மை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும்படி அவனுக்கு ‘இடங்கொடுக்க’ நாம் விரும்பாததால் ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டும். (எபேசியர் 4:27) சக விசுவாசிகளுடைய அபூரணங்களை, அதாவது அவர்களுடைய பலவீனங்களையும் குறைகளையும் தவறுகளையும் நமக்கு தடைக்கற்களாக பயன்படுத்த சாத்தான் தயாராக இருக்கிறான். மற்றவர்களின் யோசனையற்ற வார்த்தையோ அன்பற்ற செயலோ சபையிலிருந்து நம்மை விலக்கிக்கொள்வதற்கு நாம் அனுமதிப்போமா? (நீதிமொழிகள் 12:18) ஒருவருக்கொருவர் ஊக்கமான அன்பிருந்தால் நாம் அப்படி செய்ய மாட்டோம்! சமாதானத்தைக் காத்துக்கொள்வதற்கும் “ஒருமனப்பட்டு” ஐக்கியமாக கடவுளுக்கு சேவை செய்வதற்கும் இத்தகைய அன்பு நமக்கு உதவுகிறது.—செப்பனியா 3:9.
-
-
‘எல்லாவற்றிற்கும் மேலாக ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்’விழிப்புடன் இருங்கள்!
-
-
13 பிறருடைய குற்றம் குறைகளை கண்டுகொள்ளாமலிருக்க அன்பு நம்மை உந்துவிக்கிறது. “ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்” என தமது வாசகருக்கு புத்திமதி கூறியபோது, இது ஏன் மிக முக்கியம் என்பதற்கு காரணத்தை பேதுரு கொடுத்தார், அதாவது “அன்பு திரளான பாவங்களை மூடும்” என்று சொன்னார். (1 பேதுரு 4:8) பாவங்களை ‘மூடுவது’ என்பது வினைமையான பாவங்களை ‘மூடிமறைப்பதை’ குறிப்பதில்லை. இப்படிப்பட்ட பாவங்களை சபையில் பொறுப்புள்ளவர்களிடம் அறிவித்து அவர்கள் கையில் விட்டுவிடுவதே சரியானது. (லேவியராகமம் 5:1; நீதிமொழிகள் 29:24) அப்பாவிகளை பெரும் பாவிகள் தொடர்ந்து புண்படுத்த அல்லது பலியாக்க அனுமதிப்பது அன்பற்றதாக—வேதப்பூர்வமற்றதாக—இருக்கும்.—1 கொரிந்தியர் 5:9-13.
14 பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சக விசுவாசிகளுடைய தவறுகளும் குறைபாடுகளும் அற்பமானவையாகவே இருக்கின்றன. சில சமயங்களில் நாம் எல்லாருமே சொல்லிலோ செயலிலோ தவறுகிறோம், ஒருவரையொருவர் எரிச்சலூட்டி விடுகிறோம், புண்படுத்தியும் விடுகிறோம். (யாக்கோபு 3:2) மற்றவர்களுடைய குறைகளை உடனடியாக எல்லாரிடமும் பறைசாற்ற வேண்டுமா? இத்தகைய போக்கு சபையில் வாக்குவாதங்களைத்தான் உருவாக்கும். (எபேசியர் 4:1-3) அன்பு நம்மை ஆளுமாகில், சக வணக்கத்தாருக்கு “அவதூறு” உண்டாக்க மாட்டோம். (சங்கீதம் 50:20) காரை பூசி பெயிண்ட் அடிக்கும்போது சுவற்றிலுள்ள மேடுபள்ளங்கள் அல்லது கறைகள் மறைந்துவிடுகின்றன; அது போலவே மற்றவர்களுடைய அபூரணங்களை அன்பு மூடிவிடுகிறது.—நீதிமொழிகள் 17:9.
-
-
‘எல்லாவற்றிற்கும் மேலாக ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்’விழிப்புடன் இருங்கள்!
-
-
a நாம் ஒருவரிலொருவர் “கபடமில்லாமல்,” “ஆழமாக,” அல்லது “மனப்பூர்வமாக” அன்புகூர வேண்டும் என பிற மொழிபெயர்ப்புகள் 1 பேதுரு 4:8-ல் மொழிபெயர்த்திருக்கின்றன.
-