பைபிளை எழுதியது யார்?
“பைபிள் முழுவதிலும் முரண்பாடுகள் இருக்கிறது” என்று ஐயுறவாதிகள் உரிமைபாராட்டுகின்றனர். “அதோடுகூட அவை மனித தத்துவங்களை கொண்டிருக்கிறது. அப்படியிருக்க, அதை வாழ்க்கைக்கு நம்பகமான வழிகாட்டியாக எப்படி எவராவது ஏற்க முடியும்?” என்றும் கேட்கின்றனர்.
பைபிள் மனிதனுடைய பிழையான சிந்தனைகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு புத்தகமே தவிர அதிகமாக வேறேதுமில்லை என்ற ஐயுறவாதிகளின் கருத்தை நீங்களும் கொண்டிருக்கிறீர்களா? ஒருசில குருமார் அந்த கருத்தை கொண்டிருக்கின்றனர். மறைந்த புராட்டஸ்டண்ட் இறைமை நூலார் கார்ல் பார்த் தன்னுடைய சர்ச் கிறிஸ்தவ கொள்கைகளின் விளக்கம் (Kirchliche Dogmatik) என்ற புத்தகத்தில்: “தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களுமாக இருந்தவர்கள் பேசுவதிலும் எழுதுவதிலும் தவறிழைக்கும் நிலையிலிருந்தார்கள்” என்று எழுதினார். ஒன்றுக்கு மேற்பட்ட பைபிள் எழுத்தாளரால் எழுதப்படும் நிகழ்ச்சி விவரிப்புகளில் வார்த்தை வித்தியாசங்கள் கண்டுபிடிக்கப்படலாம் என்பது உண்மையே. மேலும் பைபிளில் வேறொரு இடத்தில் காணப்படும் வாக்கியங்களிலிருந்து மேல் தோற்றத்திற்கு முற்றிலும் வித்தியாசமாய் தோன்றக்கூடிய வாக்கியங்கள் கண்டுபிடிக்கப்படலாம். ஆனால் இவைகள் உண்மையில் முரண்பாடுகளா? பைபிள் வெறுமென மனிதருடைய உற்பத்தி பொருளா? மெய்யாகவே பைபிளை எழுதினது யார்?
இதற்கு விடை சுலபம்: “மனிதர் கடவுள் சொன்னதை பேசினார்கள்.” எதை பேசுவது எதை எழுதுவது என்பதை அவர்கள் எப்படி அறிந்திருந்தனர்? சற்று முன் சொல்லப்பட்ட கூற்றை குறிப்பிட்ட அந்த மனிதன் அப்போஸ்தலனாகிய சீமோன் பேதுருவாகும். அவன் அவர்கள் “பரிசுத்த ஆவியின் போக்கிலே கொண்டு செல்லப்பட்டார்கள்” என்று விவரிக்கிறான்.—2 பேதுரு 1:21, NW.
உண்மையென்னவெனில், மறுபடியும் மறுபடியுமாக பைபிள் அது “கடவுளுடைய வார்த்தை” என்று வலியுறுத்துகிறது. சங்கீதம் 119-ல் 176 வசனங்களில் மட்டும் இந்த குறிப்பானது 176 தடவைகள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது! இதை குறிப்பிடத்தக்க ஒன்றாக ஆக்குவது என்னவெனில் எழுத்தாளர்கள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட காரியத்தை தாங்கள் எழுதினார்கள் என்று தெரியப்படுத்துவதில்தானே அக்கறையாயிருப்பார்கள். ஆனால் பைபிளை எழுதின மனிதர்களோ அப்படியிருக்கவில்லை. எல்லா கனமும் கடவுளுக்கே செல்ல வேண்டியதாக இருந்தது. அது அவருடைய புத்தகம், அவர்களுடையதாக இருக்கவில்லை.—1 தெசலோனிக்கேயர் 2:13; 2 சாமுவேல் 23:2.
“பரிசுத்த ஆவியின் போக்கிலே கொண்டுசெல்லப்பட்டார்கள்”—எப்படி?
இந்த மனிதர் எப்படி “பரிசுத்த ஆவியின் போக்கிலே கொண்டு செல்லப்பட்டார்கள்?” முதல் நூற்றாண்டு கிறிஸ்தவன் தீமோத்தேயுவுக்கு எழுதப்பட்ட ஒரு கடிதம் இதற்கு விடை அளிக்கிறது: “வேதவாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது.” கிரேக்க பதமான தியோ’நியுஸ்டாஸ் என்ற பைபிளின் மூல வார்த்தையிலிருந்தே “தேவனால் ஏவப்பட்டது” என்பது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்த கிரேக்க பதத்தின் நேர் அர்த்தம், “கடவுள் ஊதினார்.” எழுத்தாளர்களின் மனங்களுக்குள் தம்முடைய கருத்துக்களை ஊதுவதற்காக கடவுள் தம்முடைய காணக்கூடாத கிரியை நடப்பிக்கும் சக்தியை—தம்முடைய பரிசுத்த ஆவியை—பயன்படுத்தினார். இவ்வாறாக, யெகோவா தேவன் தாமே, பைபிளின் ஊற்று மூலமாகவும் உற்பத்தியாளராகவும் இருக்கிறார். ஒரு அலுவலக அதிகாரி தனக்கு கடிதம் எழுத ஒரு செயலாளரைப் பயன்படுத்துவதை போலவே பைபிள் எழுத்துக்களையும் அவருடைய எண்ணங்களே வழிநடத்தின.—2 தீமோத்தேயு 3:16.
அதோடு “கடவுள் ஊதினார்” என்ற இந்த பொது கருத்து “பரிசுத்த ஆவியின் போக்கிலே கொண்டு செல்லப்பட்டார்கள்” என்ற பைபிள் கூற்றுக்கு இசைவானதாக இருக்கிறது. அது எப்படி? “போக்கிலே கொண்டு செல்லப்படுதல்” என்ற வார்த்தை கிரேக்க மொழியில் காற்றினால் ஒரு குறிப்பிட்ட திசையிலே கொண்டு செல்லப்படும் கப்பல்கள் சம்பந்தமாக பயன்படுத்தப்படுகிறது. (அப்போஸ்தலர் 27:15, 17 ஒப்பிடவும்.) இவ்வாறாக, காற்று வீசுகையில் ஒரு பாய்மரக் கப்பலை அது எப்படி நகர்த்தி செல்கிறதோ அப்படியே பைபிள் எழுத்தாளர்களும் கடவுள் தமது ஆவியை அவர்கள் மீது “ஊதின”போது அவருடைய பரிசுத்த ஆவியின் போக்கிலே கொண்டு செல்லப்பட்டார்கள். கடவுளுடைய இயக்குவித்தலின் கீழ் சிந்தனை செய்தார்கள், பேசினார்கள், எழுதினார்கள்.
எழுதுவதற்கு கடவுள் பயன்படுத்திய மனிதர்
இங்கே நாம் பைபிள் எழுத்தாளர்களைப் பற்றிய ஒருசில சுய வரலாற்று விவரங்களை கொண்டிருக்கிறோம். அவர்கள் தங்களையே மிக முக்கியமானவர்களாக கருதிக்கொள்வதற்கு மாறாக தங்களை பின்னணியில் வைப்பதன் மூலம் அவர்கள் எப்பொழுதுமே கடவுளை கனப்படுத்த முயற்சித்தார்கள். அவர்களுள் அரசு பொதுப்பணியாளர்கள், நியாயாதிபதிகள், தீர்க்கதரிசிகள், ராஜாக்கள், மேய்ப்பர்கள், விவசாயிகள், மீனவர்கள்—மொத்தத்தில் சுமார் 40 மனிதர்கள். எனவே, பைபிள் கடவுளிடமிருந்து வந்த செய்தியாக இருந்தபோதிலும், மனிதரின் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய கவர்ச்சியையும், அனலையும், பலதரப்பட்ட பொருட்களையும் உடையதாயிருக்கிறது.
அநேக பைபிள் எழுத்தாளர்கள் ஒருவரையொருவர் அறியாதவர்களாயிருந்தனர். அவர்கள் பல நூற்றாண்டு வித்தியாசத்தில் வாழ்ந்த ஆட்களாகவுமிருந்தனர். உணர்ச்சியியல்புகளிலும் அனுபவங்களிலும் மித மீறிய விதத்திலும் அதோடு சமூக மற்றும் கல்வி பின்னணிகளிலும்கூட மித மீறிய அளவில் வித்தியாசப்பட்டவர்களாயிருந்தனர். அதே சமயத்தில், அவர்கள் இளைஞராகவோ அல்லது வயதானவராகவோ இருந்தபோதிலும் அவர்களுடைய எழுத்துக்கள் முழுமையான ஒற்றுமையை காண்பிக்கிறது. அந்தப் புத்தகம் இறுதியாக எழுதி முடிக்கப்படும் வரையில் சுமார் 1,600 ஆண்டிற்கு மேற்பட்ட ஒரு காலப்பகுதி செலவிடப்பட்டது. கவனமான ஆராய்ச்சிக்குப் பின்பு பைபிள் கூற்றுகள் குறிப்பிடத்தக்க ஒத்திசைவை பிரதிபலிக்கிறதென்பதை நீங்கள் காண்பீர்கள். எழுதுவதற்கு பல எழுத்தாளர்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும் பைபிள் இவ்வாறாக ஒரே ஆசிரியரின் மனதை எதிரொலிக்கிறது.
இந்த அசாதாரண புத்தகமான பைபிளிற்கு “வழக்கத்திற்கும் அதிகமான கவனத்தை செலுத்துவதற்கு” இது நம்மை தூண்ட வேண்டாமா? பேதுரு எட்டிய அதே முடிவை எட்டும் நிலையில் நாம் இருக்க வேண்டாமா? அவன் எழுதினதாவது: “இவை அனைத்தும் தீர்க்கதரிசிகளுடைய செய்திகளை உறுதி செய்வதாகவே இருக்கிறது. இவற்றிற்கு கவனம் செலுத்துவது நலமானதாயிருக்கும். ஏனெனில் இது இருள் சூழ்ந்த இடத்தில் ஒளிதரும் விளக்கைப்போன்று இருக்கிறது.”—எபிரெயர் 2:1; 2 பேதுரு 1:19, தி நியு இங்கிலிஸ் பைபிள்.
ஆனால் பைபிள் தன்னில்தானே முரண்பாடுள்ளதாயிருக்கிறது என்ற உரிமை பாராட்டலைப் பற்றி என்ன? அது அவ்வாறிருக்கிறதா? நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்? (w88 2⁄1)
[பக்கம் 4-ன் பெட்டி]
“என்னே ஒரு மகத்தான புத்தகம்! அதனுடைய உள்ளடக்கத்தைக் காட்டிலும் எனக்கு அதன் சொல்லமைப்புப் பாங்குதானே வினோதமானதாயிருக்கிறது. அங்கே அந்த வார்த்தை, ஒரு மரத்தைப் போன்று, ஒரு பூவைப் போன்று, அந்த சமுத்திரத்தை போன்று, அந்த நட்சத்திரங்களைப் போன்று மேலும் மனிதனைப் போன்றே, நடைமுறையில் ஒரு இயல்பான விளைப்பொருளாக ஆகிவிடுகிறது. அது துளிர்க்கிறது, அது வழிந்தோடுகிறது, அது ஒளி வீசுகிறது, அது நகைக்கிறது. எப்படி என்பதை ஒருவன் அறியான், ஏன் என்பதையும் ஒருவன் அறியான். ஒவ்வொன்றும் அந்தளவுக்கு முற்றிலும் இயல்புள்ளதாக இருப்பதை ஒருவனால் காணமுடிகிறது. மனித ஞானத்தை மட்டுமே உறுதிப்படுத்தக்கூடிய மற்ற பல புத்தகங்களுக்கு நேர்முரணாக அது உண்மையில் கடவுளுடைய வார்த்தையே.”—19-ம் நூற்றாண்டு ஜெர்மன் கவிஞரும் இதழாசிரியருமான ஹீன்ரிச் ஹீன்ஸ் என்பவருடைய பைபிள் பற்றிய குறிப்புரைகள்.
[பக்கம் 4-ன் படம்]
ஒரு பாய்மரக் கப்பலை காற்று நகர்த்தி செல்வதைப்போன்றே பைபிள் எழுத்தாளர்களும் ‘கடவுளுடைய பரிசுத்த ஆவியின் போக்கில் கொண்டு செல்லப்பட்டார்கள்.’