திருவெளிப்பாட்டின் குதிரைவீரர்—அவர்களுடைய சவாரி உங்களை எவ்வாறு பாதிக்கிறது?
கனடாவிலுள்ள டொராண்டோவில், அனுதினமும் பயணஞ்செய்யும் அநேக ஆட்களுக்கு திங்கள், ஏப்ரல் 1,1985 எப்போதும் போன்ற ஒரு நாளாக இருந்தது. குண்டு வீச்சாளர்களாக இருக்கப் போகிறவர்கள் நகரின் சுரங்கப்பாதையிலுள்ள இரயில் தடங்களை தகர்க்கப்போவதாக மிரட்டியிருந்தார்கள். ஏன்? துருக்கியிலுள்ள ஆர்மீனியன் மக்களை அழிப்பதற்குரிய ஒரு முயற்சி என்பதாக பல ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் சொன்னவற்றை நினைப்பூட்டுவதற்காகவே அப்படி செய்தார்கள். இக்காரியத்தை துருக்கி அரசாங்கம் மருபடியும் மருபடியுமாக மறுத்து வந்தது.
அனுதினமும் பயணஞ்செய்யும் பெரும்பாலான அந்த ஆட்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்டிருந்த அந்த தகவலை குறித்து கொஞ்சமோ அல்லது எதையுமே அறியாதவர்களாயிருந்தனர் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. என்றபோதிலும் அவர்கள் சி கஷ்டங்களையும் மனக்கவலைகளையும் கொண்டிருந்தனர். நாம் பெரும்பாலும் வெகு சொற்பமாகவே அறிந்திருக்கும் அந்த காரியங்களாலேயே பாதிக்கப்படுகிறோம்.
இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பத்தாண்டுகளின் போது வெளிப்படுத்தின விசேஷம் (அல்லது திருவெளிப்பாடு) 6:1-8-ல் காணப்படும் அந்த குறிப்பிடத்தக்க பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக கவனிக்கத்தக்க நிகழ்ச்சிகள் நிறைவேற ஆரம்பித்தன. கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தப்பட்டபடி இந்த குதிரைவீரர் கடைசி நாட்களில் சவாரிசெய்ய வேண்டியவர்களாக இருந்தனர். லட்சக்கணக்கான ஆட்கள் இதைக்குறித்து ஆறியாதவர்களாக இருந்தபோதிலும் இந்த திருவெளிப்பாட்டின் குதிரை வீரருடைய சவாரி பூமி முழுவதிலுமுள்ள அனைவரையும் பாதித்துக் கொண்டிருக்கிறது. நீங்களும் கூட பாதிக்கப்படுகிறீர்கள், ஆனால் எப்படி? ஒவ்வொரு குதிரை வீரரைப்பற்றியும் நாம் கலந்தாலோசிக்கும்போது நாம் இதை காணலாம்.
சிவப்பு நிறமுள்ள குதிரை
யோவானால் காணப்பட்ட ஒரு சவாரியானது “சிவப்பான [அக்கினி நிறமுள்ள, Nw] . . குதிரை; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்யதக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரியபட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது—வெளிப்படுத்தின விசேஷம் 6:4.
இந்த குதிரை வீரனின் “பெரியபட்டயம்” யுத்தத்தை அடையாளப்படுத்துகிறது. சொல்லப்பட்டதற்கு இசைய, 1914 முதற்கொண்டு சுமார் 6,90,00,000 ஆட்கள் இரண்டு உலகப் போர்களில் மாண்டிருக்கின்றனர். என்னே ஒரு படுகொலை! உண்மையாகவே. ஏராளமான விதவைகளும் மற்றும் அநாதைகளும் இருப்பதுதானே சர்வதேச யுத்தத்தை சுட்டிக்காட்டக்கூடிய சிவப்பு நிறமுள்ள குதிரைவீரனின் சவாரி அவர்களுடைய வாழ்க்கையை நேரடி.யாக பாதித்திருக்கிறது. என்பதை உறுதிப்படுத்துகிறது.
கூடுதலாக, தொடர்ந்திருக்கும் போர்களும் போர் அச்சுறுத்தல்களும் இளம் தலைமுறையினரைக் கடுமையாக பாதிக்கிறது. தீவிர மோதல்கள் எழும்பும் நாடுகளில் அதிகப்படியான சண்டைகளை செய்வது பருவப்பிள்ளைகளே. (13 முதல் 19 வயதினரே) இந்த இளம் பிள்ளைகள் மீது போர் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பானது ஒரு மனித உரிமைகள் நிறுவனத்தின் அக்கிராசினரால் எழுப்பப்பட்ட பின்வரும் கேள்வியில் சுருக்கிகாட்டப்படுகிறது: “அவர்கள் எப்படி நல்லறிவு மற்றும் நிதானபுத்தியுமுள்ள பெரிவர்களாக வளரக்கூடும்?”
போர்களால் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கும் அநேக நாட்டு வாலிபர்கள் காலத்தை; மாதங்கள் மற்றும் ஆண்டுகள் வகையில் கணக்கிடுவதற்கு கற்றுக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் கேட்பதாவது: “பிற்காலத்திலா? பிற்காலத்தைக் குறித்து யாருக்கு அக்கறை? நான் இன்று இரவு படுக்கைக்கு செல்லும் போது அதனுள் ஒரு வெடிகுண்டுவராது என்று யார் உத்தரவாதமளிக்கக்கூடும்?”
சமாதானமுள்ள நாடுகளில் வாழும் பிள்ளைகளைப்பற்றிய தென்ன? இந்த யுத்தத்தின் குதிரை வீரனுடைய பாதிப்புகளை அவர்கள் அவர்கள் உணருகிறார்களா? ஆம், அந்த இருண்ட அணு ஆயுதபோரின் அச்சுறுத்தல் அவர்களுக்கு வெகு ஆழமான மனோநிலை சார்ந்த விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு ஆசிரியை தன்னுடைய மாணவர்களால் வெளிப்படுத்தப்பட்ட மனக்கவலையைப்பற்றி சொன்னதாவது: இந்த குறிப்புகளை நான் திரும்பதிரும்பக்கேட்டபோது அவநம்பிக்கையின் உணர்ச்சிகளால் நான் வெறுமெனே அடித்து செல்லப்பட்டேன், இந்த இளம்பிள்ளைகள் ஒரேவிதமான மனமுறிவை உணர்ந்தனர். அவ்வாறான உணர்ச்சிக்கு நான் என்னை அனுமதிப்பதில்லை. க்யூபெக், கனடா நாட்டின் டாக்டர் ரிச்சர்ட்லோகன் என்பவர் கூடுதலாக சொன்னதாவது: “உதவியற்றநிலை மற்றும் வலுவிழந்த நிலை ஆகிய இதுவே சோர்வு என்பதற்குரிய மனோநிலை சார்ந்த விளக்கமாகும், அநேக பல இளைஞரிடம் இதையே நாம் காண்கிறோம்.”
ஆனால் போர்களால் அலைக்கழிக்கப்படும் ஒரு நாட்டில் நீங்கள் வாழவில்லையென்றால் அல்லது அந்த பிரச்னையால் உணர்ச்சி சம்பந்தமாக பாதிக்கப்படவில்லை என்று நீங்கள் உணர்ந்தால் அப்பொழுது என்ன? அப்பொழுதும்கூட இந்த சிவப்பு [அக்கினி] நிறமுள்ள குதிரைவீரன் உங்களை பாதிக்கிறான். ஒவ்வொரு நிமிடமும் ரூ 1.3 கோடி இராணுவ நோக்கங்களுக்காக செலவழிக்கப்படுகிறது.- ஒரு ஆண்டிற்கு சுமார் ரூ 600 கோடி உலக முழுவதிலும் செலவழிக்கப்படுகிறது. இவையனைத்துக்கும் தொகை செலுத்துவது யார்? நீங்களே செலுத்துகிறீர்கள். நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் இந்த சிவப்பு நிறமுள்ள குதிரை வீரனின் சவாரியால் பாதிக்கப்படுகிறீர்கள்.
கறுப்பு குதிரை
அந்த காட்சியின் மற்றொரு குதிரை பின்வரும் வார்த்தைகளில் யோவானால் விளக்கப்படுகிறது: நான் பார்த்தபோது இதோ, ஒரு கறுப்புக் குதிரையைக் கண்டேன்; அதின் மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான் அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒரு படி கோதுமை யென்றும் ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமை யென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.”—வெளிப்படுத்தின விசேஷம் 6:5,6.
நீங்கள் பசியால் வாடுகிறீர்களா? லட்சக்கணக்கானோர் அவ்வாறு இருக்கின்றனர். பஞ்சத்தை சுட்டிக்காட்டக்கூடிய கறுப்புக் குதிரையால் அவர்கள் நேரிடையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு நிமிடமும் 30 பிள்ளைகள்—ஒரு ஆண்டின் 1,50,00.000-ற்கும் அதிகமான பிள்ளைகள்—போதிய உணவு, மருந்து ஆகியவை இல்லாமல் சாகின்றனர்! இன்னும் பல லட்சக்கணக்கான மற்ற ஆட்கள் பரிதாபகரமான நிலையில் வாழ்கின்றனர். முன்னால் உலக வங்கி பிரசிடென்ட் மெக்நாமரா என்பவர் சொன்னதாவது: “அவர்கள் கல்வியறிவு இல்லாமை, போஷாக்குக் குறைவு, நோய், குழந்தைகளுடைய உயிரிழப்பு எண்ணிக்கையில் உச்சநிலை ஆகியவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் மற்றும் அவர்கள் பிறந்திருக்கும் பிறப்பு மூலக்கூற்றின் முழு ஆற்றலையும் மறுக்குமளவுக்கு அவை மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன.
சமீப மாதங்களில் பஞ்சத்தால் வாடும் ஆப்பிரிக்க ஆண்கள் பெண்கள், பிள்ளைகள் ஆகியோரின் படங்களை காண்பது சர்வ சாதாரணமாகிவிட்டிருக்கிறது இப்படிப்பட்ட வேதனைகளை படம்பிடித்து காட்டுவதுபோல் வார்த்தைகளில் விவரிப்பவராய் ஐ. நா பொது காரியதிரிசியான ஜேவியர் பெரெஸ் டி க்யூலர் எச்சரித்ததாவது: “இரண்டாம் உலகப்போரின் மாண்டவர்களைக் காட்டிலும் கீழ் சஹாராவில் அதிகமான மானிடர் மாளக்கூடும். அதில் உயிர் தப்பிக்கும் ஆட்களும் கூட மீதமுள்ள தங்கள் வாழ்நாட்காலத்தில் சரீரப்பிரகாரமாகவோ அல்லது மனதின் பிரகாரமாகவோ பழுதடையக்கூடும். இந்த இன்னலுக்குள்ளானவர்கள் கறுப்பு குதிரையின் சவாரியால் நேரிடையாக பாதிக்கப்பட்டவர்கள்.
நீங்கள் ஒரு வேளை பசியால் வாடாமலிருக்கக் கூடும். ஆனால் பஞ்சத்தால் வாடுபவர்களுடைய பரிதாப காட்சிகளால் நீங்கள் நிச்சயமாகவே பாதிக்கப்படக்கூடும் நியுயார்க்டைம்ஸ் மே. 20, 1985-உள்ள கட்டுரையின் பிரகாரம், அதற்குள்ளாக உணவின்றி மாளும் மக்களுக்கு உதவி கொடுப்பதற்காக நூறுகோடிக்கும் அதிகமான நன்கொடை வழங்கப்பட்டிருக்கிறது. நீங்கள் ஒரு வேளை நேரிடையாக அளித்திராவிட்டாலும் சில அரசாங்கங்கள் வரிபணத்தை உபயோகித்து பெருந்தொகையான நன்கொடைகளை வழங்கியிருக்கின்றனர். ஆம்; இந்த கறுப்புக்குதிரைவீரன் மொத்த ஜனத் தொகையினர்மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிப்பை கொண்டுவருபவனாக இருந்திருக்கிறான்.
மங்கின நிறமுள்ள குதிரை
யோவான் கண்ட தரிசனம் மற்றொரு குதிரையையும் மற்றும் அதனுடைய வீரனையும்பற்றிய விவரிப்புடன் தொடருகிறது: “நான் பார்த்தபோது இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின் மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன் பின் சென்றது பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலை செய்யும்படியான அதிகாரம் அவைகளுக்கு கொடுக்கப்பட்டது.—வெளிப்படுத்துதல் 6:8
அந்த மங்கின நிற குதிரை மீது மரணம் சவாரி செய்கிறது. “சாவுக்கேதுவான வாதை” இந்த குதிரை வீரனுடைய சவாரியின் போது உயிர் பறிக்கப்படக்கூடிய பல்வேறு வழிகளில் இது வெறும் ஒரேஒரு வழியாகவே இருக்கிறது. நவீன காலங்களில் மருத்துவ விஞ்ஞானத்தில் முன்னேற்றம் இருந்தபோதிலும் எல்லா திக்குகளிலும் இந்த உலகம் இன்னமும் நோயை எதிர்படுகிறது. முதலாம் உலக யுத்தத்தை பின் தொடர்ந்து வந்த ஸ்பானிஷ் ஃப்ளூ என்றழைக்கப்பட்ட ஓர் தொத்து நோயை கொண்டிருக்கும் வாய்ப்பை ஒருவேளை நாம் இன்று எதிர்படாத போதிலும் புற்றுநோயாகவும் வாய்ப்பை ஒருவேளை நாம் இன்று எதிர்படாதபோதிலும் புற்றுநோய் இருதய கோளாறுகள், இன்னும் பல நோய்களால் இன்னமும் ஏற்படும் உயிரிழப்பானது தடுமாறச் செய்வதாக இருக்கிறது. உதாரணமாக உலக உடல் நல அமைப்பானது உலக முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் 59 லட்சம் புதிய நோயாளிகள் இருக்கின்றனர் என்று மதிப்பிடப்படுகிறது. நதிக்குருடு மலேரியா நத்தைக் காய்ச்சல் காலரா ஆகிய அநேக திரளான நோய்கள் தற்போது இதுவரையிலுமாக துன்பப்படுத்திவரும் வாதைகளோடு சேர்ந்து கொள்கின்றன.
என்றபோதிலும் ‘எனக்கு இவ்விதமான நோய்கள் ஒன்று மில்லையே’ என்று நீங்கள் ஒருவேளை விவாதிக்கக் கூடும். ஆனால் அது ஒரு வேளை உண்மையாக இருக்கக்கூடும், ஆனால் இந்த மங்கினநிற குதிரையால் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள். மருத்துவமனைகளும் மற்றும் மருத்துவ செலவுகளும் மிகப் பேரளவாய் இருக்கின்றன. இது தனி நபர்கள் ஏதோ ஒரு வகையான உடல் நல காப்பீடுகளை (இன்சூரன்சு) நாடிப் பெறும்படி செய்திருக்கிறது. அநேக நாடுகள் வரிப்பணத்தின் மூலம் செலுத்தப்பட்ட சமூக நல நிறுவனங்களின் மருந்துகளை வழங்குகிறது. மேலும் வேலை செய்யும் நேரங்களின் இழப்பால் ஏற்படும் அந்த மிகத் திரளான செலவை யோசித்துப் பாரங்கள். இதன் பின் விளைவு விலைவாசி உயர்வால் உங்களுக்கு கடத்தப்படுகிறது. ஆம் மங்கின நிற குதிரையின் சவாரி உங்களை பாதிக்கிறது.
வெள்ளைக்குதிரை எதை கொண்டுவருகிறது
மற்ற குதிரைவீரர் சவாரி செய்கையில் ஏற்படும் தீங்கான பாதிப்புகளை கலந்தாலோசித்த பின்பு மற்றவர்கள் எல்லாருக்கும் முன்னால் செல்லக்கூடிய வெள்ளைக் குதிரை மற்றும் அதனுடைய குதிரை வீரனைக் குறித்து யோவான் என்ன சொன்னான் என்பதை கவனிப்பது ஊக்க மூட்டுவதாயிருக்கிறது. அப்போஸ்தலன் சொன்னதாவது “நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின் மேல் ஏறியிருந்தவன் வில்லைப்பிடித்திருந்தான், அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவனுக்கு ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.”—வெளிப்படுத்தின விசேஷம் 6:2.
இயேசு கிறிஸ்துவே அந்த வெள்ளைக்குதிரைமீது சவாரி செய்கிறார். (வெளிப்படுத்தின விசேஷம் 19:11) அவருடைய பரலோக ஆட்சி கிளர்ச்சியூட்டும் சம்பவங்களுடன் 1914-ல் துவங்கியது. பரலோகத்தில் நடந்த யுத்தம் பிசாசும் அவனை சேர்ந்த தூதர்களும் பரலோகத்திலிருந்து பூமிக்குத் தள்ளப்படுவதில் விளைவடைந்தது. அதன் பின்பு பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் பிறந்தது: “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலம் மாத்திரம் உண்டென்று அறிந்து மிகுந்த கோபம் கொண்டு, உங்களிடத்தில் இறங்கின படியால், உங்களுக்கு ஆபத்து வரும் என்று சொல்லக்கேட்டேன்” இது மற்ற குதிரை வீரர்கள் சவாரிசெய்வதன் ஆரம்பத்தை குறித்தது,—வெளிப்படுத்தின விசேஷம் 12:7-12,
ஆனால் இயேசு கிறிஸ்துவின் சவாரி எவ்வாறு உங்களை பாதிக்கிறது? தம்முடைய ஆட்சியின் சம்பந்தமாக, இயேசு கிறிஸ்து முன்னறிவித்ததாவது: “ராஜ்யத்தினுடைய இந்த சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” (மத்தேயு 24:14) இன்று 200-க்கும் மேற்பட்ட தேசங்களிலும் சமுத்திர தீவுகளிலும் யெகோவாவின் சாட்சிகள் இயேசு கிறிஸ்துவின் ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தைக் குறித்து பிரசங்கித்து வருகிறார்கள். அவர்கள் உங்களுடைய வீட்டிற்கு விஜயம் செய்தார்களா? அப்படியானால் இந்த குதிரை வீரனின் சவாரியால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
தம்முடைய ஆட்சியால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்பதைப்பற்றி கூடுதலாக முன்னறிவிக்கும்போது, இயேசு தீர்க்கதரிசன முறைத்ததாவது: “அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமை பொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, நமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து செம்மறியாடுகளைத் தமது வலது பக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார்.”—மத்தேயு 25:31-33.
இயேசு வெள்ளைக்குதிரை மீது சவாரி செய்யும்போது நிகழும் இந்த பிரிக்கும் வேலையின் விளைவாக எல்லா மனிதவர்க்கத்தினரும் ஏதாவது, ஒன்றாக அதாவது “செம்மறியாடாகவோ” அல்லது “வெள்ளாடாகவோ” அடையாளங்குறித்து காட்டப்படுகின்றனர். இதன் “வெள்ளாடுகள்” நித்திய அழிவிற்கு செல்லுவார்கள். (மத்தேயு 25:36, NW) இவ்வாறாக இந்த ராஜ்ய செய்திக்கு நீங்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறீர்களோ அதுவே உங்களுக்கு ஜீவனையோ அல்லது மரணத்தையோ குறிக்கக்கூடும்.
இந்த திருவெளிப்பாட்டின் குதிரைவீரர்கள் உங்களை எவ்வாறு பாதிக்கின்றனர் என்பதை நீங்கள் இதற்கு முன் ஒரு வேளை சிந்தித்திராவிட்டாலும் அவர்களுடைய சவாரி விரைவில் முடிவடையப் போகிறது என்ற அந்த நற்செய்திக்கு பிரதிபலிக்கும்படி நாங்கள் உங்களை உந்துவிக்கிறோம், அதற்கு பின்பு இந்த வெள்ளை குதிரை மீது சவாரி செய்பவரான இயேசுவினுடைய ஆட்சிய.ன் கீழ் அநேக ஆசீர்வாதங்களை இந்த பூமியில் நீங்கள் அனுபவித்து மகிழ்வீர்கள். அவற்றில் ஒரு சில காரியங்களை பைபிள் தீர்க்கதரிசன நடையில் வருணிக்கிறது: “அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான் [சிவப்பு நிறமுள்ள குதிரைவீரன் ஒழிந்த பின்பு] சந்திரனுள்ள வரைக்கும் மிகுந்த சமாதானமிருக்கும். [கருப்பு குதிரைவீரன் இல்லாததால்] அங்கே பூமியில் திரளான தானியமிருக்கும் மலைகளின் உச்சிகளில் பொங்கிவழியும்.”—சங்கீதம் 72:7,16, NW
இயேசுகிறிஸ்து பூமியிலிருக்கும் போது, அருவருப்பான வியாதிகள் மற்றும் மரணம் போன்ற காரியங்கள் மீதும்கூட கடவுளாள் கொடுக்கப்பட்ட தமது வல்லமையை நடப்பித்துக் காட்டினார். ராஜாவாக அவர் ஆட்சி புரியும்போது அவர் இப்படிப்பட்ட தம்முடைய சக்தியை இன்னும் பெரிய அளவில் நடப்பித்துக் காட்டுவார். இந்த பூமியிலிருந்து எல்லா உபாதைகளையும் பஞ்சத்தையும் மற்றும் யுத்தங்களையும் வெள்ளைக் குதிரைமீது சவாரி செய்பவர் திருவெளிபாட்டின் மற்ற குதிரை சவாரியை முடிவுக்கு கொண்டு வருவார்.—W86 1/15
[பக்கம் 3-ன் பெட்டி]
குதிரைவீரர் அடையாளங்காட்டப்படுகின்றனர்
காவற்கோபுரம் பத்திரிகையின் ஜனவரி இதழ் திருவெளிபாட்டின் குதிரை வீரருடைய சவாரி எவ்வாறு நிறைவேற்றமடைய துவங்கியது என்பதை காண்பித்தது
வெள்ளைக்குதிரை: பரலோகத்தில் புதிதாக முடிசூட்டப்பட்ட அரசராக இயேசுகிறிஸ்து இந்த வெள்ளை குதிரைமீது சவாரி செய்கிறார். 1914-ல் பதவியமர்த்தப்பட்டது முதற்கொண்டு நீதியுள்ள வெற்றி வீரனாக அவர் புறப்பட்ட செல்வது சித்தரித்துக் காட்டப்பட்டிருக்கிறது.
சிவப்பு நிறமுள்ள குதிரை: இந்த குதிரைவீரன் யுத்தத்தை சுட்டிக் காட்டுகிறான் பூமியிலிருந்து சமாதானம் எடுத்துப் போடப்படுகிறது, மற்றும் முதல் உலகபோர் ஏற்பட்டதை குறித்துக் காட்டியது.
கறுப்புகுதிரை: இந்த குதிரைவீரன் உணவு குறைபாடுகளையும், மற்றும் பஞ்சத்தையும் சுட்டிக்காட்டுகிறான் லட்சக்கணக்கான ஆட்கள் பஞ்சத்தால் வாடிக் கொண்டிருக்கையில், மற்றவர்கள் இன்னமும் விலையுர்ந்த பொருட்களை வாங்க முடிகிறது.
மங்கினநிறமுள்ளகுதிரை: அந்த மங்கினநிற குதிரை மீது மரணம் சவாரி செய்கிறது. அகால மரணம் குறித்துக் காட்டப்படுகிறது. அது கொள்ளைநோயினாலும் மற்றும் பல அம்சங்களாலும் ஏற்படுகிறது.