உலகளாவிய சகோதரத்துவம் நிச்சயம்!
மேற்கு ஆப்பிரிக்காவில் ஒரு கோடியில் நடந்த ஒரு மத சம்பந்தமான மாநாட்டுக்கு ஒரு மிஷனரி ஆஜரான போது அவர் அப்பகுதிக்கு வந்து வெகு காலம் ஆகவில்லை. அவர் ஒரு உள்ளூர் குடும்பத்தை அணுகிய போது, இரண்டு வயது சிறுவன் எந்தக் காரணமும் இன்றி அழத்தொடங்கினான்.
அந்த மிஷனரி அவனை ஆறுதல்படுத்த முயற்சி செய்தார், ஆனால் அந்தச் சிறுவனின் அழுகை அலறலாக மாறியது. “என்ன காரணம்?” என்று மிஷனரி சிறுவனின் தாயைக் கேட்டார். அவள் சங்கோஜத்தோடு இவ்வாறு பதிலளித்தாள்: “நீங்கள்தான் காரணம் என்று நினைக்கிறேன். உங்களுடைய நிறத்தைப் பார்த்த அவன் பயப்படுகிறான். அவன் இதற்கு முன் ஒரு வெள்ளை நிற மனிதனைப் பார்த்ததேயில்லை.”
சிறு பிராயத்திலிருந்து மக்களுக்கு இடையே இருக்கும் சரீரப்பிரகாரமான வித்தியாசங்களைப் பற்றி நாம் அறிய ஆரம்பிக்கலாம். பின்புதான் தப்பெண்ணங்கள் உருவாகின்றன. தங்கள் பெற்றோர்கள், வயதில் பெரியவர்களாயிருப்பவர்கள் ஆகியோரின் மனநிலைகள், நடத்தை இவற்றைக் கவனிக்கையில் பிள்ளைகளின் எண்ணங்கள் உருவாகுகின்றன. பள்ளியில் அவர்கள் தங்கள் ஆசிரியர்கள், நண்பர்கள், சக மாணவர்கள் ஆகியோரால் இன்னுமதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
ஐக்கிய மாகாணங்களின் ஒரு நீண்ட கால படிப்பின்படி, பிள்ளைகள் 12-வது வயதை எட்டுவதற்குள், அவர்களைச் சுற்றியிருக்கும் இனத் தொகுதிகளைப் பற்றியும் மதத் தொகுதிகளைப் பற்றியும் மாற்ற முடியாத நோக்குநிலைகளையும், மனநிலைகளையும் வளர்த்துக் கொள்கின்றனர். அவர்கள் பெரியவர்களாகும்போது இப்படிப்பட்ட எண்ணங்கள் ஆழமாகப் பதிந்து விடுகின்றன.
யெகோவாவின் சாட்சிகள் வித்தியாசப்பட்டவர்கள்
தப்பெண்ணங்கள் மிகுந்திருக்கும் ஓர் உலகில் யெகோவாவின் சாட்சிகள் அதிக வித்தியாசமானவர்களாக தனித்து நிற்கின்றனர். தங்கள் இன ஒற்றுமைக்காக அவர்கள் உலகமுழுவதும் அறியப்பட்டிருக்கின்றனர். இது அவர்களுடைய பெரிய வருடாந்தர மாநாடுகளில் அனேகரால் கவனிக்கப்பட்டு வருகிறது.
உதாரணமாக, ஸ்டட்ஸ்-ஐட்டம் (States-Item) என்ற செய்தித்தாள் தெற்கு ஐக்கிய மாகாணங்களில் நடந்த சாட்சிகளின் ஒரு பெரிய மாநாட்டைப் பற்றி பின்வருமாறு அறிவித்தது: “கற்றுக் கொள்வதற்கும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் வயதானவர்களும், இளைஞரும், கருப்பு மற்றும் வெள்ளை நிற யெகோவாவின் சாட்சிகள் அமர்ந்த போது, ஒரு சகோதரத்துவ உணர்வு லூயிசியானா அரங்கை நிரப்பியது. . . . இன வேறுபாடு . . . சாட்சிகளுக்கு ஒரு பிரச்னையாய் இல்லை.”
தெற்கு ஆப்பிரிக்காவில் நடந்த சாட்சிகளின் ஒரு மாநாட்டில் ஒரு கோஸ பெண் இவ்வாறு குறிப்பிட்டாள்: “இங்கு தெற்கு ஆப்பிரிக்காவில் எல்லா இனத்தைச் சேர்ந்த மக்களும் இவ்வளவு ஒற்றுமையாய் இருப்பதைக் காண்பது வியப்பாயிருக்கிறது. சர்ச்சுகளில் நான் பார்த்த காரியங்களிலிருந்து இது அதிக வித்தியாசமாக இருக்கிறது.”
வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களிலிருந்து வந்தவர்கள் தூர கிழக்கு, தெற்கு பசிபிக் ஆகிய இடங்களில் நடந்த சாட்சிகளின் பெரிய மாநாடுகளுக்கு ஆஜரான போது, ஒரு அறிக்கையின்படி, “அவர்களுடைய பாகத்தில் சிறிதளவு இன வேறுபாட்டு உண்ர்ச்சி கூட இல்லை. அவர்களை உபசரித்தவர்களிடத்திலும் அவ்வுணர்ச்சி இல்லை.”
ஆக, பூமி முழுவதிலுமுள்ள ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளை அவ்வளவு வித்தியாசமாக்குவது எது என்றால், அது அவர்களுடைய உண்மையான ஐக்கியமும், இன ஒத்திசைவும் ஆகும். அவர்கள் மெய்யான கிறிஸ்தவ அன்பால் ஒன்றாகக் கட்டப்பட்டிருக்கின்றனர். இது இவ்வாறு இருக்கும் என்று இயேசு முன்பாகவே சொல்லியிருந்தார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்து கொள்வார்கள்.—யோவான் 13:35.
ஆகையால் யெகோவாவின் சாட்சிகள் ஏற்கெனவே ஒரு மெய்யான, நிரந்தரமான சர்வதேச சகோதரத்துவத்தைக் கொண்டிருக்கின்றனர்! மத்தேயு 23:8-ல் இயேசு சொன்ன வார்த்தைகளை அவர்கள் இருதயத்தில் ஏற்றுக் கொள்கின்றனர்: “நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்.” இன வேறுபாடுகளும், விரோதங்களும் தேசங்களைக் கிழித்துக்கொண்டிருக்கும் இச்சமயத்திலும் இது இவ்வாறு இருக்கிறது.—1 கொரிந்தியர் 1:10; 1 யோவன் 3:10-12; 4:20, 21; 5:2, 3-ஐயும் பார்க்கவும்.
ஒற்றுமை எவ்வாறு ஏற்படுகிறது
யெகோவாவின் சாட்சிகள் ராஜ்ய மன்றங்களிலும் தங்களுடைய தனிப்பட்ட பைபிள் படிப்பிலும் பைபிளை அடிப்படையாகக் கொண்ட போதனையைப் பெற்றுக்கொள்வதுதான் இந்த ஒற்றுமைக்கு அடிப்படைக் காரணமாயிருக்கிறது. அவர்கள் தெசலோனிக்கேயாவிலிருந்த கிறிஸ்தவர்களைப் போல் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு சொன்னான்: “நீங்கள் தேவ வசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவ வசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே, நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தாத்திரஞ் செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவ வசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது.”—1 தெசலோனிக்கேயர் 2:13.
எனவே சாட்சிகள் பைபிள் சொல்லுகிறதை நம்புகின்றனர். கடவுள் சிந்திக்கும் விதத்தைப் பின்பற்ற ஊக்கமாக முயற்சிக்கின்றனர். கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பேதுரு ஏவுதலின் கீழ் சொன்னதை ஏற்றுக்கொள்கின்றனர்: “தேவன் பட்சபாதமுள்ளவர் அல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்.—அப்போஸ்தலர் 10:34, 35.
இதற்கு இசைவாக, இயேசு, தம்மைப் பின்பற்றுபவர்கள், “சகல ஜாதிகளையும்” சீஷராக்க வேண்டும் என்று கட்டளையிட்டார். (மத்தேயு 28:19) இதன் காரணமாக, யெகோவாவின் சாட்சிகள் எல்லா இனத் தொகுதிகளிலும் இருக்கும் நீதியை நேசிப்பவர்களைச் சுறுசுறுப்பாகத் தேடிக்கொண்டிருக்கின்றனர். வித்தியாசமான பின்னணிகளிலிருந்தும் இனங்களிலிருந்தும் வருபவர்கள் வணங்குவதற்கும், வேலை செய்வதற்கும், நன்றாகத் தோழமை கொள்வதற்கும் ஒன்றுசேரும்போது, மாற்ற முடியாத எண்ணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள் ஒருவரையொருவர் மதிக்கவும், ஒருவரையொருவர் நேசிக்கவும் கற்றுக்கொள்கின்றனர்.
நீண்ட காலமாக இன சம்பந்தமான தப்பெண்ணங்களை உடைய ஒரு நபர் உடனடியாகத் தன் எண்ணங்களை மாற்றிக்கொள்ளமாட்டார். ஆனால் அவர் ஒரு சாட்சியாக ஆகும்போது, அவர் ஒரு உண்மையான கிறிஸ்தவனின் “புதிய ஆள்தன்மையைத் தரித்துக்கொள்ள” ஆரம்பிக்கிறார். அவரது முந்தைய எண்ணங்களை மேற்கொள்ள, அவர் கடினமாக உழைக்கிறார். (எபேசியர் 4:22-24) ‘நான் அவ்விதமாகத்தான் வளர்க்கப்பட்டேன்,’ என்று சொல்வதன் மூலம், அவர் தன் தப்பெண்ணங்களைச் சரியென சொல்ல முயற்சிப்பதில்லை. இல்லை, அவர் தன் மனதை மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறார். “சகோதரரின் முழு கூட்டுறவையும் நேசிக்கிறார்.”—1 பேதுரு 2:17, NW.
பைபிள் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன
இன்று யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் நடைபெற்றுக்கொண்டிருப்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாயிருக்கிறது. உண்மையிலேயே, அது பைபிளின் தீர்க்கதரிசனமாக முன்னுரைக்கப்பட்டது. இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் “கடைசி நாட்களில்” என்ன நடக்கும் என்று ஏசாயா 2:2-4 முன்னறிவித்ததைக் கவனியுங்கள். (2 தீமோத்தேயு 3:1-5, 13) யெகோவாவின் மெய் வணக்கம் இந்தச் சந்ததியில் நிலைநாட்டப்படும் என்று ஏசாயாவின் அந்தத் தீர்க்கதரிசனம் குறிப்பிட்டது. “எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். திரளான ஜனங்கள் புறப்பட்டு, நாம் கர்த்தரின் பர்வதத்துக்குப் போவோம் வாருங்கள். அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம்.”
ஏசாயாவின் தீர்க்கதரிசனம் பின்வரும் அசாதாரணமான விளைவையும் குறிப்பிட்டது, இது இந்த முழு நூற்றாண்டும் யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் சர்வதேச அளவில் காணப்பட்டது: “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.”
மேலும், நம்முடைய காலத்தைப் பற்றிப் பேசுகையில் பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல், ஒரு பெரிய திரள் கூட்டமான ஜனங்கள் “சகல ஜாதிகளிலும், கோத்திரங்களிலும், ஜனங்களிலும், பாஷைக்காரரிலுமிருந்து” ஐக்கியமாகக் கடவுளைச் சேவிக்க மெய்யான சகோதரத்துவத்தில் ஒன்றுகூடி வருவர் என்று முன்னறிவித்தது.—வெளிப்படுத்துதல் 7:9, 15.
இது நப்பாசை அல்ல. எல்லாத் தேசங்களிலிருந்தும், எல்லா இனத் தொகுதிகளிலிருந்தும் வரும் திரள் கூட்டம் ஏற்கெனவே அமைக்கப்பட்டுவருகிறது. ஒரு மெய்யான, நிரந்தரமான பூகோள சகோதரத்துவம் இப்போதே கட்டுப்பட்டு வருகிறது. ஐக்கியப்பட்ட சந்தோஷமான ஜனங்களாலான ஒரு புதிய பூகோள சமுதாயத்திற்கு இது அஸ்திபாரமாயிருக்கிறது. விரைவில் கடவுளால் அழிக்கப்படப்போகும் தற்போதைய சீரழிந்துபோன சமுதாயத்தின் இடத்தை அது வகிக்கும். இயேசு சொன்ன விதமாகவே, இந்த ஐக்கியப்பட்ட சமுதாயம் “பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும்,” மற்றும் கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின் கீழ் அவர்கள் அதில் என்றென்றுமாக வாழ்வர்.—மத்தேயு 5:5; 6:9, 10; சங்கீதம் 37:10, 11, 28, 29, 37, 38.
இதை நீங்களே ஏன் வந்து பார்க்கக்கூடாது? யெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ய மன்றத்துக்குச் செல்லவும், அவர்களுடைய இன ஒற்றுமையை அனுபவிக்கவும் நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள். அல்லது, அடுத்தமுறை சாட்சிகள் உங்களைச் சந்தித்தால், அவர்களை உள்ளே அழைத்து, அவர்களுடைய இன ஒற்றுமைக்கு அடிப்படை என்ன என்பதை பைபிளிலிருந்து எடுத்துக்காண்பிக்கும்படி கேளுங்கள். மெய்யான சகோதரத்துவம், பூமி முழுவதும் நிலவப்போகும் புதிய உலகத்தைப் பற்றி அவர்களுடைய பைபிள் நம்பிக்கையை உங்களுக்குக் காண்பிக்கும்படிச் சொல்லுங்கள்.
எல்லா மனிதவர்க்கத்தையும் சேர்ந்த ஒரு சகோதரத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற தம்முடைய நோக்கம் நிறைவேற்றப்படும் என்பதற்குச் சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவா தம் உத்தரவாதத்தை அளிக்கிறார். அவர் பின்வருமாறு சொல்கிறார்: “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும். அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.—ஏசாயா 55:11.
பைபிள் தீர்க்கதரிசனங்களிலிருந்தும், அந்தத் தீர்க்கதரிசனங்களில் நிறைவேற்றங்களிலிருந்தும் வரும் அத்தாட்சியை நீங்கள் ஆராய்ந்து பார்க்குமாறு நாங்கள் உங்களை அழைக்கிறோம். நீங்கள் அதைச் செய்தால், இன ஒற்றுமை கூடிய காரியம் மட்டும் அல்ல, ஆனால் தவிர்க்க முடியாத ஒன்று என்பதை நீங்கள் காண்பீர்கள்! (g90 12/8)
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
இன்று யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் நடைபெற்றுக்கொண்டிருப்பது பைபிளில் முன்னறிவிக்கப்பட்டது
[பக்கம் 10-ன் படம்]
யெகோவாவின் சாட்சிகள் தங்களிடையே இன ஒற்றுமையைக் கொண்டிருப்பதில் தனித்து விளங்குகின்றனர்