இழிவான பெயர்பெற்ற அந்த “வேசி” அவளுடைய அழிவு
“அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள். தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக் கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே.”—வெளிப்படுத்துதல் 19:1, 2.
நாம் இதுவரை சிந்தித்துவந்த விஷயங்கள் அனைத்துமே போதிய அளவு வினைமையானவையாக இருக்கின்றன. என்றபோதிலும் மகா வேசி “பூமியின் ராஜாக்க”ளோடும் வேசித்தனம் பண்ணுவதாக வெளிப்படுத்துதல் 17:1 சொல்வதை நாம் கவனிக்க வேண்டும். அவள் வீழ்ச்சியை அனுபவித்தப் போதிலும், இன்னும் உண்மையில் அவள் உலகத்தோடு சிநேகமாகவே இருந்து உலக ஆட்சியாளர்களிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தன்னுடைய காரியத்தை சாதிக்கவே முயன்று வருகிறாள். (யாக்கோபு 4:4) மகா பாபிலோனுக்கும் அரசியல் ஆட்சியாளர்களுக்குமிடையே இருக்கும் முறைகேடான உறவாகிய இந்த ஆவிக்குரிய வேசித்தனம், பழிபாவமறியாத கோடானகோடி மக்களின் அகால மரணத்தில் விளைவடைந்திருக்கிறது! முதல் உலகப் போரின் சமயத்தில் சண்டையில் இரண்டுப் பக்கங்களிலும் மகா வேசி தன்னை உட்படுத்திக் கொண்டிருந்ததே மிக மோசமான காரியமாகும். ஆனால் இரண்டாம் உலகப் போரின் சம்பந்தமாக அவளுடைய பாவங்கள் நிச்சயமாகவே, “வானபரியந்தம் எட்டினது”! (வெளிப்படுத்துதல் 18:5) நாம் ஏன் அவ்விதமாகச் சொல்லுகிறோம்?
2 சரி, ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமானால், கொடுங்கோலன் அடால்ப் ஹிட்லர் ஜெர்மனியின் முதல்வராகவும் சர்வாதிகாரியாகவும் ஆனதெப்படி? போப்பாண்டவருடைய மாவீரன் ஒருவனுடைய அரசியல் சூழ்ச்சியின் மூலமாகவே. முன்னாள் ஜெர்மன் முதல்வரான கர்ட் வான் ஷீல்கர் இவனை, “யூதாஸ் காரியோத்தைப் புனிதனாகக் கருதும் ஒருவனுக்கு அடுத்த நிலையிலுள்ள துரோகி என்று சொல்லவேண்டும்” என்பதாக விவரித்தார். இதுவே கம்யூனிஸத்தை எதிர்த்து ஹிட்லரின் கீழ் ஜெர்மனியை ஒன்று சேர்க்க கத்தோலிக்கச் செயற்குழுவையும் தொழில் துறைத் தலைவர்களையும் ஒன்றுகூட்டிய ஃப்ரான்ஸ் வான் பேப்பனாகும். இந்தப் பேரப் பேச்சுக்காக வான் பேப்பன் உதவி முதல்வராக்கப்பட்டான். நாசி அரசுக்கும் வத்திக்கனுக்குமிடையே ஓர் உடன்படிக்கை செய்துகொள்ளும் நோக்குடன் கலந்து பேசி முடிவுசெய்ய வான் பேப்பன் தலைமையிலான ஒரு குழுவை ஹிட்லர் ரோமுக்கு அனுப்பி வைத்தான். போப் பயஸ் XI “ஜெர்மன் அரசு இப்போது முழுமையாக கம்யூனிஸத்தை எதிர்க்கின்ற ஒரு மனிதனைத் தலைவனாகக் கொண்டிருப்பதைக்” குறித்து தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக ஜெர்மன் தூதுவர்களிடம் சொன்னார். 1933, ஜுலை 20-ம் தேதி வத்திக்கனில் அக்கறையோடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு விழாவில் கார்டினல் பாஸல்லி (போப் பயஸ் XII ஆக பதவியேற்க இருந்தவர்) ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.a
3 சரித்திராசிரியர் ஒருவர் எழுதியதாவது: [வத்திக்கனோடு] செய்துகொண்ட உடன்படிக்கை ஹிட்லருக்கு மாபெரும் வெற்றியாக இருந்தது. வெளி உலகிலிருந்து அதுவும் மிகவும் உயர்ந்த இடத்திலிருந்து அவனுக்குக் கிடைத்த முதல் தார்மீக ஆதரவாக இது இருந்தது. வத்திக்கனில் நடைப்பெற்ற விழாவின் போது பாஸல்லி வான் பேப்பனுக்கு பயஸ் அந்தஸ்தின் போப்பாண்டவருக்குரிய மகத்தான சிலுவைச் சின்னத்தை அணிவித்தார்.b வின்ஸ்டன் சர்ச்சில் 1948-ல் பிரசுரித்த திரண்டு வரும் சூறாவளி (The Gathering Storm) என்ற தன்னுடைய புத்தகத்தில், ஆஸ்திரியாவின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட போது சர்ச்சின் ஆதரவைப்பெற “நல்ல கத்தோலிக்கன் என்ற தன்னுடைய நற்பெயரை” எவ்விதமாக வான் பேப்பன் மேலுமாக பயன்படுத்திக் கொண்டான் என்பதை விளக்குகிறார். 1938-ல், ஹிட்லருடைய பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், ஆஸ்திரியாவிலுள்ள அனைத்துச் சர்ச்சுகளும் சுவஸ்திக்கா கொடியைப் பறக்கவிட்டு, தங்கள் மணிகளை அடித்து நாசி சர்வாதிகாரிக்காக ஜெபிக்க வேண்டும் என்பதாக கார்டினல் இன்னிட்ஸர் உத்தரவு பிறப்பித்தார்.
4 ஆகவே பயங்கரமான இரத்தப்பழி வத்திக்கனின் மீது தங்கியிருக்கிறது! மகா பாபிலோனின் முக்கிய பாகமாக ஹிட்லரை ஆட்சியில் அமர்த்துவதிலும் அவனுக்குத் “தார்மீக” ஆதரவைக் கொடுப்பதிலும் அது குறிப்பிடத்தக்கவகையில் உதவி புரிந்திருக்கிறது. ஹிட்லரின் அட்டூழியங்களுக்கு மெளனமாக ஒப்புதல் தெரிவிப்பதில் வத்திக்கன் ஒரு படி மேலே சென்றது. நாசியின் நீண்டகால படுகள ஆட்சியின்போது, நூறாயிரக்கணக்கான கத்தோலிக்கப் போர்வீரர்கள் நாசி ஆட்சியின் மகிமைக்காகப் போரிட்டு மாண்டுக்கொண்டுமிருக்கையிலும், இலட்சக்கணக்கான மற்றவர்கள் ஹிட்லரின் வாயு அறைகளில் தீர்த்துக்கட்டப்பட்டுமிருக்கையிலும் ரோமாபுரியின் மேற்றிராணியார் மெளனமாக இருந்திருக்கிறார்.
5 ஜெர்மன் நாட்டு கத்தோலிக்கப் பிஷப்புகள் வெளியரங்கமாகவேக்கூட ஹிட்லருக்கு ஆதரவு கொடுத்தனர். அந்தச் சமயத்தில் ஜெர்மனியின் போர் கால பங்காளியாக இருந்த ஜப்பான் பெர்ல் துறைமுகத்தின் மீது கோழைத்தனமாக தாக்குதல் செய்த அதே நாளில், தி நியு யார்க் டைம்ஸ் (The New York Times) இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தது: “ஃபுல்டாவில் கூடிய ஜெர்மன் கத்தோலிக்க பிஷப்புகளின் மாநாடு, எல்லாத் தெய்வீக பூசையின் ஆரம்பத்திலும் முடிவிலும் வாசிக்கப்பட இருக்கும் விசேஷித்தப் ‘போர்க் கால ஜெபம்’ ஒன்றை சிபாரிசு செய்திருக்கிறது. ஜெர்மன் போர்க்கலங்களை, வெற்றிக் கொடுத்து ஆசீர்வதித்து எல்லா வீரர்களின் உடல்நலத்தையும் உயிரையும் பாதுகாக்கும் பொருட்டு இந்த ஜெபம் கடவுளிடம் வேண்டிக் கொள்வதாக இருக்கிறது. குறைந்த பட்சம் மாதமொருமுறையாவது ‘நிலத்திலும், நீரிலும், ஆகாயத்திலுமுள்ள’ ஜெர்மன் நாட்டுப் போர்வீரர்களை ஒரு விசேஷித்த ஞாயிறு பிரசங்கத்தின் போது நினைவுகூரும்படியாக பிஷப்புகள் கத்தோலிக்க பாதிரிமார்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள்.”
6 வத்திக்கனுக்கும் நாசிக்களுக்குமிடையே காதல் விவகாரம் எதுவுமில்லாதிருந்தால் இலட்சக்கணக்கான போர்வீரர்களும் போரில் ஈடுபடாத மற்றவர்களும், போரில் கொல்லப்பட்ட வேதனையை, ஆரியர்களல்லாதவர்களாக இருப்பதற்காக அறுபது இலட்ச யூதர்கள் கொல்லப்பட்ட வேதனையை—யெகோவாவின் பார்வையில் அதிக விலையேறப் பெற்றவர்களாக இருக்கும்—அபிஷேகம் பண்ணப்பட்டவர்களும் “வேறே ஆடுகளும்” அடங்கிய ஆயிரக்கணக்கான சாட்சிகள் அதிகமான அட்டூழியங்களை அனுபவித்ததையும் நாசி கான்ஸன்ட்ரேஷன் முகாம்களில் அநேகர் உயிரிழந்ததையும் இந்த உலகில் தவிர்த்திருக்கலாம்.—யோவான் 10:10, 16.
அண்மையில் வேசியின் தோற்றம்
7 வெளிப்படுத்துதல் தீர்க்கதரிசனத்தில் அடுத்துவரும் காட்சி எத்தனை பொருத்தமாக உள்ளது! 17-ம் அதிகாரத்தைத் திருப்பி வசனங்கள் 3-லிருந்து 5 வரை வாசிக்கையில், தேவதூதனைப்பற்றி யோவான் பின்வருமாறு சொல்வதை நாம் காண்கிறோம்: “ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டு போனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன். அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள். மேலும், ‘இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும், பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய்’ என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.”
8 அங்கே யோவான், மகா பாபிலோனை அருகில் சென்று அவள் தங்கியிருக்கும் இடத்தில் அவளைப் பார்க்கிறான். உண்மையாகவே மூர்க்க மிருகங்கள் வாழும் வனாந்தரத்துக்கு உரியவளாக இருக்கிறாள். இந்த மகா வேசி கையிலே பிடித்திருக்கும் பாத்திரம் வெளிப்புறத்திலிருந்துப் பார்க்கையில், ஏமாற்றக்கூடிய விலைமதிப்புள்ள தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் அவள் அதில் எதை எடுத்துச் செல்கிறாளோ அதனால் அவள் தெளிவாக அடையாளங் கண்டுக்கொள்ளப்படுகிறாள். கடவுளுடைய நோக்குநிலையில் அருவருப்பானதாக இருக்கும் கொஞ்சத்தை அவள் குடிக்கிறாள். உலகத்தோடு அவளுடைய நட்பு, அவளுடைய பொய்க் கோட்பாடுகள், ஒழுக்க விஷயங்களில் அவளுடைய கட்டுப்பாடற்ற நாட்டம், அரசியல் வல்லரசுகளோடு அவளுடைய காதல்—இவை எதையுமே “சர்வலோக நியாயாதிபதி”யான யெகோவா சகித்துக் கொள்வது கிடையாது. (ஆதியாகமம் 18:22–26; வெளிப்படுத்துதல் 18:21, 24) ஆம், எத்தனை அழகாக அவள் தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்கிறாள்! கவர்ச்சி மிகுந்த சிற்பக் கலையோடுக்கூடிய கம்பீரமான கத்தீட்ரல்களுக்கும், புதுவண்ணம் பூசப்பட்ட கண்ணாடிச் சன்னல்களுக்கும், அணிகளால் ஒப்பனை செய்யப்பட்ட கோபுரங்களுக்கும், தொன்மை மாட்சிமையுடைய கோயில்களுக்கும் தொழுகையிடங்களுக்கும் அவர் பேர்போனவளாக இருக்கிறாள். மகா வேசியின் கவர்ச்சியான பாணிகளைப் பின்பற்றுகிறவர்களாய், அவளுடைய மதகுருக்களும் மடத்துத் துறவிகளும் இரத்தாம்பர, கருஞ்சிவப்பு, குங்குமப்பூ வண்ணத்தில் விலையுயர்ந்த அங்கிகளை பகட்டாக உடுத்திக் கொள்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 17:1.
9 ஆனால் மிகவும் கண்டிக்கத்தக்கது அவளுடைய கொலைவெறியாகும். அதன் அடிப்படையில் யெகோவாவுக்கு அவளோடு தீர்த்துக் கொள்ள வேண்டிய நீண்டகால கணக்கு உண்டு! நவீன காலங்களில் கொலை வெறிக் கொண்ட சர்வாதிகாரிகளை ஆதரித்திருக்கிறாள். இரத்தம் சிந்திய அவளுடைய அருவருப்பான சரித்திரம் நூற்றாண்டுகளினூடே சமயப் போர்கள், முரண் சமய கோட்பாடுகளை ஒடுக்குவதற்குச் செய்யப்பட்ட விசாரணைகள், சிலுவைப் போர்கள், ஆம் அப்போஸ்தலர்கள் சிலரின் இரத்த சாட்சி மரணம், கடவுளுடைய சொந்தக் குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணத்துக்கும் அதற்கு அப்பாலும் செல்கிறது. (அப்போஸ்தலர் 3:15; எபிரெயர் 11:36, 37) இதோடுகூட அண்மை ஆண்டுகளில் கைதிகளை சுடும் படைப்பிரிவுகளினாலும், தூக்கிலிடுவதாலும், கோடரியினாலும், தலைவெட்டுப் பொறியினாலும், பட்டயத்தினாலும், சிறைச்சாலைகளிலும் கான்ஸன்ட்ரேஷன் முகாம்களிலும் மிருகத்தனமாக யெகோவாவின் சாட்சிகள் கொல்லப்பட்டிருப்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். யோவான் பின்வருமாறு சொல்வதன் மூலம், தன் வருணனையை முடிப்பது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை: “அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறி கொண்டிருக்கிறதைக் கண்டேன்”!—வெளிப்படுத்துதல் 17:6.
‘ஸ்திரீயினுடைய இரகசியமும் மிருகத்தினுடைய இரகசியமும்’
10 யோவான் தான் கண்டதைக் குறித்து “மிகவும் ஆச்சரியப்”பட்டான். இன்று நாமும்கூட ஆச்சரியப்படுகிறோம்! 1930-களிலும் 1940-களிலும் மகா வேசி யெகோவாவின் உண்மையுள்ள சாட்சிகளை துன்புறுத்தவும் அவர்களைத் தடை செய்யவும் கத்தோலிக்க செயற்குழுவையும் அரசியல் சூழ்ச்சியையும் பயன்படுத்தினர். இன்றுவரையாக, போதிய அளவு செல்வாக்கைச் செலுத்தக்கூடிய நிலையிலிருக்கும் இடங்களில், மகா பாபிலோன் தொடர்ந்து கடவுளுடைய ராஜ்யத்தின் மகத்தான நம்பிக்கையை அறிவிக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலையை தடை செய்தும் கட்டுப்படுத்தியும் தவறாக பிரதிநிதித்துவம் செய்தும் வருகிறது. இலட்சக்கணக்கானோரை மகா வேசியின் மத அமைப்புகளில் அடைத்து வைப்பதன் மூலம் அவளுடைய குருமார் ‘குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருந்து’ இவர்களை அழிவென்னும் குழிக்கு வழிநடத்திச் செல்கிறார்கள். வெறுக்கப்படத்தக்க இந்த வேசி அப்போஸ்தலனாகிய பவுலோடு சேர்ந்து ஒருபோதும், ஒருபோதுமே பின்வருமாறு சொல்ல முடியாது: “எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை . . . சாட்சிகளாக வைக்கிறேன்.”—மத்தேயு 15:7–9, 14; 23:13; அப்போஸ்தலர் 20:26.
11 யோவான் ஆச்சரியப்படுவதைக் கவனித்த தேவதூதன் அவனிடமாக: “ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்த ஸ்திரீயினுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாய் இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்,” என்றான். (வெளிப்படுத்துதல் 17:7) இந்த மிருகம் என்ன? 600 ஆண்டுகளுக்கும் முன்பாக, தானியேல் தீர்க்கதரிசி ஞானதிருஷ்டியில் மிருகங்களைப் பார்த்தான். அவை இங்கே பூமியின் மீதுள்ள “ராஜாக்களை” அல்லது அரசியல் ஆட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்வதாக அவனுக்கு விளக்கப்பட்டிருந்தது. (தானியேல் 7:2–8, 17; 8:2–8, 19–22) யோவான் இங்கே இப்படிப்பட்ட ஆட்சிகளின் ஓர் இணைப்பை, “சிவப்பு நிறமுள்ள மிருகத்தைக்” காண்கிறான். இதுவே 1920-ல் உலகக் காட்சியில் தோன்றியதும் 1939-ல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானபோது செயலற்ற நிலையான அபிஸிற்குள் போனதுமான மனிதனால் உண்டுபண்ணப்பட்ட சர்வ தேச சங்கமாகும். ஆனால் “ஸ்திரீயினுடைய இரகசியமும்” “மிருகத்தினுடைய இரகசியமும்” என்ன?
12 தெய்வீக அருளினால் யெகோவாவின் சாட்சிகள் அந்த இரகசியத்தின் பேரில் 1942-ல் விளக்கத்தைப் பெற்றுக்கொண்டார்கள். இரண்டாம் உலகப் போர் உச்சக்கட்டத்திலிருந்தது, அநேகர் இது அர்மகெதோனாக மாறிவிடும் என்பதாக நினைத்தார்கள். ஆனால் யெகோவா வேறு எண்ணத்தைக் கொண்டிருந்தார்! அவருடைய சாட்சிகளுக்குச் செய்வதற்கு அதிகமான வேலை இன்னும் இருந்தது. 1942-ல் செப்டம்பர் 18–20 வரை நடைபெற்ற அவர்களுடைய புதிய உலக தேவராஜ்ய மாநாட்டில் ஒஹியோவிலுள்ள கிளிவ்லாண்டு என்ற முக்கிய பட்டணம், ஐக்கிய மாகாணங்களிலுள்ள 51 மற்ற இடங்களோடு இணைக்கப்பட்டிருக்க, உவாட்ச் டவர் சொஸையிட்டியின் தலைவரான நாதன் H. நார், “சமாதானம்—அது நீடித்திருக்குமா?” என்ற பொதுப் பேச்சைக் கொடுத்தார். அதில் “சிவப்பு நிறமுள்ள மிருகத்தைப்”பற்றி “முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, நாசமடையப் போகிறது” என்பதாக வெளிப்படுத்துதல் 17:8-ல் சொல்லப்பட்டிருப்பதை அவர் விமர்சனம் செய்தார். சர்வ தேச சங்கம் எவ்விதமாக 1920 முதல் 1939 வரை “இருந்தது” என்பதை அவர் காண்பித்தார். சர்வ தேச சங்கம் மறைந்துபோனதன் காரணமாக “இப்பொழுது இல்லை” என்ற கட்டம் எட்டப்பட்டிருக்கிறது. ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு இந்தத் தேசங்களின் கூட்டு அமைப்பு பாதாளத்திலிருந்து (அபிஸிலிருந்து) ஏறி வரும். பைபிள் அடிப்படையில் கொடுக்கப்பட்ட அந்த முன்னறிவிப்பு நிறைவேறியதா? நிச்சயமாக நிறைவேறியது! 1945-ல் சர்வ தேச “மூர்க்க மிருகம்” செயலற்ற நிலைமையான அபிஸிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையாக ஏறிவந்தது.
13 மகா பாபிலோன் அவளுடைய வீழ்ச்சியின் காரணமாக பலவீனமடைந்தபோதிலும், ஐ.நா. “மிருகத்தோடு” வேசித்தனமான முறைகளில் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கிறாள். உதாரணமாக, 1965, ஜுன் மாதம் கிறிஸ்தவம் என்றழைக்கப்பட்டதிலிருந்தும் கிறிஸ்தவமல்லாததிலிருந்தும் உலகின் சரிபாதி மக்கள் தொகையை பிரதிநிதித்துவம் செய்வதாகச் சொல்லப்படும் உலகிலுள்ள ஏழு முக்கிய மதப் பிரிவுகளிலிருந்து வந்த பிரமுகர்கள் ஐ.நா.வின் இருபதாம் பிறந்த நாளைக் கொண்டாட சான் ஃபிரான்ஸிஸ்கோவில் கூடினார்கள்.c அதே ஆண்டில் போப் பால் VI ஐ.நா.வை “சமாதானத்துக்கும் ஒத்திசைவுக்கும் கடைசி நம்பிக்கை” என்பதாக விவரித்தார். பின்னால் போப் ஜான் பால் II, “ஐக்கிய நாடுகள் என்றுமாக சமாதானத்தின் மற்றும் நீதியின் மிக உன்னதமான நீதிமன்றமாக நிலைத்திருக்கும்” என்பதாக நம்பிக்கை தெரிவித்தார். 1986-ல் ஐ.நா.வின் சர்வதேச சமாதான ஆண்டை ஆதரிப்பதில் பொய் மத உலகப் பேரரசு முதன்மையாக இருந்தது. ஆனால் அவர்கள் ஏறெடுத்த ஜெபங்களுக்கு விடையாக உண்மையான சமாதானமும் பாதுகாப்பும் கிடைத்ததா? நிச்சயமாக இல்லை! ஐ.நா. உறுப்பினர்களில் அதிகமதிகமான தேசங்கள், மகா வேசியின் பேரில் தங்களுக்கு உண்மையான அன்பு இல்லை என்பதைக் காண்பித்து வருகிறார்கள்.
வேசியை ஒழித்துக் கட்டுவது
14 குறித்தக் காலத்தில் “சிவப்பு நிறமுள்ள மிருகம்” தானேயும் அழிக்கப்பட வேண்டும். ஆனால் இது நடைபெறுவதற்கு முன்பாக, கடவுளுடைய ஜனங்களின் மீது அது இறுதியான மூர்க்கமான தாக்குதலைச் செய்வதற்கு முன்பாகவும்கூட, ஐ.நா. மிருகத்துக்கு நிறைவேற்றவேண்டிய ஒரு விசேஷித்த சேவை இருக்கிறது. யெகோவா தம்முடைய யோசனையை ‘மிருகத்தின் இருதயத்திற்குள்ளும் அதன் இராணுவ கொம்புகளுக்கும் வைக்கிறார்.’ என்ன விளைவோடு? கடவுளுடைய தூதன் பதிலளிக்கிறான்: “நீ மிருகத்தின் மேல் கண்ட பத்துக் கொம்புகளானவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளை பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப் போடுவார்கள்.” “அவள் தன்னை மகிமைப்படுத்தி செல்வச் செருக்காய் வாழ்ந்த”தெல்லாம் இப்பொழுது தலைக்கீழாகிவிட்டது. அவளுடைய கவர்ச்சியான மத சம்பந்தமான பெரிய கட்டிடங்களும் பேரளவான உடைமைகளும் அவளை பாதுகாக்கமாட்டா. தேவதூதன் அறிவிக்கும் விதமாகவே: “ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளில் வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய யெகோவா வல்லமையுள்ளவர்.”—வெளிப்படுத்துதல் 17:16, 17; 18:7, 8.
15 அவளுடைய அரசியல் கள்ளக் காதலர்கள் அவளுடைய அழிவைக் குறித்து பின்வருமாறு சொல்லிப் புலம்புவார்கள்: “ஐயையோ! பாபிலோன், மகா நகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே!” அவளை வைத்து ஏமாற்றி இலாபம் சம்பாதித்த பெரிய வர்த்தக செல்வந்தர்கள், “ஐயையோ! . . . ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்து போயிற்றே” என்று சொல்லி “அழுது புலம்புவார்கள்.”—வெளிப்படுத்துதல் 18:9–17.
16 என்றபோதிலும், கடவுளுடைய சொந்த ஜனங்களின் பிரதிபலிப்பு என்னவாக இருக்கும்? இவை அனைத்துமே தேவதூதனின் வார்த்தைகளில் அடங்குகின்றன: “பரலோகமே, பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக் குறித்துக் களிக்கூருங்கள். உங்கள் நிமித்தம் தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே!” இனி ஒருபோதும் யெகோவாவின் பரிசுத்த நாமத்தை நிந்திக்காதபடிக்கு மகா பாபிலோன் வேகமாய்த் தள்ளுண்டுபோம். மகா வேசியின் அழிவு கொண்டாட்டத்துக்கும் யெகோவாவைத் துதித்துப் பாடும் வெற்றிப் பாடல்களுக்கும் அழைப்பாக இருக்கும். தொடர்ந்து அல்லேலூயாவை எல்லாரும் சேர்ந்து ஒரு குரலில் பாடுவதில் முதல் கட்டமாக, மகிழ்ச்சியான பல்லவி இப்படியாக முழங்கும்: “அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள். தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக் கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே.”—வெளிப்படுத்துதல் 18:20–19:3.
17 அர்மகெதோனில் “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா”வாகிய கிறிஸ்து இயேசு, “சர்வ வல்லமையுள்ள தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கையில்” கடவுளின் நியாயத்தீர்ப்புச் செயல்கள் வேகமாக முடிவடையும். அங்கே அவர் பொல்லாத அரசர்களையும் பூமியிலுள்ள சாத்தானுடைய அமைப்பில் மீதியாயிருக்கும் மற்ற எல்லாரையும் அழித்திடுவார். பிணம் தின்கிற பறவைகள் அவர்களுடைய பிணங்களைப் புசித்து திருப்தியடையும். (வெளிப்படுத்துதல் 16:14, 16; 19:11–21) நம்முடைய அழகிய பூமியை பரிசுத்தமற்ற, அழுக்கான மற்றும் கறைப்படுத்துகின்ற அனைத்திலிருந்துமே விடுவிப்பதற்குரிய கடவுளுடைய குறிக்கப்பட்ட காலம் அருகாமையில் இருப்பதற்காக நாம் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்க வேண்டும்!
18 இதுவே வெளிப்படுத்துதல் புத்தகத்தின் உச்சக்கட்டமாக இருக்கிறதா? இல்லை, இன்னும் இல்லை! ஏனென்றால் பரலோகத்துக்கு 1,44,000 பேர் உயிர்த்தெழுப்பப்படுவது நடந்துமுடிந்த பின்பு ஆட்டுக்குட்டியானவருடைய கல்யாணம் நடைபெற வேண்டும். மணவாளனுக்காக அலங்கரித்துக் கொண்டிருக்கும் அவருடைய “மணவாட்டி” “புதிய வானத்தில்” அமர்த்தி வைக்கப்பட்டிருக்க, அவள் ‘சகலத்தையும் புதிதாக்கும்’ யெகோவாவின் நோக்கத்தை நிறைவேற்றிட மணவாளனின் வாழ்க்கைத் துணையாக அங்கிருந்து இறங்கி வருகிறாள். மணவாட்டியின் ஆவிக்குரிய அழகு பரிசுத்த நகரமாகிய புதிய எருசலேமினுடையதைப் போலிருக்கிறது. சர்வ வல்லமையுள்ளவராகிய யெகோவா தேவன் தம்முடைய மகிமையினால் அதை பிரகாசிப்பிக்கச் செய்கிறார். ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்காக இருக்கிறார். (வெளிப்படுத்துதல் 21:1–5, 9–11, 23) ஆகவே யெகோவாவின் நாமம் பரிசுத்தப்படுத்தப்பட்டு புதிய எருசலேமாகிய தம்முடைய மணவாட்டியோடு ஆட்டுக்குட்டியானவரான கிறிஸ்து இயேசு, பூமிக்குரிய பரதீஸில் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தை நித்திய ஜீவனைக் கொண்டு ஆசீர்வதிக்க வெளிப்படுகையில்தானே வெளிப்படுத்துதல் அதன் மகத்தான உச்சக்கட்டத்தை அடைகிறது.
19 பொய் மதத்தின் வஞ்சனையை இப்பொழுது நீங்கள் புரிந்துகொண்டு, மகா பாபிலோனிலிருந்து வெளியேறிவிட்டீர்களா? முழுக்காட்டப்படுவதற்கு வழிநடத்தும் இருதயப்பூர்வமான ஒப்புக்கொடுத்தலைச் செய்து கிறிஸ்து இயேசுவின் மூலமாக யெகோவா தேவனிடம் வருவதற்கு அடுத்தப் படியை நீங்கள் எடுத்துவிட்டீர்களா? இதுவும்கூட இரட்சிப்புக்கு இன்றியமையாததாகும்! யெகோவாவின் முடிவான தீர்ப்பு நிறைவேற்றப்படுவதற்குரிய நியமிக்கப்பட்ட காலம் அருகில் வந்துகொண்டிருக்கையில் அழைப்பு அதிக அவசரத் தன்மையோடு எதிரொலித்துக் கொண்டிருக்கிறது: “ஆவியும் மணவாட்டியும் ‘வா’ என்கிறார்கள்!” அந்த அழைப்புக்குச் செவிக்கொடுக்கும் அனைவரும் யெகோவாவுக்குத் தங்கள் வாழ்க்கையை ஒப்புக் கொடுத்து “வா” என்பதாக இன்னும் மற்றவர்களுக்கு சொல்வதில் வைராக்கியமுள்ளவர்களாக இருப்பார்கள். ஆம், “தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத் தண்ணீரை இலவசமாய் வாங்கிக் கொள்ளக்கடவன்.” (வெளிப்படுத்துதல் 22:17) அழைப்பு இன்னும் திறந்திருக்கிறது. நீங்கள் உங்கள் நிலைநிற்கையை எடுத்து, யெகோவாவின் ஒப்புக் கொடுத்து முழுக்காட்டப்பட்ட ஜனத்தில் ஒருவராக தேவனுடைய சிங்காசனத்துக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முன்பாக அந்த நிலைநிற்கையைக் காத்துக்கொள்வீர்களேயானால், நீங்கள் சந்தோஷமுள்ளவர்களாயிருப்பீர்கள். நியமிக்கப்பட்ட காலம் ஒருவேளை நீங்கள் நினைப்பதைவிட அருகாமையில் இருக்கிறது! ஆம் வெளிப்படுத்துதலின் மகத்தான உச்சக்கட்டம் சமீபமாயிருக்கிறது! (w89 4⁄15)
இந்த வாரம் காவற்கோபுரம் படிப்புக்கு முடிவாக, நடத்துபவர் பின்வரும் தீர்மானத்தை வாசிக்கச் செய்து அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளின் உதவியோடு அதை விமர்சனம் செய்ய வேண்டும். 1988-ல் உலகம் முழுவதிலும் யெகோவாவின் சாட்சிகளுடைய “தெய்வீக நீதி” மாவட்ட மாநாட்டின் போது, “இழிவான பெயர்பெற்ற ‘வேசி’—அவளுடைய வீழ்ச்சியும் அழிவும்” என்ற பேச்சின் முடிவில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
[அடிக்குறிப்புகள்]
a தெளிவான காரணங்களுக்காக, சோவியத் யூனியனுக்கு எதிரான பொது முன்னணியோடு சம்பந்தப்பட்ட விஷயமும் ஹிட்லரின் படையில் கட்டாயப்படுத்தி ஆள் சேர்க்க வேண்டிய கத்தோலிக்க பாதிரிகளின் கடமையும் ஆகிய உடன்படிக்கையின் இரண்டு ஷரத்துக்களும் அந்த சமயத்தில் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. இப்படியாக கட்டாயப்படுத்தி ஆள் சேர்ப்பது, ஜெர்மனி இன்னும் கட்டுப்பட்டதாயிருந்த வெர்சாயில் உடன்படிக்கையை (1919) மீறுவதாக இருந்தது; இந்த ஷரத்து வெளிப்படையாக தெரியவந்தால், வெர்சாயில் உடன்படிக்கையில் கையொப்பமிட்ட மற்றவர்கள் அமைதி இழந்திருப்பார்கள்.
b 1940-களின் பிற்பகுதியில் ஜெர்மனியிலுள்ள நியுரம்பெர்கில் விசாரணைக்குட்படுத்தப்பட்ட நாசிப் போர் குற்றவாளிகளில் ஃப்ரான்ஸ் வான் பேப்பனும் ஒருவர். அவர் குற்றவிடுதலைப் பெற்றுக் கொண்டார். ஆனால் பின்னால் ஒரு நாசிக்கு எதிரான ஜெர்மன் நீதிமன்றம் அவருக்குக் கடுமையான ஒரு தீர்ப்பை வழங்கியது. இன்னும் பின்னால், 1959-ல் அவர் போப்பாண்டவரின் பேரவை உறுப்பினராக்கப்பட்டார்.
c இந்தக் கூட்டத்தைப் பற்றி விமர்சனம் செய்பவராய் போப் பால் VI சொன்னதாவது: “இருபது ஆண்டுகளுக்கு முன்பாகக் கையெழுத்தான ஐக்கிய நாடுகள் சாசனத்தின் நினைவு விழாவில் சமாதானத்துக்காக ஒரு சமயப் பேரவை சேர்க்கப்பட்டிருப்பது உண்மையில் எத்தனை சரியானதும் பொருத்தமானதுமாக இருக்கிறது.”
[கேள்விகள்]
1. “பூமியின் ராஜாக்களோடு” மகா வேசி எவ்விதமாக வேசித்தனம் பண்ணியிருக்கிறாள்? இது எதில் விளைவடைந்திருக்கிறது?
2. (எ) ஃப்ரான்ஸ் வான் பேப்பன், எவ்விதமாக ஜெர்மனியின் ஆட்சியாளனாவதற்கு அடால்ப் ஹிட்லருக்கு உதவினான்? போப்பாண்டவரின் அந்த மாவீரனை முன்னாள் ஜெர்மன் முதல்வர் எவ்விதமாக வருணித்தார்? (பி) நாசி அரசும் வத்திக்கனும் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த அந்த உடன்படிக்கையின் இரண்டு ஷரத்துக்கள் யாவை? (அடிக்குறிப்பைப் பார்க்கவும்.)
3. (எ) நாசி அரசுக்கும் வத்திக்கனுக்குமிடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைக் குறித்து ஒரு சரித்திராசிரியர் என்ன சொன்னார்? (பி) வத்திக்கனில் நடைப் பெற்ற விழாவில், ஃப்ரான்ஸ் வான் பேப்பனுக்கு மதிப்புக்குரிய என்ன சின்னம் அளிக்கப்பட்டது? (சி) ஆஸ்திரியாவின் பொறுப்பை நாசி ஏற்றுக் கொள்வதில் ஃப்ரான்ஸ் வான் பேப்பனின் பங்கு என்னவாக இருந்தது?
4, 5. (எ) பயங்கரமான இரத்தப்பழி ஏன் வத்திக்கனின் மீது தங்கியிருக்கிறது? (பி) ஜெர்மன் நாட்டு கத்தோலிக்க பிஷப்புகள் எவ்விதமாக ஹிட்லருக்கு வெளியரங்கமாக ஆதரவு கொடுத்தனர்?
6. வத்திக்கனுக்கும் நாசிக்களுக்குமிடையே ஆவிக்குரிய வேசித்தனம் இல்லாதிருந்தால் உலகில் என்ன வேதனைகளையும் அட்டூழியங்களையும் தவிர்த்திருக்கலாம்?
7. அண்மையில் மகா வேசியின் தோற்றத்தை அப்போஸ்தலனாகிய யோவான் எவ்விதமாக வருணிக்கிறான்?
8. (எ)தன்னை அடையாளங் காண்பிக்கும் வகையில் மகா வேசி தன்னுடைய பொற்பாத்திரத்தில் எதை எடுத்துச் செல்கிறாள்? (பி) மகா பாபிலோன் எவ்விதமாக அடையாள அர்த்தத்தில் “இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து” “பொன்னினாலும் இரத்தினங்களினாலும், முத்துக்களினாலும் சிங்காரிக்கப்”பட்டிருக்கிறாள்?
9. மகா பாபிலோன் என்ன நீண்ட கால இரத்தப்பழிக் குற்றமுள்ளவளாயிருக்கிறாள்? யோவான் எவ்விதமாக அவளைப் பற்றிய வருணனையை பொருத்தமாக முடிக்கிறான்?
10. (எ) மகா வேசி இந்நாள் வரையாக யெகோவாவின் சாட்சிகளை எவ்விதமாக துன்புறுத்தி வந்திருக்கிறாள்? (பி) மகா பாபிலோனின் குருமார் என்ன விதமானத் தலைவர்களாக இருக்கிறார்கள்?
11, 12. வெறுக்கப்படும் வேசியை சுமந்துச் செல்லும் “சிவப்பு நிறமுள்ள மிருகத்தின்” இரகசியம் என்ன? 1942-ல் இந்த இரகசியத்தின் பேரில் யெகோவாவின் சாட்சிகள் பெற்றுக் கொண்ட விளக்கம் என்ன?
13. மகா பாபிலோன் எவ்விதமாக தொடர்ந்து ஐ.நா. “மிருகத்தோடு” வேசித்தனமான முறைகளில் நடந்து வந்திருக்கிறாள்?
14. ஐ.நா. “மிருகத்துக்கு” நிறைவேற்ற என்ன ஒரு விசேஷித்த சேவை இருக்கிறது? கடவுளுடைய தூதன் இதை எவ்விதமாக விளக்குகிறான்?
15. வேசியின் கள்ளக்காதலர்கள் பெரிய வியாபார செல்வந்தர்களோடு சேர்ந்து அவளுடைய அழிவுக்கு எவ்விதமாகப் பிரதிபலிப்பார்கள்?
16. மகா வேசியின் அழிவுக்குக் கடவுளுடைய ஜனங்கள் எவ்விதமாகப் பிரதிபலிப்பார்கள்? வெளிப்படுத்துதல் இதை எவ்விதமாக உறுதி செய்கிறது?
17. மகா வேசியின் அழிவுக்குப் பின்பு, கடவுளுடைய நியாயத்தீர்ப்பு செயல்கள் எவ்விதமாக தொடர்ந்து பின்னர் முற்றுப் பெறும்?
18. வெளிப்படுத்துதல் புத்தகத்தின் மகத்தான உச்சக்கட்டம் எது?
19. (எ) மகா பாபிலோனைவிட்டு வெளியேறுவதோடுக் கூட இரட்சிப்புக்கு வேறு எது இன்றியமையாததாக இருக்கிறது? (பி) அவசரமான என்ன அழைப்பு இன்னும் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது? நம்முடைய பிரதிபலிப்பு என்னவாக இருக்க வேண்டும்?
[பக்கம் 11-ன் பெட்டி]
போப்பின் மெளனம்
1939-ல் பிரசுரமான ஃப்ரான்ஸ் வான் பேப்பன்—அவருடைய வாழ்க்கையும் காலங்களும் என்ற தன்னுடைய புத்தகத்தில் R.W. பிளட்-ரையன், போப் அதிகாரத்துக்குட்பட்ட வீரன், ஹிட்லரை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கும் நாசிகளோடு வத்திக்கனின் உடன்படிக்கையை பேசி முடிப்பதற்கும் செய்த சதியாலோசனைகளை விவரமாக விளக்குகிறார். யூதர்கள், யெகோவாவின் சாட்சிகள் இன்னும் சிறுபான்மையான மற்றவர்களையும் உட்படுத்திய பயங்கரமான படுகொலைகளின் சம்பந்தமாக ஆசிரியர் சொல்வது: “பாஸல்லி [போப் பயஸ் XII] ஏன் மெளனமாக இருந்தார்? வான் பேப்பனின் மேற்கத்திய ஜெர்மானியர்களின் பரிசுத்த ரோம பேரரசின் திட்டத்தில், தற்காலிகமாக அதிகார அரியணையில் மீண்டும் வத்திக்கன் இருக்க, எதிர்காலத்தில் அதிக பலமான ஒரு கத்தோலிக்க சர்ச்சை அவர் மனக்கண்ணால் பார்த்தார். அதே பாஸல்லி இப்பொழுது இலட்சக்கணக்கான ஆத்துமாக்களின் மீது ஆவிக்குரிய சர்வாதிகார வல்லமையைச் செலுத்திவந்தபோதிலும், ஹிட்லரின் ஆக்ரமிப்பையும் துன்புறுத்தலையும் பார்த்து தாழ்ந்த குரலிலும்கூட எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை . . . இந்த வரிகளை நான் எழுதுகையில் படுகொலையில் மூன்று நாட்கள் கடந்துவிட்டன. இதில் பாதிப்பேர் கத்தோலிக்கர்களாக இருந்த போதிலும் இதில் கலந்துக் கொண்டவர்களின் ஆத்துமாக்களுக்காக வத்திக்கனிலிருந்து ஒரு ஜெபம்கூட வெளிவரவில்லை. இந்த மனிதர்கள் அவர்களுடைய பூமிக்குரிய செல்வாக்குகள் அனைத்தையும் இழந்த பின்பு, கணக்குக் கேட்கப்படும் போது கடவுளுக்கு முன்பாக நிற்கையில் கணக்குத்தீர்ப்பு பயங்கரமாக இருக்கும். அவர்களுடைய சாக்குப்போக்கு என்னவாக இருக்கக்கூடும்? ஒன்றுமே இராது!”
[பக்கம் 15-ன் பெட்டி]
வத்திக்கன் சம்பந்தப்பட்டிருக்கிறது
1988-க்கு வத்திக்கன், வரவு செலவு திட்டத்தில் இதுவரையில்லாத 93 கோடி ரூபாய் பற்றாக்குறையை எதிர்பார்ப்பதாக 1988, மார்ச் 6 தேதியிட்ட தி நியு யார்க் டைம்ஸ் (The New York Times) அறிவிப்பு செய்கிறது. செய்தித்தாள் சொன்னதாவது: “ஒரு முக்கிய செலவு 1984-ல் பான்கோ அம்ரோஸியானோ பற்றாளர்களுக்கு சுமார் 375 கோடி ரூபாய் செலுத்துவதாக கொடுக்கப்பட்ட உறுதி மொழியோடு சம்பந்தப்பட்டதாயிருக்க வேண்டும். 1982-ல் மில்லன் வங்கி திவாலாவதற்கு முன்பாக வத்திக்கன் அதில் முழுவதுமாக ஈடுபாடு கொண்டிருந்தது.” இந்த மோசடியில் இது அத்தனை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டதன் காரணமாக அமெரிக்க அதிமேற்றிராணியார் உட்பட வத்திக்கனின் மூன்று உயர் அதிகாரிகளை இத்தாலிய நீதிமன்றங்களில் விசாரணைக்குட்படுத்த ஒப்புவிக்க உறுதியாக மறுத்துவிட்டிருக்கிறது!
[பக்கம் 12-ன் படம்]
வத்திக்கன், வான் பேப்பனோடும் ஹிட்லரோடும் கடுமையான இரத்தப்பழிக் குற்றத்தில் பங்கு கொண்டிருக்கிறது.
[பக்கம் 15-ன் படம்]
கடவுளுடைய ராஜ்யத்தை ஆதரித்துப் பேசுவதற்குப் பதிலாக போப்புகள் ஐ.நா.வை ‘சமாதானத்துக்குக் கடைசி நம்பிக்கை’ என்பதாக அறிவித்து வந்திருக்கிறார்கள்