பாடல் 3
“கடவுள் அன்பாகவே இருக்கிறார்”
1. யெ-கோ-வா அன்-பா-ன-வ-ரே,
அன்-பாய், ‘வா!’ என்-கி-றா-ரே,
பே-ரன்-பின் வ-ழி செல்-ல-வே,
பி-ற-ரை நே-சிக்-க-வே.
இ-து-வே உன்-ன-த வாழ்-வு,
நாம் ஏங்-கும் நல்-ல வாழ்-வு.
பொ-ழி-வோம் ஏ-சு-போல் அன்-பு,
பொன்-னொ-ளி வீ-சும் பண்-பு!
2. சத்-யத்-தை நே-சித்-தால் நா-மே,
செ-யல்-வீ-ரர் ஆ-வோ-மே!
த-ளர்ந்-தே நாம் போ-னா-லு-மே,
தே-வன்-பு நம் ப-ல-மே.
பொ-றா-மை கொள்-ளா-து அன்-பு;
தாங்-கிக்-கொள்-ளும் நற்-பண்-பு.
க்றிஸ்-த-வர் அன்-பு க-ரும்-பு;
ரு-சிப்-போம் அந்-தப் பண்-பு!
3. “என் மீ-து அன்-பு காட்-டி-டு,
பி-ற-ரை நே-சித்-தி-டு!”
கற்-பித்-தா-ரே தே-வன்-தா-மே,
கற்-போம் அன்-பின் பா-ட-மே.
வி-ரோ-த-மே வி-டு-வோ-மே,
க-சப்-பைக் க-ளை-வோ-மே.
என்-றும் அன்-பைப் பொ-ழி-வோ-மே,
அன்-பு பூச்-செண்-டா-வோ-மே!
(காண்க: மாற். 12:30, 31; 1 கொ. 12:31–13:8; 1 யோ. 3:23.)