உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 11
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

யாத்திராகமம் முக்கியக் குறிப்புகள்

      • 10-ஆம் தண்டனை அறிவிக்கப்படுகிறது (1-10)

        • இஸ்ரவேலர்கள் பொருள்களைக் கேட்டு வாங்க வேண்டும் (2)

யாத்திராகமம் 11:1

இணைவசனங்கள்

  • +உபா 4:34
  • +யாத் 12:31, 32

யாத்திராகமம் 11:2

இணைவசனங்கள்

  • +யாத் 3:21, 22; 12:35, 36; சங் 105:37

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    3/15/2004, பக். 26

யாத்திராகமம் 11:4

இணைவசனங்கள்

  • +யாத் 12:29

யாத்திராகமம் 11:5

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “திரிகைக் கல்லில் அரைக்கிற.”

இணைவசனங்கள்

  • +யாத் 4:22, 23; சங் 78:51; 105:36; 136:10; எபி 11:28
  • +யாத் 12:12

யாத்திராகமம் 11:6

இணைவசனங்கள்

  • +யாத் 12:30

யாத்திராகமம் 11:7

இணைவசனங்கள்

  • +யாத் 8:22; 9:3, 4; 10:23; 12:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தை தயாரிக்க தேவையான தகவல்கள், 7/2020, பக். 5

யாத்திராகமம் 11:8

இணைவசனங்கள்

  • +யாத் 12:33

யாத்திராகமம் 11:9

இணைவசனங்கள்

  • +யாத் 3:19; 7:4; ரோ 9:17, 18
  • +யாத் 7:3

யாத்திராகமம் 11:10

இணைவசனங்கள்

  • +சங் 135:9
  • +யாத் 4:21; 9:15, 16; 10:20

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

யாத். 11:1உபா 4:34
யாத். 11:1யாத் 12:31, 32
யாத். 11:2யாத் 3:21, 22; 12:35, 36; சங் 105:37
யாத். 11:4யாத் 12:29
யாத். 11:5யாத் 4:22, 23; சங் 78:51; 105:36; 136:10; எபி 11:28
யாத். 11:5யாத் 12:12
யாத். 11:6யாத் 12:30
யாத். 11:7யாத் 8:22; 9:3, 4; 10:23; 12:13
யாத். 11:8யாத் 12:33
யாத். 11:9யாத் 3:19; 7:4; ரோ 9:17, 18
யாத். 11:9யாத் 7:3
யாத். 11:10சங் 135:9
யாத். 11:10யாத் 4:21; 9:15, 16; 10:20
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
யாத்திராகமம் 11:1-10

யாத்திராகமம்

11 பின்பு யெகோவா மோசேயிடம், “பார்வோனுக்கும் எகிப்துக்கும் இன்னுமொரு தண்டனை கொடுப்பேன். அதன்பின் அவன் உங்களை இங்கிருந்து அனுப்பிவிடுவான்.+ சொல்லப்போனால், உங்களை இங்கிருந்து துரத்தியே விடுவான்.+ 2 அதனால், எல்லா ஆண்களும் பெண்களும் மற்றவர்களிடம், தங்கத்திலும் வெள்ளியிலும் செய்யப்பட்ட பொருள்களைக் கேட்டு வாங்க வேண்டும் என்று என்னுடைய ஜனங்களிடம் போய்ச் சொல்”+ என்றார். 3 எகிப்தியர்கள் இஸ்ரவேலர்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் கொடுக்கும்படி யெகோவா செய்தார். அதுமட்டுமல்ல, எகிப்தில் மோசேயின் மதிப்புக் கூடியிருந்தது. பார்வோனின் ஊழியர்களும் ஜனங்களும் அவரை மிக உயர்வாக நினைத்தார்கள்.

4 மோசே பார்வோனிடம், “யெகோவா சொல்வது இதுதான்: ‘இன்று நடுராத்திரியில் நான் எகிப்து தேசத்துக்கு வருவேன்.+ 5 அப்போது, எகிப்து தேசத்திலுள்ள மூத்த மகன்கள் எல்லாரும் செத்துப்போவார்கள்.+ சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிற பார்வோனின் மூத்த மகன்முதல் மாவு அரைக்கிற* அடிமைப் பெண்ணின் மூத்த மகன்வரை எல்லாரும் செத்துப்போவார்கள். மிருகங்களுடைய முதல் குட்டிகளும் செத்துப்போகும்.+ 6 எகிப்து தேசமெங்கும் பயங்கரமான ஒப்பாரிச் சத்தம் கேட்கும். அப்படிப்பட்ட சத்தம் அதற்கு முன்பும் கேட்டிருக்காது, இனிமேலும் கேட்காது.+ 7 இஸ்ரவேல் ஜனங்களையோ அவர்களுடைய மிருகங்களையோ பார்த்து ஒரு நாய்கூட குரைக்காது. அப்போது, யெகோவா எகிப்தியர்களை எப்படி நடத்துகிறார், இஸ்ரவேலர்களை எப்படி நடத்துகிறார் என்று நீ தெரிந்துகொள்வாய்’”+ என்றார். 8 அதோடு மோசே அவரிடம், “உங்களுடைய ஊழியர்கள் எல்லாரும் கண்டிப்பாக என் முன்னால் வந்து சாஷ்டாங்கமாக விழுந்து, ‘நீங்களும் உங்களுடைய ஜனங்கள் எல்லாரும் தயவுசெய்து போய்விடுங்கள்’ என்று சொல்வார்கள்,+ அப்போது நான் போவேன்” என்று சொன்னார். பிறகு, கடும் கோபத்தோடு பார்வோனைவிட்டுப் புறப்பட்டுப் போனார்.

9 யெகோவா மோசேயிடம், “நீங்கள் இரண்டு பேரும் சொல்வதை பார்வோன் கேட்க மாட்டான்.+ அதனால், எகிப்து தேசத்தில் நான் இன்னும் பல அற்புதங்களைச் செய்ய வேண்டியிருக்கும்”+ என்றார். 10 மோசேயும் ஆரோனும் பார்வோனின் முன்னால் எல்லா அற்புதங்களையும் செய்தார்கள்.+ ஆனால், பார்வோனின் இதயம் இறுகிப்போகும்படி யெகோவா விட்டுவிட்டார். அவன் இஸ்ரவேலர்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து அனுப்பவில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்