1 நாளாகமம்
7 இசக்காரின் மகன்கள்: தோலா, பூவா, யாசூப், சிம்ரோன்+ என நான்கு பேர். 2 தோலாவின் மகன்கள்: உசீ, ரெபாயா, யெரியேல், யக்மாய், இப்சாம், ஷெமுவேல்; இவர்கள் தங்களுடைய தந்தைவழிக் குடும்பத்துக்குத் தலைவர்களாக இருந்தார்கள். தோலாவின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மாவீரர்களாக இருந்தார்கள், தாவீதின் காலத்தில் அவர்களுடைய எண்ணிக்கை 22,600. 3 உசீயின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள்: இஸ்ரகியா, இவருடைய மகன்கள் மிகாவேல், ஒபதியா, யோவேல், இஷியா. இந்த ஐந்து பேரும் தலைவர்களாக இருந்தார்கள். 4 இவர்களுடைய வம்சத்தில் வந்தவர்களுக்கு நிறைய மனைவிகளும் மகன்களும் இருந்தார்கள். அதனால், போர் செய்வதற்கு அவர்களுடைய தந்தைவழியில் மொத்தம் 36,000 போர்வீரர்கள் இருந்தார்கள். 5 இசக்கார் வம்சத்தைச் சேர்ந்த மற்ற குடும்பங்களில் இருந்த அவர்களுடைய சகோதரர்கள் மாவீரர்களாக இருந்தார்கள். அவர்கள் மொத்தம் 87,000 பேர். இவர்களுடைய பெயர்கள் வம்சாவளிப் பட்டியலில் இருக்கின்றன.+
6 பென்யமீனின் மகன்கள்:+ பேலா,+ பெகேர்,+ யெதியாயேல்+ என மூன்று பேர். 7 பேலாவின் மகன்கள்: இஸ்போன், உசீ, ஊசியேல், யெரிமோத், இரி. இந்த ஐந்து பேரும் தங்களுடைய தந்தைவழிக் குடும்பத்துக்குத் தலைவர்களாகவும் மாவீரர்களாகவும் இருந்தார்கள். இவர்களுடைய வம்சாவளிப் பட்டியலில் மொத்தம் 22,034 ஆட்களின் பெயர்கள் இருக்கின்றன.+ 8 பெகேரின் மகன்கள்: செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, எரேமோத், அபியா, ஆனதோத், அலெமேத்; இவர்கள் எல்லாரும் பெகேரின் மகன்கள். 9 இவர்களுடைய வம்சத்தில் குடும்பத் தலைவர்களாகவும் மாவீரர்களாகவும் இருந்தவர்கள் மொத்தம் 20,200 பேர்; வம்சாவளிப் பட்டியலில் இவர்களுடைய பெயர்கள் இருக்கின்றன. 10 யெதியாயேலின்+ வம்சத்தில் வந்தவர்கள்: அவருடைய மகன் பில்கான், பில்கானின் மகன்களான எயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார். 11 யெதியாயேல் வம்சத்தில் வந்த இவர்கள் எல்லாரும் தங்களுடைய தந்தைவழிக் குடும்பத்துக்குத் தலைவர்களாக இருந்தார்கள்; இவர்களுடைய வம்சத்தில் வந்தவர்களில் போருக்குத் தயாராக இருந்த மாவீரர்கள் 17,200 பேர்.
12 சுப்பீமியரும் உப்பிமியரும்* இர்+ என்பவரின் வம்சத்தில் வந்தவர்கள்; ஊசிமியர்* ஆகேரின் வம்சத்தில் வந்தவர்கள்.
13 நப்தலியின் மகன்கள்:+ யாத்ஸியல், கூனி, எத்செர், சல்லூம்; இவர்கள் பில்காளின் வம்சத்தில்+ வந்தவர்கள்.
14 மனாசேயின்+ மகன்கள்: அஸ்ரியேல், இவர் மனாசேயின் மறுமனைவிக்குப் பிறந்தவர். அவள் சீரியாவைச் சேர்ந்த பெண். (கீலேயாத்தின் தகப்பன் மாகீரும்+ இவளுக்குப் பிறந்தவர். 15 உப்பிமுக்கும் சுப்பீமுக்கும் மாகீர் திருமணம் செய்து வைத்தார்; இவர்களுடைய சகோதரி மாக்காள்.) மனாசேயின் இரண்டாம் மகன் செலோப்பியாத்,+ இவருக்கு மகள்கள்தான் இருந்தார்கள்.+ 16 மாகீரின் மனைவியான மாக்காள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு பேரேஸ் என்று பெயர் வைத்தாள். அவனுடைய சகோதரன் பெயர் சேரேஸ்; அவனுடைய மகன்கள்: ஊலாம், ரெக்கேம். 17 ஊலாமின் மகன் பேதான்; இவர்கள் மனாசேயின் பேரனும் மாகீரின் மகனுமாகிய கீலேயாத்தின் வம்சத்தில் வந்தவர்கள். 18 கீலேயாத்தின் சகோதரி அம்மொளெகேத். இஸ்கோத்தையும் அபியேசரையும் மக்லாவையும் அவள் பெற்றெடுத்தாள். 19 செமீதாவின் மகன்கள்: அகியான், சீகேம், லிக்கே, அனியாம்.
20 எப்பிராயீமின் வம்சத்தில்+ வந்தவர்கள்: அவருடைய மகன் சுத்தெலாக்,+ சுத்தெலாக்கின் மகன் பேரேத், பேரேத்தின் மகன் தாகாத், தாகாத்தின் மகன் எலாதா, எலாதாவின் மகன் தாகாத், 21 தாகாத்தின் மகன் சாபாத், சாபாத்தின் மகன் சுத்தெலாக்; ஏத்சேரும் எலியத்தும்கூட எப்பிராயீமின் மகன்கள். எப்பிராயீம் வம்சத்தில் வந்தவர்களுடைய கால்நடைகளைப் பிடித்து வருவதற்காக ஒருசமயம் காத்+ நகரத்தைச் சேர்ந்தவர்கள் போனார்கள்; அப்போது, ஏச்சேரையும் எலியத்தையும் அவர்கள் கொன்றுபோட்டார்கள். 22 அவர்களுடைய தகப்பன் எப்பிராயீம் அவர்களுக்காகப் பல நாட்கள் துக்கம் அனுசரித்தார்; ஆறுதல் சொல்ல அவருடைய சகோதரர்கள் அடிக்கடி வந்தார்கள். 23 பின்பு, அவர் தன்னுடைய மனைவியோடு உறவுகொண்டார்; அவள் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றாள்; அந்தக் குடும்பத்துக்குக் கஷ்டம் வந்த சமயத்தில் அவன் பிறந்ததால் அவனுக்கு பெரீயா* என்று அவர் பெயர் வைத்தார்; 24 அவருடைய மகள் பெயர் ஷீராள்; மேல் பெத்-ஓரோனையும்+ கீழ் பெத்-ஓரோனையும்+ ஊசேன்-ஷீராவையும் அவள் கட்டினாள். 25 ரேப்பாக்கும் ரேசேப்பும் எப்பிராயீம் வம்சத்தில் வந்தவர்கள்; ரேசேப்பின் மகன் தேலாக், தேலாக்கின் மகன் தாகான், 26 தாகானின் மகன் லாதான், லாதானின் மகன் அம்மியூத், அம்மியூத்தின் மகன் எலிஷாமா, 27 எலிஷாமாவின் மகன் நூன், நூனின் மகன் யோசுவா.*+
28 அவர்களுக்குச் சொந்தமான இடங்கள்: பெத்தேலும்+ அதன் சிற்றூர்களும்,* கிழக்கே நாரானும், மேற்கே கேசேரும் அதன் சிற்றூர்களும், சீகேமும் அதன் சிற்றூர்களும், அய்யாவும்* அதன் சிற்றூர்களும்; 29 மனாசே வம்சத்தாருடைய எல்லைக்குப் பக்கத்திலிருந்த பகுதிகளான பெத்-செயானும்+ அதன் சிற்றூர்களும், தானாக்கும்+ அதன் சிற்றூர்களும், மெகிதோவும்+ அதன் சிற்றூர்களும், தோரும்+ அதன் சிற்றூர்களுமே. இந்தப் பகுதிகளில் இஸ்ரவேலின் மகனாகிய யோசேப்பின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் குடியிருந்தார்கள்.
30 ஆசேரின் மகன்கள்: இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா.+ இவர்களுடைய சகோதரி சேராள்.+ 31 பெரீயாவின் மகன்கள்: ஹேபெர், மல்கியேல், இவர் பிர்சாவீத்தின் தகப்பன். 32 ஹேபெரின் மகன்கள்: யப்லேத், சோமேர், ஓத்தாம். அவர்களுடைய சகோதரி சூவா. 33 யப்லேத்தின் மகன்கள்: பாசாக், பிம்மால், அஸ்வாத். இவர்களே யப்லேத்தின் மகன்கள். 34 சேமேரின்* மகன்கள்: அகி, ரோகா, எகூபா, அராம். 35 அவருடைய சகோதரன் ஏலேமின்* மகன்கள்: சோபாகு, இம்ணா, சேலேஸ், ஆமால். 36 சோபாகுவின் மகன்கள்: சூவாக், அர்னெப்பர், சூவால், பேரி, இம்ரா, 37 பேசேர், ஓத், ஷம்மா, சில்சா, இத்தரான், பீரா. 38 யெத்தேரின் மகன்கள்: எப்புன்னே, பிஸ்பா, ஏரா. 39 உல்லாவின் மகன்கள்: ஆராக், அன்னியேல், ரித்சியா. 40 இவர்கள் எல்லாரும் ஆசேர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள், தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள், மிகச் சிறந்த மாவீரர்கள், மிக முக்கியமான தலைவர்கள்; வம்சாவளிப் பட்டியலின்படி,+ போர் செய்வதற்கு மொத்தம் 26,000 போர்வீரர்கள்+ இருந்தார்கள்.