உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 19:18
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 18 உங்கள் ஜனங்களை நீங்கள் பழிவாங்கக் கூடாது.+ அவர்கள்மேல் பகை* வைத்திருக்கக் கூடாது. உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும்* அன்பு காட்ட வேண்டும்.+ நான் யெகோவா.

  • யோவான் 15:12
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 12 நான் உங்கள்மேல் அன்பு காட்டியதுபோல் நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டும் என்பதுதான் என் கட்டளை.+

  • 1 தெசலோனிக்கேயர் 4:9
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 9 சகோதர அன்பைப்+ பற்றி நாங்கள் உங்களுக்கு எழுத வேண்டியதில்லை; ஒருவருக்கொருவர் அன்பு காட்டும்படி நீங்களே கடவுளிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறீர்கள்.+

  • யாக்கோபு 2:8
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 8 “உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும்* அன்பு காட்ட வேண்டும்” என்று வேதவசனம் சொல்கிறது.+ இந்த ராஜ சட்டத்தை இப்போது நீங்கள் கடைப்பிடித்து வந்தால் மிகவும் நல்லது.

  • 1 பேதுரு 1:22
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 22 நீங்கள் சத்தியத்துக்குக் கீழ்ப்படிந்து உங்களைச் சுத்தமாக்கியிருப்பதால் வெளிவேஷம் இல்லாத சகோதரப் பாசத்தைக் காட்டுகிறீர்கள்;+ அதனால் இப்போது, இதயப்பூர்வமான அன்பை ஒருவருக்கொருவர் ஊக்கமாகக் காட்டுங்கள்.+

  • 1 யோவான் 3:14
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 14 சகோதரர்கள்மேல் நாம் அன்பு காட்டுவதால்,+ இறந்தவர்களைப் போல் இருந்த நாம் இப்போது உயிர் வாழ்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்கிறோம்.+ அன்பு காட்டாதவன் இறந்தவனைப் போல் இருக்கிறான்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்