சங்கீதம்
நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல். சாலொமோனின் பாடல்.
யெகோவா நகரத்தைக் காக்கவில்லையென்றால்,+
காவலாளிகள் என்னதான் கண் விழித்திருந்தாலும் அது வீண்.
2 நீ அதிகாலையிலேயே எழுந்து,
ராத்திரி ரொம்ப நேரம் கண் விழித்திருந்து,
வயிற்றுப் பிழைப்புக்காக எவ்வளவுதான் பாடுபட்டாலும் அது வீண்.
ஏனென்றால், தனக்குப் பிரியமானவர்களின் தேவைகளை அவர் கவனித்துக்கொள்கிறார்.
அவர்களுக்கு நிம்மதியான தூக்கத்தையும் தருகிறார்.+
5 அவற்றைத் தங்களுடைய அம்புக்கூடுகளில் நிரப்புகிறவர்கள் சந்தோஷமானவர்கள்.+
அவர்கள் வெட்கப்பட்டுப்போக மாட்டார்கள்.
ஏனென்றால், நகரவாசலில் எதிரிகளோடு அவர்கள் வழக்காடுவார்கள்.