ஏசாயா
1 உசியா,+ யோதாம்,+ ஆகாஸ்,+ எசேக்கியா+ ஆகியவர்கள் யூதாவை ஆட்சி செய்த+ காலத்தில், ஆமோத்ஸ் என்பவரின் மகனான ஏசாயா* வாழ்ந்தார். யூதாவையும் எருசலேமையும் பற்றி அவர் பார்த்த தரிசனம்+ இதுதான்:
3 காளை மாட்டுக்கு அதன் எஜமானைத் தெரியும்.
கழுதைக்கு அதன் எஜமான் வைத்திருக்கிற தீவனத் தொட்டி தெரியும்.
ஆனால், என் ஜனங்களான இஸ்ரவேலர்களுக்கு என்னை* தெரியவில்லை.+
என் சொந்த ஜனங்களே புத்தியில்லாமல்* நடந்துகொள்கிறார்கள்.”
4 பாவம் செய்கிற ஜனங்களே! உங்களுக்கு ஐயோ கேடு!+
நீங்கள் குற்றத்துக்குமேல் குற்றம் செய்கிறீர்கள்.
அக்கிரமக்காரக் கும்பலே! கேடுகெட்ட பிள்ளைகளே!
நீங்கள் யெகோவாவை ஒதுக்கித்தள்ளினீர்கள்.+
இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளிடம் மரியாதை இல்லாமல் நடந்துகொண்டீர்கள்.
அவரைவிட்டு விலகிப்போனீர்கள்.
5 ஏன் அவருக்கு அடங்க மறுக்கிறீர்கள், வாங்கிய அடியெல்லாம் போதாதா?+
உங்கள் தலை முழுக்க புண் வந்திருக்கிறது.
இதயம் முழுக்க கோளாறு இருக்கிறது.+
6 உள்ளங்கால்முதல் உச்சந்தலைவரை ஒன்றும் சரியில்லை.
வெளிக்காயங்களும், உள்காயங்களும், சீழ்வடியும் புண்களுமாக இருக்கிறது.
மருந்து போடாமலும், கட்டுப் போடாமலும், எண்ணெய் பூசாமலும் விட்டிருக்கிறீர்கள்.+
7 உங்கள் தேசம் பாழாய்க் கிடக்கிறது.
உங்கள் நகரங்கள் கொளுத்தப்பட்டுக் கிடக்கின்றன.
மற்ற தேசத்து ஜனங்கள் உங்கள் கண் முன்னாலேயே உங்கள் நிலத்தைக் கைப்பற்றுகிறார்கள்.+
அதை அழித்து நாசமாக்குகிறார்கள்.+
8 சீயோன் மகள், திராட்சைத் தோட்டத்து காவல்காரனுடைய பந்தல் போலவும்,
வெள்ளரித் தோட்டத்தில் உள்ள குடிசை போலவும்,
எதிரிகளால் சூழப்பட்ட நகரத்தைப் போலவும் இருக்கிறாள்.+
9 பரலோகப் படைகளின் யெகோவா நம்மில் கொஞ்சம் பேரை மீதியாக வைக்காமல் போயிருந்தால்,
நாம் சோதோமைப் போலவும்,
கொமோராவைப் போலவும் ஆகியிருப்போம்.+
10 சோதோமின் ஆட்சியாளர்களே,* யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்.+
கொமோராவின் மக்களே, நம் கடவுளுடைய சட்டத்தை* காதுகொடுத்துக் கேளுங்கள்.+
11 யெகோவா இப்படிச் சொல்கிறார்: “நீங்கள் எத்தனை பலிகளைக் கொடுத்தாலும் எனக்கு என்ன லாபம்?+
உங்களுடைய செம்மறியாட்டுக் கடாக்களின் தகன பலிகளும்,+ புஷ்டியான மிருகங்களின் கொழுப்பும்+ எனக்கு வெறுப்பாக இருக்கிறது.
இளம் காளைகள்,+ செம்மறியாட்டுக் குட்டிகள், வெள்ளாடுகள்+ ஆகியவற்றின் இரத்தம்+ எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.
12 நீங்கள் என் ஆலயத்துக்கு வந்து போகிறீர்கள்.+
ஆனால், என்னுடைய பிரகாரங்களின் தரை தேய்ந்ததுதான் மிச்சம்.
இப்படி வீணாக வந்துபோகும்படி நான் சொன்னேனா?+
13 பிரயோஜனமில்லாத உணவுக் காணிக்கைகளைக் கொண்டுவருவதை நிறுத்துங்கள்.
நீங்கள் தூபம் காட்டுவது எனக்கு அருவருப்பாக இருக்கிறது.+
மாதப் பிறப்புகளிலும்*+ ஓய்வுநாட்களிலும்+ மாநாடுகளிலும்+ நீங்கள் செய்வதை என்னால் இனி சகிக்க முடியாது.
என்னை வணங்குவதற்காகக் கூடிவரும்போது நீங்கள் மாயமந்திரத்தில் ஈடுபடுவதை என்னால் இனி பொறுக்க முடியாது.+
14 நீங்கள் கொண்டாடுகிற மாதப் பிறப்புகளையும் பண்டிகைகளையும் நான் வெறுக்கிறேன்.
அதெல்லாம் எனக்கு எரிச்சலாக இருக்கிறது.
அதைப் பார்த்துப் பார்த்து சலித்துப்போய்விட்டேன்.
16 உங்களைச் சுத்தமாக்குங்கள், உங்களைத் தூய்மையாக்குங்கள்.+
என் கண் முன்னாலேயே நீங்கள் அக்கிரமங்கள் செய்தது போதும்.
அதற்கு ஒரு முடிவுகட்டுங்கள்.+
17 நல்லது செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நியாயத்தைத் தேடுங்கள்.+
மற்றவர்களை அடக்கி ஒடுக்குகிறவர்களைத் திருத்துங்கள்.
அப்பா இல்லாத பிள்ளைகளின்* உரிமைகளுக்காக வாதாடுங்கள்.
விதவைகளுக்காக வழக்காடுங்கள்.”+
18 யெகோவா உங்களிடம், “வாருங்கள், நம்மிடையே இருக்கிற பிரச்சினையைச் சரிசெய்யலாம்.+
உங்களுடைய பாவங்கள் இரத்தம்போல் சிவப்பாக இருந்தாலும்,
பனிபோல் வெண்மையாகும்.+
செக்கச்செவேல் என்று இருந்தாலும்,
வெள்ளைவெளேர் என்று ஆகும்.
20 என் பேச்சைக் கேட்காமல் முரண்டுபிடித்தால்,
வாளால் கொல்லப்படுவீர்கள்.+
யெகோவாவாகிய நானே இதைச் சொல்கிறேன்” என்கிறார்.
21 விசுவாசமாக இருந்த நகரமே,+ இப்படித் துரோகம் செய்துவிட்டாயே!+
நீ நியாயத்தால் நிறைந்திருந்தாய்.+
உன்னிடம் நீதி குடிகொண்டிருந்தது.+
ஆனால், இப்போது கொலைகாரர்கள் குடியிருக்கிறார்கள்.+
23 உன் தலைவர்கள் திருந்தாதவர்கள்; திருடர்களின் கூட்டாளிகள்.+
ஒவ்வொருவரும் லஞ்சத்தை எதிர்பார்க்கிறார்கள், ஆதாயத்துக்காக அலைகிறார்கள்.+
அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு நியாயம் வழங்காமல் இருக்கிறார்கள்.
விதவைகளின் வழக்குகளை விசாரிக்காமல் ஒதுக்குகிறார்கள்.+
24 அதனால் இஸ்ரவேலர்களின் வல்லமையுள்ள கடவுளும்,
உண்மையான எஜமானும், பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்:
“என் விரோதிகளை ஒழித்துக்கட்டுவேன்,
எதிரிகளைப் பழிவாங்குவேன்.+
25 உன்னைத் தண்டித்துத் திருத்துவேன்.
உன்னைப் புடமிட்டு உன் கசடுகளையெல்லாம் நீக்குவேன்,
நன்றாகச் சுத்தமாக்குவேன்.+
26 முன்பு போலவே உனக்காக நியாயாதிபதிகளை நியமிப்பேன்.
ஆரம்பத்தில் இருந்தது போலவே ஆலோசகர்களைத்+ தருவேன்.
அதன்பின், ‘நீதியின் நகரம்’ என்றும், ‘விசுவாசத்தின் ஊர்’ என்றும் நீ அழைக்கப்படுவாய்.+
27 நியாயத்தினால் சீயோன் விடுவிக்கப்படும்.+
அங்கே திரும்பி வருகிறவர்கள் நீதியினால் விடுவிக்கப்பட்ட ஜனங்களாக இருப்பார்கள்.
28 யெகோவாவுக்கு அடங்காதவர்களும் பாவம் செய்கிறவர்களும் நொறுக்கப்படுவார்கள்.+
அவரைவிட்டு விலகுகிறவர்கள் அழிந்துபோவார்கள்.+