சகரியா
13 “அந்த நாளில், தாவீதின் வம்சத்தாரிடமும் எருசலேம் ஜனங்களிடமும் உள்ள பாவத்தையும் தீட்டையும் நீக்குவதற்காக ஒரு கிணறு வெட்டப்படும்.”+
2 பரலோகப் படைகளின் யெகோவா இப்படிச் சொல்கிறார்: “அந்த நாளில் தெய்வச் சிலைகளின் பெயர்கள்கூட தேசத்தில் இல்லாதபடி செய்துவிடுவேன்.+ அவற்றை யாரும் நினைத்துக்கூடப் பார்க்காதபடி செய்துவிடுவேன். தேசத்தில் இருக்கிற தீர்க்கதரிசிகளையும் தீய* சக்தியையும் ஒழித்துக்கட்டுவேன்.+ 3 அதன் பிறகும் ஒருவன் தீர்க்கதரிசனம் சொன்னால், அவனுடைய அப்பாவும் அம்மாவும், ‘யெகோவாவின் பெயரைச் சொல்லிக்கொண்டு பொய் பேசியதால் இனி நீ உயிரோடு இருக்க மாட்டாய்’ என்று சொல்வார்கள். அவன் தீர்க்கதரிசனம் சொன்னதால், அவனுடைய அப்பாவும் அம்மாவுமே அவனைக் குத்திக் கொல்வார்கள்.+
4 அந்த நாளில், தீர்க்கதரிசிகள் ஒவ்வொருவரும் தாங்கள் சொன்ன தரிசனத்தால் வெட்கமடைவார்கள். அவர்கள் ரோமத்தாலான அங்கியை* போட்டுக்கொண்டு+ மற்றவர்களை ஏமாற்ற மாட்டார்கள். 5 அவர்கள், ‘நான் ஒரு தீர்க்கதரிசி இல்லை. வயலில் வேலை செய்கிறவன். சிறுவனாக இருந்தபோது ஒருவர் என்னை அடிமையாக விலைக்கு வாங்கிவிட்டார்’ என்று சொல்வார்கள். 6 ‘உன் உடம்பில்* ஏன் இத்தனை காயங்கள்?’ என்று ஒருவன் கேட்டால், ‘என்னுடைய நண்பர்களின்* வீட்டில் இருந்தபோது ஏற்பட்டது’ என்று சொல்வார்கள்.”
என் நண்பனை வீழ்த்துவதற்காகப் புறப்படு!
8 யெகோவா சொல்வது இதுதான்:
“எல்லா தேசத்திலும், மூன்றில் இரண்டு பங்கு ஆட்கள் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்.
ஒரு பங்கு ஆட்கள் விட்டுவைக்கப்படுவார்கள்.
9 அந்த ஒரு பங்கு ஆட்களையும்
வெள்ளியைப் புடமிடுவது போல நெருப்பில் புடமிடுவேன்.
தங்கத்தைச் சோதித்துப் பார்ப்பது போலச் சோதித்துப் பார்ப்பேன்.+
அவர்கள் என் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவார்கள்.
அவர்களுக்கு நான் பதில் கொடுப்பேன்.
‘இவர்கள் என்னுடைய ஜனங்கள்’+ என்று நான் சொல்வேன்.
‘யெகோவா எங்களுடைய கடவுள்’ என்று அவர்கள் சொல்வார்கள்.”