ஏசாயா
45 யெகோவாவாகிய நான் கோரேசைத்+ தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
நான் அவனுடைய வலது கையைப் பிடித்திருக்கிறேன்.+
அவனுக்கு முன்பாகத் தேசங்களை அடிபணிய வைப்பேன்.+
அவனுக்கு முன்பாக ராஜாக்களை வீழ்த்துவேன்.
அவனுக்கு முன்பாக நகரவாசல்களும் அவற்றின் கதவுகளும்
பூட்டப்படாமல் திறந்திருக்கும்படி செய்வேன்.
அவனிடம் நான் சொல்வது இதுதான்:
செம்புக் கதவுகளை நொறுக்கிப்போடுவேன்.
இரும்புத் தாழ்ப்பாள்களை உடைத்துப்போடுவேன்.+
3 இருட்டில் மறைத்து வைக்கப்பட்ட பொக்கிஷங்களையும்,
ரகசிய இடங்களில் ஒளித்து வைக்கப்பட்ட பொக்கிஷங்களையும் உனக்குத் தருவேன்.+
அப்போது, இஸ்ரவேலின் கடவுளான யெகோவா நான்தான் என்றும்,
உன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறவர் நான்தான்+ என்றும் நீ புரிந்துகொள்வாய்.
4 என் ஊழியனான யாக்கோபுக்காகவும் நான் தேர்ந்தெடுத்த இஸ்ரவேலுக்காகவும்,
உன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறேன்.
என்னை உனக்குத் தெரியாமல் இருந்தாலும் நான் உனக்குக் கௌரவமான பெயரைக் கொடுக்கிறேன்.
5 நான் யெகோவா, நான் மட்டுமே கடவுள்.
என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.+
என்னை உனக்குத் தெரியாமல் இருந்தாலும் நான் உன்னைப் பலப்படுத்துவேன்.
6 ஏனென்றால், கிழக்கிலிருந்து மேற்குவரை இருக்கிற ஜனங்கள் எல்லாரும்
என்னைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை+ என்று அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
நான் யெகோவா, நான் மட்டுமே கடவுள்.+
7 வெளிச்சத்தைக் கொடுப்பதும் நான்தான்,+ இருட்டை உண்டாக்குவதும் நான்தான்.+
சமாதானத்தை ஏற்படுத்துவதும் நான்தான்,+ அழிவைக் கொண்டுவருவதும் நான்தான்.+
யெகோவாவாகிய நானே இவை எல்லாவற்றையும் செய்கிறேன்.
பூமி அதில் நனைந்து மீட்பு என்ற விதையை முளைப்பிக்கட்டும்.
நீதி என்ற விதையையும் துளிர்க்க வைக்கட்டும்.+
இவற்றை உருவாக்கியவர் யெகோவாவாகிய நானே.”
9 தன்னைப் படைத்தவரோடு வழக்காடுகிறவனுக்கு* கேடுதான் வரும்.
தரையில் கிடக்கிற மண் ஓடுகளில் ஒன்றைப் போல் அவன் இருக்கிறான்.
களிமண் குயவனைப் பார்த்து,
“நீங்கள் என்ன செய்கிறீர்கள்” என்று கேட்க முடியுமா?+
அல்லது ஒரு மண்பாத்திரம், “உங்களுக்குக் கையே இல்லை” என்று சொல்ல முடியுமா?*
10 ஒரு அப்பாவைப் பார்த்து, “ஏன் பிள்ளை பெற்றீர்கள்?” என்றோ,
அம்மாவைப் பார்த்து, “ஏன் பெற்றெடுத்தீர்கள்?” என்றோ
கேட்கிறவனுக்குக் கேடுதான் வரும்.
11 இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளும்+ இஸ்ரவேலை உருவாக்கியவருமான யெகோவா சொல்வது இதுதான்:
“நடக்கப்போகிற விஷயங்களைப் பற்றி என்னையே கேள்வி கேட்பாயா?
என் பிள்ளைகளையும்+ என் கையால் படைத்தவற்றையும் பற்றி எனக்கே புத்தி சொல்வாயா?
12 நான் பூமியை உருவாக்கி+ அதில் மனுஷனைப் படைத்தேன்.+
13 “நான் நீதியுள்ளவர். அதனால் ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.+
அவருடைய வழிகளையெல்லாம் சீரமைப்பேன்.
அவர்தான் என்னுடைய நகரத்தைக் கட்டுவார்.+
சிறைபிடிக்கப்பட்ட என் ஜனங்களை பணமோ லஞ்சமோ வாங்காமல்+ விடுதலை செய்வார்”+ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.
14 யெகோவா சொல்வது இதுதான்:
“எத்தியோப்பிய ஜனங்களுக்கும் உயரமான சபேயர்களுக்கும் சொந்தமான சரக்குகளும்,* எகிப்தியர்களின் சொத்தும்*
உன் கைக்கு வந்து சேரும், அது உனக்குச் சொந்தமாகும்.
அவர்கள் விலங்குகளை மாட்டிக்கொண்டு உனக்குப் பின்னால் நடந்து வருவார்கள்.
உன்முன் வந்து தலைவணங்குவார்கள்.+
பின்பு உன்னிடம், ‘கடவுள் நிச்சயமாகவே உங்களோடு இருக்கிறார்.+
அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை, அவர் மட்டும்தான் கடவுள்’ என்று பயபக்தியோடு சொல்வார்கள்.”
16 சிலைகளைச் செய்பவர்கள் எல்லாரும் கேவலப்பட்டுப் போவார்கள்.
அவர்கள் எல்லாரும் வெட்கப்பட்டு, அவமானப்பட்டுப் போவார்கள்.+
17 ஆனால் இஸ்ரவேலர்களே, யெகோவா உங்களை என்றென்றும் மீட்பார்.+
நீங்கள் ஒருபோதும் அவமானமோ கேவலமோ அடைய மாட்டீர்கள்.+
18 யெகோவாதான் உண்மையான கடவுள்; அவரே வானத்தைப் படைத்தார்.+ அவரே பூமியை உருவாக்கி, அதை உறுதியாக நிலைநிறுத்தினார்.+
அவர் அதைக் காரணம் இல்லாமல்* படைக்கவில்லை; ஜனங்கள் குடியிருப்பதற்காகவே படைத்தார்.+
அவர் சொல்வது இதுதான்:
“நான் யெகோவா, என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.
19 நான் மறைவான இடத்திலிருந்தோ இருட்டான இடத்திலிருந்தோ பேசவில்லை.+
யாக்கோபின் வாரிசிடம், ‘எந்தப் பலனும் எதிர்பார்க்காமல் என்னை வணங்கு’ என்று நான் சொல்லவில்லை.
நான் யெகோவா, நான் நீதியானதைப் பேசுபவர், உண்மையானதை அறிவிப்பவர்.+
20 மற்ற தேசங்களிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களே,
நீங்கள் ஒன்றுகூடுங்கள், திரண்டு வாருங்கள்.+
செதுக்கப்பட்ட சிலைகளைச் சுமந்து செல்கிறவர்களுக்கும்,
காப்பாற்ற முடியாத தெய்வங்களிடம் வேண்டுகிறவர்களுக்கும் அறிவே இல்லை.+
21 நீங்கள் உங்களுடைய வழக்கைச் சொல்லுங்கள், ஆதாரங்களைக் காட்டுங்கள்.
ஒன்றாகக் கலந்துபேசுங்கள்.
ரொம்பக் காலத்துக்கு முன்பே இதைச் சொன்னது யார்?
பூர்வ காலத்திலிருந்தே இதை அறிவித்தது யார்?
யெகோவாவாகிய நான்தானே?
என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.
நீதியான கடவுளும் மீட்பரும் நான்தான்;+ என்னைப் போல வேறு யாரும் இல்லை.+
22 பூமியெங்கும் இருப்பவர்களே, என்னிடம் திரும்பி வாருங்கள், அப்போது காப்பற்றப்படுவீர்கள்.+
ஏனென்றால் நான்தான் கடவுள், என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை.+
23 நான் என்மேல் சத்தியம் செய்திருக்கிறேன்.
என் வாயிலிருந்து வரும் இந்த வார்த்தை நீதியானது,
இது நிறைவேறாமல் போகாது:+
எனக்கு முன்னால் எல்லாரும் மண்டிபோடுவார்கள்.
எனக்கு விசுவாசமாய்* இருக்கப்போவதாக எல்லாரும் சத்தியம் செய்வார்கள்.+
24 அதோடு இப்படிச் சொல்வார்கள்: ‘யெகோவாதான் உண்மையிலேயே நீதியான கடவுள், பலம்படைத்தவர்.
அவரை எதிர்க்கிற எல்லாரும் அவமானப்பட்டுப் போவார்கள்.