சங்கீதம்
நம் கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது.
அவரைப் புகழ்வது எவ்வளவு இனிமையானது! எவ்வளவு பொருத்தமானது!+
3 உள்ளம் உடைந்தவர்களை அவர் குணமாக்குகிறார்.
அவர்களுடைய காயங்களுக்குக் கட்டுப் போடுகிறார்.
7 யெகோவாவுக்கு நன்றி சொல்லிப் பாடுங்கள்.
யாழ் இசைத்து நம் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
8 அவர் வானத்தை மேகங்களால் மூடுகிறார்.
பூமிக்கு மழை தருகிறார்.+
மலைகள்மேல் புல்லை முளைக்க வைக்கிறார்.+
10 குதிரைகளின் பலத்தைப் பார்த்து அவர் ஆச்சரியப்படுவதில்லை.+
மனிதனுடைய கால்களின் வலிமையைப் பார்த்து அவர் அசந்துபோவதில்லை.+
11 யெகோவா தனக்குப் பயந்து நடக்கிறவர்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்.+
தன்னுடைய மாறாத அன்புக்காகக் காத்திருப்பவர்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்.+
12 எருசலேமே, யெகோவாவை மகிமைப்படுத்து.
சீயோனே, உன் கடவுளைப் புகழ்ந்திடு.
13 உன்னுடைய வாசலின் தாழ்ப்பாள்களை அவர் உறுதியாக்குகிறார்.
உன்னிடம் இருக்கிற உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
14 உன்னுடைய எல்லைகளுக்குள் சமாதானத்தைப் பொழிகிறார்.+
உயர்தரமான கோதுமையால் உன்னைத் திருப்தியாக்குகிறார்.+
15 அவர் பூமிக்குக் கட்டளை கொடுக்கிறார்.
அவருடைய வார்த்தை வேகமாக ஓடிவருகிறது.
16 பூமியை வெள்ளைக் கம்பளத்தால் மூடுவதுபோல் பனியால் அவர் மூடுகிறார்.+
சாம்பலைத் தூவுவதுபோல் உறைபனியைத் தூவுகிறார்.+
17 ஆலங்கட்டிகளை* ரொட்டித் துணுக்குகள்போல் விழ வைக்கிறார்.+
அவர் வர வைக்கும் குளிரை யாரால் தாங்க முடியும்?+
18 அவர் கட்டளை கொடுக்கிறார், ஆலங்கட்டிகள் உருகுகின்றன.
அவர் தன்னுடைய காற்றை வீச வைக்கிறார்,+ தண்ணீர் பாய்ந்தோடுகிறது.
19 யாக்கோபுக்குத் தன்னுடைய வார்த்தையைச் சொல்கிறார்.
இஸ்ரவேலுக்குத் தன்னுடைய விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும் தெரியப்படுத்துகிறார்.+