நீதிமொழிகள்
27 நாளைக்குச் செய்யப்போவதைப் பற்றிப் பெருமையாகப் பேசாதே,
நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?+
2 உன்னை நீயே புகழாதே, இன்னொருவன் உன்னைப் புகழட்டும்.
உன் உதடுகள் அல்ல, மற்றவர்களுடைய உதடுகளே உன்னை மெச்சட்டும்.+
4 ஆவேசம் கொடூரமானது, கோபம் வெள்ளப்பெருக்குபோல் பயங்கரமானது.
ஆனால், பொறாமை இதையெல்லாம்விட படுமோசமானது.+
5 வெளிப்படையாகக் கண்டிப்பதே மறைத்து வைக்கப்படும் அன்பைவிட மேலானது.+
6 நண்பன் உண்மையுள்ளவனாக இருப்பதால் காயங்களை ஏற்படுத்துகிறான்.+
ஆனால், எதிரி ஏராளமான* முத்தங்களைக் கொடுக்கிறான்.
7 திருப்தியாகச் சாப்பிட்டவனுக்குத் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தேன்கூட கசக்கும்.
ஆனால், பசியில் வாடுகிறவனுக்குக் கசப்பானதுகூட இனிக்கும்.
8 வீட்டைவிட்டு அலைந்து திரிகிற மனிதனும்
கூட்டைவிட்டுப் பறந்து திரிகிற பறவையும் ஒன்றுதான்.
9 அக்கறையோடு ஆலோசனை தருகிறவருடைய இனிய நட்பு,
எண்ணெயையும் தூபப்பொருளையும் போலவே இதயத்துக்குச் சந்தோஷம் தரும்.+
10 உன் நண்பனையோ உன் அப்பாவின் நண்பனையோ அலட்சியம் செய்யாதே,
ஆபத்து நாளில் உன் சகோதரனுடைய வீட்டுக்குப் போகாதே.
தூரத்தில் இருக்கிற சகோதரனைவிட பக்கத்தில் இருக்கிற நண்பனே மேல்.+
11 என் மகனே, ஞானமாக நடந்து என் இதயத்தைச் சந்தோஷப்படுத்து.+
அப்போதுதான், என்னைப் பழித்துப் பேசுகிறவனுக்கு* என்னால் பதிலடி கொடுக்க முடியும்.+
12 சாமர்த்தியசாலி ஆபத்தைப் பார்த்து மறைந்துகொள்கிறான்.+
ஆனால், அனுபவமில்லாதவன் நேராகப் போய் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறான்.*
13 ஒருவன் முன்பின் தெரியாதவரின் கடனுக்குப் பொறுப்பேற்றிருந்தால், அவனுடைய அங்கியை எடுத்துக்கொள்.
அன்னியப் பெண்ணுக்காக* அவன் அப்படிச் செய்திருந்தால், அவனிடம் அடமானம் வாங்காமல் விடாதே.+
14 ஒருவன் விடியற்காலையிலே சத்தமான குரலில் யாரையாவது ஆசீர்வதித்தால்,
அது சாபமாகத்தான் கருதப்படும்.
15 சண்டைக்கார* மனைவி மழை நாளில் ஒழுகிக்கொண்டே இருக்கிற கூரைபோல் இருக்கிறாள்.+
16 அவளை அடக்குவதைவிட காற்றை அடக்கிவிடலாம்,
எண்ணெயையும் வலது கையில் பிடித்துக்கொள்ளலாம்.
18 அத்தி மரத்தைக் கவனித்துக்கொள்பவன் அதன் பழத்தைச் சாப்பிடுவான்.+
எஜமானைக் கவனித்துக்கொள்பவன் மதிப்பு மரியாதையைச் சம்பாதிப்பான்.+
19 தண்ணீர் ஒருவனின் முகத்தைப் பிரதிபலிப்பதுபோல்,
ஒருவனின் இதயம் இன்னொருவனின் இதயத்தைப் பிரதிபலிக்கிறது.
20 கல்லறையும் புதைகுழியும் ஒருபோதும் திருப்தி அடையாது.+
அதேபோல், மனிதனுடைய கண்களும் ஒருபோதும் திருப்தி அடையாது.
22 தானியத்தை உரலில் போட்டு இடித்து நொறுக்குவது போல,
முட்டாளை உலக்கையால் இடித்து நொறுக்கினாலும்,
அவனுடைய முட்டாள்தனம் அவனைவிட்டுப் போகாது.
23 உன் மந்தையின் நிலைமையை நீ நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
உன் ஆடுகள் ஒவ்வொன்றையும் அக்கறையோடு கவனித்துக்கொள்.*+
24 சொத்து என்றென்றும் நிலைக்காது.+
கிரீடம் எல்லா தலைமுறைக்கும் நிலைக்காது.
25 பசும்புல் வாடிவிடும், புதிதாகப் புல் முளைக்கும்,
மலைகளிலுள்ள புல்பூண்டுகள் சேகரிக்கப்படும்.
26 செம்மறியாட்டுக் கடாக் குட்டிகள் உனக்கு உடையைத் தரும்.
வெள்ளாட்டுக் கடாக்கள் உனக்கு வயலை வாங்கித் தரும்.
27 வெள்ளாடுகள் உனக்கும் உன் குடும்பத்துக்கும் போதுமான அளவு பால் கொடுக்கும்.
அதனால் உன் வேலைக்காரிகளும் பிழைப்பார்கள்.