2 சாமுவேல்
22 சவுலிடமிருந்தும் மற்ற எல்லா எதிரிகளிடமிருந்தும் யெகோவா தாவீதைக் காப்பாற்றினார்.+ அப்போது, யெகோவாவுக்கு முன்பாக தாவீது இந்தப் பாடலைப் பாடினார்.+ 2 அவர் பாடியது:
“யெகோவாதான் என்னுடைய மாபெரும் கற்பாறை, என் கோட்டை.+ என்னைக் காப்பாற்றுபவர்.+
3 என் கடவுள்தான் நான் தஞ்சம் தேடும் கற்பாறை.+
அவர்தான் என் கேடயம்,+ பலம்படைத்த மீட்பர்,* பாதுகாப்பான* அடைக்கலம்,+
என் புகலிடம்,+ என் மீட்பர்,+ வன்முறையிலிருந்து என்னைக் காப்பவர்.
4 எல்லா புகழையும் பெறத் தகுதியுள்ளவரான யெகோவாவை நான் கூப்பிடுவேன்,
எதிரிகளிடமிருந்து அவர் என்னைக் காப்பாற்றுவார்.
5 மரண அலைகள் என்னைச் சுற்றி அடித்தன;+
ஒன்றுக்கும் உதவாதவர்கள் வெள்ளம்போல் திரண்டு வந்து எனக்குத் திகிலூட்டினார்கள்.+
7 இக்கட்டில் தவித்தபோது நான் யெகோவாவைக் கூப்பிட்டேன்,+
என் கடவுளை நோக்கிக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தேன்.
அப்போது, அவருடைய ஆலயத்திலிருந்து அவர் என் குரலைக் கேட்டார்,
என் கதறல் அவருடைய காதுகளை எட்டியது.+
8 பூமி அதிர்ந்து பயங்கரமாகக் குலுங்கியது;+
அவருடைய கோபத்தால் வானத்தின் அஸ்திவாரங்கள் அதிர்ந்தன,+
அவை கிடுகிடுவென ஆடின.+
9 அவருடைய மூக்கிலிருந்து புகை எழும்பியது.
சுட்டுப்பொசுக்கும் தீ அவர் வாயிலிருந்து புறப்பட்டது.+
தகதகக்கும் தணல்கள் அவரிடமிருந்து தெறித்தன.
11 கேருபீனின் மேல் ஏறி அவர் பறந்து வந்தார்.+
தேவதூதரின்* இறக்கைகள்மேல் காட்சி தந்தார்.+
13 அவருடைய பிரகாசமான சன்னிதியில் நெருப்புத் தணல்கள் தகதகத்தன.
14 பின்பு, யெகோவா வானத்திலிருந்து இடிபோல் முழங்கினார்;+
உன்னதமான கடவுள் தன்னுடைய குரலைக் கேட்கச் செய்தார்.+
15 அம்புகளை எறிந்து+ எதிரிகளைச் சிதறிப்போக வைத்தார்;
மின்னலை அனுப்பி அவர்களைக் குழம்பிப்போக வைத்தார்.+
16 யெகோவா அதட்டினார்,
அவருடைய மூச்சுக்காற்று பலமாக அடித்தது.+
அப்போது, கடலின் அடிப்பரப்பு வெளியே தெரிந்தது;+
பூமியின் அஸ்திவாரங்களும் தெரிந்தன.
17 உயரத்திலிருந்து அவர் தன்னுடைய கையை நீட்டி,
என்னைப் பிடித்து, ஆழமான தண்ணீரிலிருந்து தூக்கிவிட்டார்.+
18 பலம்படைத்த எதிரியிடமிருந்து என்னைக் காப்பாற்றினார்,+
என்னைவிட வலிமையான விரோதிகளிடமிருந்து என்னை விடுவித்தார்.
20 பாதுகாப்பான* இடத்துக்கு என்னைக் கொண்டுவந்தார்;+
என்மேல் வைத்திருந்த பிரியத்தால் என்னைக் காப்பாற்றினார்.+
22 நான் எப்போதும் யெகோவாவின் வழிகளில் நடக்கிறேன்.
என் கடவுளைவிட்டு நான் விலகவில்லை, அந்தப் பாவத்தை நான் செய்யவில்லை.
23 அவருடைய நீதித்தீர்ப்புகளைக்+ கண் முன்னால் வைத்திருக்கிறேன்.
அவருடைய சட்டதிட்டங்களை விட்டுவிலக மாட்டேன்.+
26 உண்மையுள்ளவரிடம்* நீங்கள் உண்மையுள்ளவராக* நடந்துகொள்கிறீர்கள்;+
குற்றமற்றவரிடம் நீங்கள் குற்றமற்றவராக நடந்துகொள்கிறீர்கள்;+
27 தூய்மையானவருக்கு நீங்கள் தூய்மையானவராக இருக்கிறீர்கள்,+
குறுக்குபுத்திக்காரரிடம் நீங்கள் புத்திசாலித்தனமாக* நடந்துகொள்கிறீர்கள்.+
28 தாழ்மையுள்ளவர்களைக் காப்பாற்றுகிறீர்கள்,+
கர்வமுள்ளவர்களை உங்களுடைய கண்கள் வெறுக்கின்றன; நீங்கள் அவர்களைத் தாழ்த்துகிறீர்கள்.+
தன்னிடம் தஞ்சம் தேடி வருகிற எல்லாருக்கும் அவர் கேடயமாக இருக்கிறார்.+
32 யெகோவாவைத் தவிர வேறு கடவுள் உண்டா?+
நம் கடவுளைத் தவிர வேறு கற்பாறை உண்டா?+
35 போர் செய்ய என் கைகளுக்குப் பயிற்சி தருகிறார்;
அதனால், என் கைகளால் செம்பு வில்லை வளைக்க முடியும்.
36 உங்களுடைய மீட்பின் கேடயத்தை எனக்குக் கொடுக்கிறீர்கள்,
உங்கள் மனத்தாழ்மையால் என்னை உயர்த்துகிறீர்கள்.+
38 நான் எதிரிகளைத் துரத்திக்கொண்டு போய்த் தீர்த்துக்கட்டுவேன்.
அவர்களை அடியோடு அழித்துவிட்டுத்தான் திரும்புவேன்.
39 அவர்களை ஒழித்துக்கட்டுவேன், மறுபடியும் எழுந்து வர முடியாதபடி நொறுக்குவேன்;+
அவர்கள் என் காலடியில் விழுவார்கள்.
42 அவர்கள் உதவி கேட்டுக் கதறுகிறார்கள், ஆனால் அவர்களைக் காப்பாற்ற யாரும் இல்லை.
அவர்கள் யெகோவாவிடமும் கதறுகிறார்கள், ஆனால் அவர் பதில் சொல்வதில்லை.+
43 தரையில் கிடக்கிற தூசியைப் போல் அவர்களை நான் தூள்தூளாக்குவேன்;
அவர்களைச் சுக்குநூறாக்கி, தெருக்களில் கிடக்கிற சேற்றைப் போல் மிதித்துப்போடுவேன்.
44 என்னை எதிர்க்கிற* ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுவீர்கள்.+
என்னைப் பாதுகாத்து தேசங்களுக்குத் தலைவனாக்குவீர்கள்;+
முன்பின் தெரியாத மக்கள் எனக்குச் சேவை செய்வார்கள்.+
45 மற்ற தேசத்து மக்கள் என் முன்னால் அடங்கி ஒடுங்கி நிற்பார்கள்.+
என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு எனக்குக் கீழ்ப்படிவார்கள்.
46 மற்ற தேசத்து மக்கள் வெலவெலத்துப்போவார்கள்.*
அவர்களுடைய கோட்டைகளிலிருந்து நடுநடுங்கிக்கொண்டு வருவார்கள்.
47 யெகோவாதான் உயிருள்ள கடவுள்! அவரே என் கற்பாறை!+ அவருக்குப் புகழ் சேரட்டும்!
கடவுள்தான் என்னை மீட்கும் கற்பாறை, அவர் போற்றப்படட்டும்.+
48 உண்மைக் கடவுள் எனக்காகப் பழிவாங்குகிறார்.+
மக்களை என் முன்னால் அடிபணிய வைக்கிறார்.+
49 எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுகிறார்.
என்னைத் தாக்க வருகிறவர்களின் கைக்கு எட்டாதபடி என்னைத் தூக்கிக்கொள்கிறார்.+
கொடியவனிடமிருந்து என்னைப் பாதுகாக்கிறார்.+