புலம்பல்
א [ஆலெஃப்]
2 ஐயோ! யெகோவாவின் கோபம் சீயோன் மகளை மேகம்போல் மூடிவிட்டதே!
இஸ்ரவேலின் மகிமையை அவர் வானத்திலிருந்து மண்ணுக்குத் தள்ளிவிட்டார்.+
தன்னுடைய கோபத்தின் நாளில் தன்னுடைய கால்மணையை+ அவர் நினைத்துப் பார்க்கவில்லை.
ב [பேத்]
2 யாக்கோபு குடியிருந்த இடங்களையெல்லாம் யெகோவா கரிசனை இல்லாமல் அழித்துவிட்டார்.
யூதா மகளின் கோட்டைகளைக் கோபத்தோடு இடித்துப்போட்டார்.+
அவளைத் தரைமட்டமாக்கி, அவளுடைய தேசத்துக்கும் தலைவர்களுக்கும்+ அவமானத்தை வர வைத்துவிட்டார்.+
ג [கீமெல்]
3 கோபத் தீயினால் இஸ்ரவேலின் அதிகாரத்தையெல்லாம் அழித்துவிட்டார்.
எதிரி வந்தபோது இஸ்ரவேலுக்குக் கைகொடுத்து உதவாமல் போய்விட்டார்.+
அவருடைய கோபம் யாக்கோபின் மேல் நெருப்பாய்ப் பற்றியெரிந்தது.
அவனைச் சுற்றியிருந்த எல்லாவற்றையும் அது சுட்டெரித்தது.+
ד [டாலத்]
4 எதிரியைப் போலத் தாக்குவதற்காக அவர் வில்லை வளைத்து, வலது கையைத் தயாராக வைத்தார்.+
கண்களுக்கு அருமையான எல்லாரையும் கொன்றுபோட்டார்.+
சீயோன் மகளுடைய கூடாரத்துக்குள்+ கோபத்தைத் தீ போலக் கொட்டினார்.+
ה [ஹே]
அவளுடைய எல்லா கோபுரங்களையும் தரைமட்டமாக்கிவிட்டார்.
அவளுடைய எல்லா கோட்டைகளையும் நாசமாக்கிவிட்டார்.
யூதாவைப் பயங்கரமாக அழுது புலம்ப வைத்துவிட்டார்.
ו [வா]
6 தோட்டத்தில் இருக்கிற பந்தலைப் போலத் தன்னுடைய கூடாரத்தைப் பிரித்தெறிந்தார்.+
தன்னுடைய பண்டிகைக்கு முடிவுகட்டினார்.+
பண்டிகையையும் ஓய்வுநாளையும் சீயோன் மறந்துபோகும்படி யெகோவா செய்துவிட்டார்.
பயங்கர கோபத்தினால் ராஜாக்களையும் குருமார்களையும் வெறுத்து ஒதுக்கிவிட்டார்.+
ז [ஸாயின்]
சீயோனின் கோட்டைச் சுவர்களை எதிரிகளின் கையில் கொடுத்துவிட்டார்.+
பண்டிகை நாளின் ஆரவாரத்தைப் போல யெகோவாவின் ஆலயத்தில் அவர்களுடைய ஆரவாரம் கேட்கிறது.+
ח [ஹேத்]
8 சீயோன் மகளுடைய மதிலை இடித்துப்போட+ யெகோவா தீர்மானம் செய்துவிட்டார்.
அளவுநூலை எடுத்து அளந்துவிட்டார்.+
அழிவைக் கொண்டுவர அவர் தயங்கவில்லை.
அரணையும் மதிலையும் அழுது புலம்ப வைத்தார்.
அவற்றின் பலமெல்லாம் போய்விட்டது.
ט [டேத்]
9 அவளுடைய வாசல் கதவுகள் மண்ணில் புதைந்துவிட்டன.+
அவளுடைய தாழ்ப்பாள்களை அவர் உடைத்தெறிந்தார்.
அவளுடைய ராஜாக்களும் அதிகாரிகளும் வேறு தேசத்து ஜனங்களோடு இருக்கிறார்கள்.+
சட்டத்தை* யாரும் கடைப்பிடிப்பது இல்லை; அவளுடைய தீர்க்கதரிசிகளுக்குக்கூட யெகோவாவிடமிருந்து எந்தத் தரிசனமும் கிடைப்பதில்லை.+
י [யோத்]
10 சீயோன் மகளின் பெரியோர்கள்* ஒன்றும் பேசாமல் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள்.+
தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொள்கிறார்கள்; துக்கத் துணியை* உடுத்தியிருக்கிறார்கள்.+
எருசலேமின் கன்னிப்பெண்கள் தலைகுனிந்து நிற்கிறார்கள்.
כ [காஃப்]
11 அழுது அழுது என் கண்கள் வீங்கிவிட்டன.+
என் குடல் துடிக்கிறது.
என்னுடைய ஈரல் உருகி தரையில் ஓடுகிறது.
என் ஜனங்கள் அழிந்துபோனார்களே!+
பிள்ளைகளும் குழந்தைகளும் நகரத்தின் பொது சதுக்கங்களில் சுருண்டு விழுகிறார்களே!+
ל [லாமெத்]
12 படுகாயம் அடைந்தவர்களைப் போல அவர்கள் மயக்கத்தில் கிடக்கிறார்கள்.
“சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் ஒன்றுமே இல்லையா?”+ என்று முனகிக்கொண்டே
தங்களுடைய தாயின் மடியில் உயிரை விடுகிறார்கள்.
מ [மேம்]
13 எருசலேம் மகளே, நான் உனக்கு எதை ஆதாரமாகக் காட்டுவேன்?
உன்னை எதனோடு ஒப்பிடுவேன்?
கன்னிப்பெண்ணாகிய சீயோனே, நான் உன்னை எதனோடு ஒப்பிட்டு ஆறுதல் சொல்வேன்?
உன்னுடைய காயம் கடலைப் போலப் பெரிதாக இருக்கிறதே.+ யாரால் உன்னைக் குணமாக்க முடியும்?+
נ [நூன்]
14 உன்னுடைய தீர்க்கதரிசிகள் பார்த்த தரிசனங்கள் பொய்யானவை, அர்த்தமற்றவை.+
அவர்கள் உன்னுடைய குற்றத்தைச் சுட்டிக்காட்டவில்லை; நீ சிறைபிடிக்கப்பட்டுப் போவதைத் தடுக்கவில்லை.+
பொய்த் தரிசனங்களைச் சொல்லிச் சொல்லியே உன்னை ஏமாற்றினார்கள்.+
ס [சாமெக்]
15 வழியில் போகிறவர்கள் உன்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறார்கள்.+
எருசலேம் மகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டு,*+ தலையாட்டி,
“இந்த நகரத்தையா ‘அழகே உருவான நகரம்,
உலகத்துக்கே சந்தோஷம் தருகிற நகரம்’ என்றெல்லாம் புகழ்ந்தார்கள்?”+ என்று சொல்கிறார்கள்.
פ [பே]*
16 உன்னைப் பார்த்து எதிரிகள் கிண்டல் செய்து விசில் அடிக்கிறார்கள்.
பற்களைக் கடித்துக்கொண்டு, “நாம் அவளை விழுங்கிவிட்டோம்.+
இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தோம்.+ அது வந்துவிட்டது!
நம் கண்ணாலேயே பார்த்துவிட்டோம்!”+ என்று சொல்கிறார்கள்.
ע [ஆயின்]
கரிசனை காட்டாமல் அழித்துவிட்டார்.+
உன்னைப் பார்த்து எதிரி சந்தோஷப்படும்படி செய்துவிட்டார்.
உன் விரோதிகளுக்கு அதிக பலம் தந்துவிட்டார்.
צ [சாதே]
18 சீயோன் மகளின் மதிலே, ஜனங்கள் யெகோவாவிடம் கதறுகிறார்கள்.
ராத்திரி பகலாகக் கண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடட்டும்.
நீ ஓய்வெடுக்காதே; உன் கண்களுக்கு ஓய்வே கொடுக்காதே.
ק [கோஃப்]
19 எழுந்திரு! ராத்திரியிலே, முதல் ஜாமத்திலே, கதறி அழு!
யெகோவாவுக்கு முன்னால் உன் இதயத்தைத் தண்ணீர்போல் ஊற்றிவிடு.
பஞ்சத்தின் கொடுமையால் தெரு முனைகளில் சுருண்டு விழுகிற+ உன் பிள்ளைகளுக்காக
அவரிடம் உயிர்ப்பிச்சை கேட்டுக் கெஞ்சு.
ר [ரேஷ்]
20 யெகோவாவே, உங்களிடம் கடுமையான தண்டனை பெற்றவளைப் பாருங்கள்.
பெண்கள் தாங்கள் பெற்றெடுத்த குழந்தைகளையே சாப்பிட வேண்டுமா?+
குருமார்களும் தீர்க்கதரிசிகளும் யெகோவாவின் ஆலயத்தில் கொல்லப்பட வேண்டுமா?+
ש [ஷீன்]
21 சிறுவர்களும் பெரியவர்களும் தெருக்களில் செத்துக் கிடக்கிறார்கள்.+
என்னுடைய வாலிபப் பெண்களும்* வாலிபப் பையன்களும் வாளால் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள்.+
உங்களுடைய கோபத்தின் நாளில் அவர்களைக் கொன்றுவிட்டீர்கள்.
கரிசனை காட்டாமல் அவர்களை வெட்டிப்போட்டீர்கள்.+
ת [ட்டா]
22 பண்டிகைக்காக+ ஜனங்களை வரவழைப்பது போல,
எல்லா திசைகளிலிருந்தும் நீங்கள் திகிலை வரவழைத்திருக்கிறீர்கள்.
யெகோவாவுடைய கோபத்தின் நாளில் யாருமே தப்பிக்கவில்லை, யாருமே பிழைக்கவில்லை.+
நான் பெற்றெடுத்து வளர்த்தவர்களை எதிரி கொன்றுபோட்டான்.+