1 நாளாகமம்
16 உண்மைக் கடவுளின் பெட்டியை வைப்பதற்காக தாவீது போட்டிருந்த கூடாரத்துக்குள் அதைக் கொண்டுவந்து வைத்தார்கள்.+ பின்பு, உண்மைக் கடவுளுக்கு முன்னால் தகன பலிகளையும் சமாதான பலிகளையும் கொடுத்தார்கள்.+ 2 தாவீது தகன பலிகளையும்+ சமாதான பலிகளையும்+ கொடுத்த பின்பு, யெகோவாவுடைய பெயரில் மக்களை ஆசீர்வதித்தார். 3 அதோடு, அங்கே வந்திருந்த இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும், ஆண்கள் பெண்கள் ஒவ்வொருவருக்கும், ஒரு வட்ட ரொட்டியையும் பேரீச்ச அடையையும் உலர்ந்த திராட்சை அடையையும் கொடுத்தார். 4 பின்பு, யெகோவாவின் பெட்டிக்கு+ முன்னால் சேவை செய்வதற்கும் இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவை மகிமைப்படுத்துவதற்கும்* போற்றிப் புகழ்வதற்கும் அவருக்கு நன்றி சொல்வதற்கும் சில லேவியர்களை நியமித்தார். 5 அவர்களுடைய தலைவர் ஆசாப்.+ அவருக்கு அடுத்த இடத்தில் சகரியா இருந்தார். எயியேல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்-ஏதோம், எயியேல்+ ஆகியோர் யாழ்களையும் மற்ற நரம்பிசைக் கருவிகளையும் வாசித்தார்கள்.+ ஆசாப் ஜால்ராக்களைத் தட்டி ஓசையெழுப்பினார்.+ 6 குருமார்களான பெனாயாவும் யகாசியேலும் உண்மைக் கடவுளின் ஒப்பந்தப் பெட்டிக்கு முன்னால் எப்போதும் எக்காளங்களை ஊதினார்கள்.
7 அன்று யெகோவாவுக்கு முதன்முதலில் தாவீது நன்றிப் பாடலை எழுதினார், அந்தப் பாடலைப் பாடச் சொல்லி ஆசாப்பிடமும்+ அவருடைய சகோதரர்களிடமும் சொன்னார். அந்தப் பாடல் இதுதான்:
8 “யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள்,+ அவருடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்.
அவருடைய செயல்களை எல்லாருக்கும் சொல்லுங்கள்!+
9 அவருக்காகப் பாடல் பாடுங்கள், அவரைப் புகழ்ந்து பாடுங்கள்,+
அவருடைய அதிசயமான செயல்கள் எல்லாவற்றையும் ஆழ்ந்து யோசியுங்கள்.*+
10 அவருடைய பரிசுத்த பெயரைப் பற்றிப் பெருமையாகப் பேசுங்கள்.+
யெகோவாவை நாடுகிறவர்களின் இதயம் சந்தோஷத்தில் துள்ளட்டும்.+
11 யெகோவாவைத் தேடுங்கள்,+ அவரிடம் பலம் கேட்டு வேண்டுங்கள்.
எப்போதும் அவருடைய முகத்தையே நாடுங்கள்.+
12 அவருடைய ஊழியரான இஸ்ரவேலின் சந்ததியே,+ யாக்கோபின் வம்சமே, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனமே!+
13 அவர் செய்த அதிசயமான செயல்களையும்+ அற்புதங்களையும்
அவர் கொடுத்த நீதித்தீர்ப்புகளையும் நினைத்துப் பாருங்கள்.
14 அவர்தான் நம் கடவுளாகிய யெகோவா.+
அவருடைய நீதித்தீர்ப்புகள் பூமி முழுவதும் கொடுக்கப்படுகின்றன.+
15 அவர் செய்த ஒப்பந்தத்தை எப்போதும் நினைத்துப் பாருங்கள்;
ஆயிரமாயிரம் தலைமுறைகளுக்குத் தந்த வாக்குறுதியை நினைத்துப் பாருங்கள்.+
16 ஆபிரகாமோடு செய்த ஒப்பந்தத்தையும்,+
ஈசாக்குக்குக் கொடுத்த உறுதிமொழியையும்+ நினைத்துப் பாருங்கள்,
17 அதை யாக்கோபுக்கு ஓர் ஆணையாகவும்,+
இஸ்ரவேலுக்கு ஒரு நிரந்தர ஒப்பந்தமாகவும் கொடுத்து உறுதிப்படுத்தினார்.
18 அப்போது, ‘கானான் தேசத்தை+ உனக்குச் சொத்தாகத் தருவேன்’+ என்று சொன்னார்.
19 அந்தச் சமயத்தில் அவர்கள் கொஞ்சம் பேர்தான் இருந்தார்கள்,
கொஞ்சத்திலும் கொஞ்சம் பேர்தான் இருந்தார்கள், அந்தத் தேசத்தில் அன்னியர்களாக இருந்தார்கள்.+
21 அவர்களை அடக்கி ஒடுக்க எந்த மனிதனையும் கடவுள் அனுமதிக்கவில்லை,+
ஆனால், அவர்களுக்காக ராஜாக்களையே கண்டித்து,+
22 ‘நான் தேர்ந்தெடுத்தவர்கள்மேல்* கை வைக்காதீர்கள்,
என் தீர்க்கதரிசிகளுக்கு எந்தக் கெடுதலும் செய்யாதீர்கள்’+ என்று சொன்னார்.
23 பூமியெங்கும் உள்ளவர்களே, யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்!
அவர் தரும் மீட்பைப் பற்றித் தினம் தினம் அறிவியுங்கள்!+
24 அவருடைய மகிமையைப் பற்றித் தேசங்களுக்குச் சொல்லுங்கள்,
அவருடைய அற்புதமான செயல்களைப் பற்றி எல்லா மக்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
25 யெகோவா மகத்தானவர், எல்லா புகழையும் பெறத் தகுதியானவர்.
மற்ற எல்லா தெய்வங்களையும்விட அதிக பயபக்திக்குரியவர்.+
26 மக்கள் வணங்கும் தெய்வங்களெல்லாம் ஒன்றுக்குமே உதவாத தெய்வங்கள்,+
ஆனால், யெகோவாதான் வானத்தைப் படைத்தவர்.+
27 மகத்துவமும் மேன்மையும் அவருடைய சன்னிதியில் இருக்கின்றன.+
பலமும் சந்தோஷமும் அவருடைய வீட்டில் இருக்கின்றன.+
28 ஜனங்களின் வம்சங்களே, யெகோவாவுக்குச் செலுத்த வேண்டிய புகழைச் செலுத்துங்கள்,
யெகோவாவின் மகிமைக்கும் பலத்துக்கும் செலுத்த வேண்டிய புகழைச் செலுத்துங்கள்.+
29 யெகோவாவின் பெயருக்குக் கொடுக்க வேண்டிய மகிமையைக் கொடுங்கள்;+
காணிக்கையோடு அவர் முன்னால் வாருங்கள்.+
பரிசுத்த உடையில்* யெகோவாவை வணங்குங்கள்.*+
30 பூமியெங்கும் உள்ளவர்களே! அவர் முன்னால் நடுநடுங்குங்கள்!
பூமி உறுதியாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது, அதை அசைக்கவே முடியாது.+
31 வானம் சந்தோஷப்படட்டும், பூமி பூரித்துப்போகட்டும்;+
‘யெகோவா ராஜாவாகிவிட்டார்!’ என்று தேசங்களுக்குச் சொல்லுங்கள்.+
32 கடலும் அதில் நிறைந்திருப்பவையும் முழக்கம் செய்யட்டும்;
வயல்களும் அவற்றிலுள்ள அனைத்தும் ஆனந்தப்படட்டும்.
33 அவற்றோடு சேர்ந்து காட்டு மரங்களும் கடவுளுக்குமுன் சந்தோஷக் குரல் எழுப்பட்டும்.
ஏனென்றால், யெகோவா பூமிக்குத் தீர்ப்பு கொடுக்க வருகிறார்.
35 ‘எங்களை மீட்கிற கடவுளே, எங்களைக் காப்பாற்றுங்கள்,+
மற்ற தேசங்களிலிருந்து எங்களைக் கூட்டிச்சேர்த்து எங்களைக் காப்பாற்றுங்கள்.
அப்போது, உங்களுடைய பரிசுத்தமான பெயருக்கு நன்றி சொல்வோம்,+
சந்தோஷம் பொங்க உங்களைப் புகழ்வோம்.+
36 இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவுக்கு என்றென்றும் புகழ் சேரட்டும்.’”
இந்தப் பாடலைக் கேட்ட மக்கள் எல்லாரும், “ஆமென்!”*
என்று சொல்லி யெகோவாவைப் புகழ்ந்தார்கள்.
37 பின்பு, யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டிக்கு முன்னால் எப்போதும் சேவை செய்ய ஆசாப்பையும்+ அவருடைய சகோதரர்களையும் தாவீது நியமித்தார்.+ அங்கே வழக்கமாகச் செய்ய வேண்டிய வேலைகளை அவர்கள் தினமும் செய்வதற்காக+ அவர்களை நியமித்தார். 38 அதோடு, ஓபேத்-ஏதோமையும் அவருடைய சகோதரர்கள் 68 பேரையும் நியமித்தார். எதித்தூனின் மகன் ஓபேத்-ஏதோமையும் ஓசாவையும் வாயிற்காவலர்களாக நியமித்தார்; 39 யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரம் கிபியோனிலுள்ள+ ஆராதனை மேட்டில் இருந்தது. அங்கே குருவாகிய சாதோக்கும்+ மற்ற குருமார்களும் சேவை செய்தார்கள். 40 தகன பலிக்கான பலிபீடத்தில் காலையும் மாலையும் தவறாமல் யெகோவாவுக்குத் தகன பலி கொடுத்தார்கள். இஸ்ரவேலுக்கு யெகோவா கொடுத்த திருச்சட்டத்தில் உள்ளபடியே எல்லாவற்றையும் செய்தார்கள்.+ 41 அவர்களோடு ஏமானையும் எதித்தூனையும்+ பெயர் பெயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற ஆண்களையும் யெகோவாவுக்கு நன்றிப் பாடல் பாடுவதற்காக நியமித்தார்கள்;+ “அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்” என்று சொல்லி கடவுளை அவர்கள் புகழ்ந்து பாடினார்கள்.+ 42 ஏமானும்+ எதித்தூனும் எக்காளங்களை ஊதி, ஜால்ராக்களைத் தட்டி, மற்ற இசைக் கருவிகளை இசைத்து உண்மைக் கடவுளைப் புகழ்ந்தார்கள். எதித்தூனின்+ மகன்கள் வாயிற்காவலர்களாகச் சேவை செய்தார்கள். 43 பின்பு, மக்கள் எல்லாரும் தங்களுடைய வீடுகளுக்குப் போனார்கள். தாவீதும் தன்னுடைய குடும்பத்தாரை ஆசீர்வதிப்பதற்காகப் போனார்.