சகரியா
10 “வசந்த கால மழைக்காக யெகோவாவிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.
மழைமேகத்தை உருவாக்குபவர் யெகோவாதான்.
மழை தருபவர் அவர்தான்.+
எல்லாருடைய வயலிலும் விளைச்சலைக் கொடுப்பவர் அவர்தான்.
2 குலதெய்வங்கள்* பொய்* பேசுகின்றன.
குறிசொல்கிறவர்கள் போலி தரிசனத்தைப் பார்க்கிறார்கள்.
ஒன்றுக்கும் உதவாத கனவுகளைப் பற்றிப் பேசுகிறார்கள்.
வீண் வார்த்தைகளால் ஆறுதல் சொல்கிறார்கள்.
அதனால், ஜனங்கள் ஆடுகளைப் போல அலைந்து திரிவார்கள்.
மேய்ப்பன் இல்லாமல் தவிப்பார்கள்.
3 மேய்ப்பர்கள்மேல் நான் பயங்கர கோபமாக இருக்கிறேன்.
அடக்கி ஒடுக்கும் தலைவர்களைத் தண்டிப்பேன்.
பரலோகப் படைகளின் யெகோவா, தன் மந்தையான யூதா ஜனங்களிடம் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்.+
அவர்களைக் கம்பீரமான போர்க் குதிரையைப் போல ஆக்கியிருக்கிறார்.
4 அவரிடமிருந்து மிக முக்கியமானவர் வருகிறார்.
அவரிடமிருந்து துணை அதிபர் வருகிறார்.
அவரிடமிருந்து போர் வில் வருகிறது.
அவரிடமிருந்தே எல்லா கண்காணிகளும்* ஒன்றாக வருகிறார்கள்.
5 போர் செய்யும் வீரர்களைப் போல,
தெருக்களில் உள்ள சேற்றை அவர்கள் மிதிப்பார்கள்.
யெகோவா அவர்களுக்குப் பக்கத் துணையாக இருப்பதால் அவர்கள் போர் செய்வார்கள்.+
குதிரைமேல் வருகிறவர்கள் அவமானம் அடைவார்கள்.+
அவர்களுக்கு இரக்கம் காட்டுவேன்.+
அவர்களைப் பழைய நிலைமைக்குக் கொண்டுவருவேன்.
முன்பு அவர்களை ஒதுக்கியிருந்தேன்; ஆனால், அந்த அடையாளமே தெரியாதளவுக்கு அவர்களை ஆசீர்வதிப்பேன்.+
அவர்களுடைய கடவுளாகிய யெகோவா நானே. அவர்களுக்கு நான் பதில் சொல்வேன்.
7 எப்பிராயீமைச் சேர்ந்தவர்கள் மாவீரர்கள்போல் ஆவார்கள்.
திராட்சமது குடித்ததுபோல் சந்தோஷமாக இருப்பார்கள்.+
அவர்களுடைய மகன்களும் அதைப் பார்த்து சந்தோஷம் அடைவார்கள்.
யெகோவாவை நினைத்து உள்ளம் பூரித்துப்போவார்கள்.+
8 ‘நான்* அவர்களை ஒன்றாகக் கூடிவரச் செய்வேன்.
அவர்களை விடுவிப்பேன்;+ அவர்கள் பெருகுவார்கள்.
தொடர்ந்து பெருகிக்கொண்டே இருப்பார்கள்.
9 அவர்களை எல்லா இடங்களிலும் விதைகள்போல் வாரி இறைப்பேன்.
ஆனாலும், தூர தேசங்களிலிருந்து அவர்கள் என்னை நினைத்துப் பார்ப்பார்கள்.
அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் புத்துயிர் பெற்று திரும்பி வருவார்கள்.
10 எகிப்திலிருந்து அவர்களைத் திரும்பவும் கூட்டிக்கொண்டு வருவேன்.
அசீரியாவிலிருந்து அவர்களை அழைத்து வருவேன்.+
கீலேயாத்துக்கும் லீபனோனுக்கும் அவர்களைக் கொண்டுவருவேன்.+
அவர்களுக்கு இடமே போதாது.+
அசீரியாவின் கர்வத்தை அடக்குவேன்.
எகிப்தின் கொடுங்கோல் ஆட்சியை நீக்குவேன்.+