சங்கீதம்
33 நீதிமான்களே, யெகோவாவை நினைத்து சந்தோஷ ஆரவாரம் செய்யுங்கள்.+
நேர்மையானவர்கள் அவரைப் புகழ்வது பொருத்தமானது.
2 யாழ் இசைத்து யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள்.
பத்து நரம்புகள் கொண்ட யாழை இசைத்து அவரைப் புகழ்ந்து பாடுங்கள்.
3 அவருக்காகப் புதிய பாடல் பாடுங்கள்.+
நரம்பிசைக் கருவிகளைத் திறமையாக வாசித்து, சந்தோஷக் குரல் எழுப்புங்கள்.
5 நீதியையும் நியாயத்தையும் அவர் நேசிக்கிறார்.+
இந்தப் பூமி யெகோவாவின் மாறாத அன்பினால் நிறைந்திருக்கிறது.+
6 யெகோவாவின் வார்த்தையால் வானம் உண்டாக்கப்பட்டது.+
அவருடைய வாயின் சுவாசத்தால் வானத்திலுள்ள எல்லாமே உருவாக்கப்பட்டது.
7 அவர் கடல் நீரை அணைபோல் தேக்கி வைக்கிறார்.+
பொங்கியெழும் தண்ணீரைக் களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறார்.
8 பூமி முழுவதும் யெகோவாவுக்குப் பயப்படட்டும்.+
இந்த உலகத்தில் வாழ்கிற எல்லாரும் அவருக்குப் பயபக்தி காட்டட்டும்.
11 ஆனால், யெகோவாவின் தீர்மானங்களும்,*
அவருடைய உள்ளத்தின் யோசனைகளும் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும்.+
12 யெகோவாவைக் கடவுளாகக் கொண்ட தேசம் சந்தோஷமானது.+
தன்னுடைய சொத்தாக அவர் தேர்ந்தெடுத்திருக்கிற ஜனம் சந்தோஷமானது.+
14 அவர் குடிகொண்டிருக்கிற இடத்திலிருந்து
பூமியிலுள்ள ஜனங்களைக் கவனிக்கிறார்.
15 எல்லாருடைய இதயங்களையும் உருவாக்குகிறவர் அவர்தான்.
அவர்களுடைய செயல்களையெல்லாம் ஆராய்கிறவர் அவர்தான்.+
16 எந்த ராஜாவும் தன் படை பலத்தால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.+
எந்தப் பலசாலியும் தன் மகா பலத்தால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.+
17 குதிரை இருந்தால் வெற்றி கிடைத்துவிடும்* என்பது வெறும் கனவு.+
அதற்கு அதிக பலம் இருந்தாலும், அது உயிர்தப்ப உதவுமென்று சொல்ல முடியாது.
18 யெகோவாவின் கண்கள் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களையும்,+
அவருடைய மாறாத அன்புக்காகக் காத்திருக்கிறவர்களையும் உன்னிப்பாகக் கவனிக்கின்றன.
19 மரணத்திலிருந்து காப்பாற்றவும்,
பஞ்சத்திலிருந்து பாதுகாக்கவும் அவர்களைக் கவனிக்கின்றன.+
20 நாம் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறோம்.
அவர்தான் நமக்குத் துணை, அவர்தான் நம் கேடயம்.+