சங்கீதம்
ஆசாப்பின்+ சங்கீதம்.
50 தேவாதி தேவனாகிய யெகோவா+ பேசினார்.
சூரியன் உதிக்கிற திசைமுதல் மறைகிற திசைவரை* பரந்து விரிந்திருக்கிற
பூமியை அவர் அழைக்கிறார்.
2 அழகே உருவான சீயோனிலிருந்து+ கடவுள் ஒளிவீசுகிறார்.
3 நம் கடவுள் வருவார், அவர் அமைதியாக இருக்க மாட்டார்.+
5 “எனக்கு உண்மையாக* நடக்கிறவர்களை ஒன்றுகூட்டுங்கள்.
பலியின் அடிப்படையில் என்னோடு ஒப்பந்தம் செய்கிறவர்களை+ ஒன்றுதிரட்டுங்கள்” என்று சொல்கிறார்.
நானே கடவுள், நானே உன் கடவுள்.+
8 நீ கொடுக்கிற பலிகளைப் பார்த்து நான் உன்னைக் கண்டிக்கவில்லை.
எப்போதும் என் முன்னால் இருக்கிற உன் தகன பலிகளைப் பார்த்தும் கண்டிக்கவில்லை.+
10 காட்டில் இருக்கிற அத்தனை மிருகங்களும் என்னுடையதுதான்.+
ஓராயிரம் மலைகளில் திரிகிற விலங்குகளும் என்னுடையதுதான்.
11 மலைகளில் இருக்கிற எல்லா பறவைகளையும் எனக்குத் தெரியும்.+
வெட்டவெளியில் கணக்குவழக்கில்லாமல் திரிகிற விலங்குகளும் என்னுடையதுதான்.
12 எனக்குப் பசித்தால் நான் உன்னிடம் சொல்ல மாட்டேன்.
ஏனென்றால், பூமியும் அதிலுள்ள அனைத்தும் என்னுடையதுதான்.+
14 உன்னுடைய நன்றிகளைக் கடவுளுக்குப் பலியாகச் செலுத்து.+
உன் நேர்த்திக்கடன்களை உன்னதமான கடவுளுக்குச் செலுத்து.+
நான் உன்னைக் காப்பாற்றுவேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.”+
என்னுடைய ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசவோ உனக்கு என்ன உரிமை இருக்கிறது?+
18 ஒரு திருடனைப் பார்த்தால், நீ அவனுக்கு உடந்தையாகிவிடுகிறாய்.*+
மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்களோடு கூடிப் பழகுகிறாய்.
20 நீ உட்கார்ந்துகொண்டு, உன் சொந்த சகோதரனுக்கு எதிராகப் பேசுகிறாய்.+
உன் தாயின் வயிற்றில் பிறந்தவனைப் பற்றியே குறைசொல்கிறாய்.
21 நீ இதையெல்லாம் செய்தபோது, நான் அமைதியாக இருந்தேன்.
அதனால், நானும் உன்னைப் போலத்தான் என்று நினைத்துக்கொண்டாய்.
ஆனால், இப்போது நான் உன்னைக் கண்டிப்பேன்.
உனக்கு எதிரான என் வழக்கைச் சொல்வேன்.+
22 கடவுளை மறக்கிறவர்களே,+ தயவுசெய்து இதை யோசித்துப் பாருங்கள்.
இல்லாவிட்டால், நான் உங்களை நார் நாராகக் கிழித்துவிடுவேன்,
உங்களைக் காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள்.