சங்கீதம்
2 யெகோவாவுக்கும் அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கும்*+ விரோதமாக
பூமியின் ராஜாக்கள் அணிவகுத்து நிற்கிறார்கள்,
3 ஒருவரை ஒருவர் பார்த்து,
“அவர்கள் நமக்கு மாட்டிய விலங்குகளை உடைத்தெறியலாம்,
அவர்கள் நமக்குக் கட்டிய கயிறுகளை அறுத்தெறியலாம்!” என்று சொல்கிறார்கள்.
4 பரலோக சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பவர் சிரிப்பார்.
யெகோவா அவர்களைப் பார்த்துக் கேலி செய்வார்.
5 பிறகு, கோபத்தோடு அவர்களிடம் பேசி,
தன்னுடைய ஆக்ரோஷத்தால் அவர்களை நடுநடுங்க வைத்து,
6 “என்னுடைய பரிசுத்த மலையாகிய சீயோனில்,+
என் ராஜாவை நியமித்திருக்கிறேன்”+ என்று சொல்வார்.
7 யெகோவாவின் தீர்மானத்தை இப்போது சொல்கிறேன்.
அவர் என்னிடம், “நீ என்னுடைய மகன்.+
இன்று நான் உனக்குத் தகப்பனாக ஆனேன்.+
8 நீ கேட்டால், தேசங்களை உனக்குச் சொத்தாகக் கொடுப்பேன்.
பூமி முழுவதையுமே உனக்குச் சொந்தமாகத் தருவேன்.+
9 நீ அந்தத் தேசங்களை இரும்புச் செங்கோலால் அடித்து நொறுக்குவாய்.+
மண்பாத்திரத்தை உடைப்பது போல உடைத்து நொறுக்குவாய்”+ என்று சொன்னார்.
10 அதனால் ராஜாக்களே, இப்போதே விவேகமாக* நடந்துகொள்ளுங்கள்.
பூமியிலுள்ள நீதிபதிகளே, பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.*
11 பயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்.
பயபக்தியோடு அவர்முன் சந்தோஷப்படுங்கள்.
12 அவருடைய மகனுக்கு மதிப்பு* கொடுங்கள்.+
இல்லையென்றால், கடவுளுக்கு* பயங்கர கோபம் வரும்.
அவருடைய கோபம் சட்டென்று பற்றியெரியும்.
அவரிடம் தஞ்சம் அடைகிற எல்லாரும் சந்தோஷமானவர்கள்.