ஏசாயா
54 “குழந்தை பெறாதவளே, சந்தோஷமாக ஆரவாரம் செய்!+
பிரசவ வேதனைப்படாதவளே,+ ஆனந்தமாக ஆர்ப்பரி!+
ஏனென்றால், கணவனோடு வாழ்கிறவளின் பிள்ளைகளைவிட
கணவனால் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள் ஏராளமாக இருக்கிறார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.
2 “உன் கூடாரத்தைப் பெரிதாக்கு.+
உன்னுடைய விசாலமான கூடாரத்தின் துணிகளை அகலமாக்கு.
அதன் கயிறுகளைத் தாராளமாக நீளமாக்கு.
கூடார ஆணிகளை உறுதிப்படுத்து.+
3 ஏனென்றால், உன்னுடைய எல்லைகள் வலது பக்கமாகவும் இடது பக்கமாகவும் விரிவாகும்.
உன்னுடைய பிள்ளைகள் மற்ற தேசங்களைச் சொந்தமாக்குவார்கள்.
வெறுமையாய்க் கிடக்கிற நகரங்களில் குடியேறுவார்கள்.+
இளமையில் உனக்கு ஏற்பட்ட அவமானத்தையும்,
விதவையானதால் ஏற்பட்ட தலைகுனிவையும் இனி நினைத்துப் பார்க்க மாட்டாய்.”
5 “ஏனென்றால், உன் மகத்தான படைப்பாளர்+ உனக்குக் கணவர்* போல இருக்கிறார்.+
பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.
இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளாகிய அவரே உன்னை விடுவிக்கிறவர்.+
அவர் பூமி முழுவதுக்கும் கடவுள் என்று அழைக்கப்படுவார்.+
6 கணவனால் ஒதுக்கப்பட்டு வேதனைப்படுகிற மனைவியைப் போலவும்,+
இளவயதில் கல்யாணமாகி கைவிடப்பட்டவளைப் போலவும் இருக்கிற உன்னை
யெகோவா தேர்ந்தெடுத்தார்” என்று உன் கடவுள் சொல்கிறார்.
7 “கொஞ்சக் காலத்துக்கு* உன்னை நான் கைவிட்டேன்.
ஆனால், மிகுந்த இரக்கத்தோடு உன்னைத் திரும்பவும் சேர்த்துக்கொள்வேன்.+
8 பயங்கரமான கோபத்தினால் என் முகத்தைக் கொஞ்சக் காலத்துக்கு உன்னிடமிருந்து மறைத்துக்கொண்டேன்.+
ஆனால், இனி என்றென்றுமே உனக்கு மாறாத அன்பையும் இரக்கத்தையும் காட்டுவேன்”+ என்று
உன்னை விடுவிக்கிறவரான+ யெகோவா சொல்கிறார்.
9 “இது நோவாவின் காலத்தை எனக்கு ஞாபகப்படுத்துகிறது.+
தண்ணீரால் உலகத்தை அழிக்க மாட்டேன் என்று நான் நோவாவிடம் சத்தியம் செய்து கொடுத்தது+ போலவே,
உன்மேல் கோபப்படவோ உன்னைத் தண்டிக்கவோ மாட்டேன் என்று இப்போது சத்தியம் செய்து கொடுக்கிறேன்.+
10 மலைகள் ஒழிந்துபோகலாம்.
குன்றுகள் அழிந்துபோகலாம்.
ஆனால், உனக்கு நான் காட்டுகிற மாறாத அன்பு ஒழியாது.+
சமாதானத்துக்காக நான் செய்திருக்கிற ஒப்பந்தமும் அழியாது”+ என்று
உன்மேல் இரக்கம் காட்டுகிற யெகோவா+ சொல்கிறார்.
11 “வேதனையில் வாடியவளே,+ சூறாவளியில் சிக்கியவளே, ஆறுதல் கிடைக்காமல் தவித்தவளே,+
உன் கற்களைக் காரை பூசி உறுதியாக்குவேன்.
நீலமணிக்கற்களால் உன் அஸ்திவாரத்தை அமைப்பேன்.+
12 மாணிக்கக் கற்களால் உன் கொத்தளங்களைக் கட்டுவேன்.
ஜொலிக்கிற கற்களால் உன் வாசல் கதவுகளை அமைப்பேன்.
விலை உயர்ந்த ரத்தினங்களால் உன் எல்லைகளைக் குறிப்பேன்.
13 உன் பிள்ளைகள் எல்லாரும் யெகோவாவினால் கற்பிக்கப்பட்டிருப்பார்கள்.+
அவர்கள் மிகுந்த சமாதானத்தோடு இருப்பார்கள்.+
14 நீ நீதியில் உறுதியாக நிலைநாட்டப்படுவாய்.+
இனி யாரும் உன்னைக் கொடுமைப்படுத்த மாட்டார்கள்.+
நீ எதற்குமே பயப்பட மாட்டாய், எதுவுமே உன்னைப் பயமுறுத்தாது.
திகில் உன்னை நெருங்காது.+
15 உன்னைத் தாக்க இனிமேல் நான் யாரையும் அனுப்ப மாட்டேன்.
அப்படி யாராவது தாக்க வந்தால்,
அவர்களை நீ தோற்கடிப்பாய்.”+
16 “கரிநெருப்பை ஊதி ஆயுதத்தை உண்டாக்குகிற கொல்லனைப் படைத்தது நான்தான்.
அந்த ஆயுதத்தால் மற்றவர்களைக் கொன்றுபோடுகிறவனைப் படைத்ததும் நான்தான்.+