சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; “அழித்துவிடாதீர்கள்” என்ற இசையில்; மிக்தாம்.* சவுலிடமிருந்து தப்பித்துப்போய் குகையில் ஒளிந்திருந்தபோது+ தாவீது பாடிய பாடல்.
57 கடவுளே, கருணை காட்டுங்கள், எனக்குக் கருணை காட்டுங்கள்.
நான் உங்களிடம் தஞ்சம் அடைந்திருக்கிறேன்.+
ஆபத்துகள் கடந்துபோகும்வரை* உங்களுடைய சிறகுகளின் நிழலில் தஞ்சம் அடைந்திருக்கிறேன்.+
2 நான் உன்னதமான கடவுளைக் கூப்பிடுகிறேன்.
என் கஷ்டங்களுக்கு முடிவுகட்டுகிற உண்மைக் கடவுளைக் கூப்பிடுகிறேன்.
3 அவர் பரலோகத்திலிருந்து உதவி அனுப்பி, என்னைக் காப்பாற்றுவார்.+
என்மேல் பாய்கிறவனை அடக்கிப்போடுவார். (சேலா)
அவர் எனக்கு மாறாத அன்பையும் உண்மைத்தன்மையையும் காட்டுவார்.+
4 சிங்கங்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன.+
என்னை விழுங்கப் பார்க்கிறவர்களின் நடுவே நான் விழுந்து கிடக்க வேண்டியிருக்கிறது.
அவர்களுடைய பற்கள் ஈட்டிகளையும் அம்புகளையும் போல இருக்கின்றன.
அவர்களுடைய நாவு கூர்மையான வாள்போல் இருக்கிறது.+
6 என் கால்களைச் சிக்க வைக்க அவர்கள் வலை விரித்திருக்கிறார்கள்.+
நான் வேதனையில் துவண்டுபோயிருக்கிறேன்.+
என்னை விழ வைக்க அவர்கள் குழி தோண்டினார்கள்.
ஆனால், அவர்களே அதில் விழுந்தார்கள்.+ (சேலா)
நான் இசை இசைத்துப் பாடுவேன்.
8 என் உள்ளமே, விழித்தெழு!
நரம்பிசைக் கருவியே, விழித்தெழு! யாழே, நீயும் விழித்தெழு!
நான் விடியலைத் தட்டி எழுப்புவேன்.+