சங்கீதம்
கடவுளைப் புகழ்ந்து தாவீது பாடிய பாடல்.
א [ஆலெஃப்]
ב [பேத்]
ג [கீமெல்]
ד [டாலத்]
4 கடவுளே, உங்கள் செயல்களைத் தலைமுறை தலைமுறைக்கும் மக்கள் புகழ்வார்கள்.
உங்களுடைய வல்லமையான செயல்களைப் பற்றி அவர்கள் பேசுவார்கள்.+
ה [ஹே]
5 உங்களுடைய மகத்துவத்தின் சிறப்பையும் மேன்மையையும் பற்றிப் பேசுவார்கள்.+
நான் உங்களுடைய அற்புதமான செயல்களைப் பற்றித் தியானிப்பேன்.
ו [வா]
6 நீங்கள் செய்த பிரமிப்பூட்டும் காரியங்களை* பற்றி அவர்கள் பேசுவார்கள்.
நான் உங்களுடைய மகத்துவத்தைப் பற்றி அறிவிப்பேன்.
ז [ஸாயின்]
7 நீங்கள் செய்த ஏராளமான நன்மைகளுக்காக அவர்கள் உங்களை வாயாரப் புகழ்வார்கள்.+
உங்களுடைய நீதியை நினைத்து அவர்கள் சந்தோஷ ஆரவாரம் செய்வார்கள்.+
ח [ஹேத்]
8 யெகோவா கரிசனையும்* இரக்கமும் உள்ளவர்,+
சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுகிறவர்.+
ט [டேத்]
י [யோத்]
כ [காஃப்]
11 உங்களுடைய ஆட்சியின் மகிமையை அவர்கள் அறிவிப்பார்கள்.+
உங்களுடைய வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.+
ל [லாமெத்]
12 உங்களுடைய வல்லமையான செயல்களைப் பற்றி மனிதர்களுக்குச் சொல்வார்கள்.+
உங்களுடைய ஆட்சியின்+ சிறப்பையும் மேன்மையையும் பற்றி எல்லாருக்கும் சொல்வார்கள்.
מ [மேம்]
13 உங்களுடைய ஆட்சி என்றென்றும் நிலைத்திருக்கும்.
உங்களுடைய ராஜ்யம் தலைமுறை தலைமுறைக்கும் நிலைத்திருக்கும்.+
ס [சாமெக்]
ע [ஆயின்]
15 எல்லா ஜீவன்களின் கண்களும் உங்களையே எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றன.
அந்தந்த சமயத்தில் நீங்கள் அவற்றுக்கு உணவு தருகிறீர்கள்.+
פ [பே]
צ [சாதே]
ק [கோஃப்]
18 யெகோவா தன்னை நோக்கிக் கூப்பிடுகிற எல்லாருடைய பக்கத்திலும் இருக்கிறார்.+
உண்மையோடு* தன்னை நோக்கிக் கூப்பிடுகிற எல்லாருடைய பக்கத்திலும் இருக்கிறார்.+
ר [ரேஷ்]
19 தனக்குப் பயந்து நடக்கிறவர்களின் ஆசையை அவர் நிறைவேற்றுகிறார்.+
உதவிக்காக அவர்கள் கதறுவதைக் கேட்டு, அவர்களைக் காப்பாற்றுகிறார்.+
ש [ஷீன்]
ת [ட்டா]