சங்கீதம்
தாவீதின் பாடல்.
26 யெகோவாவே, நீங்கள் எனக்குத் தீர்ப்பு கொடுங்கள்; நான் உத்தமமாக நடந்திருக்கிறேன்.+
யெகோவாவே, உங்கள்மேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறேன்.+
2 யெகோவாவே, என்னை ஆராய்ந்து பாருங்கள், என்னைச் சோதித்துப் பாருங்கள்.
என்னுடைய இதயத்தையும் அடிமனதின் யோசனைகளையும்* புடமிட்டுப் பாருங்கள்.+
3 ஏனென்றால், நான் உங்களுடைய மாறாத அன்பை எப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.
உங்களுடைய சத்திய வழியில் நடக்கிறேன்.+
6 யெகோவாவே, நான் குற்றமற்றவனாக என் கைகளைக் கழுவிக்கொண்டு,
உங்களுடைய பலிபீடத்தைச் சுற்றிவருவேன்.
7 அப்போது, சத்தமாக உங்களுக்கு நன்றி சொல்வேன்.+
உங்களுடைய அதிசயமான செயல்களையெல்லாம் அறிவிப்பேன்.
8 யெகோவாவே, நீங்கள் குடிகொண்டிருக்கிற வீட்டை நேசிக்கிறேன்.+
உங்களுடைய மகிமை தங்கியிருக்கிற இடத்தை விரும்புகிறேன்.+
9 பாவிகளோடு சேர்த்து என்னையும் அழித்துவிடாதீர்கள்.+
கொடூரமானவர்களோடு* சேர்த்து என் உயிரையும் பறித்துவிடாதீர்கள்.
10 அவர்களுடைய கைகள் வெட்கக்கேடான காரியங்களைச் செய்கின்றன.
அவர்களுடைய வலது கையில் லஞ்சம் குவிந்திருக்கிறது.
11 ஆனால், நான் எப்போதும் உத்தமமாக நடப்பேன்.
என்னைக் காப்பாற்றுங்கள்,* எனக்குக் கருணை காட்டுங்கள்.