சங்கீதம்
பகுதி மூன்று
(சங்கீதம் 73-89)
ஆசாப்பின்+ சங்கீதம்.
73 சுத்தமான இதயமுள்ள இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் உண்மையிலேயே நல்லவராக இருக்கிறார்.+
3 ஏனென்றால், ஆணவம் பிடித்தவர்களை* பார்த்துப் பொறாமைப்பட்டேன்.
பொல்லாதவர்கள் நிம்மதியாக இருப்பதைப் பார்த்து எரிச்சலடைந்தேன்.+
5 மற்றவர்களுக்கு வருகிற எந்தப் பிரச்சினையும் அவர்களுக்கு வருவதில்லை.+
மற்றவர்கள் படுகிற எந்தக் கஷ்டத்தையும் அவர்கள் அனுபவிப்பதில்லை.+
6 அதனால்தான், ஆணவத்தை ஆபரணம்போல் கழுத்தில் போட்டிருக்கிறார்கள்.+
வன்முறையை உடைபோல் உடுத்தியிருக்கிறார்கள்.
7 செல்வச் செழிப்பால்* அவர்களுடைய கண்கள் உப்பியிருக்கின்றன.
மனதில் கோட்டை கட்டியதைவிட சிறப்பாக வாழ்கிறார்கள்.
8 மற்றவர்களைப் பார்த்துக் கிண்டல் செய்கிறார்கள், மோசமாகப் பேசுகிறார்கள்.+
அடக்கி ஒடுக்கப்போவதாக ஆணவத்தோடு மிரட்டுகிறார்கள்.+
9 ஏதோ வானத்தையே தொட்டுவிட்டதுபோல் பெருமையடிக்கிறார்கள்.
ஊர் உலகமெல்லாம் தங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்கிறார்கள்.
10 அதனால் கடவுளுடைய* மக்கள் அவர்கள் பக்கமாகத் திரும்பி,
அவர்களிடம் இருக்கிற ஏராளமான தண்ணீரைக் குடிக்கிறார்கள்.
11 “இதெல்லாம் கடவுளுக்கு எங்கே தெரியப்போகிறது?+
உன்னதமான கடவுளால் இதையெல்லாம் எப்படித் தெரிந்துகொள்ள முடியும்?” என்று கேட்கிறார்கள்.
12 அப்படிப்பட்ட அக்கிரமக்காரர்களுக்கு எல்லாமே சுலபமாகக் கிடைத்துவிடுகிறது.+
அவர்கள் சொத்துக்குமேல் சொத்து சேர்த்துக்கொண்டே போகிறார்கள்.+
15 ஆனால் கடவுளே, நான் இதையெல்லாம் வெளியே சொல்லியிருந்தால்,
உங்களுடைய மக்களுக்குத் துரோகியாக ஆகியிருப்பேன்.
16 நான் அதைப் புரிந்துகொள்ள முயன்றபோது,
வேதனைதான் மிஞ்சியது.
17 கடைசியில், கடவுளுடைய பரிசுத்த ஆலயத்துக்கு வந்தேன்.
அப்போதுதான், அவர்களுக்கு வரப்போகிற முடிவைப் பற்றிப் புரிந்துகொண்டேன்.
18 நிச்சயமாகவே, அவர்களைச் சறுக்கலான தரையில்தான் நீங்கள் நிற்க வைக்கிறீர்கள்.+
அவர்களை விழ வைத்து ஒழித்துக்கட்டுகிறீர்கள்.+
19 அவர்களுக்குத் திடுதிப்பென்று அழிவு வருகிறது!+
திடீரென்று கோர முடிவு வருகிறது!
20 தூங்கி எழுந்ததும் மறைந்துபோகிற கனவு போல,
யெகோவாவே, நீங்கள் எழுந்ததும் அவர்களை உங்கள் நினைவிலிருந்து மறைந்துபோகச் செய்வீர்கள்.*
22 நான் அறிவில்லாமல் இருந்துவிட்டேன், எதையும் புரிந்துகொள்ளாமல் இருந்துவிட்டேன்.
உங்கள் முன்னால் புத்தியில்லாத மிருகம்போல் நடந்துகொண்டேன்.
25 பரலோகத்தில் உங்களைத் தவிர எனக்கு வேறு யார் இருக்கிறார்கள்?
இந்தப் பூமியில் உங்களைத் தவிர வேறு எதுவும் எனக்கு வேண்டாம்.+
26 என் உடலும் உள்ளமும் தளர்ந்துபோகலாம்.
ஆனால், கடவுள் என்றென்றும் என் இதயத்தின் கற்பாறையாகவும்* என் பங்காகவும் இருக்கிறார்.+
27 உங்களைவிட்டுத் தூரமாகப் போகிறவர்கள் அழிந்துபோவார்கள்.
உங்களுக்குத் துரோகம் செய்கிறவர்களுக்கு* நீங்கள் முடிவுகட்டுவீர்கள்.+
28 ஆனால், கடவுளிடம் நெருங்கிப் போவதுதான் எனக்கு நல்லது.+
உன்னதப் பேரரசரான யெகோவாவிடம் நான் அடைக்கலம் புகுந்துவிட்டேன்.
அவருடைய செயல்கள் எல்லாவற்றையும் மற்றவர்களுக்கு அறிவிப்பேன்.+