ஓசியா
1 யூதாவின் ராஜாக்களான+ உசியா,+ யோதாம்,+ ஆகாஸ்,+ எசேக்கியா+ ஆகியவர்களின் காலத்திலும் இஸ்ரவேலின் ராஜாவும் யோவாசின்+ மகனுமாகிய யெரொபெயாமின்+ காலத்திலும் பெயேரியின் மகன் ஓசியாவுக்கு* யெகோவாவிடமிருந்து செய்தி கிடைத்தது. 2 ஓசியா மூலமாக யெகோவா தன்னுடைய செய்தியைச் சொல்ல ஆரம்பித்தபோது யெகோவா ஓசியாவிடம், “விபச்சாரம் செய்யப்போகிற ஒரு பெண்ணை நீ கல்யாணம் செய்து, விபச்சாரத்தால் அவளுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்குத் தகப்பனாக இரு. அப்படிப்பட்ட விபச்சாரத்தைச் செய்துதான் இந்தத் தேசம் யெகோவாவைவிட்டு முழுமையாக விலகிப்போயிருக்கிறது”+ என்று சொன்னார்.
3 அதனால், ஓசியா போய் திப்லாயிமின் மகளான கோமரைக் கல்யாணம் செய்தார். அவள் கர்ப்பமாகி அவருக்கு ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
4 பின்பு யெகோவா, “யெஸ்ரயேலில் சிந்தப்பட்ட இரத்தத்துக்காக இன்னும் கொஞ்சக் காலத்தில் நான் யெகூவின் வம்சத்தாரைத் தண்டித்து,+ இஸ்ரவேலுடைய அரசாட்சிக்கு முடிவுகட்டப்போகிறேன்.+ அதனால், உன் மகனுக்கு யெஸ்ரயேல்* என்று பெயர் வை. 5 அந்த நாளில், நான் யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் இஸ்ரவேலின் வில்லை ஒடிப்பேன்” என்று சொன்னார்.
6 கோமர் மறுபடியும் கர்ப்பமாகி ஒரு மகளைப் பெற்றெடுத்தாள். அப்போது கடவுள் ஓசியாவிடம், “குழந்தைக்கு லோருகாமா* என்று பெயர் வை. ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இனியும் நான் இரக்கம் காட்ட மாட்டேன்,+ அவர்களைக் கண்டிப்பாகத் துரத்தியடிப்பேன்.+ 7 ஆனால், யூதா ஜனங்களுக்கு நான் இரக்கம் காட்டுவேன்.+ அவர்களுடைய கடவுளாகிய நான் அவர்களைக் காப்பாற்றுவேன்.+ வில்லினாலோ வாளினாலோ போரினாலோ குதிரைகளினாலோ குதிரைவீரர்களினாலோ அல்ல, யெகோவாவாகிய நானே அவர்களைக் காப்பாற்றுவேன்”+ என்று சொன்னார்.
8 லோருகாமா தாய்ப்பால் மறந்த பின்பு, கோமர் மறுபடியும் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். 9 அப்போது கடவுள், “அவனுக்கு லோகம்மீ* என்று பெயர் வை. ஏனென்றால், நீங்கள் என்னுடைய ஜனங்களும் அல்ல, நான் உங்களுடைய கடவுளும் அல்ல” என்றார்.
10 அதோடு, “அளக்கவோ எண்ணவோ முடியாத கடற்கரை மணலைப் போல இஸ்ரவேல் ஜனங்கள் ஏராளமாக இருப்பார்கள்.+ ‘நீங்கள் என்னுடைய ஜனங்கள் அல்ல’+ என்று எந்த இடத்தில் சொல்லப்பட்டதோ அதே இடத்தில், ‘நீங்கள் உயிருள்ள கடவுளின் பிள்ளைகள்’+ என்று சொல்லப்படும். 11 யூதா ஜனங்களும் இஸ்ரவேல் ஜனங்களும் ஒற்றுமையாகக் கூடிவந்து,+ ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து, தேசத்தைவிட்டு வெளியே போவார்கள், அந்த நாள் யெஸ்ரயேலுக்கு விசேஷ நாளாக இருக்கும்.”+