சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; நரம்பிசைக் கருவிகளோடு பாட வேண்டியது. மஸ்கீல்.* தாவீதின் பாடல்.
2 நான் சொல்வதைக் கவனித்துக் கேட்டு, பதில் கொடுங்கள்.+
கவலையால் நான் நிம்மதியில்லாமல் தவிக்கிறேன்.+
பித்துப் பிடித்தவன்போல் ஆகிவிட்டேன்.
3 ஏனென்றால், எதிரிகள் கண்டபடி பேசுகிறார்கள்.
பொல்லாதவர்கள் என்னைப் பாடாய்ப் படுத்துகிறார்கள்.
தொல்லைக்குமேல் தொல்லை கொடுக்கிறார்கள்.
கோபத்தில் என்னைப் பயங்கரமாகப் பகைக்கிறார்கள்.+
5 பயமும் திகிலும் என்னைப் பிடித்து ஆட்டுகிறது.
நான் நடுநடுங்கிக்கொண்டிருக்கிறேன்.
6 “எனக்கு மட்டும் புறாவைப் போலச் சிறகுகள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
நான் எங்கேயாவது பறந்துபோய் பாதுகாப்பாக வாழ்வேனே!
7 கண்காணாத இடத்துக்குத் தப்பித்துப் போவேனே!+
வனாந்தரத்தில் போய்த் தங்கியிருப்பேனே!+ (சேலா)
8 புயலிலும் சூறாவளியிலும் சிக்காமல்,
பத்திரமான இடத்துக்கு வேகமாய்ப் போவேனே!” என்று புலம்பிக்கொண்டிருக்கிறேன்.
9 யெகோவாவே, அவர்களைக் குழப்புங்கள். அவர்களுடைய திட்டங்களைக் குலைத்துப்போடுங்கள்.+
ஏனென்றால், நகரத்தில் வன்முறைகளும் மோதல்களும் நடப்பதை நான் பார்க்கிறேன்.
10 அவர்கள் ராத்திரி பகலாக அதன் மதில்கள்மேல் நடந்துகொண்டிருக்கிறார்கள்.
நகரத்துக்குள் ஒரே பகையும் பிரச்சினையுமாக இருக்கிறது.+
எனக்கு எதிராகக் கிளம்பியிருக்கிறவன் விரோதி அல்ல;
அப்படியிருந்தால் ஓடி ஒளிந்திருப்பேனே!
13 ஆனால், உண்மையில் என்னை எதிர்க்கிறவன் நீதான்.
நீ எனக்குச் சமமானவன்.+
எனக்கு நன்றாகப் பழக்கப்பட்டவன்.+
14 நாம் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம்.
மக்கள் எல்லாரோடும் சேர்ந்து கடவுளுடைய ஆலயத்துக்கு நடந்துபோனோம்.
15 எதிரிகள் அழிந்துபோகட்டும்!+ உயிரோடு கல்லறைக்குள் புதைந்துபோகட்டும்!
ஏனென்றால், அவர்களைச் சுற்றியும் அவர்களுக்கு உள்ளேயும் அக்கிரமம்தான் குடிகொண்டிருக்கிறது.
17 சாயங்காலத்திலும் காலையிலும் மத்தியானத்திலும்
நான் வேதனையில் குமுறுகிறேன்.+
அவர் என் குரலைக் கேட்கிறார்.+
18 என்னோடு மோதுகிற ஆட்களிடமிருந்து அவர் என்னைக் காப்பாற்றி, எனக்கு நிம்மதி தருவார்.
ஏனென்றால், ஏராளமானவர்கள் என்னைத் தாக்க வருகிறார்கள்.+
19 கடவுள் என் வேண்டுதலைக் கேட்பார்.
காலம்காலமாகச் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பவர்+ அவர்களுக்குப் பதிலடி கொடுப்பார்.+ (சேலா)
கடவுளுக்குப் பயப்படாத அந்த ஆட்கள் திருந்தவே மாட்டார்கள்.+
21 அவனுடைய வார்த்தைகள் வெண்ணெயைவிட மென்மையாக இருக்கின்றன.+
ஆனால், அவனுடைய உள்ளத்தில் பகையும் வெறுப்பும் நிறைந்திருக்கின்றன.
அவனுடைய வார்த்தைகள் எண்ணெயைவிட மென்மையாக இருக்கின்றன.
ஆனால், அவை வாள்போல் தாக்குகின்றன.+
நீதிமானை ஒருபோதும் தள்ளாட விடமாட்டார்.+
23 கடவுளே, பொல்லாதவர்களை நீங்கள் படுகுழியில் தள்ளுவீர்கள்.+
கொலைகாரர்களும் மோசடிக்காரர்களும் தங்கள் வாழ்நாளில் பாதியைக்கூட தாண்ட மாட்டார்கள்.+
ஆனால், நான் உங்களையே நம்பியிருப்பேன்.