சங்கீதம்
பகுதி ஒன்று
(சங்கீதம் 1-41)
1 பொல்லாதவர்கள் சொல்கிற அறிவுரையைக் கேட்காமலும்,
பாவிகள் போகிற பாதையில் போகாமலும்,+
கேலி செய்கிறவர்கள்+ உட்காருகிற இடத்தில் உட்காராமலும் இருக்கிறவன் சந்தோஷமானவன்.
3 அவன் வாய்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரம் போலவும்,
அந்தந்த பருவத்தில் கனி தருகிற பசுமையான* மரம் போலவும் இருப்பான்.
அவன் செய்வதெல்லாம் வெற்றி பெறும்.+
4 ஆனால், பொல்லாதவர்களின் நிலைமையே வேறு.
அவர்கள் காற்றில் அடித்துக்கொண்டு போகப்படுகிற பதரைப் போல் இருக்கிறார்கள்.