சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் சங்கீதம்.
31 யெகோவாவே, உங்களிடம் அடைக்கலம் புகுந்திருக்கிறேன்.+
நான் அவமானப்படுவதற்கு ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்.+
நீங்கள் நீதியானவர் என்பதால் என்னைக் காப்பாற்றுங்கள்.+
2 என் வேண்டுதலைக் காதுகொடுத்து* கேளுங்கள்.
என்னைக் காப்பாற்ற சீக்கிரமாக வாருங்கள்.+
மலைக்கோட்டை போல எனக்கு அடைக்கலம் கொடுங்கள்.
மதில் சூழ்ந்த நகரம் போல எனக்குப் பாதுகாப்பு கொடுங்கள்.+
3 நீங்கள் எனக்கு மாபெரும் கற்பாறையாகவும் கோட்டையாகவும் இருக்கிறீர்கள்.+
உங்கள் பெயருக்காக+ நீங்கள் எனக்கு வழிகாட்டுவீர்கள், என்னை நடத்திச் செல்வீர்கள்.+
4 எதிரிகள் தந்திரமாக விரித்த வலையிலிருந்து என்னை விடுவிப்பீர்கள்.+
ஏனென்றால், நீங்கள்தான் என் கோட்டை.+
5 என் உயிரை உங்களுடைய கையில் ஒப்படைக்கிறேன்.+
யெகோவாவே, சத்தியத்தின்* கடவுளே,+ நீங்கள் என்னை விடுவித்திருக்கிறீர்கள்.
6 நான் யெகோவாவையே நம்பியிருக்கிறேன்.
ஒன்றுக்கும் உதவாத வீணான சிலைகளை வணங்குகிற ஆட்களை வெறுக்கிறேன்.
7 நீங்கள் காட்டும் மாறாத அன்பினால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.
நான் படுகிற கஷ்டத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.+
என் அடிமனதிலுள்ள வேதனையை அறிந்திருக்கிறீர்கள்.
9 யெகோவாவே, நான் தவியாய்த் தவிக்கிறேன், எனக்குக் கருணை காட்டுங்கள்.
கடுமையான வேதனையில் என் கண்கள் சோர்ந்துவிட்டன,+
என்னுடைய முழு உடலுமே தளர்ந்துவிட்டது.+
நான் செய்த பாவத்தால் என் சக்தி கரைந்துபோகிறது.
என் எலும்புகள் பலவீனமாகின்றன.+
11 எதிரிகள் எல்லாரும், முக்கியமாக அக்கம்பக்கத்தில் இருக்கிற எல்லாரும்,
என்னைக் கேலி கிண்டல் செய்கிறார்கள்.+
பழக்கமானவர்கள்கூட என்னைப் பார்த்துப் பயப்படுகிறார்கள்.
தெருவில் என்னைப் பார்த்தால் ஓடிப்போகிறார்கள்.+
12 நான் ஏதோ செத்துவிட்டது போல என்னை அடியோடு மறந்துவிட்டார்கள்.
நான் உடைந்த ஜாடிபோல் ஆகிவிட்டேன்.
எதிரிகள் எனக்கு எதிராக ஒன்றுதிரண்டு,
என்னைத் தீர்த்துக்கட்ட திட்டம் போடுகிறார்கள்.+
14 ஆனால் யெகோவாவே, நான் உங்களை நம்பியிருக்கிறேன்.+
“நீங்கள்தான் என் கடவுள்” என்று சொல்கிறேன்.+
15 என் வாழ்நாள் உங்கள் கையில் இருக்கிறது.
என்னை எதிர்க்கிற ஆட்களிடமிருந்தும் துன்புறுத்துகிற ஆட்களிடமிருந்தும் காப்பாற்றுங்கள்.+
16 உங்களுடைய ஊழியன்மேல் உங்கள் முகத்தைப் பிரகாசிக்கச் செய்யுங்கள்.+
உங்களுடைய மாறாத அன்பினால் என்னைக் காப்பாற்றுங்கள்.
17 யெகோவாவே, உங்களைக் கூப்பிடுகிறேன்; நான் வெட்கப்பட்டுப்போவதற்கு விடாதீர்கள்.+
18 பொய் பேசுகிற வாய் ஊமையாகட்டும்.+
நீதிமானுக்கு எதிராக ஆணவத்தோடும் அகம்பாவத்தோடும்
அவமரியாதையோடும் பேசுகிற உதடுகள் திறக்காமல் போகட்டும்.
19 நீங்கள் தரும் நன்மைகள் எவ்வளவு ஏராளம்!+
உங்களுக்குப் பயந்து நடப்பவர்களுக்காக அவற்றைச் சேமித்து வைத்திருக்கிறீர்கள்.+
உங்களிடம் அடைக்கலம் புகுந்தவர்களுக்காக எல்லார் முன்னாலும் அவற்றைப் பொழிந்திருக்கிறீர்கள்.+
20 மனிதர்களுடைய சதித்திட்டங்களில் சிக்காதபடி,
அவர்களை உங்களுடைய சன்னிதியின் மறைவில் நீங்கள் ஒளித்து வைப்பீர்கள்.+
அபாண்டமாகத் தாக்கிப் பேசுகிறவர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக,
அவர்களை உங்களுடைய கூடாரத்தில் மறைத்து வைப்பீர்கள்.+
21 சுற்றிவளைக்கப்பட்ட நகரத்திலே,+
யெகோவா மாறாத அன்பை எனக்கு அற்புதமான விதத்தில் காட்டினார்.+
அதனால் அவருக்குப் புகழ் சேரட்டும்.
22 பதற்றத்தில் நான்,
“உங்கள்முன் இல்லாதபடி ஒழிந்துபோய்விடுவேனே” என்று சொன்னேன்.+
ஆனால், உதவிக்காக நான் கதறியதை நீங்கள் கேட்டீர்கள்.+
23 யெகோவாவுக்கு உண்மையாக* இருக்கிறவர்களே,+ அவரை நேசியுங்கள்!