ஏசாயா
55 தாகமாக இருப்பவர்களே,+ வாருங்கள்; வந்து தண்ணீர் குடியுங்கள்!+
பணம் இல்லாதவர்களே, நீங்களும் வந்து வாங்கிச் சாப்பிடுங்கள்!
திராட்சமதுவையும் பாலையும்+ விலையில்லாமல் இலவசமாக வாங்கிக்கொள்ளுங்கள்.+
2 உங்களுடைய பசியைத் தீர்க்காத ஒன்றுக்காக ஏன் பணத்தைச் செலவழிக்கிறீர்கள்?
திருப்தி தராத ஒன்றுக்காக ஏன் உங்களுடைய சம்பாத்தியத்தை* வீணாக்குகிறீர்கள்?
நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டு, நல்ல உணவைச் சாப்பிடுங்கள்.+
அப்போது, உண்மையிலேயே அருமையான உணவைச் சாப்பிடுவதால் மிகவும் சந்தோஷப்படுவீர்கள்.+
3 உங்களுடைய காதை நன்றாகத் தீட்டிக்கொண்டு என்னிடம் வாருங்கள்.+
கவனமாகக் கேளுங்கள், அப்போது உயிர் பிழைப்பீர்கள்.
என்றென்றும் நிலைத்திருக்கும் ஓர் ஒப்பந்தத்தை நான் நிச்சயமாகவே உங்களோடு செய்வேன்.+
நான் தாவீதுக்கு வாக்குறுதி கொடுத்தபடியே, உங்கள்மேலும் மாறாத அன்பைக் காட்டுவேன். என் வாக்குறுதி நம்பகமானது.+
5 இதோ, முன்பின் தெரியாத ஜனங்களை நீ* அழைப்பாய்.
உன்னைப் பற்றித் தெரியாத அந்த ஜனங்கள் உன்னிடம் ஓடிவருவார்கள்.
உன் கடவுளான யெகோவா உனக்குச் செய்வதைப் பார்த்து+ அவர்கள் உன்னிடம் ஓடிவருவார்கள்.
ஏனென்றால், இஸ்ரவேலின் பரிசுத்த கடவுள் உன்னை மேன்மைப்படுத்துவார்.+
6 வாய்ப்பு இருக்கும்போதே யெகோவாவைத் தேடுங்கள்.+
அவர் உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும்போதே அவரைக் கூப்பிடுங்கள்.+
7 கெட்டவர்கள் கெட்ட வழிகளையும்,
கெட்ட யோசனைகளையும் விட்டுவிட்டு,
நம் கடவுளான யெகோவாவிடம் திரும்பி வரட்டும்.+
8 “ஏனென்றால், என்னுடைய யோசனைகள் வேறு, உங்களுடைய யோசனைகள் வேறு.+
உங்களுடைய வழிகள் வேறு, என்னுடைய வழிகள் வேறு” என்று யெகோவா சொல்கிறார்.
9 “பூமியைவிட வானம் எப்படி உயர்ந்திருக்கிறதோ,
அப்படியே உங்களுடைய வழிகளைவிட என்னுடைய வழிகளும்,
உங்களுடைய யோசனைகளைவிட என்னுடைய யோசனைகளும் உயர்ந்திருக்கின்றன.+
10 வானத்திலிருந்து பொழிகிற மழையும் பனியும்
நிலத்தை நனைத்து, பயிர்களை வளர வைத்து,
விதைக்கிறவருக்கு விதையையும் சாப்பிடுகிறவருக்கு உணவையும் தராமல் திரும்பிப் போவதில்லை.
11 அதுபோலவே, என் வாயிலிருந்து வருகிற வார்த்தையும் இருக்கும்.+
அது பலன் தராமல் என்னிடம் திரும்பி வராது.+
நான் விரும்புவதை* நிச்சயம் நிறைவேற்றும்.+
எதற்காக அதைச் சொன்னேனோ அதைக் கண்டிப்பாகச் செய்து முடிக்கும்.
அப்போது, மலைகளும் குன்றுகளும் உங்களைப் பார்த்து ஆனந்தமாகப் பாடும்.+
காட்டிலுள்ள மரங்களெல்லாம் கைதட்டி உங்களை வரவேற்கும்.+
13 தேசத்தில் முட்செடிகளுக்குப் பதிலாக ஆபால் மரங்கள் வளரும்.+
முட்புதர்களுக்கு* பதிலாக குழிநாவல் மரங்கள் வளரும்.
இதெல்லாம் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும்.+
என்றென்றும் அழியாத அடையாளமாக இருக்கும்.”