இளைஞர் கேட்கின்றனர் . . .
அழுத்தத்தை நான் வெல்லமுடியுமா?
நீங்கள் இடறிவிழ காரணமாயிருந்த நாற்காலியை எப்போதாவது உதைத்திருக்கிறீர்களா? அல்லது வீட்டுப்பாடம் அத்தனை சலிப்பூட்டுவதாக இருந்ததால் உங்களுடைய எல்லா புத்தகங்களையும் தூக்கி எறிந்திருக்கிறீர்களா? அப்படியென்றால் பின்னால் நீங்கள் நினைத்து வருந்தக்கூடிய வகையில் அழுத்தமானது எவ்விதமாக முட்டாள்தனமானச் செயல்களைச் செய்ய வைக்கிறது என்பதை அனுபவம் மூலமாக அறிந்திருக்கிறீர்கள். உதைப்பதை அல்லது நொறுக்குவதைவிட அழுத்தத்தை வெல்ல மேலான வழிகள் இருக்கின்றனவா? ஆம், ஆனால் முதலாவதாக அழுத்தத்தைப் பற்றி கொஞ்சம் நீங்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும்.
“பொதுவாக விளக்கமளிக்க வேண்டுமாயின் அழுத்தம் என்பது ஏதாயினும் ஒன்றின்—நரம்பு மண்டலத்தில் இறுக்கம், நோய், குளிர், உஷ்ணம், காயம் போன்ற ஏதாயினும் ஒன்றின் பாதிப்புக்கு உட்படுத்தப்படுகையில் சரீரத்துக்கு நேரிடும் ஒரு காரியமாக இருக்கிறது” என்பதாக பருவ வயது அழுத்தம் என்ற புத்தகத்தின் ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள். “ஏதாயினும் ஒன்றில்” நல்ல காரியங்களையும்கூட அவர்கள் சேர்த்துக்கொள்கிறார்கள். “உங்களுடைய மகிழ்ச்சி மிக்க சில கணங்களும்கூட மிகவும் அழுத்தங்கள் நிறைந்தவையாக இருக்கக்கூடும்” என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.
அழுத்தம் உங்களை எவ்வாறு பாதிக்கிறது, நீங்கள் பயந்து நடுங்கும்போது என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்: இதயம் அடித்துக்கொள்கிறது; உள்ளங்கை வேர்க்கிறது, கைகள் நடுங்குகின்றன, முகம் சிவந்துவிடுகிறது, வயிறு இழுத்துப் பிடித்துக்கொள்கிறது, வாய் உலர்ந்துவிடுகிறது. இந்தப் பாதிப்புகளை உண்டுபண்ணுவதற்கு உங்களுடைய சரீரத்தில் அநேக காரியங்கள் நடைபெறுகின்றன.
சுரப்பிகள், குண்டிக்காய் சுரப்பு நீர், போன்ற சக்திவாய்ந்த இயக்குநீர்களை இரத்த ஓட்டத்துக்குள் செலுத்த ஆரம்பிக்கின்றன. கல்லீரல் உங்கள் இரத்தத்துக்கு அதிகமான சர்க்கரையை சேர்க்கிறது. இவை அனைத்துமே, இருதயத்தைச் சுருங்கச் செய்து, இரத்தக் குழாயை சுருக்கி, இரத்த அழுத்தத்தை உயர்வாக்கி, தசை இறுக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
பருவ வயதினர் அழுத்தத்தின் குறியிலக்காக இருக்கிறார்கள்
பருவ வயதினர் இயற்கையில், அதிகமான அழுத்தத்தினால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர். பூப்புப் பருவத்தில் உங்கள் உடல் பல மாற்றங்களை அனுபவிக்கிறது. மேலுமாக ஓயாது மாறிக்கொண்டிருக்கும் ஓர் உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம். (1 கொரிந்தியர் 7:31 ஒப்பிடவும்.) ‘நீங்கள் இளைஞர்களாயிருக்கிறீர்கள், உங்களுக்குக் கவலைகள் இல்லை, நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்’ என்பதாக சொல்லி வயது வந்தவர்கள் இதை பூசி மெழுகிவிடக்கூடும்.
ஆனால் ஒருவேளை இளைஞராயிருப்பது என்ன என்பதை அவர்கள் மறந்துவிட்டிருக்கக்கூடும். எப்படியாயினும், உங்களுக்கு உங்களுடைய சொந்த கவலைகள் இருக்கின்றன—உங்கள் தோற்றம், பாலுணர்ச்சி, உடல் ஆரோக்கியம், பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள், மதிப்பெண்கள், பணம், உலக நிலைமைகள், மரணம் ஆகியவற்றை பற்றியதாக அவை இருக்கலாம். ஏன், இளைஞராய் இருப்பது உங்கள் வாழ்க்கையிலேயே ஒருவேளை அழுத்தங்கள் நிறைந்த ஒரு காலப்பகுதியாக இருக்கக்கூடும்! ஆனால் பயப்படாதீர்கள், நம்பிக்கை இருக்கிறது.
ஒரு காரியமானது ஓரளவு அழுத்தம் உங்களுக்கு நன்மையாக இருக்கக்கூடும். எவ்விதமாக? ஒரு பரீட்சையை எழுதும் விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். “நிபுணர்களின் கருத்துப்படி, ஓரளவு அழுத்தம் உங்கள் மனதை விழிப்பாகவும் உடம்பின் நீர்கூறுகளைக் பெருக்கெடுக்கவும் செய்கிறது” என்பதாக பதினேழு (Seventeen) என்ற இளைஞர்களுக்குரிய பத்திரிகையில் ஜூடித் கீமன் எழுதுகிறார். பிரசித்திப்பெற்ற வான் க்ளிபர்ன் போட்டியில் வெற்றிபெற்ற, இசை நிகழ்ச்சிகளில் பியானோ வாசிப்பவனாகிய அன்ட்ரி மிக்கன்ஷுப் ஒரு சமயம் பின்வருமாறு சொன்னதாகக் கூறப்படுகிறது: “மேடையில் ஏறும் ஒவ்வொருவரும் ஓரளவு மேடை நடுக்கத்தை அனுபவிக்கிறார்கள். . . . இது கொஞ்சம் கூடுதலான சக்தியையும் கூடுதலான உணர்ச்சித் துடிப்பையும் பெற்றுக்கொண்டு சிறப்பாக அதில் பங்குகொள்ள உதவும் ஒரு வழியாக இருக்கிறது.” ஆகவே எது எப்படியாயினும் அழத்தத்தை தவிர்க்க முற்படக்கூடாது.to check translation
இளைஞர் அழுத்தத்தைச் சிறப்பாக எடுத்துக்கொள்கின்றனர்
மேலுமாக, இளைஞர் பொதுவாக அழுத்தங்களை சகித்துக்கொள்ள ஏராளமான சக்தியையும் நம்பிக்கையுள்ள மனநிலையையும் பெற்றவர்களாக, இதற்கு தயாரான நிலையில் இருக்கிறார்கள். பைபிள் சொல்லுகிறது: “வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்.” (நீதி. 20:29) “வயதானவர்களைவிட இளைஞர்கள், மிதமிஞ்சிய அழுத்தத்தின் கொடிய பாதிப்புகளிலிருந்து அதிவேகமாக மீண்டுவிடுகிறார்கள்” என்பதாக பருவ வயது அழுத்தம் என்ற பிரசுரத்தின் ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள். நியு யார்க்கிலிருந்து வரும் இருபத்து மூன்று வயது வின்சென்ஸா இதற்கு ஓர் உதாரணமாக இருக்கிறாள். அவள் சொல்லுகிறாள்:
“நான் பருவ வயதிலிருக்கும்போது என் அம்மா புற்று நோயால் மரித்துப் போனாள். பதினெட்டு மாதங்களுக்குப் பிறகு அப்பா மாரடைப்பில் காலமானார். நான் என்னுடைய 2 தம்பிமார்களோடு தனிமையில் விடப்பட்டேன். பின்பு ஒரு? பையனை நான் சந்தித்து அவனுடைய காதலியானேன். ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் நாங்கள் பிரிந்துவிட்டோம். ‘நான் வாழ்க்கையை முடித்துக்கொள்ள வேண்டுமா அல்லது எனக்கு பித்து பிடித்துவிடுமா அல்லது ஒரு பயித்தியக்கார விடுதிக்கு நான் கொண்டு போகப்படுவேனா?’ என்றெல்லாம் நான் சில சமயங்களில் யோசித்ததுண்டு. அழுத்தங்கள் நிறைந்த இந்த நிலையிலிருந்து வின்சென்ஸா மீண்டு வரமுடியுமா? அவள் சொல்கிறாள்: இப்பொழுது அதைப்பற்றி யோசித்துப் பார்த்தால் அதையெல்லாம் நம்பவே முடியவில்லை. ஆனால் அவற்றை சமாளித்தேன். நான் அதிகத்தைக் கற்றுக் கொண்டிருந்தேன்.”
மேலுமாக வின்சென்ஸா, யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாகிய தன்னுடைய உறவினரிடமிருந்து, மரித்தவர்கள் பூமியின் மீது எதிர்கால பரதீஸில் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்ற பைபிள் நம்பிக்கையைப் பற்றி கற்றறிந்தாள். (யோவான் 5:28, 29) “அந்த சமயத்தில் நான் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவளாக இருந்தபோதிலும், புதிதாக நான் கண்ட இந்தப் பைபிள் நம்பிக்கையில் என் முழு நம்பிக்கையையும் வைத்தேன். இது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது” என்பதாக அவள் சொல்கிறாள்.—2 கொரிந்தியர் 1:9-ஐ ஒப்பிடவும்.
அவை அனைத்தையும் நீங்கள் வெல்ல முடியாது
ஆனால் எல்லா அழுத்தங்களிலிருந்தும் ஒருவர் உண்மையில் ஒருபோதும் விடுபட்டுவிட முடியாது. “நாம் எப்பொழுதும் அழுத்தத்திலிருக்கிறோம்” என்கிறார் குழந்தைப் பருவ அழுத்தம் என்ற பிரசுரத்தின் ஆசிரியர். “அது இல்லாமற் போகயில் நாம் உயிரிழந்துவிடுகிறோம்.” பைபிள் காலங்களிலும்கூட ஆட்கள் அழுத்தங்களின் கீழிருந்திருக்கிறார்கள். பல ஆண்டுகளாக அடிக்கடி அழுதுகொண்டு மலடியாக இருந்தபடியால் ஒரு குழந்தைக்காக ஏக்கங்கொண்டு சாப்பிட மறுத்த அன்னாளைப் பற்றி நாம் வாசிக்கிறோம். (1 சாமு. 1:7) அதே விதமாகவே, இளைஞனான எரேமியா, ஜாதிகளுக்குப் பிரசங்கிக்க வேண்டும் என்பதாக கடவுள் விரும்பியபோது அவன் தயங்கினான். (எரேமியா 1:6) யோபு தன்னுடைய ஆஸ்திகளையும், தன்னுடைய குடும்பத்தையும் தன்னுடைய உடல் ஆரோக்கியத்தையும் இழந்த பின்பு, தான் ஒருபோதும் பிறவாதிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதாக நினைத்தான். (யோபு 3:10) ஒரு சமயம் இயேசு அத்தனை வேதனையில் இருந்தபடியால், அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய் மாறின.—லூக்கா 22:44.
ஆகவே அழுத்தத்திலிருந்து எவராலும் தப்பித்துக்கொள்ள முடியாது. அதைக் கையாள கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் அதைச் செய்ய வேண்டும், ஏனென்றால் மிதமிஞ்சிய அழுத்தம் உங்கள் சரீர சுகத்தைக் கெடுத்து உங்கள் உணர்ச்சிகளைச் சோர்வடையச் செய்யும். அது மனக்குழப்பத்தை உருவாக்கி, நீங்கள் மனஸ்தாபப்படக்கூடிய காரியங்களைச் சொல்லவும் செய்யவும் தூண்டக்கூடும். உங்கள் மனதிலும் சரீரத்திலும் அது தேய்மானத்தை உண்டுபண்ணக்கூடும். அப்படியென்றால், அழுத்தத்தைக் கையாளுவதற்கு இதோ சில வழிகள்:
1. எரிச்சலூட்டும் காரியங்களைக் குறைத்துக்கொள்ளவும். ஒழுகிக் கொண்டிருக்கும் குழாய், கிரீச்சிடும் ஒரு கதவு, தள்ளாடும் ஒரு மேசை எரிச்சலை உண்டு பண்ணக்கூடும். எரிச்சலூட்டும் சிறிய காரியங்கள் மொத்தமான உங்கள் அழுத்த பளுவை இன்னும் பாரமாக்கிவிடக்கூடும். அவைகளைக் குறித்து ஏதாவது செய்யுங்கள். இறுக்கமாக்கி, எண்ணெய் பூசி, பழுதுபார்த்துவிடுங்கள். அடிக்கடி தேவைப்படும் பொருட்களைக் கைக்கெட்டும் தூரத்தில் வைத்துக்கொள்ளுங்கள். திட்டமிட்டு செயல்படுங்கள். வெறுமென பொருட்களைத் தேடிக் கொண்டிருப்பதில் நாம் 20-30 சதவிகித நேரத்தைச் செலவழிக்கிறோம் என்பதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். பொருட்களை மறுபடியுமாக சீராக அமைத்துத் துப்புரவு செய்து அலங்கரியுங்கள். ஆனால் பரிபூரணமாக செய்ய வேண்டும் என நினைக்காதீர்கள். அவ்விதமாக நினைப்பது எவராலும் தாங்குவதற்கு அழுத்தம் நிறைந்த சுமையாக இருக்கிறது.
2. உங்கள் வேலைகளை ஒழுங்காக அமைத்து, மட்டுப்படுத்திக்கொள்ளவும். இரண்டு முயல்களை ஒரே சமயத்தில் பிடிக்க முற்பட்டால், இரண்டையும் நீங்கள் விட்டுவிடுவீர்கள் என்பது ஒரு பழமொழி. ஒவ்வொரு நாளும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை வரிசைப்படுத்திக்கொண்டு, ஒரு சமயத்தில் ஒரே காரியத்தைச் செய்யவும். வீட்டிலுள்ள அலுவல்களை எப்பொழுது மற்றும் எவ்விதமாகச் செய்வது என்பது பற்றி உங்கள் பெற்றோரோடு கலந்து பேசி திட்டமிடவும். பின்னர் மனமாரவும் மகிழ்ச்சியோடும் இவைகளைச் செய்யவும். உங்களை வேதனைப்படுத்தும் அல்லது திகிலடையச் செய்யும் நிலைமைகளுக்குள் கொண்டுவரக்கூடிய துணிச்சலான, அழத்தங்கள் நிறைந்த நடவடிக்கைகளைத் தவிர்த்துவிடுங்கள். அவை அந்தச் சமயத்தில் கிளர்ச்சியூட்டுவதாயும் ஆனால் முடிவில் தீங்கிழைப்பதாகவும் இருக்கக்கூடும்.
3. தோல்வியின் பயத்தை குறைத்துக்கொள்ளவும். பள்ளி தேர்வுகள் உண்மையில் எவரையும் அழுத்தத்தின் கீழ் கொண்டுவரக்கூடும். ஆனால் நீங்கள் நன்றாக தயார் செய்து, முந்தின நாளே அனைத்தையும் ஒழுங்குபடுத்திக்கொண்டு சீக்கிரமே உறங்கச் சென்று, நன்றாக தூங்கி எழுந்தால் தோல்வியின் பயத்தைக் குறைத்துக்கொள்ளலாம். எழுச்சியூட்டும் பானங்களை எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களை அதின் விளிம்புக்குக் கொண்டுசென்று உண்மையில் அதை கொடுக்காமல் இருக்கலாம். தளர்ந்த நிலையிலிருங்கள், ஆனால் உங்களால் முடிந்தவரை சிறப்பாகச் செய்யுங்கள். ஒரே ஒரு பரீட்சைதானே வாழ்க்கையை உண்டுபண்ணுவதோ அல்லது அதை தகர்த்துவிடுவதோ கிடையாது என்பதை நினைவில் வையுங்கள், நீங்கள் தோல்வியடைந்தால் மற்ற வாய்ப்புகள் இருக்கக்கூடும். நம்பிக்கையிழந்துவிடாதீர்கள். நீதிமொழிகள் 24:16-ல் பைபிள் நம்பிக்கையான ஒரு மனநிலையை ஊக்குவிக்கிறது: “நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்.”
4. எவரிடமாவது பேசவும். இயந்திர நீராவி கொதிகலங்களுக்கு வெளியேற்றும் அடைப்பிதழ்கள் தேவையாக இருக்கின்றன. மனிதர்களாகிய நமக்கு இது இன்னும் அதிகமாக தேவையாக இருக்கிறது. கவலையும் ஏக்கமும் உங்களுக்குள் அடைப்பட்டிருப்பதாக நீங்கள் கண்டால், நீங்கள் எவராவது ஒருவரிடம்—ஒரு நண்பன், பெற்றோர், ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரியிடம் பேச வேண்டும். சில சமயங்களில் கடவுளுடைய நீதியுள்ள நியமங்களைப் பின்பற்றுவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய கிறிஸ்தவ சபையிலுள்ள ஒரு மூப்பர் போன்ற ஒருவரிடம் பேசுவது அவசியமாயிருக்கலாம். அதைச் செய்ய தயங்காதீர்கள்.—நீதி. 12:15.
5. ஜெபிக்கவும். முன்னால் குறிப்பிடப்பட்ட நான்கு பைபிள் பாத்திரங்களாகிய அன்னாள், எரேமியா, யோபு மற்றும் இயேசுவைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். பாரமான அழுத்தத்தைக் கையாளுவதற்கு அவர்களுக்கு அதிகமாக உதவியது என்ன? அவர்கள் அனைவருமே தங்கள் பிரச்னைகளைக் குறித்து யெகோவா தேவனிடம் பேசினார்கள். அன்னாள் ஜெபித்தாள். யெகோவா ஒரு குமாரனைக் கொடுத்து அவளை ஆசீர்வதித்தார். (1 சாமு. 1:11, 20) எரேமியா ஜெபித்தான். கடவுள் அவனை ஜாதிகளுக்குப் பலமும் தைரியமுமுள்ள ஒரு தீர்க்கதரிசியாக ஆக்கினார். (எரேமியா 1:6-10) யோபு ஜெபித்தான். அவனுக்கு அபரீமிதமாக கொடுத்து அவன் இழந்ததை யெகோவா ஈடு செய்தார். (யோபு 42:10-17) இயேசு ஜெபித்தார். அவர் எழுந்திருந்து பலிக்குரிய போக்கைத் தொடரும்படியாக யெகோவா அவரை பலப்படுத்தினார்.—லூக்கா 22:44-46.
தன்னுடைய அம்மாவையும் அப்பாவையும் காதலனையும் இழந்தபின்பு வின்சென்ஸாவுக்கு என்ன நடந்தது. அவள் சொல்லுகிறாள்: “நான் இழந்துவிடக்கூடாத ஒருவரை கண்டுபிடிக்க வேண்டும். என்னை ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதாக நான் அறிந்திருக்கும் ஒருவர் மீது அன்பு செலுத்த வேண்டும். அப்பொழுது நான் யோசித்தேன்: ‘நிச்சயமாகவே கடவுள் மட்டுமே அப்படிப்பட்டவராக இருக்கக்கூடும், அவர் எப்பொழுதும் அங்கிருக்கிறார். அவர் என்னுடைய தகப்பனாக வேண்டும். அவரே சர்வலோகத்தின் சிருஷ்டிகராக இருக்கிறார்.’ ஆகவே நான் ஜெபித்தேன்: ‘யெகோவாவாகிய நீரே மெய்யான கடவுளாக, சர்வலோகத்தின் சிருஷ்டிகராக இருந்தால், தயவுசெய்து எனக்கு அதை தெரிவிக்கவும். உம்மை நான் சேவிக்க விரும்புகிறேன்.’ பின்னர் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் என் வீட்டுக்கு வந்து என்னிடம்: “ஒருவர் உங்களை அதிகமாக நேசிப்பதன் காரணமாகவே நான் இங்கே வந்திருக்கிறேன்” என்று சொன்னார். வின்சென்ஸா ஒரு பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டாள். 1 பேதுரு 5:7-ல் சொல்லப்பட்ட காரியத்தைச் செய்ய அவள் கற்றுக்கொண்டாள்: “அவர் [கடவுள்] உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்துவிடுங்கள்.” இப்பொழுது மற்றவர்களும் இதையே செய்ய அவர்களுக்கு அவள் கற்றுக் கொடுக்கிறாள்.
ஆகவே நாம் மீண்டும் சொல்வோம்: நீங்கள் அழுத்தத்தை அறவே ஒழித்துவிட முடியாது. ஆனால் அதை குறைக்கவும் அதை கட்டுப்படுத்தவும் கடவுள் மீது கவலைகளையெல்லாம் வைத்துவிடவும் நீங்கள் கற்றுக்கொள்ளலாம். அப்பொழுது அழுத்தம் உங்களை வெல்ல முடியாது.—சங்கீதம் 55:22. (g87 4/8)