மனப்பாடம் செய்தல் எளிதாகும்போது தாய்மார்களே, வேத வசனங்களை மனப்பாடம் செய்வது உங்களுடைய குழந்தைக்கு எவ்வளவு எளிதாக இருக்கிறது என்பதை நீங்கள் உணருகிறீர்களா?
“ஹம்டி டம்டி சாட் ஆன் எ வால் . . . ” (குழந்தகளுக்கான ஆங்கில செய்யுள்) பிறகு என்ன நேர்ந்தது? உங்களுக்குத் தெரியும்—எல்லாரும் அறிந்திருக்கிறார்கள். நாம் சிறு பிள்ளைகளாக இருந்தபோது நாமெல்லாரும் “ஹம்டி டம்டி” பாட்டை கற்றறிந்தோம். குழந்தகளுக்கான அந்த பாட்டு நாம் இந்நாள் வரைக்கும் இன்னும் மனதில் வைத்திருப்பதுதானே குறிப்பிடத்தக்க காரியமாக இருக்கிறது. “ராஜாவுடைய எல்லா குதிரைகளும் ராஜாவுடைய எல்லா ஆட்களும்” (All the king’s horses and all the king’s men”) மறுபடியும் ஒன்றாக சேர்த்து உருவாக்க முடியாத அந்த நபர் யார் என்று ஒருவேளை இப்போது நம்முடைய குழந்தைகளுக்குங்கூட நாம் போதிக்கவும் செய்கிறோம்.
அந்த குழந்தைகளுக்கான செய்யுளையோ அல்லது உங்களுடைய தேசத்தில் உபயோகிக்கப்படும் ஒரு செய்யுளையோ நீங்கள் ஞாபகத்தில் வைத்திருப்பதற்கு இரண்டு மிக எளிய காரணங்கள் இருந்தன: அவை மனப்பாடம் செய்வதற்கு எளிதாக இருந்தன மற்றும் அவை விளையாட்டாகவும் இருந்தன. ஆனால் மனப்பாடம் செய்வது என்பது குழந்தைகளுக்கு அதைவிட இன்னும் அதிகத்தைக் குறிக்கிறது. மேலும் இன்னொன்று இருக்கிறது.
பள்ளி ஆசிரியர்களால் அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது
மனப்பாடம் செய்வதைக் குறித்து திறமையுள்ள குழந்தகளின் ஆறாம் வகுப்பு ஆசிரியர் ஒருவர் அதிக உணர்வுள்ளவராக இருந்தார். அவர் வலியுறுத்துகிறார்: “மறுக்கமுடியாத உண்மையென்னவெனில், சிறு குழந்தைகள் அதிகத்தை மனப்பாடம் செய்கிறார்கள். மிகச் சிறியவர்களுங்கூட அநேகப் பாடல்களின் வார்த்தைகளையும், எண்ணற்ற விளையாட்டுப் போட்டிகளின் புள்ளிவிவரங்களையும் அல்லது அது போன்றவற்றையும் மனதில் பதியவைத்துக் கொள்கிறார்கள். இத்தகைய மனப்பாடம் செய்தலானது அடிக்கடி பிரயோஜனமற்றதாயும் சில சமயங்களில் ஊறு விளைவிப்பதாயும் இருக்கிறது. ஆரோக்கியமான, தரமுள்ள காரியங்களை மனப்பாடம் செய்வது சிறு வயதினருக்கு ஒரு நல்ல சிந்தனா முறையை அளிக்கிறது. இது ஓர் அற்புதமான திட்டமிடப்பட்ட பயிற்சியாக இருக்கிறது. அது கருத்துக்களை உண்டுபண்ணுகிறது, புதுமையான காரியங்களைப் படைப்பதைத் தூண்டுகிறது. அது பிற்பாடு மேலும் அபிவிருத்தி செய்ய ஒரு படியாக அமைகிறது.”
இன்னொரு உயர்பள்ளி ஆங்கில ஆசிரியர் சொல்கிறார்: “சிறு பிராயத்தில் இருக்கும்போது அவர்களுடைய சிந்தனைகள் தூண்டப்படாமலும் கருத்துக்கள் சவால் விடப்படாமலும் இருந்த மாணாக்கர்கள் உயர்நிலைப் பள்ளியை அடையும் சமயத்தில் ஒரே போக்குள்ளவர்களாகவும் சரீர நலச்சாய்வுடையவர்களாகவும் இருப்பதாகத் தோன்றுகிறது. அவர்கள் அடிக்கடி நல்ல பேச்சுத் தொடர்பு கொள்வதில்லை மற்றும் மந்த புத்தியுள்ளவர்களாக மாறிவிடக்கூடும்.”
உங்களைப்போன்று உங்களுடைய குழந்தைகள் அநேகமாக அவர்கள் உயிர்வாழும் வரையாக தாங்கள் மனப்பாடம் செய்யும் காரியங்களில் சிலவற்றை மனதில் வைத்திருப்பார்கள். ஆகவே அவர்கள் உயிர்வாழும் வரையாக அவர்கள் உபயோகிக்கக்கூடிய மற்றும் அவர்களுக்கு நன்மயளிக்கக்கூடிய சில காரியங்களை நீங்கள் ஏன் அவர்களுக்கு போதிக்கக்கூடாது? அவர்கள் மனப்பாடம் செய்துகொள்வதற்காக சில வேத வசனங்களை ஏன் தெரிந்தெடுக்கக்கூடாது? சில கிறிஸ்தவ குடும்பங்கள் அதிக சந்தோஷத்தோடும் நன்மையளிக்கும் விதத்திலும் இதைச் செய்து வருகிறார்கள்.
அவர்கள் இதைச் செய்யக்கூடும், நீங்களும் இதைச் செய்யக்கூடும்
ஆண்ட்ரூ ஆறு வயதாக இருக்கையில் அவன் 80-க்கும் மேற்பட்ட பைபிள் வசனங்களை வார்த்தைக்கு வார்த்தை மனப்பாடம் செய்ய அவனுடைய தாய் அவனுக்கு உதவியிருந்தாள்.
“இதில் அவசரப்படவில்லை” என்று அவள் சொல்கிறாள். “எங்களுடைய வேகம் மிகவும் நிதானமானதாகவும் இயல்பானதாகவும் இருந்தது. உண்மையில், ‘அவன் எத்தனை வசனங்களை அறிந்திருக்கிறான்?’ என்று ஒருவர் கேட்கும்போது நான் சற்று நின்று அவற்றைக் கூட்டிச் சொல்ல வேண்டியதாக இருந்தது. ஆண்ட்ரூ புதிய வசனங்களில் கைதேர்ந்தவனாயிருப்பதில் அதிக மகிழ்ச்சியடைந்தான், அந்த பட்டியல் வேகமாக வளர்ந்தது.”
ஆனால் அவள் அதை எவ்விதமாகச் செய்தாள்? முதலில் என்ன புத்தகங்களை அவள் வாசித்தாள்? அதற்கு என்ன கைவித்தை இருக்கிறது?
“இல்லை அப்படியொன்றும் இல்லை” அவள் மறுத்தாள். “எதுவும் சுலபமாக இருக்க முடியாது. அவனுக்கு ஒரு வசனத்தை வெறுமென இருமுறை நான் வாசிப்பேன், பின்பு அந்த வசனத்தை அவன் எனக்கு பிறகு இருமுறை திரும்ப சொல்லுவான்—ஒரு விவாக உறுதிமொழியைப் போன்று. பிறகு அவன் இதைத் தன் மனதில் கிரகிக்கும் வரையாக ஒரு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று தடவைகள் இந்த வகுப்பை நாங்கள் மறுபடியும் நடத்துவோம். அவன் அவற்றைக் கற்றறிய எவ்வளவாக விரும்பினான் என்பதிலும் மற்றும் அவற்றை எவ்வளவு விரைவாக கிரகித்துக்கொண்டான் என்பதிலும் நான் வியப்படைந்தேன்!”
“அவ்வளவுதானா?”
“ஆம், உண்மையிலேயே அவ்வளவுதான். அத்தகைய ஒரு நல்ல போதகராக இருப்பதற்காக மக்கள் என்னைப் புகழ முயலும்போது, நான் விசேஷமாக எதுவும் செய்யவில்லை என்பதை நான் ஒத்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. நான் வெறுமென என் மகனுக்கு முன்பாகப் புதிய வசனங்களைத் தொடர்ந்து வைப்பேன், அவன் அவற்றை பிஸ்கெட்டுகளை எடுத்துக்கொள்வது போன்று எடுத்துக்கொள்கிறான்.”
“உங்களுடைய மகன் தனிப்பட்ட வசனங்களை மனப்பாடம் செய்ய உண்மையிலேயே விரும்புகிறான் என்று நீங்கள் அர்த்தப்படுத்துகிறீர்களா?
“இல்லை, வெறுமென அவன் விரும்புகிறான் என்று நான் சொல்வதில்லை—அவன் உள்ளார்ந்த ஆவல் கொண்டிருக்கிறான்! என்னுடைய கணவரும் நானும் ஆண்ட்ரூவிற்கு நம்பிக்கையுள்ளவர்களாகவும், ஆர்வமுள்ளவர்களாகவும் மற்றும் உற்சாகமளிப்பவர்களாகவும் இருக்கிறோம். அவன் தன்னுடையச் சாதனைகளில் பெருமிதம் கொள்கிறான். மற்ற பிள்ளைகள் எங்களுடைய மகனைக் காட்டிலும் வேகமாகவோ அல்லது மெதுவாகவோ கற்றறியலாம்; ஆனால் எல்லா பிள்ளைகளும் தாயுடனோ அல்லது தகப்பனுடனோ இவ்விதமாக நேரத்தைச் செலவிடுவதில் மகிழ்வார்கள் என்பதில் நான் நிச்சயமாயிருக்கிறேன்.”
உங்களுடைய குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகளைக் குறித்து சிந்தியுங்கள்
பைபிள் என்ன சொல்கிறது என்பதைக் குறித்து உங்களுடைய பிள்ளைக்கு நீங்கள் கற்றுக்கொடுக்கையில், நீங்கள் “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” அவனை வளர்க்கிறவர்களாக இருப்பீர்கள். (எபேசியர் 6:4) நீங்கள் அவனுடைய இளம் மனதில் கடவுளுடைய எண்ணங்களை நாட்டி வருகிறீர்கள். அவ்விதமாக காலப்போக்கில் கடவுளுடைய சிந்தனா முறையானது உங்களுடைய பிள்ளையின் சிந்தனா முறையாக மாறிவிடும். அது எப்படி முடிகிறது என்பதை நாம் கவனிப்போம்:
மனப்பாடம் செய்ய உங்களுடைய பிள்ளைக்கு உதவுவதற்கு மத்தேயு 24:14-ஐ ஒருவேளை நீங்கள் முதலாவதாக தெரிந்துகொள்ளக்கூடும். மற்றவர்களுக்கு இந்த வேத வசனம் நன்றாக பலன் தந்திருக்கிறது, ஏனென்றால் பிள்ளைகள் அடிக்கடி கேள்விப்படும் ஒன்றாக இது இருக்கிறது. முதல் சிறிது காலத்திற்கு, நீங்கள் வெறுமென வசனத்தை வாசித்து இதை உங்களுடைய பிள்ளை மறுபடியும் சொல்ல நீங்கள் அவனுக்கு உதவக்கூடும். பிறகு அவனுடையப் புரிந்துகொள்ளுதலின் ஆற்றலுக்கு இதைக் குறித்து நீங்கள் அதிகம் சேர்க்கக்கூடும்.
உதாரணமாக, அவன் மத்தேயு 24:14-ஐ மறுபடியும் சொன்ன பிறகு, நீங்கள் “நற்செய்தி” என்பது என்ன என்பதைக் குறித்து ஓரிரண்டு வாக்கியங்களில் குறிப்பிடலாம். பிற்பாடான வகுப்பில் நீங்கள் கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து சுருக்கமாக விவரிக்கக்கூடும். இன்னொரு சமயத்தில் மெய் கிறிஸ்தவர்கள் பிரசங்கித்து வரும் உலகத்தின் மற்றொரு பகுதியையும் அங்கு வேலை எவ்விதமாக இருக்கிறது என்பதையும் விவரிக்கக்கூடும். வகுப்புகள் குறுகிய நேரத்தை எடுப்பதாயும், அநேக விதிமுறைகளை உட்படுத்தாததாயும், மற்றும் விளையாட்டாகவும் இருக்கக்கூடும். நாம் ஒரு பயிற்சியளிக்கும் சார்ஜென்ட்டாக இருக்கத் தேவையில்லை. சூழ்நிலையைச் சாதாரணமாகவும், இயல்பானதாகவும் வைத்துக்கொள்ளுங்கள். இவ்விதமாகச் செய்யும்போது சில குடும்ப விளையாட்டுகளையும்கூட நீங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கக்கூடும்.
பிள்ளை உண்மையிலேயே வசனங்களோடு நன்கு பழக்கப்படும் வரை ஒரு வாரத்தின் சில தடவைகள் திரும்பத்திரும்ப உங்கள் பிள்ளையின் வேத வசனங்களைப் பொறுமையோடு பயிற்சியளியுங்கள். காலப்போக்கில் அவன் ஏற்கனவே அறிந்த வசனங்களை அவன் மறுபடியும் சொல்ல வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் அவன் அவற்றை மிக நன்றாக அறிந்திருக்கிறான். அவனுடைய ஆர்வத்தைத் தொடர்ந்து காத்துவர இரண்டு புதிய வசனங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த சமயத்தில் தனக்கு விருப்பமன ஒரு வேத வசனத்தைக் குறித்து திட நம்பிக்கையுள்ளவனாயிருந்து, இதை ஒரு சபைக்கூட்டத்தில் பகிர்ந்துகொள்ள அவன் ஆர்வமுள்ளவனாக இருக்கக்கூடும். அவனுடைய பெற்றோர் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சந்தித்தவரோடு பேசுவதிலும்கூட அவன் மகிழ்ச்சியுள்ளவனாக இருக்கலாம்.
ஆனால் அவனை அவசரப்படுத்தவோ அல்லது கட்டாயப்படுத்தவோ வேண்டாம். சிறு குழந்தைகள் எல்லாரும் வித்தியாசமான வேகத்தில் வளர்கிறார்கள். சிலர் தங்களுடைய வசனங்களை மிக நன்றாக அறிந்திருக்கலாம். ஆனால் வீட்டிற்கு வெளியே அவற்றைச் சொல்வதைக் குறித்து அவர்கள் அதிகமாக கூச்சப்படலாம். முக்கியமான காரியமாக இருப்பதானது, உங்களுடைய பிள்ளை மற்றவர்களைக் கவருவதற்காக அல்ல, ஆனால் நீங்களும் அவனும் கடவுளுடைய வார்த்தை என்ன சொல்கிறது என்பதைக் கற்றறிவதில் ஒரு அனலான, அன்பான நேரத்தைக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே.
மற்ற சந்தர்ப்பங்களில், தேவையான சரிபடுத்துதலை அல்லது சிட்சையைக் கொடுக்கும் ஒரு வசனத்தை கற்றுக்கொள்ள நீங்கள் அவனுக்கு உதவி செய்யலாம். ஒருவேளை அந்த வசனம் பெற்றோருக்கு மரியாதைக் காட்டுவதை உயர்த்திக் காண்பிக்கும் ஒன்றாகவோ அல்லது மற்றவர்களோடு சமாதானமாக வாழ்வதைக் குறித்ததாகவோ இருக்கலாம். முக்கிய பைபிள் கோட்பாடுகளை விளக்கும் ஆதியாகமம் 1:1 அல்லது வெளிப்படுத்துதல் 21:3, 4 போன்ற வசனங்களுங்கூட தங்களுக்குரிய இடத்தைப் பெறுகின்றன.
உண்மையில் எல்லா வசனங்களுமே உங்களுக்கும் உங்களுடைய குழந்தைகளுக்கும் அனுபவிக்கத் தகுந்தவையாகவும் பலனளிக்கக்கூடியவையாகவும் இருக்கின்றன. ஏனென்றால் “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16) இது உங்களுடைய குழந்தைக்கு அதிகளவான நன்மையைக் கொண்டுவருவதனாலும், கற்றுக்கொடுப்பதற்கு உங்களுக்கு எளிதாயிருப்பதனாலும் மற்றும் உங்கள் இருவருக்குமே அனுபவித்து மகிழக்கூடியதாக இருப்பதனாலும், இப்பொழுதே இதை ஏன் ஆரம்பிக்கக்கூடது? (g87 7⁄22)