உலகத்தைக் கவனித்தல்
பொதுமக்கள் பார்வைக்கு மட்டுமே
“பீஹார் மாநிலம் [இந்தியா] மரபுரிமைச் செல்வமாயிராத கற்களைக் கொண்ட ஒரு கல்லறை” என்பதாக இந்தியா டுடே குறிப்பிடுகிறது. “குப்பைக் கூளங்களாலும், மேய்ச்சலின் கால்நடைகளாலும் பன்றிகளாலும் மறைக்கப்பட்டிருக்கும் இந்த நினைவுக் கற்கள் பீஹாரின் நிலப்பகுதியில் முற்றுப்புள்ளிகளாகத் திகழுகின்றன. அவை என்ன? ஒருபோதும் நிறைவேற்றப்படாத கட்டிடத் திட்டங்களுக்கான அடிக்கற்கள். அவற்றில் ஒன்று சிட்டெளனியில் ஒரு பாலத்துக்காக திருமதி. இந்திரா காந்தி அம்மையாரால் நாட்டப்பட்டது. வேலை இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை, பயணிகள் நேப்பாளம் வழியாக 60 மைல்கள் சுற்றிச் செல்ல வேண்டியதாயிருக்கிறது. மற்றொன்று, பாட்னாவில் நகராட்சி பணியாட்களுக்கான ஒரு குடியிருப்புப் பகுதிக்காக நாட்டப்பட்ட அடிக்கல். இப்பொழுது 11 ஆண்டுகளுக்குப் பின்னர், இல்லத்தரசிகள் துணிகளைக் காய வைப்பதற்காக அதைப் பயன்படுத்துகின்றனர். சில சமயங்களில் அப்படிப்பட்ட பல கற்கள் வரிசையாகக் காணப்படுகின்றன, பல்வேறு அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்ட இடங்கள், ஆனால் “நிதி ஒதுக்கீடோ அல்லது அங்கீகாரமோ இல்லாமல் இருக்கின்றன.” மற்றவற்றில், அடிக்கற்கள் நாட்டப்பட்டு, பின்தொடரும் அரசு மந்திரிகளால் மறுபடியும் நாட்டப்பட்டுவந்திருக்கின்றன. “தங்களுடைய பெயர்களைக் கற்களில் பதித்துக்கொள்வதற்கான அரசியல்வாதிகளின் பசி தீர்க்கப்படாத ஒன்று,” என்கிறது இந்தியா டுடே. (g90 5/8)
ஒரு சிக்கல் மிகுந்த சர்வலோகம்
விண்வெளியில் பெரிய கட்டிட அமைப்புகளின் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகள் தங்களுடைய கோட்பாடுகளை மறுபரிசீலனை செய்வதற்கு வற்புறுத்துகிறது. “மகா சுவர்” என்று குறிப்பிடப்படும் அப்படிப்பட்ட கட்டிடங்களில் ஒன்று நட்சத்திர கூட்டங்களடங்கிய மிகப் பிரமாண்டமான தட்டைப் பகுதி ஓர் ஆயிரம் கோடி ஒளி வருடங்கள் பரவியவை என்று விளக்கப்படுகின்றன. மற்றொரு கட்டிட அமைப்பு நம்முடைய நட்சத்திர தொகுதி உட்பட அநேக நட்சத்திர தொகுதிகளைத் தன்னகத்தே ஈர்ப்பதாய்ச் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட அமைப்புகள் “வெறுமென நட்சத்திரக் கூட்டங்களாகவோ அல்லது கொத்துகளாகவோ இல்லை, ஆனால் நட்சத்திர தொகுதிகளடங்கிய ‘மாபெரும் கண்டங்கள்’” என்பதாகவும், “சர்வலோகத்தின் அடிப்படைப் பொருட்கள் விண்ணாராய்சியாளர்கள் கற்பனை செய்ததைவிட மிகப் பெரியதும் அதிக சிக்கலானதுமாயிருக்கின்றன” என்ற கோட்பாடுகளை நிருபிக்கின்றன என்று தி நியு யார்க் டைம்ஸ் குறிப்பிடுகிறது. அந்த மகா ஈர்ப்பு அமைப்பு போய்விடும் என்று பல கோட்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவிப்பதாக ஒரு விண்ணாய்வாளர் டைம்ஸ் பத்திரிகையிடம் சொன்னார். ஏன்? “அப்படிப்பட்ட ஒரு மகா கட்டிட அமைப்பு எப்படி உருவாக முடியும் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை,” என்றார். (g90 6/8)
உடற்பயிற்சி பற்றிய புதிய கண்டுபிடிப்புகள்
ஒழுங்காக செய்யப்படும் அளவான உடற்பயிற்சியுங்கூட ஒருவர் இருதய நோய், புற்றுநோய், மற்றும் பல காரணங்களால் மரிக்கும் வாய்ப்புகளைக் கணிசமான அளவுக்குக் குறைக்கக்கூடும் என்பதாக ஓர் எட்டு ஆண்டு ஆராய்ச்சி காண்பிக்கிறது. உடற் பயிற்சியின் மூலம் உடலை நல்ல நிலையில் வைத்துக்கொள்வது மரண எண்ணிக்கையுடன் எந்தளவுக்கு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை அறிய 13,000-க்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் மிகவும் முழுமையான அளவில் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களுடைய உடலை உட்படுத்திய செயல்களை ஆராய்ந்தவர்கள் சொல்வதை அப்படியே எடுத்துக்கொள்வதற்கு பதிலாக அவர்களுடைய உடலின் ஏற்ற நிலை தொடர்ந்து அளவிடப்பட்டது. கடுமையான உடற்பயிற்சிகளை செய்வதில் பெறும் நன்மையைக் காட்டிலும், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் வகையினர் வெறுமென அதிலிருந்து வெளியேறுவதில் மிகுந்த பலன் இருக்கிறது என்பதை அந்த ஆய்வுகளின் பலன்கள் காண்பித்தன. “நீங்கள் ஒரு மாரத்தான் ஓட்டக்காரராக இருக்க வேண்டிய அவசியமில்லை.” என்கிறார் ஜார்ஜியாவிலுள்ள அட்லாண்டா நோய்க் கட்டுப்பாட்டு ஐ.மா. மையங்களின் டாக்டர் கார்ல் கோஸ்பர்சன். .“உண்மையில் நீங்கள் இன்னும் சற்று கூடுதலாக சுறுசுறுப்பாய் இருப்பதன் மூலம் அதிக நன்மையைப் பெறுகிறீர்கள். உதாரணமாக, ஒரே இடத்தில் இருப்பதிலிருந்து ஒரு வாரத்தில் பல நாட்கள் அரை மணி நேரம் சுறுசுறுப்பாக நடந்துசெல்வது உங்களுடைய மரண வாய்ப்பை வெகுவாகக் குறைக்கக்கூடும். (g90 5/8)
மாபெரும் நகரங்கள்
“உலகமுழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான மக்கள் தென் அமெரிக்காவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும், ஆசியாவுக்கும் நகர் பகுதிக்கு மாறிச் செல்கின்றனர்,” என்று ஜெர்மன் தினசரி டெர் ஸ்பீகல் குறிப்பிடுகிறது. “மூன்றாவது உலக மக்கள் தாங்கள் கனவு காணும் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குப் பெயர்ந்து செல்கின்றனர்.” என்றபோதிலும் வெகு சிலரே அப்படிப்பட்ட ஒன்றைக் காண்கின்றனர். வேலைவாய்ப்பு இல்லாமல் அநேகர் குடிசைப் பகுதிகளில் வாழவும், உயிர் பிழைப்பதற்காக பிச்சை எடுக்கவும், சுற்றித்திரிந்து விற்பனை செய்யவும் வற்புறுத்தப்படுகின்றனர். நைரோபி மற்றும் மணிலாவின் பாதி குடிமக்கள் குடிசைப் பகுதிகளில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறார்கள். கல்கத்தாவில் அது 70 சதவீதமாகும். பெரும்பாலும், வேலை செய்பவர்கள்கூட வீட்டு வசதியைக் கொண்டில்லை, ஏனென்றால் பணவீக்கம் அளவுக்கு மிஞ்சி விட்டது. உதாரணமாக அநேக அதிகாரவர்க்கத்தினரும் இராணுவத்தினரும் இந்தோநேசியாவிலுள்ள ஜக்கார்ட்டாவிலுள்ள ஏழ்மையான குடியிருப்புப் பகுதிகளில் வாழ்கிறார்கள். 2000-வது ஆண்டுக்குள் உலகிலிருக்கும் 20 மிகப் பெரிய நகரங்களில் 17 பூகோளத்தின் முன்னேறும் பகுதிகளில் அமைந்திருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. சாவோ பாலோ மற்றும் மெக்ஸிக்கோ நகரம் ஒவ்வொன்றும் 2.5 கோடி என்ற மக்கள் தொகயோடு பட்டியலின் முதலில் இருக்கும். பெரிய நகரங்களில் குற்றச் செயல், ஊழல், நீர் மற்றும் காற்றின் தூய்மைக்கேடு, சுகாதாரக் குறைவு போன்ற உருவில் பெரிய பிரச்னைகள் ஏற்படுகின்றன. (g90 5/8)