அதிகாரம் 16
உண்மையான சமாதானமும் பாதுகாப்புமுள்ள வாழ்க்கைக்கு உறுதிதரும் தெரிவு
வாழ்க்கையில் உண்மையான நோக்கத்தைக் கொண்டிருப்பது, நாம் செல்லுமிடத்தைத் தெரிந்திருப்பது எவ்வளவு மகிழ்ச்சியைத் தருகிறது! நீங்கள் மேற்கொள்வதற்கு இதைப் பார்க்கிலும் மேம்பட்ட போக்கு வேறு எதுவுமே இல்லை என்ற நிச்சயம் மனதுக்கும் இருதயத்துக்கும் எப்பேர்ப்பட்ட சமாதானத்தைக் கொண்டுவருகிறது! இத்தகைய சமாதானமும் நம்பிக்கையும் உங்களுடையதாக முடியும், ஆனால் இப்பொழுது சரியான தெரிவை நீங்கள் செய்தால் மாத்திரமே அவ்வாறாகும்.
2 உண்மையான சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் மூல காரணமென இந்த உலகத்தை நாம் நோக்கியிருக்க முடியாதென்று அத்தாட்சி தெளிவாய்க் காட்டுகிறது. ஐக்கிய நாட்டுச் சங்கமும் அதன் ‘சமாதான பாதுகாப்பு’ விளம்பரங்களும் உட்பட, வியாபார, மத, மற்றும் அரசியல் ஒழுங்குமுறைகள் அதைக் கொண்டுவர முடியாது. ஆகையால், யெகோவா தேவனையே உண்மையான சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் ஒரே மூலகாரணராக நோக்கும்படி பைபிள் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. அவரையும் அவருடைய நோக்கங்களையும் நாம் அறிய வருகையில், நாம் ஏன் இங்கே பூமியில் இருக்கிறோம் என்பதையும் காரியங்கள் ஏன் இன்று இந்நிலையில் இருக்கின்றன என்பதையும் விளங்கிக்கொள்ள நமக்கு உதவிசெய்கிறது. யெகோவாவின் சர்வலோக ஈடற்ற அரசாட்சி உட்பட்ட இந்தப் பெரிய விவாதத்தையும், அது நம் ஒவ்வொருவரையும், எவ்வாறு பாதிக்கிறதென்பதையும் பற்றி நாம் கற்றறிந்து கொள்ளுகிறோம். நம்முடைய இலக்குகள் சரியானவையா, ஞானமானவையா என்பதைச் சீர்தூக்கிப் பார்க்க நாம் கற்றுக்கொள்ளுகிறோம், மேலும், நாம் கடைப்பிடித்து வாழ்வதற்குரிய நம்பத்தகுந்த ஒழுக்கத் தராதரங்களையும் நாம் பெறுகிறோம். நோய், முதிர்வயது அல்லது மரணத்தை எதிர்ப்பட்டிருக்கையிலும், நீதியுள்ள, ஆரோக்கியமான ஒரு புதிய ஒழுங்கில், அவசியமானால், உயிர்த்தெழுப்பப்படுவதன் மூலமாயும், உயிர்வாழும் ஆறுதலான நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
3 அப்படியானால், ஏசாயா 26:4 (தி.மொ.) பின்வருமாறு அறிவுரை கூறுவதில் ஆச்சரியமொன்றுமில்லை: “யெகோவாவின்மேல் என்றுமாகச் சார்ந்திருங்கள்; ஆண்டவராகிய யெகோவாவிலே நித்திய கன்மலையுண்டு.” மாறாதவராகவும், சர்வவல்லவராகவும், நித்தியராகவும் யெகோவா இருப்பதால் நிச்சயமாக அவர்மீதே நம்முடைய எல்லா நம்பிக்கைகளையும் தங்கவைக்கவேண்டும். தற்போது மாத்திரமல்ல, அவருடைய வாக்குப்பண்ணப்பட்ட புதிய ஒழுங்கில் எதிர்காலமெல்லாம், அவருடைய வழிநடத்துதலையும் பாதுகாப்பையும் அனுபவித்து மகிழ நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியானால், நீங்கள் என்ன செய்யவேண்டும்?
4 நம்முடைய முதல் பெற்றோருடைய பாவத்தின் காரணமாக மனிதவர்க்கம் முழுவதும் கடவுளிடத்திலிருந்து உறவு தொலைவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கடவுள், தம்முடன் ஒப்புரவாவதற்கும் நட்புறவுக்குள் வருவதற்குமான வழியைத் தம்முடைய குமாரனின் பலியின் மூலம் திறந்து வைத்திருக்கிறார். (2 கொரிந்தியர் 5:19-21; எபேசியர் 2:12, 13) எனினும், ‘எங்களுக்குக் கடவுளுடைய நட்புறவு வேண்டும்,’ என்று இப்பொழுது வெறுமென சொல்வது மாத்திரமே போதுமானதல்ல.
5 அது நமக்கு வேண்டும், மேலும், சரியான உள்நோக்கத்தால் தூண்டப்பட்டு அதை விரும்புகிறோமென அவருக்கு நிரூபிக்க நாம் மனமும் ஆவலுமுடையோராக இருக்கவேண்டும். உதாரணமாக, முக்கியமாய் அழிவைத் தப்பிப்பிழைப்பதற்கே நாம் யெகோவாவின் நட்புறவைத் தேடுகிறோமா? நாம் கடவுளுடன் சரியான நிலைநிற்கையை அடைய வேண்டுமென்றால், அது அவருடைய நியாயத்தீர்ப்புக்கு முன்னான இந்த அவசர காலப்பகுதிக்கு மாத்திரமே இருக்க முடியாது, அல்லது வரவிருக்கிற “மிகுந்த உபத்திரவத்தைத்” தப்பிப்பிழைத்திருக்க மாத்திரமே எனவும் இருக்க முடியாது. (மத்தேயு 24:21, 22) வரவிருக்கும் எல்லாக் காலத்துக்கும் அது இருக்கவேண்டும். உண்மையான அன்பு மாத்திரமே நமக்கு இந்த உள்நோக்கத் தூண்டுதலைக் கொடுக்கும். அவருடைய நட்புறவை நாம் விரும்புவது உள்ளப்பூர்வமானதென நாம் மெய்ப்பித்துக் காட்டக்கூடும்படி, யெகோவா, தம்மோடு ஒப்புரவாவதற்கு நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய சில காரியங்களைத் தம்முடைய வார்த்தையில் குறிப்பிட்டு வைத்திருக்கிறார்.
உயிருள்ள விசுவாசம்
6 யெகோவா சத்தியமுள்ள கடவுள். ஆகவே அவருடைய வாக்குகளில் நாம் முழுவதும் நம்பிக்கை வைக்கலாம். உண்மையில், “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.” (எபிரெயர் 11:6) இத்தகைய விசுவாசம் உங்களுக்கு இருந்தால், கடவுள் செய்யும் ஒவ்வொன்றும் நீதியுள்ள ஒரு நோக்கத்தைக் கொண்டிருக்கிறதென்றும், நம்முடைய மிகச் சிறந்த அக்கறைகளுக்கானவற்றையே அவர் எப்பொழுதும் இருதயத்தில் கொண்டிருக்கிறார் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவர் சர்வ-ஞானமும் சர்வ-வல்லமையுமுடையவராக இருப்பது மட்டுமல்லாமல் அன்புள்ள-இரக்கமுடைய கடவுள் என்பதை அவருடைய சிருஷ்டிப்பு வேலையிலிருந்தும் அவருடைய எழுதப்பட்ட வார்த்தையிலிருந்தும் நீங்கள் காண்கிறீர்கள். நிச்சயமாகவே, அவர், தம்முடைய நீதியுள்ள தராதரங்களிலிருந்து ஒருபோதும் விலகமாட்டார். எனினும், நாம் அபூரணராய்த் தவறுகளைச் செய்கிறபோதிலும், நாம் நீதியை நேசித்தால், ஆசீர்வாதத்தில் பலன்தரும் வகையில் நம்மிடம் கையாளும் ஒரு முறையை அவர் கொண்டிருக்கிறார்.
7 இவ்வாறு, கடவுளிடமிருந்து நாம் திருத்தத்தைப் பெறுகையில், அது நம்முடைய நித்திய சுகநலத்திற்கேயென அறிவோம். அன்பும், ஞானமும், பலமுமுள்ள ஒரு தகப்பனை மகன் அல்லது மகள் நம்புவதுபோல் நாம் யெகோவாவை நம்புவோம். (சங்கீதம் 103:13, 14; நீதிமொழிகள் 3:11, 12) இத்தகைய விசுவாசம் கொண்டிருந்தால், சில காரியங்கள் நமக்குச் சிறிது காலம் முழுமையாய் விளங்காவிடினும், அவருடைய ஆலோசனையின் ஞானத்தையோ அவருடைய வழிகளின் நேர்மையையோ நாம் சந்தேகிக்கமாட்டோம். இவ்வாறு, நாம், சங்கீதக்காரன் பின்வருமாறு விவரிக்கிறவர்களுக்குள் நம்மை வைக்கிறோம்: “உம்முடைய வேதத்தை [சட்டத்தை] நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு, அவர்களுக்கு இடறலில்லை.”—சங்கீதம் 119:165; நீதிமொழிகள் 3:5-8.
8 ‘கிரியைகளில்லாத விசுவாசம் செத்தது,’ என்று யாக்கோபு 2:26-ல் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறது. மெய்யான விசுவாசம் ஓர் ஆளைக் கிரியைச் செய்யும்படி தூண்டுவிக்கிறது. அது ஒருவனைத் தூண்டுவித்து செய்யவைக்கிற முதல் காரியங்களில் ஒன்று அப்போஸ்தலனாகிய பேதுரு பின்வருமாறு ஏவினதாகும்: “உங்கள் பாவங்கள் அழிக்கப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள் [மாற்றமடையுங்கள், NW]. அப்பொழுது ஆண்டவருடைய [யெகோவாவுடைய, NW] சமூகத்திலிருந்து இளைப்பாறுங்காலம் வரும்படி”. (அப்போஸ்தலர் 3:19, தி.மொ.) இது குறிப்பதென்ன?
மனந்திரும்புவதும் மாற்றமடைவதும்
9 பைபிளில், மனந்திரும்புதல், முந்தின வாழ்க்கை முறைக்காக அல்லது தவறான செயல்களுக்காக இருதயப்பூர்வமாய் வருந்துவதோடு சேர்ந்துவரும் மனமாற்றத்தைக் குறிக்கிறது. (2 கொரிந்தியர் 7:9-11) ஆனால் கடவுளிடமிருந்து வரும் வாக்குபண்ணப்பட்ட அந்த ‘இளைப்பாறுங் காலங்களை’ நாம் அனுபவித்து மகிழவேண்டுமென்றால், கடந்த காலத்தில் நடப்பித்தத் தவறான செயல்களின்பேரில் மாத்திரமே நாம் மனந்திரும்ப முடியாது. அதற்குப்பதில், நாம் ஆதாமின் சந்ததியாராக இருப்பதால் நம்முடைய சுபாவமே பாவமுள்ளதென்பதை நாம் உணர்ந்து ஒப்புக்கொள்வதனால் மனந்திரும்புதலைக் காட்டவேண்டும். அப்போஸ்தலனாகிய யோவான் சொல்லுகிற பிரகாரம்: “நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மைநாமே வஞ்சித்துக்கொள்ளுகிறோம், . . . அவரைப் [கடவுளைப்] பொய்யராக்குகிறோம். அவர் வார்த்தை நமக்குளில்லை.” (1 யோவான் 1:8, 10, தி.மொ.) நம்முடைய சிருஷ்டிகரின் ‘சாயலையும் ரூபத்தையும்’ பிரதிபலித்து நாம் அவரை நேர்மையாய்ப் பிரதிநிதித்துவஞ் செய்ய வேண்டும். எனினும் சுதந்தரித்துள்ள பாவம் இதைப் பரிபூரண முறையில் செய்வதிலிருந்து நம்மைத் தவிர்த்து வைக்கிறது. இதனால், நாம் ‘குறி தவறுகிறோம்,’ பைபிளில் “பாவம்” என்ற இந்தச் சொல் இதையே குறிக்கிறது.—ஆதியாகமம் 1:26; ரோமர் 3:23.
10 ஆகவே கடவுளுடைய மன்னிப்பு நமக்குத் தேவை. (மத்தேயு 6:12) அவர் நம்முடைய சிருஷ்டிகராதலால் நம்முடைய உயிருக்கு அவருக்கே கடன்பட்டிருப்பதை உணருகிறோம். ஆனால் கடவுளுடைய குமாரனின் பலியின் மூலம் மனிதவர்க்கம் பெரும் விலைமதிப்பையுடைய “கிரயத்துக்குக் கொள்ளப்பட்”டதெனவும் இப்பொழுது நாம் கற்றறிகிறோம். ஆகவே நாம் “மனுஷருக்கு அடிமைகளாக” இருக்கக்கூடாது, நம்முடைய சொந்த தன்னல ஆசைகளுக்குங்கூட அடிமைகளாக இருக்கக்கூடாது; (1 கொரிந்தியர் 7:23) எனினும், சத்தியத்தைக் கற்று அதை ஏற்றுக் கொள்வதற்கு முன்னால் நாமெல்லாரும் அவ்வாறு இருந்தோமல்லவா?—யோவான் 8:31-34.
11 கடவுள் தம்முடைய குமாரனைப் பரிசாகக் கொடுத்ததையும், பாவத்துக்கும் மரணத்துக்கும் நாம் அடிமைப்பட்டிருந்ததிலிருந்து தப்பிப் பிழைப்பதற்கு வழியுண்டுபண்ண கிறிஸ்துவின் மூலம் அவர் செய்திருப்பவற்றையும் உங்கள் இருதயத்தில் நீங்கள் நன்றியோடு மதித்துணருகிறீர்களா? அப்படியானால், உங்கள் சிருஷ்டிகருக்குக் கீழ்ப்படிவதில் உங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்தத் தவறின கடந்தகால எந்தத் தவறுக்காகவும் நீங்கள் உண்மையில் மனஸ்தாபப்படுவீர்கள். கடவுளுடைய சித்தத்துக்கும் நோக்கங்களுக்கும் முரணாகச் செல்லும் இவ்வுலகப் போக்கைப் போன்ற ஒரு வாழ்க்கைப் போக்கைப் பின்பற்றினதற்காக இருதயப்பூர்வமாய் மனஸ்தாபப்பட்டுத் திரும்பும்படி இது உங்களைச் செய்விக்கும்.—அப்போஸ்தலர் 17:28, 30; வெளிப்படுத்துதல் 4:11.
12 இந்த மெய்யான மனந்திரும்புதல் ஒரு ‘மாற்றமடைவதற்கு’ வழிநடத்துகிறது; “மதமாற்றம்” என்றச் சொல்லின் பொருள் இதுவே. மெய்யாய் மனஸ்தாபப்பட்டுத் திரும்பும் ஆள் தன் வாழ்க்கையைத் தவறாகப் பயன்படுத்தினதைக் குறித்து மனஸ்தாபப்படுவதோடு நிறுத்திக்கொள்வதில்லை. அவன் அந்தத் தவறான போக்கை வேண்டாமெனத் தள்ளி, தன்னுடைய தவறான வழிகளை உண்மையில் வெறுக்கிறான். ‘மாற்றமடைந்து’ “மனந்திரும்புதலுக்கேற்றக் கிரியைகளை” நடப்பித்து, தன் வாழ்க்கையைக் கடவுளுடைய சித்தத்துக்கு இணங்கக் கொண்டுவருவதன்மூலம் இதைக் காண்பிக்கிறான்.—அப்போஸ்தலர் 26:20; ரோமர் 6:11.
13 மனந்திரும்பி மாற்றமடையும் இதன் ஒரு பாகம் இயேசு சொன்னபடி, ‘நம்மை நாம் சொந்தம் கைவிடுவதும்’ உட்பட்டிருக்கிறது. (மத்தேயு 16:24, NW) அதாவது, கடவுளுடைய சித்தத்துக்கும் நோக்கங்களுக்கும் எத்தகைய அக்கறையுமில்லாமல் நம்முடைய சொந்தத் தன்னல ஆசைகளின்படி மாத்திரமே நாம் இனிமேலும் வாழ்கிறதில்லை. அதற்குப் பதிலாக, யெகோவா தேவன் நம்முடைய சிருஷ்டிகரும் தம்முடைய குமாரனின் மீட்புக்கிரய பலியின் மூலம் நம்மைக் கிரயத்துக்குக் கொண்டவருமாதலால் உண்மையில் அவருக்கே நம்முடைய வாழ்க்கையின்பேரில் முழு உரிமையும் இருக்கிறதென நாம் ஒப்புக்கொள்ளுகிறோம். பைபிள் இதை வெளிப்படுத்துகிற பிரகாரம், நாம் ‘நம்முடையவர்களல்ல, ஏனெனில் நாம் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டோம்.’ (1 கொரிந்தியர் 6:19, 20) ஆகையால், சத்தியம் நமக்குத் திறந்துவைத்த இந்த மகத்தான சுயாதீனத்தை நாம் தவறான முறையில் பயன்படுத்துவதற்குப் பதிலாகக் கடவுளுடைய சித்தத்தைச் செய்ய நம்மை நாம் முழுவதும் கீழ்ப்படுத்துகிறோம். (கலாத்தியர் 5:13; 1 பேதுரு 2:16) மேலும், இது நேர்மை என்பதனால் மாத்திரமல்ல, ஆனால் யெகோவா தேவனை ‘நம்முடைய முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், பலத்தோடும்’ நாம் நேசிப்பதன் காரணமாகவே இதைச் செய்கிறோம். (மாற்கு 12:29, 30) நிச்சயமாகவே, இது நாம் ஒவ்வொருவரும், கடவுளுக்கு ஒப்புக்கொடுத்த வாழ்க்கையை வாழும்படி கேட்கிறது. இந்தப் போக்கு பாரமாயிருப்பதற்குப்பதில், முன்னொருபோதும் இராதவண்ணம் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு அனுபவிக்க நமக்கு உதவிசெய்கிறது.—மத்தேயு 11:28-30.
இரட்சிப்புண்டாக யாவரறிய அறிக்கை செய்தல்
14 கடவுள் நம்மைச் சொந்தமாய்க் கொண்டிருப்பதற்கு நன்றிதெரிவித்து, அவருடைய ஏற்பாடுகளில் நமக்கிருக்கும் விசவாசத்தை ஜெபத்தில் கடவுளிடம் வெளிப்படுத்திக் கூறுவது சிறந்த காரியம். ஆனால், ரோமர் 10:10-ல் நமக்குப் பின்வருமாறு சொல்லியிருக்கிறபடி நம்முடைய விசுவாசத்தை வெளிப்படுத்துவதை நாம் இன்னும் மிகைப்பட செய்யலாம் அவ்வாறு செய்ய விரும்பவும் வேண்டும்: “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே [யாவரறிய, NW] அறிக்கைபண்ணப்படும்.” யெகோவாவிலும் அவருடைய ஏற்பாடுகளிலும் நாம் கொண்டுள்ள விசுவாசத்தை இவ்வாறு “யாவரறிய” அறிக்கைபண்ணுதல் நன்றிமதித்துணர்வு நிரம்பிய இருதயத்திலிருந்து மகிழ்ச்சியுடன் வரவேண்டும். இந்த அறிக்கை செய்வது, யெகோவாவின் சித்தத்தைச் செய்வதற்கு நம்முடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுப்பதும் இதைத் தண்ணீர் முழுக்காட்டினால் அடையாளப்படுத்திக் காட்டுவதும் உட்பட்டிருக்கிறது.
15 இயேசு கிறிஸ்து, தம்முடைய வெளிப்படையான ஊழியத்தைத் தொடங்கினபோது, முழுக்காட்டுபவனான யோவான், தம்மைத் தண்ணீரில் முழுக்காட்டும்படி செய்தார். அப்பொழுது அவர்: “உமது சித்தத்தைச் செய்ய, இதோ வருகிறேன்,” என்று கடவுளிடத்தில் சொன்னாரென பைபிளில் அறிவித்திருக்கிறது. (எபிரெயர் 10:9, தி.மொ.; சங்கீதம் 40:7, 8) தம்முடைய சீஷராகும் யாவரும் முழுக்காட்டப்படவும் வேண்டுமென இயேசு கட்டளையிட்டார். நீங்கள் இத்தகைய ஒரு சீஷனா? அப்படியானால் உங்கள் தண்ணீர் முழுக்காட்டு அதை “யாவரறிய அறிக்கை” செய்வதாயிருக்கும்.—மத்தேயு 28:19, 20.
16 சர்வலோகத்தின் ஈடற்ற பேரரசராகிய யெகோவாவின் ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டப்பட்ட சாட்சியாவது மிக மேன்மையான சிலாக்கியம். இது எதை உட்படுத்துகிறதென்பதை இப்பொழுது மறுபடியும் பாருங்கள்: யெகோவா, தம்முடைய நட்புறவை நீங்கள் கொண்டிருப்பதற்கு அன்புடன் வழியைத் திறந்திருக்கிறார். ஆனால் அதைப் பெறுவதற்கு உங்களுக்கு அதில் விசுவாசம் இருக்கவேண்டும், பைபிள் தேவாவியால் ஏவப்பட்ட கடவுளுடைய வார்த்தை என்று நீங்கள் மெய்யாக நம்பவேண்டும். (2 தீமோத்தேயு 3:16, 17) மேலும் கடவுளோடு ஏற்கத்தக்க நிலைநிற்கையை நீங்கள் அடைவதற்கு ஒரே வழி இயேசுவின் மீட்புக் கிரய பலியென அதில் விசுவாசத்தை நடைமுறையில் காட்டவேண்டும். (அப்போஸ்தலர் 4:12) யெகோவாவின்பேரில் நீங்கள் சார்ந்திருப்பதை நன்றியோடு மதித்துணர்ந்து, ஒருசில ஆண்டுகளுக்கு மாத்திரமேயல்ல, என்றென்றும் அவருடைய சித்தத்தைச் செய்வதற்கு உங்கள் வாழ்க்கையை நீங்கள் அவருக்கு ஒப்படைத்துவிட வேண்டும். இத்தகைய போக்கு ‘இவ்வுலகத்தின் பாகமாயிராததை’ உட்படுத்துகிறது. (யோவான் 17:16, NW; 1 யோவான் 2:15) நீங்கள் மனந்திரும்பி ‘மாற்றமடைந்திருப்பதற்கு’ அத்தாட்சியாக, கடவுளுடைய நீதியுள்ள தராதரங்களுக்கு நேர்மாறான எத்தகைய பழக்கச் செயல்களையும் நீங்கள் விட்டுவிட்டு கடவுள் கட்டளையிடுகிறவற்றையே செய்துகொண்டிருக்க வேண்டும். இதுவே இப்பொழுது நீங்கள் வாழ்க்கையைக் கருதும் முறையாக இருக்கும்படி உங்கள் மனதை மாற்றியிருக்கிறீர்களா? (ரோமர் 12:1, 2) அப்படியானால், இத்தகைய விசுவாசத்தை “யாவரறிய அறிக்கை” செய்யும்படி பைபிள் உங்களைத் தூண்டி ஊக்குவிக்கிறது. முதற்படியாக, உங்கள் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் சபை கண்காணிகளில் ஒருவரை அணுகி, நீங்கள் உணருவதை அவரிடத்தில் தெரிவிக்க வேண்டும். முழுக்காட்டுதலுக்கு முன்னேற்பாடாக, பைபிளின் அடிப்படையான போதகங்களை உங்களோடு திரும்ப கவனித்துப் பார்ப்பதற்கு அவர் ஏற்பாடு செய்வார்.
17 முழுக்காட்டின நடவடிக்கை, நீங்கள் ‘உங்கள் விசுவாசத்தை யாவரறிய அறிக்கைபண்ணுவதன்’ முடிவைக் குறிக்காது. யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுத்தக் கிறிஸ்தவனாக, பொதுக் கூட்டத்தில் நீங்கள் வெளிப்படுத்திக் கூறுவதன்மூலம், ‘மகா சபையிலே அவரைத் துதிப்பதன்’ மூலம் உங்கள் நம்பிக்கையை அறிக்கைபண்ண விரும்புவீர்கள். (சங்கீதம் 35:18; 40:9, 10) மேலும் தம்மைச் சேவிக்க விரும்புகிற யாவருக்கும் யெகோவா கொடுக்கும் இந்த விசேஷித்த வேலையாகிய ‘யாவரறிய அறிக்கைபண்ணுதலில்’—அதாவது, ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை உலகமுழுவதிலும் பிரசங்கிப்பதிலும் சகல ஜாதிகளின் ஜனங்களைச் சீஷராக்குவதிலும்—பங்குகொள்ளவும் நீங்கள் விரும்புவீர்கள்.—மத்தேயு 24:14; 28:19.
கடவுளுடன் உங்கள் உறவை வாஞ்சையோடு காத்து வருதல்
18 இப்பொழுது, யெகோவாவுடன் உங்கள் உறவை ஒருமுறை அடைந்தப் பிறகு, மகிழ்ச்சியுள்ள சமாதானத்திலும் பாதுகாப்பிலும் அது நித்திய காலத்துக்கும் நிலைத்திருப்பதை நீங்கள் எப்படி நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்? ஒன்று, அவரைப் பற்றிய அறிவில் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்க நீங்கள் விரும்புவீர்கள். கடவுளுடைய வார்த்தையில் தொகுத்து வைத்துள்ள ஞான பொக்கிஷங்களைத் தனிப்பட்ட படிப்பின் மூலம் தேடிப் பெறுவதில் நீங்கள் உண்மையான இன்பத்தைக் கண்டடைவீர்கள். சங்கீதம் 1:2, 3-ல் பின்வருமாறு விவரித்துள்ள ஆளைப்போல் நீங்கள் இருக்கலாம்: “கர்த்தருடைய வேதத்தில் [யெகோவாவின் பிரமாணத்திலே, தி.மொ.] பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.” ஆம், கடவுளைப் பற்றிய அறிவை அடைவதும், அதைப் பொருத்திப் பயன்படுத்துவதும் “இன்ப வழிகளிலும்” ‘சமாதான பாதைகளிலும்’ நடக்கும்படி உங்களைச் செய்விக்கும், எப்படியென்றால், வாழ்க்கையின் எல்லாப் பிரச்னைகளையும் எதிர்ப்பட இது உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கும். (நீதிமொழிகள் 3:13, 17, 18) இப்பொழுது இத்தகைய பைபிள் அறிவுக்காக நீங்கள் தாகங்கொள்வது, கடவுளுடைய புதிய ஒழுங்கில் ஜீவனடைவதற்கு உங்கள் தகுதியை மெய்ப்பித்துக் காட்டும், ஏனெனில் அப்பொழுது, “சமுத்திரத்திலே தண்ணீர் நிறைந்திருப்பதுபோல் பூமியிலே யெகோவாவை அறிகிற அறிவு நிறைந்திருக்கும்.”—ஏசாயா 11:9, தி.மொ.
19 உங்களுக்கு இன்றியமையாதத் தேவையாயுள்ள மற்றொன்று, யெகோவாவின் மற்ற ஊழியரோடு கூட்டங்களில் தவறாமல் ஆஜராயிருப்பதாகும். அங்கே அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் உண்மையான தூண்டுதலையும், கடவுளுடன் உங்களுக்குள்ள நல்ல உறவில் விடாது தொடர்ந்திருக்க ஊக்கமூட்டுதலையும் நீங்கள் கண்டடைவீர்கள். (எபிரெயர் 10:23-25) கடவுளுடைய புதிய ஒழுங்கில் இருக்குமென்று வாக்குப்பண்ணப்பட்ட சமாதானமும் பாதுகாப்பும் கற்பனையல்ல உண்மையானவை என்பதற்கு, யெகோவாவின் ஊழியரின், மகிழ்ச்சிதரும் குடும்பத்தைப் போன்ற இந்தக் கூட்டுறவு, உறுதிதரும் அத்தாட்சியை அளிக்கிறது.—சங்கீதம் 133:1; 1 கொரிந்தியர் 14:26, 33.
20 சபையில் மற்றொரு அன்பான ஏற்பாட்டிலிருந்தும் நீங்கள் நன்மையடையலாம். ‘நல்ல மேய்ப்பர்’ இயேசு பூமியில் தமக்குக் ‘கீழ்ப்பட்ட மேய்ப்பர்களைக்’ கொண்டிருக்கிறார். இவர்களே அவருடைய “செம்மறியாடுகளைக்” கவனித்துவரும் கண்காணிகள், அல்லது ஆவிக்குரிய பிரகாரமாய் மூப்பர்கள். உலகமுழுவதிலும் கடவுளுடைய கூட்டிச் சேர்க்கப்பட்ட ஜனங்களுக்குள் சமாதானத்தையும் பாதுகாப்பையும் முன்னேற்றுவிப்பதில் இவர்கள் வல்லமைவாய்ந்த உதவியாயிருக்கிறார்கள். (1 பேதுரு 5:2, 3) இந்த மனிதர் “காற்றுக்கு ஒதுக்கைப்போலவும், பெருமழைக்கு ஒதுங்குமிடம் போலவும், வறண்ட நிலத்துக்கு நீரோடைபோலவும், விடாய்த்த பூமியில் பெருங் கன்மலையின் நிழல்போலவும்” இருக்கிறார்கள். (ஏசாயா 32:1, 2, தி.மொ.) ஆம், உலக எதிர்ப்புகளின் அல்லது தனிப்பட்ட இக்கட்டுகளின் காரணமாக உண்டாகும், நெருக்கடிகளுக்கும் தொல்லைகளுக்குமுரிய பெரும் புயல்மழைபோன்ற காலங்களில், ஆவிக்குரிய பிரகாரமான இந்த மூப்பர்கள், கற்பாறையைப்போன்ற தங்கள் விசுவாசத்தினாலும் கடவுளுடைய வார்த்தையை உறுதியாய்க் கடைப்பிடிப்பதனாலும் உண்மையான ஆதரவைக் கொடுக்க முடியும். ஆறுதலளிக்கும் ஆலோசனையும் ஊக்கமூட்டுதலும் இவர்கள் உங்களுக்குக் கொடுக்க முடியும்.
21 கடவுளுடைய ஊழியர்களுக்குள்ளும் மானிட அபூரணங்கள் வெளிப்படுமென்பது மெய்யே. நாமெல்லாரும் அனுதினமும் தவறுகள் செய்கிறோம். (யாக்கோபு 3:2) ஆனால் மற்றவர்களுடைய அபூரணத் தன்மைகளால் இடறுவதற்கு நம்மை நாம் அனுமதித்து, இது யெகோவாவிடம் கொண்டுள்ள நம் உறவைக் கெடுக்க இடங்கொடுப்போமா? நாமும் தவறுகள் செய்வதால், நமக்கு நாம் விரும்புகிற அதே மன்னிப்பை மற்றவர்களுக்கும் நாம் காட்டவேண்டுமல்லவா? (மத்தேயு 6:14, 15) கடவுளுடைய சமாதானமுள்ள புதிய ஒழுங்கில் வாழ்வதற்குத் தகுதிவாய்ந்த குடிமக்களாக நம்மை நாம் நிரூபிக்கப்போகிறோமென்றால், மற்றவர்களோடு சமாதானமாய்க் கூடிவாழ்வதற்கான நம்முடைய திறமையை இப்பொழுதே நாம் மெய்ப்பித்துக் காட்ட வேண்டும். கிறிஸ்து அவர்களுக்காக மரித்த நம்முடைய ஆவிக்குரிய சகோதரர் சகோதரிகளை நேசியாமல் கடவுளை நாம் நேசிக்க முடியாது.—1 யோவான் 4:20, 21.
22 கடவுளுடன் கொண்டுள்ள உங்கள் நல்ல உறவு வேறொரு மேன்மையான சிலாக்கியத்தையும் உங்களுக்குக் கொடுக்கிறது: கடவுள் உங்களுக்குச் செவிகொடுக்கிறார் என்ற நிச்சயத்துடன் ஜெபத்தின் மூலம் அவரை அணுகுவதே அந்தச் சிலாக்கியம். இந்தச் சிலாக்கியத்தை வாஞ்சையுடன் மதித்து நாள்தோறும், நாள் முழுவதும் இதைப் பயன்படுத்துங்கள். பிரச்னைகள் எழும்பும். உங்கள் சொந்த அபூரணங்கள்தாமே உங்களுக்குத் தொந்தரவு கொடுக்கலாம். எனினும் பைபிள் பின்வருமாறு அறிவுரை கொடுக்கிறது: “நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடேகூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.”—பிலிப்பியர் 4:6, 7.
23 சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் மூல காரணராகிய யெகோவா தேவனைச் சேவிக்கத் தெரிந்துகொண்டு, அவருடைய நீதியுள்ள புதிய ஒழுங்கில் உங்கள் நம்பிக்கையை வைப்பதால், நீங்கள் சரியான தொடக்கம் செய்திருப்பீர்கள். இப்பொழுது, பைபிளில் சொல்லியிருக்கிறபடி, “நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.” (எபிரெயர் 10:36) யெகோவா தேவனுடன் கொண்டிருக்கும் நல்ல உறவின் ஆசீர்வாதங்களை ருசி பார்த்திருக்க, அதை விட்டு ஒருபோதும் விலகாதிருக்கும்படி தீர்மானித்துக் கொள்ளுங்கள். விரைவில் சென்றுவிடும் இவ்வுலக இன்பங்கள் உங்களை அப்பால் கவர்ந்திழுக்க ஒருபோதும் இடங்கொடாதேயுங்கள். சத்துரு உலகத்திலிருந்து வரும் உபத்திரவங்கள் கடுமையானாலும், அவை தற்காலிகமானவையே என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். தம்மை நேசிக்கிறவர்களுக்கு யெகோவா தேவன் அளிக்கப்போகிற ஆசீர்வாதங்களோடு ஒப்பிடுகையில் இத்தகைய பாடுகள் ஒன்றுமில்லாதவைபோல் இருக்கின்றன.—2 கொரிந்தியர் 4:16-18.
24 கடவுள் பக்திக்குரிய போக்கே இப்பொழுது மிகச் சிறந்த வாழ்க்கை முறை, மேலும் அது கடவுளுடைய புதிய ஒழுங்கில் நித்திய ஜீவனடைவதற்கு வழிநடத்தும் என்ற திட நம்பிக்கையுடன் அதில் தொடர்ந்திருங்கள். (1 தீமோத்தேயு 4:8) அந்தப் புதிய ஒழுங்கு சமீபித்திருக்கிற அத்தாட்சியிலும் அது கொண்டுவரப்போகிற நித்திய சமாதானத்திலும் பாதுகாப்பிலும் களிகூருங்கள். யெகோவா தேவனுடன் உங்கள் உறவை நீங்கள் விடாமற் தொடர்ந்து வளர்த்து வருகையில், பின்வருமாறு எழுதின தேவாவியால் ஏவப்பட்ட சங்கீதக்காரனைப்போல் நீங்கள் எப்பொழுதும் உணருங்கள்: “கடவுளோ என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலை; அவரே என் பங்கு. இதோ, உம்மை விட்டுத் தூரமாய் போகிறவர்கள் அழிவார்கள்; உம்மை விட்டுச் சோரம் போகிற அனைவரையும் சங்கரிப்பீர். எனக்கோ கடவுளை அண்டிக்கொண்டிருப்பதே நலம். நீர் செய்தவைகளையெல்லாம் நான் சொல்லி வரும்படி [ஈடற்ற பேரரசரான] யெகோவாவாகிய ஆண்டவரில் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.”—சங்கீதம் 73:26-28, தி.மொ.
[கேள்விகள்]
1. நாம் சரியான தெரிவைச் செய்தால், என்ன சமாதானமும் நம்பிக்கையும் இப்பொழுது நமக்கு இருக்கும்?
2. யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் நாம் அறிய வருவது வாழ்க்கையின்பேரில் நம்முடைய மனநிலை சம்பந்தமாக நமக்கு எவ்வாறு உதவிசெய்கிறது?
3. ஏன் யெகோவாவின்மீதே நம்முடைய எல்லா நம்பிக்கைகளையும் தங்கவைக்க வேண்டும்?
4. யெகோவாவின் தயவை அடைய நமக்கு என்ன தேவை? இதைக் கூடியதாக்குவது எது?
5. யெகோவாவின் நட்பைத் தேடுவதில் நம்முடைய உள்நோக்கத் தூண்டுதல் என்னவாயிருக்கவேண்டும்?
6. கடவுளைப் பிரியப்படுத்த, அவரைக் குறித்து என்ன நம்பிக்கை நமக்கு இருக்கவேண்டும்?
7. யெகோவாவின் நேர்மையிலும் ஞானத்திலும் திட நம்பிக்கை வைத்திருப்பது நம்மை எப்படிப் பாதுகாக்கும்?
8. (எ) விசுவாசம் மாத்திரமே ஏன் போதுமானதல்ல? (பி) அப்போஸ்தலர் 3:19-ல் குறிப்பிடப்பட்டிருக்கிற என்ன நடவடிக்கை எடுக்கும்படி விசுவாசம் நம்மைத் தூண்டுவிக்க வேண்டும்?
9. (எ) உண்மையான மனந்திரும்புதல் என்றால் என்ன? (பி) எதன்பேரில் நாம் மனந்திரும்ப வேண்டும்?
10, 11. (எ) உயிருக்காக நாம் யாருக்குக் கடன்பட்டிருக்கிறோம்? ஏன்? (பி) ஆகவே, நம் வாழ்க்கையை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்?
12. மனந்திரும்பினவன் தன் முந்தின போக்கை வேண்டாமென உண்மையில் தள்ளிவிட்டதை எவ்வாறு காட்டுகிறான்?
13. (எ) தம்மைப் பின்பற்றுவோர் ‘தங்களைத் தாங்களே சொந்தம் கைவிட’ வேண்டுமென்று சொன்ன இயேசுவின் இந்தக் கூற்றின் பொருளென்ன? (பி) என்ன காரணத்துக்காக நாம் நம்மை இவ்வாறு யெகோவாவுக்குக் கீழ்ப்படுத்துகிறோம்? இது நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது?
14. (எ) ஒருவன் தன்னை, யெகோவா நேர்மையாகவே தம்முடைய உடைமையாகக் கொண்டிருப்பதை ஒப்புக்கொள்கையில், இதை அவன் எவ்வாறு கடவுளுக்கு வெளிப்படுத்திக் காட்டலாம்? (பி) ரோமர் 10:10-ல் குறித்துக் காட்டியிருக்கிறபடி வேறு எதையும் செய்ய அவன் விரும்பவேண்டும்?
15. தண்ணீர் முழுக்காட்டைப் பற்றி நாம் ஏன் கருத்துடன் சிந்திக்க வேண்டும்?
16. (எ) முழுக்காட்டப்பட நீங்கள் ஆயத்தமாக இருக்கிறீர்களா என்பதை நீங்கள் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? (பி) முழுக்காட்டப்படுவதற்கு ஆயத்தஞ் செய்வதில் தனி நபர்களுக்குக் கண்காணிகள் எவ்வாறு உதவிசெய்கிறார்கள்?
17. நாம் எவ்வாறு தொடர்ந்து ‘நம்முடைய விசுவாசத்தை யாவரறிய அறிக்கைபண்ண’ வேண்டுமென்பதை, பைபிளைப் பயன்படுத்திக் காட்டுங்கள்.
18. யெகோவாவுடன் ஒருவனுக்கு இருக்கும் உறவு நிலைத்திருப்பதைக் காத்துக்கொள்ள தனிப்பட்ட படிப்பு எவ்வளவு முக்கியம்?
19. தவறாமல் கூட்டங்களுக்கு வருவது யெகோவாவின் ஜனங்களுடைய வாழ்க்கையில் ஏன் ஓர் இன்றியமையாதத் தேவை?
20. எதிர்ப்பும் தனிப்பட்ட இக்கட்டுகளும் உண்டாயிருக்கும் காலங்களில் சபையிலுள்ள மூப்பர்கள் நமக்கு எவ்வாறு உதவிசெய்ய முடியும்?
21. யெகோவாவிடம் கொண்டுள்ள நம்முடைய உறவை மற்றவர்களுடைய அபூரணத் தன்மைகள் கெடுப்பதை ஒருபோதும் அனுமதியாதபடி எது தடுத்து வைக்கும்?
22. ஜெபம் நம்முடைய வாழ்க்கையில் என்ன இடத்தைக் கொண்டிருக்க வேண்டும்?
23. நம்முடைய விசுவாசத்தினிமித்தம் சோதனைகளையும் துன்புறுத்தலையும் எதிர்ப்பட்டிருக்கையில் சகித்து நிலைத்திருக்க எது நமக்கு உதவி செய்யும்?
24. (எ) இன்று முக்கியமாய் எதில் களிகூருவதற்கு நமக்குக் காரணம் உண்டு? (பி) சங்கீதக்காரனைப்போல், யெகோவாவையும் அவரிடம் கொண்டிருக்கும் நம்முடைய உறவையும் பற்றி நாம் எப்பொழுதும் எவ்வாறு உணரவேண்டும்?
[பக்கம் 181-ன் படங்கள்]
யாவரறிய அறிக்கை செய்தல்