முழு உலகளாவிய மகிழ்ச்சி
“இதோ, என் சொந்த ஊழியக்காரர் இருதயத்தின் நல்ல நிலைமையினால் மகிழ்ச்சியுடன் கெம்பீரிப்பார்கள்.” (ஏசாயா 65:14, NW) இவ்வாறு யெகோவா தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் மூலம் சொன்னார், அவருடைய வார்த்தைகள் யெகோவாவின் சாட்சிகளுக்குள் எத்தகைய சிறப்புவாய்ந்த நிறைவேற்றமடைகின்றன! அவர்களுடைய இருதய மகிழ்ச்சி எங்கிருந்து வருகிறது? யெகோவா தேவனை அவர்கள் ஒற்றுமைப்பட்டு வணங்குவதிலிருந்தே. அவர் “நித்தியானந்த தேவன்,” அவரை வணங்குவோர் “யெகோவாவில் களிகூரு”வார்கள். (1 தீமோத்தேயு 1:11; சகரியா 10:7, தி.மொ.) ராஜ்யத்தின் இந்த நற்செய்தியை அவர்கள் ஒன்றுசேர்ந்து பிரசங்கித்து தங்கள் கடவுளுக்கு முழு உலகளாவிய துதி ஆரவாரத்தை எழுப்புகையில் இந்த மகிழ்ச்சியுள்ள பக்தி ஈடுபாடு அவர்களை ஒரே ஜனமாக ஒன்றுபடுத்துகிறது.—வெளிப்படுத்துதல் 7:9, 10.
“ஒருவனும் பறித்துச் செல்லமுடியாத மகிழ்ச்சி”
நிச்சயமாகவே, கடவுளுடைய பெயரையும் ராஜ்யத்தையும் யாவரறிய அறிவிப்பது யெகோவாவின் சாட்சிகளுக்கு இடைவிடாத மகிழ்ச்சிக்குரிய ஊற்றுமூலமாயிருக்கிறது. (மாற்கு 13:10) சங்கீதக்காரனின் பின்வரும் வார்த்தைகளுக்கு அவர்கள் செவிகொடுக்கிறார்கள்: “அவர் பரிசுத்த நாமத்தைப்பற்றி மேன்மைபாராட்டுங்கள்; யெகோவாவைத் தேடுகிறவர்கள் இருதயம் மகிழ்வதாக.”—சங்கீதம் 105:3, தி.மொ.
இதைச் செய்ய தடைசெய்யும் இடையூறுகளை இவர்கள் அடிக்கடி எதிர்த்து மேற்கள்கிறார்கள். ஸ்பெய்னில், இஸித்ரோ தன்னை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தான், அவரைப்பற்றி மற்றவர்களிடம் பேச அவன் விரும்பினான். ஆனால் அவன் பாரமோட்டார்வண்டி ஓட்டுபவன் மட்டுப்பட்ட ஓய்வு நேரமே அவனுக்குக் கிடைக்கும், பகலில் தூங்கி, இரவு முழுவதும் நீண்ட பயணம் செய்பவன், பாரவண்டி ஓட்டும் மற்றவர்களுக்குச் சாட்சி பகர இஸித்ரோ விரும்பினான், ஆனால் அவன் இதை எவ்வாறு செய்ய முடியும்?
அவன் தன் பாரவண்டிக்குள் மற்ற வண்டி ஓட்டுவோரிடம் தான் பேச பயன்படுத்தக்கூடிய (CB) பொதுமக்கள் இசைக்கருவிக்கூட்டு ரேடியோ ஒன்றைப் பொருத்தினான். செய்தியனுப்பப் பெரும்பாலும் பயன்படுத்தப்படாத ஓர் அலை இடை வெளிப்பகுதி 13-ஐ அவன் விரைவில் கண்டுபிடித்து, அதைத் தனக்குப் பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்தான். நிச்சயமாகவே, CB ரேடியோவில் தாங்கள் பைபிளைப்பற்றிப் பேசுவதைக் குறித்த ஆலோசனையை அவன் மற்ற வண்டிஓட்டுவோரிடம் முதன்முதல் கூறினபோது அவர்கள் எதிர்மறையான முறையில் பதிலளித்தனர். ஆனால் சிலர் செவிகொடுத்தனர். செய்தி பரவினது, மேலும் மேலுமதிகமான அந்த ஸ்பானிய பாரவண்டி ஓட்டுவோர் 13-வது அலை இடைவெளிக்குத் தங்கள் ரேடியோவைத் திருப்பி வைத்தனர். சமீபத்தில், ஒருவர் தன் பைபிள் படிப்பை மேலும் முன்னேற்றுவிக்க நடவடிக்கைகள் எடுக்கிறாரென இஸித்ரோ அறிந்தான். இத்தாலியில் ஒருவன் பஸ்ஸில் ஒருவரிடம் உரையாடிக்கொண்டிருக்கையில் யெகோவாவின் சாட்சிகளைப்பற்றிக் கேள்விப்பட்டான். அவனுடைய மனைவி ஒரு நண்பர் மூலம் அவர்களைச் சந்தித்தாள். இருவரும் பைபிளைப் படித்தார்கள் மேலும் தாங்கள் கற்றதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள ஆவலாயிருந்தனர். அவர்கள் அவ்வளவு ஆவலுடையோராயிருந்ததனால், ராஜ்யத்தின் இந்த நற்செய்தியை மற்றவர்களுக்குச் சொல்வதில் தாங்கள் அதிக நேரத்தைச் செலவிடக்கூடும்படி அந்த மனிதன் தன் தொழிற் நிலையத்தில் பதவியுயர்வை ஏற்க மறுத்துவிட்டான் மேலும் அந்த மனைவி நல்ல சம்பளமுள்ள வேலையை விட்டுவிட்டாள். இது பயனுடையதாயிருந்ததா? ஆம். அந்த மனிதன் சொல்வதாவது: “நாங்கள் சத்தியத்தை அறிந்த முதற்கொண்டு, என் மனைவியும் நானும் 20 ஆட்களைக் கடவுளுடைய நோக்கத்தைப்பற்றி அறியும் திருத்தமான அறிவைப் பெறுவதற்கு உதவிசெய்யும் மகிழ்ச்சியடைந்தோம். சாயங்காலமாகி, நான் யெகோவாவின் ஊழியத்தில் ஒரு நாளைச் செலவிட்டப்பின் வீடு திரும்புகையில், உண்மைதான், நான் களைத்திருக்கிறேன். ஆனால் சந்தோஷமாயிருக்கிறேன், ஒருவரும் பறித்துக்கொள்ள முடியாத மகிழ்ச்சியை எனக்குத் தந்ததற்காக நான் யெகோவாவுக்கு நன்றி செலுத்துகிறேன்.”
“பூமியின் மிகத் தொலைதூரப் பாகம் வரையிலும்”
கடவுளுடைய மகிழ்ச்சியுள்ள ஜனத்திலுள்ளோர் தாங்கள் எங்கிருந்தாலும், “பூமியின் மிகத் தொலைதூரப் பாகத்தில்” இருந்தாலுங்கூட இதைப்போன்ற ஆர்வத்தைக் காட்டுகின்றனர். (அப்போஸ்தலர் 1:8, NW) வட கிரீன்லாந்துவைப் பார்க்கிலும் அதிக தூரத்தில் இடங்கள் இருப்பது அரிதே. எனினும், அங்கேயும், வடதுருவ வட்டத்துக்கு 200 மைல்கள் வடக்கே, இலுலிஸட்டின் அந்தச் சிறிய சபை உள்ளது, இது 19 ஆட்களையுடையது. இவர்கள் அந்த இத்தாலிய தம்பதிகளைப்போல் அதே நற்செய்தியைப் பிரசங்கிக்கின்றனர், சென்ற ஆண்டில் ஏழு கிரீன்லாந்தினர் யெகோவாவுக்குத் தங்கள் ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக முழுக்காட்டப்பட்டதைக் காண்பதில் இவர்கள் மிகுந்த மனமகிழ்ச்சியடைந்தனர்.
கிரீன்லாந்திலிருந்து பல ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால், இந்து மகா சமுத்திரத்திலுள்ள, ஏறத்தாழ வெப்பமண்டலநிலைசார்ந்த மாரிஷியஸ் தீவில், அஞ்சினி அதே மகிழ்ச்சியுடையவளாக இருக்கிறாள். முதன்முதலில் அஞ்சினிக்குக் காரியங்கள் கடினமாயிருந்தன. மாரிஷியஸ்ஸில் கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு வருவதும் கடவுளைப்பற்றி யாவரறிய வெளிப்பட பிரசங்கிப்பதும் இந்து குடும்பத்தில் பிறந்த இந்திய தனிப் பெண்ணுக்குத் தகுந்த நடவடிக்கைகளாகக் கருதப்படவில்லை. ஆனால் அஞ்சினி விடாது நிலைத்திருந்தாள். இப்பொழுது, அவள் கிறிஸ்தவ போக்கைப் பின்தொடரத் தொடங்கி ஒன்பது ஆண்டுகளுக்குப் பின், அவளுடைய உறவினரில் சிலரும் பைபிள் கற்கின்றனர்.
அஞ்சினியின் சம்பந்தமாக, உலகத்தின் மறுபக்கத்திலுள்ள ஹாண்டுராஸிலிருக்கும் எமிலியோ குறிப்பிடப்படவேண்டும். எமிலியோ தன் உடன்வேலையாளர் வேலைசெய்கையில் பைபிளைப்பற்றிப் பேசுவதைக் கேட்டு தன்னையும் அதில் சேர்த்துக்கொள்ளும்படி கேட்டான். அவனுக்கு வாசிக்கத் தெரியாது ஆனால் பைபிள் வசனங்கள் வாசிக்கப்படுகையில் மகிழ்ச்சியுடன் செவிகொடுத்துக் கேட்டான். கிறிஸ்தவ சத்தியம் அவனுடைய இருதயத்தில் ஊடுருவிச் சென்றபோது, எமிலியோ தன் ஒழுக்கக்கேடான வாழ்க்கைமுறையை விட்டுவிட்டான் மட்டுக்குமீறி குடிப்பதையும் நிறுத்தினான். யெகோவாவின் சாட்சிகள் அவனுக்கு வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொடுத்தார்கள், இப்பொழுது அவன் கடவுளுடைய மகிழ்ச்சியுள்ள ஜனத்தில் ஓர் ஊழியனாயிருக்கிறான்.
ஹாண்டுராஸுக்கு வடமேற்கில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால், அலாஸ்காவில் ஓர் எஸ்கிமோ தாய் இதே கிறிஸ்தவ சத்தியத்தைக் கற்றாள். இந்த அம்மாள் வெகு தூரத்தில் தனித்திருந்த ஒரு கிராமத்தில் வாழ்ந்தாள், யெகோவாவின் சாட்சிகளோடு அவளுக்கிருந்த ஒரே தொடர்பு கடிதப்போக்குவரத்து மூலமேயாகும். ஆகையால் அவள் கடிதத்தின்மூலம் படித்தாள், தன் கேள்விகளைக் கடிதத்தின்மூலம் கேட்டாள், இப்பொழுது அவள் தனக்குத் தெரிந்ததைத் தன் அயலாருடன் ஆர்வத்துடன் பகிர்ந்துகொள்கிறாள். இவற்றைப்போன்ற உதாரணங்களை ஏறக்குறைய முடிவில்லாமல் சொல்லிக்கொண்டுபோகலாம். உலகமுழுவதிலும், சாந்த இருதயமுள்ளவர்கள் “மகிழ்ச்சியோடே யெகோவாவைச் சேவி”க்க வருகிறார்கள்.—சங்கீதம் 100:2, தி.மொ.
‘ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருங்கள்’
கடவுளுடைய மகிழ்ச்சியுள்ள ஜனத்துக்குள் இருந்துவரும் அன்பு இவர்களெல்லாரையும் கவரும் ஒரு காரியமாகும். இயேசு பின்வருமாறு கூறினார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:35) இந்த உண்மையான கிறிஸ்தவர்களின் தினசரி வாழ்க்கையில் கிறிஸ்தவ அன்பு காணப்படுகிறது, முக்கியமாய்த் துன்பங்கள் நேரிடும் காலங்களில் இதைக் காணலாம்.
விசனகரமாய், யெகோவாவின் சாட்சிகளின் வேலைக்குத் தடை உத்தரவு போடப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடு ஒன்றில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. பதினாயிரம் ஆட்கள் மாண்டனர், ஆடுமாடுகளின் முழு மந்தைகளும் செத்தன. சாட்சிகள் எவ்வாறு உயிர்தப்பிப் பிழைத்தனர்? தாவரங்களின் வேர்களையும் காய்ந்துகிடந்த அவொக்கேடோ கொட்டைகளுக்குள் இருக்கும் பருப்புகளையும் சாப்பிடுவதால்! ஆனால் கடவுளுடைய உதவியால், மற்ற நாடுகளிலுள்ள சாட்சிகள் எதிர்பாராதவகையில் 25 டன்கள் பஞ்சத்தீர்ப்பு உதவிபொருட்களை அனுப்ப அனுமதி பெற்றபோது, அவர்களுடைய கடும் நெருக்கடிநிலை வியப்புண்டாக்கும் முறையில் தணிந்தது. நிச்சயமாகவே, தடையுத்தரவின் மத்தியிலும், இந்த உதவிபொருட்கள் பத்திரமாய்க் கொண்டுசென்று சேர்க்கப்படுவதை உறுதிப்படுத்த இராணுவ வழிகாப்புதவி அளிக்கப்பட்டது!
மெய்யாகவே, அந்த ஆப்பிரிக்க சாட்சிகள் தங்கள்மீது தங்கள் சகோதரர்கள் கொண்டுள்ள அன்பின் இந்த நிரூபணத்தைப் பெற்று ஏசாயாவின் பின்வரும் சொற்களின் நிறைவேற்றத்தைத் தாங்கள் அனுபவித்தபோது வெகுவாய் மகிழ்ந்து களிகூர்ந்தனர்: “இதோ, இரட்சிக்கக்கூடாதபடி யெகோவாவின் கரம் குறுகிப்போகவுமில்லை, கேட்கமுடியாதபடி அவருடைய செவி மந்தமாகவுமில்லை.”—ஏசாயா 59:1, தி.மொ.
சமாதானமுள்ள ஒரு ஜனம்
சாந்த இருதயமுள்ளவர்கள் கடவுளுடைய மகிழ்ச்சியுள்ள ஜனத்திடம் கவர்ந்திழுக்கவும் படுகிறார்கள், ஏனெனில் இதன் உறுப்பினர், போர் விருப்பங்கொண்ட இந்த உலகத்தின் வழிகளை விட்டொழித்து ‘தங்கள் பட்டயங்களைக் கலப்பைக் கொழுக்களாக அடித்துவிட்டனர்.’ (ஏசாயா 2:4, தி.மொ.) எல் சல்வேடாரில் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ஒரு மனிதனின் வீடு அவனுடைய இராணுவ வாழ்க்கைப்பணியின் நினைவூட்டுக் குறி பொருட்களால் நிறைந்திருந்தது. ஆனால் அவன் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்கத் தொடங்கினபோது, சமாதான அக்கறைகளை முன்னேற்றுவித்தான். முடிவில், அவன், போருடன் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் தன் வீட்டிலிருந்து நீக்கி ஒழித்துவிட்டு ஆர்வத்துடன் பிரசங்க ஊழியத்தை ஏற்றான்.
அரசாங்க எதிரிகளின் படைகள் அவனுடைய கிராமத்தைக் கைப்பற்றினபோது, அவன் கைதுசெய்யப்பட்டான்—எவரோ அவனை முன்னாள் இராணுவ சேவகனென சுட்டிக்காட்டினதாகத் தெரிகிறது. எனினும், தான் இனிமேலும் ஒரு போர்ச்சேவகனாயில்லை தான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவன் என அவன் விளக்கினான். அந்தக் கலகக்காரர்கள் அவனுடைய வீட்டில் அவன் போராயுதங்களை வைத்திருப்பதாக அவனைக் குற்றஞ்சாட்டினார்கள், ஆனால் அவனுடைய வீட்டைச் சோதனையிட்டு எதையும் காணவில்லை. பின்பு அந்தக் கலகக்காரரின் தலைவன் அந்த அயலாரிடம் அவனைப்பற்றி விசாரித்தான். அவர்கள் பொதுவாய்ச் சொன்ன குறிப்பானது: “அவன் வெறுமென ஒவ்வொருநாளும் தெருவில் மேலும் கீழும் சென்று பைபிளைப்பற்றிப் பிரசங்கிக்கிறான்.” அவன் விடுதலை செய்யப்பட்டான். சந்தேகமில்லாமல் அவனுடைய ஆர்வம் அவனுடைய உயிரைக் காக்க உதவினது.
ஆப்பிரிக்க நாடு ஒன்றிலிருந்து வந்த அறிக்கை, யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படித்த இரண்டு போர்ச்சேவகரைப்பற்றிச் சொல்லுகிறது. ஒருவன் அரசாங்கப் படையில் சேவித்தான், மற்றவன் கலகக்காரர்களின் சார்பில் போர் செய்தான். முடிவில், இருவரும் “தங்கள் பட்டயங்களைக் கலப்பைக் கொழுக்களாக அடிக்கத்” தீர்மானித்து இராணுவத்திலிருந்து விலகினர். இவர்கள் முதல் தடவையாகக் கிறிஸ்தவக் கூட்டங்களுக்குச் சென்றபோது, அரசாங்க எதிரிகளின் படையிலிருந்த போர்ச் சேவகன் மற்றவனைப் பார்த்து: “உனக்கு இங்கே என்ன வேண்டும்?” எனக் கேட்டான். அவன் மறுமொழியாக: “உனக்கு, இங்கே உனக்கு என்ன வேண்டும்?” என்றான். அந்த அறிக்கை முடிவாகச் சொல்வதாவது, “பின்பு, ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொண்டு, அவர்கள் மகிழ்ச்சிக்குரிய கண்ணீர் விட்டனர் ஏனெனில் அவர்கள் இனி சமாதானத்தில் ஒன்றுசேர்ந்திருக்க முடியும்.” இந்த முன்னாள் இராணுவ ஆட்கள் சந்தேகமில்லாமல் கடவுளிடம் பின்வருமாறு ஜெபித்தனர்: “தேவனே, என்னை இரட்சிக்குந் தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப் பாடும்.”—சங்கீதம் 51:14.
‘நீர் என் உபத்திரவத்தைப் பார்த்திருக்கிறீர்’
“உமது கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்துமவியாகுலங்களை அறிந்திருக்கிறீர்.” (சங்கீதம் 31:7) சங்கீதக்காரன் இவ்வாறு ஜெபித்தான், இன்றும் பலர் தங்கள் உபத்திரவங்களைச் சகித்து சமாளிப்பதற்குக் கடவுளுடைய வார்த்தை தங்களுக்கு உதவிசெய்வதால் மகிழுகின்றனர். பிரான்ஸில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் முரண்மூளை நோயுற்ற ஓர் அம்மாளுடன் ஒரு படிப்பு நடத்துகிறாள். இந்த அம்மாள் சில காலமாக மனநோய் மருத்துவ சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்தாள், ஆனால் இது அவளுக்கு உதவி செய்யவில்லை. அவள் தன் படிப்பைத் தொடங்கின ஒரு வாரத்துக்குப் பின், உளநோய் மருத்துவர்: “இந்தப் பெண் பைபிளிலிருந்து உனக்கு விளக்குவதை நீ உண்மையில் புரிந்துகொள்கிறாயா?” என்று அவளைக் கேட்டார். ஆகையால் அதற்கடுத்த வாரம், அந்தச் சாட்சி அவருடைய அலுவலகத்துக்குச் சென்று அவர் முன்னிலையில் அந்த அம்மாளுடன் படிப்பை நடத்தினாள்.
அந்தப் படிப்பு நடத்தினபின், உளநோய் மருத்துவர் சாட்சியிடம் பின்வருமாறு கூறினார்: “பல ஆண்டுகளாக நான் என் நோயாளிகளின் மதங்களில் அக்கறை எடுத்திருக்கிறேன், ஆனால் எந்த மதமும் உண்மையான உதவியை அளிக்கவில்லையென நான் கவனித்தேன். உன் காரியத்திலோவெனில், காரியங்கள் வேறுபட்டிருக்கின்றன. மிஸிஸ். P— வாரத்துக்கு இருமுறை மருத்துவ ஆலோசனைக்கு வருகிறாள், அதற்காக அவள் எனக்குப் பணம் செலுத்துகிறாள். எனினும், உன்னுடைய பைபிள் போதகத்தாலும் நல்ல அறிவுரையாலும், நீ அதைப் பார்க்கிலும் மேம்பட்ட வேலையை இலவசமாய்ச் செய்கிறாய். அவள் நல்ல முன்னேற்றமடைந்துகொண்டிருக்கிறாள். இதை விடாமல் தொடர்ந்துசெய், எப்பொழுதாவது தேவைப்பட்டால் என் முழு ஒத்துழைப்பை உனக்குத் தருவதற்கு நான் உறுதியளிக்கிறேன்.”
பைபிள் பின்வருமாறு சொல்கிறது: “ஆனந்த ஆரவாரத்தை அறிந்த ஜனம் பாக்கியமுள்ளது; யெகோவா, அவர்கள் உமது திருமுக வெளிச்சத்தில் நடக்கிறவர்கள். அவர்கள் உமது திருநாமத்தில் நாளெல்லாம் களிகூர்ந் . . . திருப்பார்கள்.” (சங்கீதம் 89:15, 16, தி.மொ.) இந்தச் சங்கீதத்தில் சொல்லியிருப்பது உண்மையென யெகோவாவின் சாட்சிகள் ஒவ்வொருவரும் அறிவர். அவர்களுடைய வாயிலிருந்து உலகளாவிய ஒரு மகிழ்ச்சி ஆரவாரம் யெகோவாவின் துதிக்கு மேலெழும்பிக்கொண்டிருக்கிறது. அவர்களோடுகூட கடவுளைத் துதிப்பதற்கு ஜாதிகளிலிருந்து மேலும் மேலும் மிகுதியான ஆட்கள் புரண்டோடி வருகின்றனர். அவர்களோடுகூட சேர்ந்து அந்த மகிழ்ச்சியை நீங்களும் அனுபவிக்கலாமல்லவா? (w91 1⁄1)
[பக்கம் 7-ன் படம்]
கிழக்கு ஐரோப்பாவில் யெகோவாவின் சாட்சிகள் “காவற்கோபுர”த்தைத் தங்கள் சொந்த மொழிகளில் பெற்று படிப்பதற்கு அடைந்துள்ள தங்கள் புதிய சுயாதீனத்தில் இப்பொழுது மகிழ்ந்து களிகூருகின்றனர்