இந்தக் கடைசி நாட்களில் ஒற்றுமையைக் காத்துக்கொள்ளுங்கள்
“நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, . . . கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராகமாத்திரம் நடந்துகொள்ளுங்கள்.”—பிலிப்பியர் 1:27.
1. யெகோவாவின் சாட்சிகளுக்கும் இந்த உலகத்துக்குமிடையே என்ன நேர்வேறுபாடு உள்ளது?
இவை ‘கடைசி நாட்கள்.’ சந்தேகமில்லாமல், “கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்கள்” இங்குள்ளன. (2 தீமோத்தேயு 3:1-5, NW) மனித சமுதாயத்தில் இருந்துவரும் அதன் அமைதியின்மையோடு கூடிய இந்த ‘முடிவுகாலத்தில்,’ யெகோவாவின் சாட்சிகள், தங்களுக்கிருக்கும் சமாதானத்தின் மற்றும் ஒற்றுமையின் காரணமாக, முற்றிலும் வேறுபட்டவர்களாக முனைப்பாய்த் தோன்றுகிறார்கள். (தானியேல் 12:4) ஆனால் யெகோவாவை வணங்குவோராலாகிய பூகோள குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு தனி நபரும், இந்த ஒற்றுமையைத் தொடர்ந்து காத்து வருவதற்காகக் கடினமாய் உழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
2. ஒற்றுமையைக் காத்துவருவதைப் பற்றி பவுல் என்ன சொன்னார், என்ன கேள்வியை நாம் சிந்திப்போம்?
2 ஒற்றுமையைக் காத்துவரும்படி அப்போஸ்தலனாகிய பவுல் உடன் கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறினார். அவர் இவ்வாறு எழுதினார்: “நான் வந்து உங்களைக் கண்டாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராக மாத்திரம் நடந்துகொள்ளுங்கள். நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே.” (பிலிப்பியர் 1:27, 28) கிறிஸ்தவர்களாக நாம் ஒன்றுசேர்ந்து உழைக்க வேண்டுமென்று பவுலின் வார்த்தைகள் தெளிவாகக் காட்டுகின்றன. அப்படியானால், இந்தக் கொடிய காலங்களில் நம்முடைய கிறிஸ்தவ ஒற்றுமையைக் காத்துவர நமக்கு எது உதவி செய்யும்?
கடவுளுயை சித்தத்திற்குக் கீழ்ப்பட்டிருத்தல்
3. விருத்தசேதனம் செய்யப்படாத புறஜாதியார், எப்போது, எவ்வாறு முதன்முதல் கிறிஸ்துவைப் பின்பற்றினோரானார்கள்?
3 எல்லா சமயங்களிலும் கடவுளுடைய சித்தத்திற்குக் கீழ்ப்பட்டிருப்பது, நம்முடைய ஒற்றுமையைக் காத்துவருவதற்கு ஒரு வழியாக உள்ளது. இது நம்முடைய சிந்தனையில் ஒரு சரிப்படுத்தல் செய்வதைத் தேவைப்படுத்தலாம். இயேசு கிறிஸ்துவின் பூர்வ யூத சீஷர்களைக் கவனியுங்கள். பொ.ச. 36-ல் அப்போஸ்தலனாகிய பேதுரு, விருத்தசேதனம் செய்யப்படாத புறஜாதியாருக்கு முதன்முதல் பிரசங்கித்தபோது, அந்தப் புறதேச ஜனங்களின்மீது கடவுள் பரிசுத்த ஆவியை ஊற்றினார், அவர்கள் முழுக்காட்டப்பட்டனர். (அப்போஸ்தலர், 10-ம் அதிகாரம்) அதுவரையில், யூதரும், யூத மதத்திற்கு மாறினவர்களும், சமாரியரும் மாத்திரமே இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றினோரானார்கள்.—அப்போஸ்தலர் 8:4-8, 26-38.
4. கொர்நேலியு சம்பந்தப்பட்டதில் நடந்தவற்றை விளக்கினபின்பு பேதுரு என்ன சொன்னார், இயேசுவின் யூத சீஷர்களுக்கு இது என்ன பரீட்சையாக இருந்தது?
4 கொர்நேலியுவும் மற்ற புறஜாதியாரும் மதமாறினதைப் பற்றி எருசலேமிலிருந்த அப்போஸ்தலரும் மற்ற சகோதரர்களும் கேள்விப்பட்டபோது, பேதுருவின் அறிக்கையைக் கேட்பதில் அவர்கள் ஆர்வமுள்ளவர்களாயிருந்தனர். கொர்நேலியுவும், விசுவாசித்த மற்ற புறஜாதியாரும் சம்பந்தப்பட்டதில் நடந்தவற்றை விளக்கிக் கூறின பின்பு, இவ்வார்த்தைகளைக் கொண்டு அந்த அப்போஸ்தலன் முடித்தார்: “ஆதலால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்திருக்கிற நமக்குத் [யூதருக்கு] தேவன் [பரிசுத்த ஆவியின்] வரத்தை அநுக்கிரகம்பண்ணினதுபோல அவர்களுக்கும் [விசுவாசித்த அந்தப் புறஜாதியாருக்கும்] அந்த வரத்தையே அநுக்கிரகம்பண்ணியிருக்கும்போது தேவனைத் தடுக்கிறதற்கு நான் எம்மாத்திரம்”? (அப்போஸ்தலர் 11:1-17) இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றினோரான யூதருக்கு இது ஒரு பரீட்சையாக இருந்தது. அவர்கள் கடவுளுடைய சித்தத்திற்குக் கீழ்ப்பட்டு, விசுவாசிகளான புறஜாதியாரைத் தங்கள் உடன் வணக்கத்தாராக ஏற்பார்களா? அல்லது யெகோவாவின் பூமிக்குரிய ஊழியர்களினுடைய ஒற்றுமை ஆபத்துக்குள்ளாக்கப்படுமா?
5. கடவுள், புறஜாதியாருக்கு மனந்திரும்புதலை அருளின இந்த உண்மைக்கு அப்போஸ்தலரும் மற்ற சகோதரரும் எவ்வாறு பிரதிபலித்தனர், இந்த மனப்பான்மையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
5 விவரப்பதிவு இவ்வாறு சொல்கிறது: “இவைகளை அவர்கள் [அப்போஸ்தலரும் மற்ற சகோதரரும்] கேட்டபொழுது அமர்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலைத் தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.” (அப்போஸ்தலர் 11:18) அந்த மனப்பான்மை இயேசுவைப் பின்பற்றினோரின் ஒற்றுமையைப் பாதுகாத்து, ஊக்குவித்து வளர்த்தது. சொற்ப காலத்துக்குள்தானே, அந்தப் பிரசங்க ஊழியம் புறஜாதியாருக்குள், அல்லது புறதேச ஜனங்களுக்குள் முன்னேறியது, அத்தகைய நடவடிக்கைகளில் யெகோவாவின் ஆசீர்வாதம் இருந்தது. ஒரு புதிய சபை அமைக்கப்படுவதன் சம்பந்தமாக நம்முடைய ஒத்துழைப்பு கேட்கப்படுகையில், அல்லது கடவுளுடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின்கீழ் தேவாட்சி சம்பந்தப்பட்ட சரிப்படுத்தல்கள் செய்யப்படுகையில் நாம்தாமே எதிர்ப்புணர்ச்சியின்றி இணங்க வேண்டும். நம்முடைய முழு இருதயப்பூர்வ ஒத்துழைப்பு யெகோவாவுக்குப் பிரியமாயிருக்கும், மற்றும் இந்தக் கடைசி நாட்களில் நம் ஒற்றுமையை காத்துவர நமக்கு உதவி செய்யும்.
சத்தியத்தைப் பற்றிக்கொண்டிருங்கள்
6. யெகோவாவை வணங்குவோரின் ஒற்றுமையில் சத்தியம் என்ன பாதிப்பை உடையதாக இருக்கிறது?
6 யெகோவாவை வணங்குவோராலாகிய குடும்பத்தின் பாகமாக, நாம் ஒற்றுமையைக் காத்து வருகிறோம், ஏனெனில் நாம் எல்லாரும் ‘யெகோவாவால் போதிக்கப்பட்டு’ வருகிறோம், அவருடைய வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தை உறுதியாய்ப் பற்றியிருக்கிறோம். (யோவான் 6:45, NW; சங்கீதம் 43:3) நம்முடைய போதகங்கள் கடவுளுடைய வார்த்தையில் ஆதாரம் கொண்டிருப்பதால், நாமெல்லாரும் ஒன்றிசைவாய்ப் பேசுகிறோம். ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின்’ மூலமாய், யெகோவா நமக்குக் கிடைக்கும்படி செய்கிற ஆவிக்குரிய உணவை நாம் மகிழ்ச்சியுடன் ஏற்கிறோம். (மத்தேயு 24:45-47, NW) இத்தகைய ஒரேமாதிரியான போதகம், உலகமெங்கும் நம் ஒற்றுமையைக் காத்துவர நமக்கு உதவிசெய்கிறது.
7. தனிப்பட்டவர்களாய் ஏதோ ஒரு குறிப்பைப் புரிந்துகொள்வது நமக்குக் கடினமாக இருந்தால், நாம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது?
7 தனிப்பட்டவர்களாய் குறிப்பிட்ட ஒரு போதகத்தைப் புரிந்துகொள்வது அல்லது ஏற்பது நமக்கு கடினமாய் இருந்தால் என்ன செய்வது? ஞானத்திற்காக நாம் ஜெபித்து, வேதவாக்கியங்களிலும் கிறிஸ்தவ பிரசுரங்களிலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். (நீதிமொழிகள் 2:4, 5; யாக்கோபு 1:5-8) மூப்பர் ஒருவருடன் கலந்துபேசுவது உதவி செய்யலாம். அந்தக் குறிப்பை இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், அதை விட்டு வைப்பது நல்லது. அந்தப் பொருளின்பேரில் மேலுமானத் தகவல் பின்னால் ஒருவேளை பிரசுரிக்கப்படலாம், அப்போது நம்முடைய புரிந்துகொள்ளுதல் விரிவாக்கப்படும். எனினும், நம்முடைய சொந்த வேறுபட்ட அபிப்பிராயத்தை ஏற்கும்படி சபையிலுள்ள மற்றவர்களை வற்புறுத்த முயற்சி செய்வது தவறு. இது ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கு உழைப்பதாக இராமல், முரண்பாட்டையே விதைப்பதாயிருக்கும். ‘சத்தியத்தில் தொடர்ந்து நடந்துகொண்டு’ மற்றவர்களும் அவ்வாறு செய்யும்படி ஊக்குவித்து வருவது அதைப் பார்க்கிலும் எவ்வளவு மேலானது!—3 யோவான் 4.
8. சத்தியத்தினிடமாக என்ன மனப்பான்மை தகுந்ததாயுள்ளது?
8 முதல் நூற்றாண்டில் பவுல் இவ்வாறு சொன்னார்: “இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன்.” (1 கொரிந்தியர் 13:12) பூர்வ கிறிஸ்தவர்கள் எல்லா நுட்ப விவரங்களையும் தெளிவாகப் புரிந்துகொள்ளாதபோதிலும், ஒன்றுபட்டவர்களாக நிலைத்திருந்தனர். இப்போது நாம், யெகோவாவின் நோக்கத்தையும் அவருடைய சத்திய வார்த்தையையும் பற்றி மேலுமதிகத் தெளிவாய்ப் புரிந்துகொண்டவர்களாக இருக்கிறோம். ஆகையால், ‘உண்மையுள்ள அடிமையின்’ மூலம் நாம் பெற்றிருக்கிற சத்தியத்திற்காக நன்றியுள்ளோராய் இருப்போமாக. மேலும், யெகோவா, தம்முடைய அமைப்பின்மூலமாக நம்மை வழிநடத்திவந்திருப்பதற்காகவும் நாம் நன்றியுள்ளோராக இருக்கலாம். ஒரே அளவான அறிவே நமக்கு எப்போதும் இராதபோதிலும், ஆவிக்குரியப்பிரகாரம் நாம் பட்டினியாகவோ தாகமாகவோ இருக்கவில்லை. மாறாக, நம்முடைய மேய்ப்பராகிய யெகோவா, நம்மை ஒன்றுபட்டிருக்கும்படி வைத்து, நன்றாய்க் கவனித்து வந்திருக்கிறார்.—சங்கீதம் 23:1-3.
நாவைச் சரியாகப் பயன்படுத்துங்கள்!
9. ஒற்றுமையை ஊக்குவித்து வளர்க்க நாவை எவ்வாறு பயன்படுத்தலாம்?
9 மற்றவர்களை ஊக்கப்படுத்தும்படி நாவைப் பயன்படுத்துவது ஒற்றுமையையும் சகோதர மனப்பான்மையையும் ஊக்குவித்து வளர்ப்பதற்கு முக்கியமான ஒரு வழியாக இருக்கிறது. விருத்தசேதனத்தின்பேரில் எழும்பின கேள்வியைத் தீர்வுசெய்த, முதல் நூற்றாண்டு ஆளும் குழு அனுப்பின அந்தக் கடிதம், ஊக்குவிக்கும் ஒரு காரணமாக இருந்தது. அதை வாசித்த பின்பு, அந்தியோகியாவிலிருந்த புறஜாதி சீஷர்கள் “அதனாலுண்டாகிய ஆறுதலினால் சந்தோஷப்பட்டார்கள்.” அந்தக் கடிதத்துடன் எருசலேமிலிருந்து அனுப்பப்பட்டிருந்த யூதாவும் சீலாவும், “அநேக வார்த்தைகளினால் சகோதரரைத் தைரியப்படுத்தி அவர்களை ஸ்திரப்படுத்தினார்கள்.” பவுலும் பர்னபாவும் அங்கிருந்ததும், சந்தேகமில்லாமல், அந்தியோகியாவிலிருந்த உடன் விசுவாசிகளை ஊக்குவித்துப் பலப்படுத்தினது. (அப்போஸ்தலர் 15:1-3, 23-32, தி.மொ.) கிறிஸ்தவ கூட்டங்களுக்காக ஒன்றுகூடி, நாம் அங்கிருப்பதன்மூலமும், கட்டியெழுப்பும் நம் குறிப்புரைகளின்மூலமும் ‘ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துகையில்,’ பெரும்பாலும் அதைப்போன்றதை நாம் செய்யலாம்.—எபிரெயர் 10:24, 25, தி.மொ.
10. திட்டுதல் ஏற்பட்டால், ஒற்றுமையைக் காத்துவைப்பதற்கு, என்ன செய்ய வேண்டியதாக இருக்கலாம்?
10 எனினும், நாவைத் தவறாகப் பயன்படுத்துவது நம்முடைய ஒற்றுமையைக் கெடுக்கும் பயமுறுத்தலாகக்கூடும். “நாவும் சிறிய அவயவமாயிருந்தும் வீம்பானவைகளைப் பேசும்,” என்று சீஷனாகிய யாக்கோபு எழுதினார். “பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!” (யாக்கோபு 3:5, தி.மொ.) விரோதம் உண்டாக்குவோரை யெகோவா வெறுக்கிறார். (நீதிமொழிகள் 6:16-19) அத்தகைய பேச்சு ஒற்றுமைக்கேட்டை விளைவிக்கலாம். அப்படியானால், திட்டுதல், அதாவது, ஒருவர்பேரில் பழிப்புரைகளைக் குவித்தல் அல்லது அவனை அல்லது அவளை அவமதிப்பான பேச்சுக்கு உட்படுத்துதல் இருந்தால் என்ன செய்வது? தவறு செய்தவருக்கு உதவி செய்ய மூப்பர்கள் முயற்சி எடுப்பார்கள். எனினும், திட்டுபவர் மனந்திரும்பாதிருந்தால், சபையின் சமாதானமும், ஒழுங்கும், ஒற்றுமையும் காக்கப்படும்படி, அவர் சபைநீக்கம் செய்யப்பட வேண்டும். பவுலும் இவ்வாறு எழுதினார்: “சகோதரனென்னப்பட்ட ஒருவன் . . . உதாசினனாயாவது, [“நிந்திப்பவனாக,” NW] . . . இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.”—1 கொரிந்தியர் 5:11.
11. நாம் சொன்ன ஏதோ ஒன்று, நமக்கும் உடன் விசுவாசி ஒருவருக்கும் மனசங்கடத்தை உண்டாக்கியிருந்தால், மனத்தாழ்மை ஏன் முக்கியமானது?
11 நாவைக் கட்டுப்படுத்துவது ஒற்றுமையைக் காத்துவர நமக்கு உதவி செய்கிறது. (யாக்கோபு 3:10-18) நாம் சொன்ன ஏதோ ஒன்று, நமக்கும் உடன் கிறிஸ்தவர் ஒருவருக்கும் இடையில் ஏதோ மன சங்கடத்தை உண்டாக்கியிருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். நம்முடைய சகோதரனோடு சமாதானம் செய்துகொள்வதில் நாம்தாமே முதற்படி எடுத்து, அவசியமானால் மன்னிப்பு கேட்பது தகுந்ததாயிருக்கும் அல்லவா? (மத்தேயு 5:23, 24) இதற்குப் பணிவு அல்லது மனத்தாழ்மை வேண்டியதாக இருக்கிறது என்பது உண்மையே, ஆனால் பேதுரு இவ்வாறு எழுதினார்: “நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.” (1 பேதுரு 5:5) நம்முடைய தவறுகளை ஒப்புக்கொண்டு, பொருத்தமான வருத்தம் தெரிவித்து, நம் சகோதரருடன் ‘சமாதானத்தைத் தொடரும்படி’ மனத்தாழ்மை நம்மை தூண்டியியக்கும். இது, யெகோவாவின் குடும்பத்தில் ஒற்றுமையைக் காத்துவருவதற்கு உதவி செய்கிறது.—1 பேதுரு 3:10, 11.
12. யெகோவாவின் ஜனங்களுடைய ஒற்றுமையை ஊக்குவித்து வளர்க்கவும் பாதுகாத்துவரவும் நாவை நாம் எவ்வாறு பயன்படுத்தலாம்?
12 நம்முடைய நாவை சரியான முறையில் நாம் பயன்படுத்தினால், யெகோவாவின் அமைப்பில் இருப்போருக்குள் குடும்ப மனப்பான்மையை நாம் முன்னேற்றுவிக்கக்கூடும். பவுல் அதையே செய்ததனால், தெசலோனிக்கேயருக்கு அவர் இவ்வாறு நினைப்பூட்ட முடிந்தது: “தேவனுக்கு நீங்கள் பாத்திரராய் நடக்க வேண்டுமென்று, தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும் தேறுதலும் எச்சரிப்பும் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்.” (1 தெசலோனிக்கேயர் 2:11, 12) இதைக் குறித்ததில் பவுல், நல்ல முன்மாதிரியை வைத்திருந்ததால், “மனந்தளர்ந்தவர்களை உற்சாகப்படுத்துங்கள்” என்று உடன் கிறிஸ்தவர்களுக்கு அவர் ஊக்கமூட்ட முடிந்தது. (1 தெசலோனிக்கேயர் 5:14, தி.மொ.) மற்றவர்களை ஆறுதல்படுத்தவும், ஊக்குவிக்கவும், கட்டியெழுப்பவும் நாவை பயன்படுத்துவதால் நாம் எவ்வளவு நன்மை செய்ய முடியும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஆம், “ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!” (நீதிமொழிகள் 15:23) மேலும், அத்தகைய பேச்சு யெகோவாவின் ஜனங்களுடைய ஒற்றுமையை ஊக்குவித்து வளர்ப்பதற்கும் பாதுகாத்து வருவதற்கும் உதவி செய்கிறது.
மன்னிப்போராக இருங்கள்!
13. நாம் ஏன் மன்னிப்போராக இருக்க வேண்டும்?
13 கிறிஸ்தவ ஒற்றுமையை நாம் காத்துக்கொள்ள வேண்டுமானால், வருத்தமுண்டாக்கின ஒருவர் மன்னிப்பு கேட்டுக்கொள்கையில் அவருக்கு மன்னிப்பது முக்கியம். எத்தனை தடவை நாம் அவருக்கு மன்னிக்க வேண்டும்? இயேசு பேதுருவுக்கு இவ்வாறு சொன்னார்: “ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும்.” (மத்தேயு 18:22) நாம் மன்னியாதவர்களாக இருந்தால், நம்முடைய சொந்த அக்கறைகளுக்கு எதிராக நாம் உழைக்கிறோம். எவ்வாறு? பகைமையும், வன்மத்தை மனதில் பேணி வைப்பதும் நம்முடைய மன சமாதானத்தைக் கெடுக்கும். கொடுமையான மன்னியாத வழிகளைப் பின்பற்றுவோராக நாம் அறியப்பட்டிருந்தால், சமுதாய ஒதுக்குதலை நம்மீதுநாமே கொண்டுவரக்கூடும். (நீதிமொழிகள் 11:17) வன்மத்தை மனதில் பேணி வைப்பது கடவுளுக்கு வெறுப்பானது, மேலும் அது வினைமையான பாவத்துக்கும் வழிநடத்தலாம். (லேவியராகமம் 19:18) முழுக்காட்டுபவனாகிய யோவான், அவருக்கு விரோதமாகக் ‘குரோதங்கொண்டிருந்த’ பொல்லாத ஏரோதியாளின் ஒரு சதியால் சிரச்சேதம் செய்யப்பட்டார் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.—மாற்கு 6:19-28, தி.மொ.
14. (அ) மன்னிப்பதைப் பற்றி மத்தேயு 6:14, 15 நமக்கு என்ன கற்பிக்கிறது? (ஆ) ஒருவரை மன்னிப்பதற்கு முன்பாக, அவர் மன்னிப்பு கேட்கும் வரை காத்திருக்க வேண்டுமா?
14 இயேசுவின் மாதிரி ஜெபத்தில் இந்த வார்த்தைகள் உள்ளடங்கியிருக்கின்றன: “எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே.” (லூக்கா 11:4) நாம் மன்னியாதவர்களாக இருந்தால், ஏதோ ஒரு நாள் யெகோவா தேவன் இனிமேலும் நம் பாவங்களை மன்னியாமல் விடும் ஆபத்துக்குள்ளாகிறோம். ஏனெனில் இயேசு இவ்வாறு சொன்னார்: “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரம பிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.” (மத்தேயு 6:14, 15) யெகோவாவின் வணக்கத்தாராலாகிய குடும்பத்தின் ஒற்றுமையைக் காத்துவருவதில் நம்முடைய பங்கைச் செய்வதற்கு நாம் உண்மையில் விரும்பினால், மன்னிப்போராக இருப்போம். தீங்கு நினையாமல், சிந்தனையற்று செய்துவிட்ட ஒரு குற்றத்தைப் பொருட்படுத்தாமல் வெறுமனே மறந்துவிடலாம். பவுல் இவ்வாறு சொன்னார்: ‘ஒருவரையொருவர் பொறுத்து ஒருவன்மேல் ஒருவனுக்குக் குறையுண்டானால் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்; ஆண்டவர் [“யெகோவா,” NW] உங்களுக்கு மன்னித்ததுபோலவே நீங்களும் மன்னியுங்கள்.” (கொலோசேயர் 3:13, தி.மொ.) நாம் மன்னிப்போராக இருக்கையில், யெகோவாவின் அமைப்பினுடைய அருமையான ஒற்றுமையைக் காத்துவருவதற்கு உதவி செய்கிறோம்.
ஒற்றுமையும் சொந்தத் தீர்மானங்களும்
15. தனிப்பட்ட சொந்தத் தீர்மானங்களைச் செய்கையில், ஒற்றுமையைக் காத்துவர யெகோவாவின் ஜனங்களுக்கு எது உதவிசெய்கிறது?
15 சொந்தத் தீர்மானங்களைச் செய்வதற்குரிய சிலாக்கியத்துடனும் பொறுப்புடனும் நம்மை ஒழுக்க சுயாதீனமுள்ளவர்களாக கடவுள் உண்டாக்கினார். (உபாகமம் 30:19, 20; கலாத்தியர் 6:5) எனினும், நாம் பைபிளின் சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் உடன்பட்டு செயல்படுவதனால், நம்முடைய ஒற்றுமையைக் காத்துவரக் கூடியோராக இருக்கிறோம். தனிப்பட்ட சொந்தத் தீர்மானங்களைச் செய்கையில் அவற்றை நம் கவனத்துக்குள் ஏற்கிறோம். (அப்போஸ்தலர் 5:29; 1 யோவான் 5:3) நடுநிலை வகிப்பைப் பற்றி ஒரு கேள்வி எழும்புகிறதென்று வைத்துக்கொள்வோம். நாம் ‘இந்த உலகத்தின் பாகமானோரல்லர்’ என்பதையும் ‘நம்முடைய பட்டயங்களை ஏர்க்கொழுக்களாக அடித்துவிட்டோம்’ என்பதையும் நினைவுபடுத்தி, அறிந்துணர்ந்த சொந்தத் தீர்மானத்தை நாம் செய்யலாம். (யோவான் 17:16, NW; ஏசாயா 2:2-4, NW) அவ்வாறே, அரசாங்கத்துடன் நம் உறவைப் பற்றியதில், சொந்தத் தீர்மானம் ஒன்றை நாம் செய்ய வேண்டியதாக இருக்கும்போது, ‘தேவனுடையதை தேவனுக்குச்’ செலுத்துவதைப் பற்றி பைபிள் சொல்வதற்கு நாம் கவனம் செலுத்துகிறோம்; அதே சமயத்தில் உலகப்பிரகாரமான காரியங்களில் “மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு” நம்மைக் கீழ்ப்படுத்துகிறோம். (லூக்கா 20:25; ரோமர் 13:1-7; தீத்து 3:1, 2) ஆம், தனிப்பட்ட சொந்தத் தீர்மானங்களைச் செய்வதில், பைபிள் சட்டங்களையும் நியமங்களையும் கவனத்தில் வைப்பது, நம்முடைய கிறிஸ்தவ ஒற்றுமையைக் காத்துவைப்பதற்கு உதவிசெய்கிறது.
16. பைபிளின் சட்டமோ நியமமோ உட்படாத தீர்மானங்களைச் செய்கையில் ஒற்றுமையைக் காத்துவர நாம் எவ்வாறு உதவிசெய்யலாம்? உதாரணத்துடன் விளக்குங்கள்.
16 முற்றிலும் நமக்கே தனிப்பட்டதாயுள்ளதும், பைபிளின் சட்டமோ நியமமோ உட்படாததுமான ஒரு தீர்மானத்தைச் செய்கையிலுங்கூட, கிறிஸ்தவ ஒற்றுமையைக் காத்துவர நாம் உதவி செய்யலாம். எவ்வாறு? நம்முடைய தீர்மானத்தால் பாதிக்கப்படக்கூடிய மற்றவர்களுக்கு அன்புள்ள அக்கறையைக் காட்டுவதன்மூலமே. உதாரணமாக, விக்கிரகங்களுக்கு பலிசெலுத்தப்பட்ட மாம்சம் சம்பந்தப்பட்டதில், பூர்வ கொரிந்துவிலிருந்த சபையில், ஒரு கேள்வி எழும்பினது. நிச்சயமாகவே, விக்கிரகாராதனைக்குரிய ஓர் ஆசாரத்தில் ஒரு கிறிஸ்தவன் பங்குகொள்ள மாட்டான். எனினும், பொதுவானக் கடையில் விற்கப்பட்ட இந்த வகையான மீந்த மாம்சத்தை, அது சரியாக இரத்தம் வடித்தெடுக்கப்பட்டிருந்தால், சாப்பிடுவது பாவமாக இருக்கவில்லை. (அப்போஸ்தலர் 15:28, 29; 1 கொரிந்தியர் 10:25) இருப்பினும், இந்த மாம்சத்தை சாப்பிடுவதன்பேரில் கிறிஸ்தவர்கள் சிலருடைய மனச்சாட்சிகள் சங்கடப்பட்டன. ஆகையால், அவர்களுக்கு இடறலுண்டாக்குவதைத் தவிர்க்கும்படி, பவுல், மற்ற கிறிஸ்தவர்களுக்குக் கூறினார். உண்மையில் அவர் இவ்வாறு எழுதினார்: “போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்.” (1 கொரிந்தியர் 8:13) ஆகையால், தனிப்பட்ட சொந்தத் தீர்மானங்களைச் செய்கையில், பைபிள் சட்டமோ நியமமோ உட்படாவிடினும், கடவுளுடைய குடும்பத்தின் ஒற்றுமையைப் பாதிக்கக்கூடியதாயிருக்கையில், மற்றவர்களுக்குச் சிந்தனை செலுத்துவது எவ்வளவு அன்பான காரியமாயிருக்கிறது!
17. நாம் தனிப்பட்ட சொந்தத் தீர்மானங்களைச் செய்ய வேண்டியதாக இருக்கையில் என்ன செய்வது நல்லது?
17 என்ன போக்கைப் பின்பற்றுவது என்று நாம் நிச்சயமாயிராவிட்டால், நம்மை சுத்தமான மனச்சாட்சியுடன் விடும் ஒரு வகையில் தீர்மானிப்பது ஞானமாயுள்ளது. மற்றவர்களும் நம்முடைய தீர்மானத்தை மதிக்க வேண்டும். (ரோமர் 14:10-12) நாம் தனிப்பட்ட சொந்தத் தீர்மானம் ஒன்றைச் செய்ய வேண்டியதாக இருக்கையில், ஜெபத்தில் யெகோவாவின் வழிநடத்துதலை தேட வேண்டும். சங்கீதக்காரனைப்போல், நாம் திடநம்பிக்கையுடன் இவ்வாறு ஜெபிக்கலாம்: ‘உமது செவியை எனக்குச் சாய்த்தருளும் . . . என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்.’—சங்கீதம் 31:2, 3.
கிறிஸ்தவ ஒற்றுமையை எப்போதும் காத்துக்கொள்ளுங்கள்
18. கிறிஸ்தவ சபையின் ஒற்றுமையை பவுல் எவ்வாறு உதாரணத்தைக்கொண்டு விளக்கினார்?
18 1 கொரிந்தியர் 12-ம் அதிகாரத்தில், பவுல், கிறிஸ்தவ சபையின் ஒற்றுமையை விளக்கிக் காட்டுவதற்கு, மனித உடலை பயன்படுத்தினார். உறுப்புகள் ஒன்றையொன்று சார்ந்திருப்பதையும், அவை ஒவ்வொன்றின் முக்கியத்துவத்தையும் அவர் அறிவுறுத்திக் கூறினார். “அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரமெங்கே?” என்று பவுல் கேட்டார். “இருக்கிறபடியோ அவயவங்கள் அநேகம், சரீரமோ ஒன்று; கண் கையினிடம்: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும் தலை கால்களினிடம் நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றுஞ் சொல்லமுடியாது.” (1 கொரிந்தியர் 12:19-21, தி.மொ.) அவ்வாறே, யெகோவாவை வணங்குவோராலாகிய குடும்பத்திலுள்ள நாம் எல்லாரும் ஒரே செயலை நடப்பிப்பதில்லை. எனினும், நாம் ஒன்றுபட்டிருக்கிறோம், ஒருவருக்கொருவர் தேவைப்படுகிறோம்.
19. கடவுளுடைய ஆவிக்குரிய ஏற்பாடுகளிலிருந்து நாம் எவ்வாறு பயனடைய முடியும், முதிர்வயதான ஒரு சகோதரர், இதன் சம்பந்தமாக என்ன சொன்னார்?
19 உடலுக்கு உணவும், கவனமும், வழிநடத்துதலும் தேவைப்படுவதுபோல், நமக்கு கடவுள், தம்முடைய வார்த்தை, ஆவி மற்றும் அமைப்பின்மூலம் அருளுகிற ஆவிக்குரிய ஏற்பாடுகள் தேவை. இந்த ஏற்பாடுகளிலிருந்து பயனடைவதற்கு, நாம் யெகோவாவின் பூமிக்குரிய குடும்பத்தின் பாகமாக இருக்க வேண்டும். பல ஆண்டுகள் கடவுளுடைய சேவையில் இருந்த பின்பு, ஒரு சகோதரன் இவ்வாறு எழுதினார்: “சத்தியமெல்லாம் அவ்வளவு தெளிவாக இராத 1914-க்குச் சற்று முன்பான அந்தத் தொடக்க நாட்களிலிருந்து . . . நடுப்பகல் சூரியனைப்போல் சத்தியம் பிரகாசிக்கும் இந்நாள்வரையாக, யெகோவாவின் நோக்கங்களைப் பற்றிய அறிவிற்கேற்ப நான் வாழ்ந்திருப்பதற்காக மிகவும் நன்றியறிதலுள்ளவனாக இருக்கிறேன். எனக்கு மிக முக்கியமானதாக ஒரு காரியம் இருந்திருந்ததென்றால், அது, யெகோவாவின் காணக்கூடிய அமைப்புக்கு நெருங்க வைத்துக்கொள்ளும் காரியமாகவே இருந்திருக்கிறது. மனித பகுத்தாய்வில் நம்பிக்கை வைப்பது எவ்வளவு தவறானதென்று என் தொடக்க அனுபவம் எனக்குக் கற்பித்தது. இந்தக் குறிப்பின்பேரில் என் மனம் ஆய்ந்து முடிவுசெய்தவுடன், உண்மையுள்ள இந்த அமைப்புடன் நிலைத்திருக்கும்படி நான் தீர்மானித்தேன். வேறு எவ்வாறு ஒருவர் யெகோவாவின் தயவையும் ஆசீர்வாதத்தையும் பெற முடியும்?”
20. யெகோவாவின் ஜனங்களாக நம்முடைய ஒற்றுமையைப் பற்றி என்ன செய்யும்படி நாம் தீர்மானித்திருக்க வேண்டும்?
20 உலகப்பிரகாரமான இருளிலிருந்தும் ஒற்றுமையின்மையிலிருந்தும் வெளிவரும்படி, யெகோவா தம்முடைய ஜனங்களை அழைத்திருக்கிறார். (1 பேதுரு 2:9) தம்முடனும் நம்முடைய உடன் விசுவாசிகளுடனும் ஆசீர்வாதமான ஒற்றுமைக்குள் அவர் நம்மைக் கொண்டுவந்திருக்கிறார். இப்போது வெகு சமீபமாயுள்ள புதிய காரிய ஒழுங்குமுறையில் இந்த ஒற்றுமை நிலைத்திருக்கும். ஆகையால், இந்தக் கொடிய கடைசி நாட்களில், நாம் தொடர்ந்து ‘அன்பைத் தரித்துக்கொண்டும்,’ நம்முடைய அருமையான ஒற்றுமையை ஊக்குவித்து வளர்த்துக்கொண்டும், காத்துக்கொண்டும் இருப்பதற்கு நம்மால் கூடிய எல்லாவற்றையும் செய்வோமாக.—கொலோசெயர் 3:14.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ ஏன், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதும் சத்தியத்தை விடாது பற்றியிருப்பதும் ஒற்றுமையைக் காத்துவர நமக்கு உதவிசெய்கின்றன?
◻ எவ்வாறு ஒற்றுமை, நாவைச் சரியாகப் பயன்படுத்துவதோடு சம்பந்தப்பட்டுள்ளது?
◻ மன்னிப்போராக இருப்பதில் எது உட்பட்டிருக்கிறது?
◻ தனிப்பட்ட சொந்தத் தீர்மானங்களைச் செய்கையில் நாம் எவ்வாறு ஒற்றுமையைக் காத்துவரலாம்?
◻ ஏன் கிறிஸ்தவ ஒற்றுமையைக் காத்துவரவேண்டும்?
[பக்கம் 16-ன் படம்]
இந்த மேய்ப்பன் தன் மந்தையை ஒன்றுசேர்ந்திருப்பதாய் வைத்திருப்பதுபோல் யெகோவா தம்முடைய ஜனங்களை ஒற்றுமையாக வைக்கிறார்
[பக்கம் 18-ன் படங்கள்]
நாம் உணர்ச்சியைப் புண்படுத்திவிடுகையில் மனத்தாழ்மையுடன் மன்னிப்பு கேட்பதன்மூலம், ஒற்றுமையை முன்னேற்றுவிக்க உதவிசெய்கிறோம்