கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்
எல்லா சமயங்களிலும் நாம் கடவுள்மீதும் மற்றவர்கள்மீதும் அன்பு காட்டுகிறோம். (மத் 22:37-39) மாநாட்டுக்கு வரும்போது அதை இன்னும் அதிகமாக காட்ட வேண்டும். அதை எப்படிக் காட்டுவது? 1 கொரிந்தியர் 13:4-8-ல், “அன்பு பொறுமையும் கருணையும் உள்ளது. . . . கேவலமாக நடந்துகொள்ளாது, சுயநலமாக நடந்துகொள்ளாது, எரிச்சல் அடையாது. . . . அன்பு ஒருபோதும் ஒழியாது” என்று சொல்கிறது. இந்த வீடியோவை பார்க்கும்போது, என்னென்ன விதங்களில் மற்றவர்கள்மீது நீங்கள் அன்பு காட்ட முடியும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்
உட்கார இடம் பிடிக்கும்போது எப்படி அன்பாக நடந்துகொள்ளலாம்?
இசை ஆரம்பித்தவுடன் என்ன செய்ய வேண்டும்?
ஹோட்டலில் தங்கினால், அங்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
மாநாட்டு வேலைகளில் நாம் எப்படி உதவி செய்யலாம்?