நாம் எப்படியெல்லாம் யெகோவாமீது அன்பு காட்டலாம்?
“கடவுள் முதலில் நம்மீது அன்பு காட்டியதால் நாமும் அன்பு காட்டுகிறோம்.”—1 யோ. 4:19.
1, 2. யெகோவா அவரை நேசிக்க நமக்கு எப்படிக் கற்றுக்கொடுத்திருக்கிறார்?
ஒரு அப்பா, பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருப்பதன் மூலம் அவர்களுக்கு சிறந்த விதத்தில் கற்றுக்கொடுக்கிறார். அப்பா, பிள்ளைகள்மீது அன்பு காட்டும்போது, பிள்ளைகளும் அன்பு காட்ட கற்றுக்கொள்கிறார்கள். “கடவுள் முதலில் நம்மீது அன்பு காட்டியதால் நாமும் அன்பு காட்டுகிறோம்” என்று யோவான் சொன்னார். (1 யோ. 4:19) யெகோவா அப்பாவைப் போல வேறு யாரும் நம்மீது இந்தளவு அன்பு காட்டியிருக்க முடியாது. யெகோவா “முதலில் நம்மீது அன்பு காட்டியதால்” அவர்மீது அன்பு காட்ட நம்மால் கற்றுக்கொள்ள முடிகிறது.
2 யெகோவா “முதலில் நம்மீது அன்பு” காட்டியிருக்கிறார் என்று எப்படி சொல்லலாம்? “நாம் பாவிகளாக இருந்தபோதே நமக்காக உயிரைக் கொடுக்க கிறிஸ்துவைக் கடவுள் அனுப்பினார்” என்று பைபிள் சொல்கிறது. (ரோ. 5:8) நம்மை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலை செய்வதற்காக யெகோவா அப்பா அவருடைய மகனை நமக்கு மீட்பு பலியாகக் கொடுத்தார். மீட்பு பலி என்ற பரிசு மூலமாகத்தான் நம்மால் யெகோவாவுடைய நண்பர்களாக ஆக முடிகிறது; அவரை நேசிக்கவும் முடிகிறது. யெகோவா அப்பா நமக்காக இவ்வளவு பெரிய தியாகத்தை செய்ததன் மூலம் நமக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார். நாமும் சுயநலம் இல்லாமல் அன்பு காட்ட வேண்டும், தாராளமாக நடந்துகொள்ள வேண்டும் என்று கற்றுக்கொடுத்திருக்கிறார்.—1 யோ. 4:10.
3, 4. கடவுளை நேசிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?
3 யெகோவாவுடைய குணங்களிலேயே மிக முக்கியமான குணம் அன்புதான். அதனால்தான், இயேசு ஏன் இந்த முக்கியமான கட்டளையை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது: “உன் கடவுளாகிய யெகோவாமீது உன் முழு இருதயத்தோடும் உன் முழு மூச்சோடும் உன் முழு மனதோடும் உன் முழு பலத்தோடும் அன்பு காட்ட வேண்டும்.” (மாற். 12:30) “முழு இருதயத்தோடு” அவர்மீது அன்பு காட்ட வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். நாம் யெகோவாவைவிட வேறு யாரையாவது அல்லது வேறு எதையாவது அதிகமாக நேசித்தால் அது அவருக்குக் கஷ்டமாக இருக்கும். ஏதோ உணர்ச்சி வசப்பட்டு அவர்மீது நாம் அன்பு காட்டாமல், ‘முழு மனதோடும் முழு பலத்தோடும்’ அன்பு காட்ட வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். நாம் யோசிக்கிற விஷயங்களும் நம்முடைய செயல்களும் அவர்மீது அன்பு வைத்திருக்கிறோம் என்பதைக் காட்ட வேண்டும்.—மீகா 6:8-ஐ வாசியுங்கள்.
4 நம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் வைத்து நாம் யெகோவாவை மனப்பூர்வமாக நேசிக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் அவருக்கு முதலிடம் கொடுப்பதன் மூலமாக, நாம் அவரை உண்மையிலேயே நேசிக்கிறோம் என்பதைக் காட்டலாம். யெகோவா நம்மீது அன்பு காட்டியிருக்கும் 4 வழிகளைப் பற்றி போன கட்டுரையில் பார்த்தோம். நாம் எப்படி யெகோவாவை இன்னும் அதிகமாக நேசிக்கலாம், அவர்மீது அன்பு வைத்திருக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பதைக் காட்டுங்கள்
5. யெகோவா நமக்காக செய்திருக்கும் எல்லாவற்றையும் யோசித்துப் பார்க்கும்போது, நாம் என்ன செய்ய ஆசைப்படுவோம்?
5 உங்களுக்கு யாராவது பரிசு கொடுத்தால் அவர்களுக்கு நீங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருப்பீர்கள்! அந்தப் பரிசை உயர்வாக மதித்தால் அதை நன்றாகப் பயன்படுத்துவீர்கள். “நல்ல பரிசுகள் ஒவ்வொன்றும், தலைசிறந்த அன்பளிப்புகள் ஒவ்வொன்றும் பரலோகத்திலிருந்தே வருகின்றன, ஆம், ஒளியின் தகப்பனிடமிருந்தே வருகின்றன; அவர் நிழலைப் போல் மாறிக்கொண்டே இருப்பவர் அல்ல” என்று பைபிள் சொல்கிறது. (யாக். 1:17) நாம் சந்தோஷமாக இருப்பதற்குத் தேவையான எல்லாவற்றையும் யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். அதற்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்! யெகோவா நம்மை எந்தளவு நேசிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளும்போது, நாமும் அவரை நேசிக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம்.
6. யெகோவாவுடைய ஆசீர்வாதம் எப்போதும் இருக்க இஸ்ரவேலர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது?
6 பல நூறு வருஷங்களாக யெகோவா இஸ்ரவேலர்களை அன்பாக, அக்கறையாகப் பார்த்துக்கொண்டார். அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்தார்; அவர்களை வழிநடத்த நிறைய சட்டங்களையும் கொடுத்தார். (உபா. 4:7, 8) இஸ்ரவேலர்கள் அவர் கொடுத்த சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது. உதாரணத்துக்கு பலி செலுத்தும்போது, ‘முதல் விளைச்சலின் முதற் கனியை’ யெகோவாவுக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. (யாத். 23:19) யெகோவா சொன்னபடி எல்லாம் செய்வதன் மூலம் அவர்கள் யெகோவாவுக்கு நன்றி காட்டியிருக்கலாம். அவருக்குக் கீழ்ப்படிந்தால்... அவருக்கு மிகச் சிறந்ததைக் கொடுத்தால்... யெகோவா அவர்களை எப்போதும் ஆசீர்வதிப்பார் என்று இஸ்ரவேலர்களுக்குத் தெரியும்.—உபாகமம் 8:7-11-ஐ வாசியுங்கள்.
7. யெகோவாமீது அன்பு வைத்திருக்கிறோம் என்பதைக் காட்ட நம்மிடம் இருக்கும் ‘பொருள்களை’ எப்படிப் பயன்படுத்தலாம்?
7 நாம் இன்று யெகோவாவுக்குப் பலிகளைக் கொடுப்பது கிடையாது. இருந்தாலும், நம்மிடம் இருக்கும் ‘பொருள்களை’ அவருக்குக் கொடுப்பதன் மூலம் அவர்மீது அன்பு இருக்கிறது என்பதைக் காட்டலாம். (நீதி. 3:9) நம்மிடம் இருப்பதை அவருக்குக் கொடுப்பதன் மூலம் அவருக்குப் புகழ் சேர்க்கலாம். உதாரணத்துக்கு, உலகம் முழுவதும் நடக்கும் கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக நன்கொடை கொடுக்கலாம். நம்முடைய சபையில் நடக்கும் வேலைக்காகவும் நன்கொடை கொடுக்கலாம். நம்மிடம் கொஞ்சம் இருந்தாலும் சரி, நிறைய இருந்தாலும் சரி, நம்மிடம் உள்ளவற்றை யெகோவாவுக்குக் கொடுக்கலாம். அதன் மூலம் அவர்மீது அன்பு இருக்கிறது என்பதைக் காட்டலாம். (2 கொ. 8:12) நாம் யெகோவாவை நேசிக்கிறோம் என்பதை வேறு என்ன வழிகளில் காட்டலாம்?
8, 9. யெகோவாமீது அன்பு வைத்திருக்கிறோம் என்பதை வேறு எப்படிக் காட்டலாம்? மைக்கும் அவருடைய குடும்பத்தில் இருந்தவர்களும் என்ன செய்தார்கள்?
8 ‘எதைச் சாப்பிடுவோம், எதை உடுத்துவோம்’ என்று ஒருபோதும் கவலைப்படக் கூடாது என்று இயேசு சொன்னார். கடவுளுடைய அரசாங்கத்துக்கு எப்போதும் முதலிடம் கொடுக்க வேண்டும் என்றும் சொன்னார். அப்படி செய்தால், நம்முடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வதாக யெகோவா அப்பா வாக்குக் கொடுத்திருக்கிறார். (மத். 6:31-33) கொடுத்த வாக்கை அவர் நிச்சயம் காப்பாற்றுவார் என்று நாம் நம்பலாம். ஒருவரை நாம் உண்மையாக நேசித்தால், அவரை நாம் நம்புவோம். நாம் யெகோவாவை நம்பினால் அவர்மீது எந்தளவு அன்பு வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டுவோம். (சங். 143:8) நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘என்னோட வாழ்க்கையின் லட்சியமும் நான் வாழ்ற விதமும் யெகோவா மேல எனக்கு அன்பு இருக்குனு காட்டுதா? ஒவ்வொரு நாளும் யெகோவா என்னோட தேவைகளை பார்த்துக்குவார்னு நம்புறேனா?’
9 மைக் என்ற சகோதரர் இளைஞராக இருந்தபோது, வேறொரு நாட்டிற்குப் போய் ஊழியம் செய்ய ஆசைப்பட்டார். கல்யாணமாகி, இரண்டு பிள்ளைகள் பிறந்த பிறகும்கூட அப்படி செய்ய வேண்டும் என்று நினைத்தார். மைக்கும் அவருடைய குடும்பத்தில் இருப்பவர்களும் தேவை அதிகமுள்ள இடங்களில் சகோதர சகோதரிகள் எப்படி ஊழியம் செய்கிறார்கள் என்பதைப் பற்றி படித்தார்கள். பிறகு, வாழ்க்கையை எளிமையாக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அவர்களுடைய வீட்டை விற்றார்கள், ஒரு சிறிய வீட்டிற்குப் போனார்கள். மைக் அவர் செய்துகொண்டிருந்த வேலையையும் குறைத்துக்கொண்டார். அந்த வேலையை இன்டர்நெட் மூலமாக வேறொரு நாட்டிலிருந்து எப்படிக் செய்யலாம் என்று கண்டுபிடித்தார். பிறகு, மைக்கும் அவருடைய குடும்பமும் வேறோரு நாட்டிற்குப் போனார்கள், சந்தோஷமாக ஊழியம் செய்தார்கள். “மத்தேயு 6:33-ல இயேசு சொன்ன வார்த்தை எவ்ளோ உண்மைங்கிறத நாங்க தெரிஞ்சிக்கிட்டோம்” என்று மைக் சொன்னார். இப்படி, மைக்கும் அவருடைய குடும்பமும் யெகோவாவை முழுமையாக நம்பினார்கள்; அவர்மீது அன்பு இருக்கிறது என்று காட்டினார்கள்.
யெகோவா கற்றுக்கொடுப்பதை ஆழ்ந்து யோசித்துப் பாருங்கள்
10. யெகோவாவைப் பற்றி கற்றுக்கொண்ட விஷயங்களை நாம் ஏன் தாவீதைப்போல் ஆழ்ந்து யோசிக்க வேண்டும்?
10 “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது” என்று தாவீது ராஜா சொன்னார். ‘கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாக இருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாக இருக்கிறது’ என்றும் சொன்னார். யெகோவாவுடைய சட்டங்களையும் படைப்புகளையும் தாவீது ஆழ்ந்து யோசித்துப் பார்த்தார். அதனால், அவர் யெகோவாவுடைய நெருங்கிய நண்பராக ஆனார். அவர் யெகோவாமீது எந்தளவு அன்பு வைத்திருந்தார் என்பதைக் காட்டவும் விரும்பினார். அதனால்தான் தாவீது இப்படி சொன்னார்: “என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக [அதாவது, ஏற்றதாக இருப்பதாக].”—சங். 19:1, 7, 14.
11. நாம் பெற்றுக்கொண்ட அறிவை வைத்து யெகோவாவை நேசிக்கிறோம் என்று எப்படிக் காட்டலாம்? (ஆரம்பப் படம்)
11 இன்று யெகோவா அவரைப் பற்றி... அவருடைய நோக்கத்தைப் பற்றி... படைப்பைப் பற்றி... பைபிளைப் பற்றி... நமக்கு நிறைய விஷயங்களை சொல்லிக்கொடுக்கிறார். உயர்கல்வி படிக்க இந்த உலகம் மக்களை உற்சாகப்படுத்துகிறது. உயர்கல்வி படித்த நிறைய பேர் யெகோவாமீது இருந்த அன்பை இழந்திருக்கிறார்கள். ஆனால், நாம் அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும், ஞானமுள்ளவர்களாக ஆக வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். படிக்கிற விஷயங்கள் நமக்குப் பிரயோஜனமாக இருக்க வேண்டும், மற்றவர்களுக்கு உதவி செய்ய அதைப் பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார். (நீதி. 4:5-7) உதாரணத்துக்கு, “சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை” நாம் மற்றவர்களிடம் சொல்ல வேண்டும், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார். (1 தீ. 2:4) கடவுளுடைய அரசாங்கம் மனிதர்களுக்கு என்ன செய்யப்போகிறது என்பதைப் பற்றி எல்லாருக்கும் சொல்லும்போது நாம் யெகோவாவை எந்தளவு நேசிக்கிறோம் என்பதைக் காட்டலாம்.—சங்கீதம் 66:16, 17-ஐ வாசியுங்கள்.
12. ஒரு இளம் சகோதரி யெகோவா கொடுத்த பரிசைப் பற்றி என்ன சொல்கிறார்?
12 சின்ன பிள்ளைகள்கூட யெகோவா அவர்களுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிற விஷயங்களை ஆழ்ந்து யோசித்துப் பார்க்கலாம். ஷானன் என்ற சகோதரியும் அவருடைய தங்கையும் “தேவ பக்தி” என்ற மாவட்ட மாநாட்டுக்குப் போயிருந்தார்கள். அப்போது, ஷானனுக்கு 11 வயது, அவருடைய தங்கைக்கு 10 வயது. அந்த மாநாட்டில் நடந்தது ஷானனுக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. அந்த மாநாட்டில் எல்லா சின்ன பிள்ளைகளையும் தனியாக ஒரு இடத்தில் உட்கார வைத்தார்கள். முதலில், ஷானனுக்கு பயமாக இருந்தது. ஆனால், அங்கிருந்த எல்லா பிள்ளைகளுக்கும் இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன் தரும் விடைகள் (ஆங்கிலம்) புத்தகத்தைக் கொடுத்தபோது ஷானனுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. யெகோவா கொடுத்த அந்தப் பரிசைப் பற்றி அவர் இப்படி சொல்கிறார்: “யெகோவா நிஜமானவர், அவர் என்மேல எவ்ளோ அன்பு வைச்சிருக்கார்னு அப்போதான் புரிஞ்சிக்கிட்டேன். யெகோவா தர்ற அழகான பரிசுகளை எல்லாம் நினைச்சு பார்க்குறப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!”
யெகோவா கண்டித்துத் திருத்தும்போது ஏற்றுக்கொள்ளுங்கள்
13, 14. யெகோவா நம்மைக் கண்டித்துத் திருத்தும்போது நாம் என்ன செய்ய வேண்டும், ஏன்?
13 “தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 3:12) யெகோவா நம்மை கண்டித்துத் திருத்தும்போது அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் நமக்குப் பயிற்சி கொடுக்கும்போது அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால், நாம் சரியானதை செய்ய கற்றுக்கொள்வோம், நிம்மதியாகவும் இருப்போம். “எவ்விதக் கண்டிப்பும் அச்சமயத்திற்குச் சந்தோஷமாகத் தோன்றாது, துக்கமாகவே தோன்றும்” என்பது உண்மைதான். (எபி. 12:11) இருந்தாலும், யெகோவா நம்மை கண்டித்துத் திருத்தும்போது, அதை அசட்டை செய்யக் கூடாது. அவர் கொடுக்கும் ஆலோசனை நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் அதைக் கேட்க வேண்டும், வருத்தப்படக் கூடாது. நாம் யெகோவாவை நேசிப்பதால் அவர் சொல்வதைக் கேட்டு, தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும்.
14 மல்கியாவுடைய காலத்தில் நிறைய யூதர்கள் யெகோவா சொன்னதைக் கேட்கவில்லை. அவர்கள் செலுத்திய பலிகளை யெகோவா ஏற்றுக்கொள்ளவில்லை. அது தெரிந்தும் அந்த மக்கள் கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. அதனால், யெகோவா அவர்களைக் கடுமையாகக் கண்டித்தார். (மல்கியா 1:12, 13-ஐ வாசியுங்கள்.) யெகோவா அவர்களை நிறைய முறை கண்டித்தும், அவர் சொன்னதை அவர்கள் கொஞ்சம்கூட கேட்கவில்லை. அதனால் யெகோவா அவர்களிடம், “நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்கள் ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன்” என்று சொன்னார். (மல். 2:1, 2) யெகோவா அன்பாகக் கொடுக்கிற ஆலோசனையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால்... அந்த ஆலோசனை முக்கியம் இல்லை என்று நினைத்தால்... யெகோவாவோடு இருக்கும் நட்பை நாம் இழந்துவிடுவோம்.
15. நாம் எப்படி இருக்கக் கூடாது?
15 மக்கள் பெருமைபிடித்தவர்களாக, சுயநலக்காரர்களாக இருக்க வேண்டும் என்று சாத்தான் விரும்புகிறான். மக்கள் அவர்களை யாரும் கண்டித்துத் திருத்த கூடாது என்று நினைக்கிறார்கள். ஒருவேளை யாராவது ஆலோசனை கொடுத்தால்கூட, அதை வேண்டா வெறுப்பாகக் கேட்கிறார்கள். நாம் அந்த மாதிரி இருக்கக் கூடாது. “இந்த உலகத்தின் பாணியின்படி நடப்பதை விட்டுவிடுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. யெகோவா நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார், அவரை சந்தோஷப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் புரிந்துகொள்ள வேண்டும். (ரோ. 12:2) யெகோவா அவருடைய அமைப்பு மூலமாக நமக்கு சரியான நேரத்தில் ஆலோசனை கொடுக்கிறார். உதாரணத்துக்கு எதிர்பாலரோடு எப்படி நடந்துகொள்ள வேண்டும், நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும், பொழுதுபோக்கு விஷயத்தில் எப்படித் தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் யெகோவா நமக்கு திரும்பத் திரும்ப ஆலோசனை கொடுக்கிறார். அவர் நம்மை கண்டித்துத் திருத்தும்போது அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டால்... தேவையான மாற்றங்களை செய்தால்... அவரை நாம் உண்மையாகவே நேசிக்கிறோம் என்று காட்டுவோம். அதோடு, அவருடைய வழிநடத்துதலுக்காக நாம் நன்றியோடு இருக்கிறோம் என்பதையும் காட்டுவோம்.—யோவா. 14:31; ரோ. 6:17.
உதவிக்காகவும் பாதுகாப்புக்காகவும் யெகோவாவை சார்ந்திருங்கள்
16, 17. (அ) தீர்மானம் எடுப்பதற்கு முன்பு யெகோவா என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்? (ஆ) யெகோவாமீது நம்பிக்கை வைப்பதற்குப் பதிலாக இஸ்ரவேலர்கள் என்ன செய்தார்கள்?
16 பிள்ளைகளுக்கு ஏதாவது ஆபத்து என்றால் அவர்கள் உடனே அப்பா-அம்மாவிடம் ஓடுவார்கள். அவர்கள் வளர வளர அவர்களால் சொந்தமாக தீர்மானம் எடுக்க முடியும். இருந்தாலும், பெற்றோர்கள் அவர்களுக்கு நல்ல ஆலோசனை கொடுக்க முடியும் என்று நம்புகிறார்கள். அதனால், அவர்களிடம் ஆலோசனை கேட்கிறார்கள். தீர்மானம் எடுக்கும் உரிமையை யெகோவா அப்பா நமக்குக் கொடுத்திருக்கிறார். இருந்தாலும் யெகோவாவை நேசிப்பதால்... அவர்மீது நம்பிக்கை வைத்திருப்பதால்... நாம் எப்போதும் அவரிடம் உதவி கேட்கிறோம். ஒரு தீர்மானம் எடுப்பதற்கு முன்பு, அதைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறோம். அவரையே சார்ந்து இருக்கும்போது, சரியானதை செய்ய யெகோவா நமக்கு அவருடைய சக்தியைக் கொடுப்பார்.—பிலி. 2:13.
17 சாமுவேலுடைய காலத்தில், இஸ்ரவேலர்கள் பெலிஸ்தருக்கு எதிராக சண்டை போட்டு தோற்றுப்போனார்கள். அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் யெகோவாவிடம் கேட்பதற்குப் பதிலாக, “சீலோவிலிருக்கிற கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவோம்; அது நம்மை நம்முடைய பகைஞரின் கைக்கு விலக்கி ரட்சிக்கும்படி, நம்முடைய நடுவிலே வரவேண்டியது” என்று சொன்னார்கள். அவர்கள் அப்படித் தீர்மானித்ததால் என்ன நடந்தது? “மகா பெரிய சங்காரம் உண்டாயிற்று; இஸ்ரவேலிலே முப்பதினாயிரம் காலாட்கள் விழுந்தார்கள். தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்டது.” (1 சா. 4:2-4, 10, 11) உடன்படிக்கைப் பெட்டியை அவர்களோடு எடுத்துக்கொண்டு போனால் போதும், யெகோவா உதவி செய்வார், பாதுகாப்பார் என்று இஸ்ரவேலர்கள் நினைத்தார்கள். அதைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்று அவர்கள் தெரிந்துகொள்ளவில்லை; யெகோவாவிடம் எந்த உதவியும் கேட்கவில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள் சரி என்று நினைத்ததைத்தான் செய்தார்கள். அதனால், பல மோசமான விளைவுகளை சந்தித்தார்கள்.—நீதிமொழிகள் 14:12-ஐ வாசியுங்கள்.
18. யெகோவாமீது நம்பிக்கை வைப்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
18 சங்கீதக்காரன் யெகோவாவை அதிகமாக நேசித்தார், அவரை நம்பி இருந்தார். அதனால்தான், “தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன். என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் . . . உம்மை நினைக்கிறேன்” என்று சொன்னார். (சங். 42:5, 6) நீங்கள் யெகோவாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவரோடு நெருங்கி இருப்பது போல உணர்கிறீர்களா, அவரை நம்புகிறீர்களா? ஒருவேளை இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் ‘ஆம்’ என்று பதில் சொன்னால்கூட, யெகோவாவை இன்னும் அதிகமாக நம்புவதற்கு உங்களால் கற்றுக்கொள்ள முடியும். “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” என்று பைபிள் சொல்கிறது.—நீதி. 3:5, 6.
19. நீங்கள் யெகோவாமீது அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதை எப்படிக் காட்டலாம்?
19 யெகோவா முதலில் நம்மீது அன்பு காட்டுவதன் மூலம் அவர்மீது அன்பு காட்ட நமக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார். யெகோவா நமக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார், நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்று எல்லாம் நாம் எப்போதும் யோசித்துப் பார்க்க வேண்டும். முழு இருதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அவர்மீது அன்பு வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டலாம்!—மாற். 12:30.